Fantasy சிவ இயக்கி - மாயாஜால காம கதை
#24
திருமலை குமாரக்குகையில்..

"சாமி.. தஞ்சாவூரில் இருந்து ஒரு குடும்பம் தங்களை காண வந்திருக்கிறார்கள். " என்றான் சிவதேவன்.
"ஏதாவது குறிப்பு சொன்னார்களா?"
"கருப்பன் செட்டியார் உறவுக்காரர்கள் என்றார்கள்"
"அவர்களை குளிகை நேரத்தில் வரச்சொல்.." என‌ தியானத்தில் மூழ்கினார் சித்தையனந்தா. அவருடைய நினைவுகள் பின்நோக்கிப் போயின.

யட்சி ஒட்டுமொத்த இச்சையின் உருவம் தானே? தன் மீது அளவு கடந்த தன்னம்பிக்கை கொண்ட, தனது ஆசைகளின் மீது எந்த குற்ற உணர்ச்சியும் கொள்ளாத, நாட்களை நகர்த்தாமல் வாழ்ந்து தீர்க்கும் ஒருத்திதானே யட்சியாக இருக்க முடியும்.

அழகை ஆராதிப்பதில் நேர்த்தியானது பெண்களின் மனம், அதைவிட அழகானது அம் மனதில் எழும் ஆசைகள். அவ்வாசைகளால் வரும் விளைவுகளின் தொகுப்பு அவள் கண்முன் விரியும் போது அதை சிவப்பு கம்பளமாக நினைத்து தன் ஆசைகளை நோக்கி நகர்பவள்தானே யட்சியாக இருக்க முடியும்.

மழை பெய்து தேங்கிய தண்ணீர் குட்டையில் குதிப்பதும், சாலையோர பூவை தலையில் சூடிக்கொள்வதும், மதுவும், புகையும் புசிப்பதும், பிடித்தவனொடு புணர்வதும் என எல்லா பெண்களுக்கும் யட்சியாக வாழ ஆசையுண்டு. ஆசைகள் சிறிதோ, பெரிதோ அதை அடைய அடி எடுத்து வைக்க தயங்காதவளாகத் தானே இருக்க முடியும்.

அப்படி தன்னுடைய ஆசைகளை தேடி தன்னிடத்தில் வருகின்ற யட்சிக்காக இங்கே பல ஆண்டுகளாக காத்திருக்கும் நபர்களில் ஒருத்தர்தான் திருமலை குமரகுகையில் இருக்கும் சித்தையானந்தர். அவர் பசுத்தோல் போர்த்திய புலி. 

ஒரு காலத்தில் அவர் மகள் அழகம்மையும் அப்படிதான் யட்சியைபோல இருந்தாள். மொட்டுப் போல் முகம். நன்கு தழைந்த கூந்தல். அளவான உயரம் வேறு. பிரம்மன் விருந்து சாப்பிட்டு முடித்த நிலையில் தாம்பூலம் தரிக்கும்போது ஏக குஷியோடு யோசித்து அவளை படைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

ஊர் விடலைகள் அவ்வளவு பேர் கண்களும் அவள் மேல்தான்! அவள் வரையில் சில நாற்பது வயது ஆசாமிகள்கூட இரண்டாம் தார கற்பனை செய்து வைத்திருந்தார்கள். கோவில் சிலை, குங்குமச் செப்பு, தோட்டத்து மான் என்று அவளுக்கு ஊரில் பல பெயர்கள் வேறு...

ஆனால், அதிர்ஷ்டம்தான் துப்புரவாக இல்லை! மாங்கு மாங்கு என்று படித்து பரீட்சை எழுதினாள். மாநிலத்தில் முதலாவதாக வரக்கூடிய எல்லா தகுதியும்.. இருந்தது. இருந்தும் கணக்குப் பரீட்சையன்று விஷக் காய்ச்சல் வந்து சதி செய்து பார்டர் மார்க்கில் அவளை சாய்த்துவிட்டது. விளையாட்டுப் போட்டிகளில்கூட அப்படித்தான் வெற்றி விரல் நுனியில் தட்டிப் போனது. எல்லைக் கோடு அருகே முதலாவதாக வந்ததும் தடுமாறி விழுந்துவிட்டாள்.

எப்பொழுதும் துரதிர்ஷ்டம் அவளை 'விட்டேனா பார்' என்று துரத்துவது போல ஒரு பிரமை அவளுக்குள்... அது அவள் கல்யாண விஷயத்தில்கூட பலித்துவிட்டது. அரசாங்கத்தில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைப் பையனின் வரன் வந்தது.

மாப்பிள்ளை அந்தஸ்துக்கும் அழகம்மை குடும்ப அந்தஸ்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இருந்தும் அழகம்மையின் அழகில் மயங்கிய மாப்பிள்ளை பையன் மணந்தால் அழகம்மை.. இல்லையேல் திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டான்.

அதிர்ஷ்டம் அவள் வரையில் இப்படித்தான் கதவைத் தட்டும், அன்றும் மாப்பிள்ளை பையன் ரூபத்தில் கதவைத் தட்டிற்று. சரியென்று பையனைப் பெற்றவர்களும் அழகம்மையின் அப்பாவான சித்தையனை வந்து பார்த்து பேசிவார்கள்.

"எவ்வளவு செய்வீங்க?" இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டார்கள்.

"அழகம்மையின் அம்மாவிடம் ஐந்து பவுன் இருக்கிறது. அதனை மொத்தமாக தந்து விடுகிறேன்." என்று கூறினார்.
பெண்கேட்டு வந்த பெரியவர்கள் எல்லாம் சிரித்துக் கொண்டனர்.
"எங்க ஜில்லாவுலேயே.. முழுசா 100 பவுன் கொடுத்து பிளசர் கார் கூட தாரேன்னு சொல்லி ஒரு சம்பந்தம் வந்து நிக்குது. பொண்ணு கொஞ்சம் அழகுல கம்மி. அதனாலதான் அவன் யோசித்துக்கொண்டு இருக்கிறான். "
"உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம் பொதுவா சொல்லறேன். 50 பவுன் நகை.. உங்க பவுசுக்கு பிளசர் காரெல்லாம் வாங்கி தர முடியாது அதனால ஒரு மொபட் வண்டிக்கு ஏற்பாடு பண்ணுங்க.."

"உங்களோட நினைப்புக்கு நீங்க ஜமீன்ல தாங்க.. பொண்ணு எடுக்கனும்.. என்னால முடியாதுங்க. நீங்க கோவிச்சுக்காதிங்க.." விருட்டென எழுந்தார் சித்தையன். பணம் பொருள் இல்லையென்றாலும் ரோசத்துக்கு குறைவில்லை அவருக்கு.

நல்ல வரனை தட்டிக்கழிக்க மனமில்லாமல் சித்தையன் மனைவி பேசினாள். "பதினைந்து பவுன் போடலாம். எளிமையாக கல்யாணம் பண்ணித்தரலாம். அவ்வளவுதான் எங்களால  முடியும். இதுக்கே நாங்த கடன் வாங்கணும்." என்றார். எல்லாரையும் விட அதிர்ச்சியாக இருந்தது சித்தையனுக்கு தான்.

"சரி... ஆனால் இப்பொழுது சொன்னதில் இருந்து மாறிடாதீங்க. சரியா நடந்துக்குங்க. காசு, பணம் இல்லாட்டியும் குணம் இருந்தா அது போதும் எங்களுக்கு.. என்று சொல்லி கல்யாண தேதியை குறித்தனர். சபையில் வாக்கு தந்தாச்சு என குடும்பமே மவுனமாக இருந்தது.

சித்தையனுக்கு சிந்தையில் பல குழப்பங்கள் "எங்கு செல்வது யாரிடம் சொல்வது என்னவென்று கடன் கேட்பது ஒன்றுமே அவருக்கு பிடிபடவில்லை. இதனால் வரை தான் சம்பாதித்து இருந்த நட்பு இருக்கு ஒரு ஐந்து பவும் கிடைத்தால் கூட பெரிய விஷயம் தான். ஆனால் அதற்கு இந்த வீட்டினை அடமானம் வைக்க வேண்டும். சரி விற்றாவது பெருமளவு பணத்தை பெற முடியுமா என்றால் அந்த அளவிற்கு இந்த வீடு போகாது. மேற்கொண்டு பவுனுக்கு என்ன செய்வது அவர்கள் வேறு மொபட்டு வண்டி கேட்கிறார்களே.. தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் சித்தையன்.

அவருடைய மனைவிதான் தஞ்சாவூர் விருமாண்டி பற்றிய ஞாபகம் செய்தார். சித்தையனுடைய பால்ய கால நண்பரான தஞ்சாவூர் விருமாண்டி தற்பொழுது பெரும் செல்வாக்குடன் இருந்தார். அவர் மிகவும் நல்ல நிலைமையில் இருப்பதால் அவரிடம் கேட்கலாம் என பரிந்துரைத்தாள். அது தவிர வேறு வழி இல்லாத சித்தையனும் அதற்கு சம்மதித்தார்.

"விருமாண்டி... நீதாம்ப்பா உதவி செய்யணும். உன் தயவாலதான் அழகம்மை கரை ஏறணும்" - என்று காலிலும் விழுந்தார். விருமாண்டிக்கு  ஆனாலும் பெரிய மனது. சித்தையன்  குடியிருக்கும் வீட்டினை எழுதி வைத்துக் கொண்டு வேண்டிய பணத்தைப் புரட்டித் தந்தார்.

"இந்த பணத்துக்கு அம்பது பவுன் தேறுமா?." என வெகுளியாக கேட்டார்.
"பவுனா எடுத்தா 25லிருந்து ஒரு 30 பவுன் தேரலாம்.. ஆனா 50 பவுனுக்கு அந்த இடம் வராதுப்பா.."
"ஐயோ இது போக மொபட்டு வாங்க வேற பணம் வேணுமே.." தலையை சொரிந்தார்.. அவர்கள் வேறு என்ன செய்யலாம் என ஆலோசித்துக் கொண்டிருந்த பொழுதே..

"இவ்வளவு பணத்தையும் நான் கொண்டு போறது சிரமம்ப்பா.. நன்னிலத்தோட நிலைதான் தெரியுமே.. இதையெல்லாம் தஞ்சாவூரிலேயே கொஞ்சம் பவுனா மாத்தி தந்திடு.. " என சித்தையன் வேண்டிக் கொண்டதால்.. அதுவும் சரிதான் என தஞ்சாவூர் கருப்பன் செட்டியார் நகைக்கடையில் நல்ல மச்சமுள்ள தங்கத்தில் முப்பது இரண்டு சவரனுக்கு தாலியில் இருந்து தொங்கட்டான் வரை வாங்கிக் கொடுத்தார்.

கருப்பன் செட்டியார் நல்ல கைராசிக்காரர். அவரிடம் ஒருமுறை தங்கம் வாங்கி சென்ற பலரும் மறுமுறை தங்கம் வாங்க வருவார்கள் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை. அவர்கள் கடையில் ஒரு சித்தரின் புகைப்படம் மாட்டி இருந்தது.
"இவர் யாருப்பா.. கடையோட ஓனரா.. எம்புட்டு பெரிய போட்டோ மாட்டி இருக்காங்க.." என சித்தர் என்ன அந்த புகைப்படத்தை காண்பித்து கேட்டார்.

"அட இவருதான்பா சொர்ண சித்தரு. திருமலையில இருக்காரு. கல்லு மண்ணுனு கையில கிடைக்கிறதையெல்லாம் தங்கமா மாத்தி கொடுப்பாரு.."
"அதெப்படி?"
"அதெல்லாம் சித்தருக்குதான் தெரியும். இந்த கருப்பன் செட்டியார் திருமலைக்கு அடிக்கடி போயி சித்தரை பார்ப்பாரு.. அவர் கொடுத்த தங்கத்துல ஆரமிச்சதுதான் இந்தக்கடை.. "

"ஆச்சரியமா இருக்குப்பா.."
"ஆமாம்.. நம்மூர்ல இருந்து இருபது பேருக்கு மேல அவரை பார்க்கப் போனாங்க. ஆனா ராக்காயியை தவிர யாரும் தங்கத்தோட திரும்பி வரல.."
"அவங்களுக்கு தங்கம் கிடைச்சுச்சா.. ?"
"ஆமா.. ஆனா அவங்க குடும்பத்தோட இப்ப மதுரைக்கு போயிட்டாங்க. அதெல்லாம் நமக்கெதுக்கு." என பத்திரமாக தங்களுடைய நகைகளை கொண்டு வந்து வீடு சேர்த்தனர்.

பிற்பாடு விருமாண்டி வீட்டில் வக்கணையாக சாப்பிட்டனர். ஏலெட்டு வகை காய்கறி, முழங்கை வழிய நெய்ப்பொங்கல் என்று மகாதேவன் மனைவி ஜமாய்த்து விட்டாள்.

எந்த வீட்டில் இப்படி பணம் கொடுத்து சோறும் போட்டு அனுப்புவார்கள்? அதன் நிமித்தம் விருமாண்டியை நினைத்து பெருமிதமாகிப் போனது. ஆனால் அடுத்த நாள் தான் விருமாண்டியின் மற்றொரு முகம் தெரிந்தது. சித்தையனுக்கு 32 பவுன் நகையோடு தன் மனைவியிடம் இருந்த சில நகைகளையும் சேர்த்து மொத்தம் 50 பவுனாக கொடுத்தார்.

சித்தையன் ஆடிப் போய்விட்டார்.

"நான் கொடுத்து வெச்சவன்... இல்லாட்டி நீ எனக்கு சிநேகிதனா கிடைச்சிருப்பியா?" என்று கேட்டு ரயில்வே ஸ்டேஷனில் மகாதேவன் காலிலேயே விழுந்துவிட்டார்.

"அய்யய்யோ என்ன காரியமடா பண்ற.. இப்படியா நண்பர்களுக்குள்ள காதலர் விழுகிறது. அழகம்மை என் பொண்ணு மாதிரி. என் மக கல்யாணத்துக்கு நாள் செய்யாம யார் செய்வா" என்று விருமாண்டி விசும்பினார்.

சிலிர்த்துப்போய் விட்டது சித்தையனுக்கு. ஒரு பக்கம் மகளுக்கு அரசாங்க உத்தியோகத்துடன்  மாப்பிள்ளை மறுபக்கம் இப்படி முழுமனசோடு உதவும் நண்பன். யாருக்கு கிடைக்கும்?

செருக்கோடு கம்பார்ட்மென்ட்டில் ஏறினார். பெட்டி காலியாக இருந்தது. ஊரைச் சுற்றிக் கொண்டு மாட்டு வண்டிபோல லொடக்கு லொடக்கு என்று போகும் அந்த பாசஞ்சர் ரயிலில் போக யாருக்கும் மனமில்லை சித்தையன் ஒருவரைத் தவிர... அப்படியே பழகிவிட்டது. சில பழக்கங்கள் மாறாதவை.

காலுக்கு டயர் செருப்பு, நெற்றியில் சந்தனப் பொட்டு கையில் குடை, இடுப்புக்கு மஸ்லின் வேட்டி, வெள்ளை சட்டை என்கிற லட்சண சொருபங்கள்.

ஆனால் அவ்வளவும் அந்த ரயிலில் ஏறி தூங்கிக் கண் விழித்த பிறகு மாறிவிட்டது. தலை மாட்டில் பையை வைத்துக் கொண்டு தூங்கியதில் வந்தது இடர்.

கண்விழித்தபோது பையும் இல்லை. இரயில் பெட்டியிலும் யாரும் இல்லை.

"கடவுளே... கிடைத்தது கிடைச்சிச்சே... அது இப்படி களவு போகத்தானா?" அலறினார். ரயில்வே காவல் அதிகாரிகளிடம் கதறினார்.

"என்ன ஆலியா நீ கைல அம்பது பவுனு எடுத்துக்கிட்டு வந்துட்டு இப்படி ஏமாந்து நிக்கிறியே?"
"கண்ணு வலிச்சு காவல் காத்துக்கொண்டிருக்கும் பொழுதே கண்ணு முன்னாடி களவாடுற ஆளுங்க வந்திருக்கிற காலம். இப்படி 50 பவுனை அசால்டா தலைமாட்டில் படுத்து தூங்கிட்டு இருந்திருக்கியே.." காவலர்கள் சித்தையனுக்காக வருத்தப்பட்டார்கள் தவிர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. ரயில் பெட்டியில் திருடக்கூடிய நபர்கள் ஒவ்வொரு முறையும் புதிய நபர்களாக இருப்பார்கள் எங்கே இருப்பார்கள் எங்கே இறங்கி இருப்பார்கள் எதுவும் அவர்களுக்கு தெரியாது.

ஒரு புகார் கடிதத்தை மட்டும் வாங்கிக் கொண்டு சித்தையனை வழி அனுப்பி விட்டார்கள். அவர்கள் அதனை ஒரு புகாராக கூட பதிவு செய்யவில்லை சித்தைகள் போன்ற பொது ஜனங்கள் எவ்வளவோ போராடினாலும் காவல்துறையும் திருடனும் மாறப்போவதில்லை.

நன்னிலம் பிள்ளையார் கோயில் தெருவில் இருந்த ஒரு வீட்டில் இருந்து அந்த நள்ளிரவிலும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

"நான் இனி உசுரோட இருக்கறதுல அர்த்தமே யில்லை. எதுக்கு உசுரோட இருக்கணும்? என்னால யாருக்கு பிரயோஜனம்? நான் ஒரு தெண்டம். நான் ஒரு அடி முட்டாள். எவனாவது லட்சரூவா மதிப்போட ரயில்ல வருவானா? அதுலையும் படுக்க இடம் கிடைச்சிச்சேன்னு படுத்து தூங்கிகிட்டு... வந்தேனே... முட்டாள்பயதான் நான். நல்லாதானே நான் வந்தேன் ... பாழாய்ப்போன தூக்கம் என்னை கவுத்துடிச்சே... இந்த கண்ணை என்ன செஞ்சா தகும்?"

கேள்வியோடு உணர்ச்சிவசப்பட்டு கண்களை குத்திக் கொள்ளப் போனார் சித்தையன். எகிறிப் பிடித்து தடுத்தாள். அவர் மனைவி.

"போனா போகட்டும் விடுங்க. அதான் போலீஸ்ல புகார் கொடுத்துருக்கோம்ல?" ஆறுதல் சொல்லிப் பார்த்தாள். அவளால் அதுதான் முடிந்தது. ஆனால் அவர்கள் மகள் அழகம்மையால் அதுகூட முடியவில்லை. அழுது கொண்டிருந்தாள்.

"நம்ம அழகம்மைக்கி என்ன தாங்க குறைச்சல். இந்த சம்பந்தம் போனால் என்ன?. நம்ம வீடு கை விட்டுப் போனால் என்ன?. நான் இருக்கேன்.  நம்ம பொண்ணு இருக்கு. அவ அழகுக்கும் உங்க பெருமைக்கும் சீமையிலிருந்து மாப்பிள்ளை வரத்தான் போறாங்க.."
"வாக்கு தந்து இருக்கிறோமே அவங்களுக்கு என்னடி சொல்றது."
"ஏங்க நடந்தது நாடறியும்.. நீங்க தொலைச்சது ஊரறியும்.. பொண்ணு கேட்டு வந்து சம்பந்தம் போட்டு போனவங்கங்கிட்ட.. பேசி பார்ப்போம். எங்களுக்கு பவுனு தான் வேணும்னா வேற படம் பார்த்துக்கிடட்டும்.. இல்ல நம்ம பொண்ணு அழகா வேணும்னா பவுன் இல்லாம கட்டிக்கிடட்டும்.. நீங்க கிடந்த அழுகாதீங்க. விடியட்டும்.. நம்ம தேடி விடியல் வரும்"

எல்லாமும் போன பிறகும் அவள் உறுதியோடு இருந்தாள். அவள் ஒற்றைய ஆளாக தந்த நம்பிக்கையில் அன்று சித்தையன் உயிர் போகாமல் இருந்தது.

நெற்றிப் பொட்டிலிருந்து வெள்ளைச் சட்டை வரை எல்லாமே விலகி ஒரு பைத்தியக்காரனைப் போல இருந்தார் சித்தையன். அவருடைய மனைவி முகம் எல்லாம் சிவந்து நெற்றி போட்ட எல்லாம் களைந்து தலை முடியை விரித்த கோலத்தில் ஒரு மூளியைப் போல அமர்ந்திருந்தார்.

அவர்கள் தன்னைத் தானே நொந்து கொள்வதும் தலையில் அடித்துக் கொண்டு அழுவதும் பார்க்கச் சகிக்காமல் அழகம்மையும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள். அவர்கள் இருவரிடமும் சொல்ல முடியாத ஒரு ரகசியம் அழகமைக்கு இருந்தது. இந்த சூழலில் அவளால் அந்த ரகசியத்தை கூற இயலாமல் தவித்தாள்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: சிவ இயக்கி - மாயாஜால காம கதை - by sagotharan - 20-05-2024, 02:51 PM



Users browsing this thread: 1 Guest(s)