⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐
பாகம் -72

மன்னர் காலம்

காத்தவராயன் காளி கோவிலுக்கு சென்று பூஜை செய்ய ஆரம்பித்தான்..சில நாழிகைகளுக்கு பிறகு தேவி அவன் முன் பிரசன்னம் ஆனாள்..

"என்னை இப்போ எதற்கு அழைத்தாய் காத்தவராயா.."காளி அன்னை உக்கிரமாக கேட்டார்.

"தாயே...இப்படி போரின் முக்கியமான சமயத்தில் என்னை கைவிடுவது சரிதானா...?நான் யாகம் செய்து உங்களுக்கு பலி கொடுத்ததன் பலன் தான் இதுதானா?"

"நீ முன்பு எல்லாம் உள்ளார்த்தாமான பக்தியோடு என்னை பூஜித்தாய் காத்தவராயா...!அந்த பக்திக்கு உன்னை கேடயமாக இருந்து பாதுகாத்தேன்...ஆனால் உனக்கு தொடர்ந்து வெற்றி குவிய தொடங்கியவுடன் ஆணவத்தினால் என்ன கொடுத்தாலும் அதை இந்த காளி ஏற்று கொண்டு உனக்கு வரம் கொடுப்பாள் என்று நினைக்கிறாயா...?நீ இங்கு ஆடம்பரமாக செய்யும் பூஜைகள் என்னை எதுவும் கவராது.. அன்போடு ஒரு பூ வைத்து பூஜை செய்தால் கூட ஏற்று கொண்டு அருள்பாலிப்பாள் இந்த காளி...மேலும் என் பேச்சு எதையும் நீ கொஞ்சம் கூட மதிக்கவில்லை.."

"உங்கள் பேச்சை நான் எப்பொழுது மீறினேன் தேவி..."

"நான் என்ற ஆணவம் உன் கண்ணை மறைக்கிறது காத்தவராயா..மதிவதனியை தேடி சென்றால் அது உன் அழிவுக்கு வழிவகுக்கும் என ஆரம்பத்திலேயே எச்சரித்தேன்..ஆனால் காமத்தின் மோகத்தில் என் பேச்சை நீ மீறினாய்.நான் கொடுத்த ஆயதத்தை பெண்கள் மேல் பிரயோகிக்க கூடாது என சொல்லியே கொடுத்தேன்..ஆனால் அதையும் புறம் தள்ளினாய்.அந்த ஆயுதம் மதிவதனியை தாக்கி அழித்து இருக்கவேண்டியது..ஆனால் மதிவதனி புத்திசாலி,அந்த ஆயுதத்திடம் அவள் கை கூப்பி சரணடைந்து விட்டாள்.இதற்கு மேல் என்னால் உனக்கு உதவி செய்ய இயலாது.."

"தேவி,நான் ஒன்றும் ஆணவத்துடன் பூஜை செய்யவில்லை. .?"

"உனக்கு வார்த்தையில் சொன்னால் புரியாது.செயலால் எளிதாக புரிய வைக்கிறேன்.உன் தலையை வெட்டி உடனே என் காலில் இடு" என கட்டளையிட்டார்.


காத்தவராயன் உடைவாளை எடுத்தான்...கழுத்தில் கத்தியை வைத்தான்.அவன் மனதில் பல எண்ணங்கள் தோன்றியது.."நான் இப்போ தலையை வெட்டி என்னை நானே பலி கொடுத்து விட்டால் உயிர் இழந்து போவேனே.பிறகு எப்படி மதிவதனியை நான் தொட முடியும்..!அவளை மீண்டும் மீண்டும் ருசிக்க இந்த உயிர் வேண்டுமே.."என எண்ணிக்கொண்டு கத்தியை கீழே வைத்து விட்டான்..

[Image: Snapinsta-app-391103685-853408006380847-...1080-1.jpg]

ஹாஹாஹா.... காளி தேவி சிரித்தாள்...
இது தான் மனித இயல்பு..உனக்கு ஒன்றின் மேல் பற்று விட்டது..மாயை என்னும் உலகத்தில் ஆட்பட்டு விட்டாய்.இதுவே பழைய காத்தவராயனாக இருந்தால் இந்நேரம் தலையை வெட்டி என் காலடியில் சமர்பித்து இருப்பான்.விதி உன்னை மரணத்தின் பாதையில் கூட்டி செல்கிறது.ஆனால் உன் மரணம் எப்படி நிகழ போகிறது?என்பதை என்னாலும் கணிக்க முடியவில்லை.."

"ஏன் தேவி அப்படி சொல்கிறீர்கள்..."

தேவி அவனிடம்,"ஒவ்வொருவரின் மரபணு 2520 வருடங்களுக்கு ஒவ்வொரு முறை வெளிப்படும்.நீ இராவணன் மகன் இந்திரஜித் வம்சாவளியில் வந்தவன்.ஒவ்வொரு 2520 வருடங்களுக்கும் ஒருமுறை உன் முன்னோர்களில் ஒவ்வொருவருக்கும் அவன் மரபணுவோடு பிறந்துள்ளார்கள்..அந்த வழியில் தான் நீயும் இந்திரஜித்தின் மரபணுவோடு பிறந்து உள்ளாய். உன் முன்னோர்கள் வழியாக பரிமளித்து வந்த அவன் மரபணு தேய்ந்து,தேய்ந்து இப்போ கடைசியாக உன் மூலம் முடிவடைய இருக்கிறது..இந்திரஜித்தின் வஜ்ரம் போன்ற மார்பு தான் உனக்கு கவசமாக கிடைத்து உள்ளது..அதனால் தான் இதுவரை யாரும் உன் மார்பை துளைக்க முடியவில்லை புரிகிறதா..!மதிவதனி வைத்து இருக்கும் அஸ்திரங்கள் கூட உன் மார்பை துளைக்காது..எப்படி அவள் உன்னை கொல்ல போகிறாள் என்று என்னாலும் கணிக்க முடியவில்லை.இந்திரஜித்தை கொல்ல லக்ஷ்மணன் 16 வருடம் நித்திரையை தொலைத்து ஒரு தவம் போல வாழ்ந்ததால் மட்டுமே அவனால் கொல்ல முடிந்தது..அதுபோல உன்னை கொல்ல காலம் என்ன வழி வைத்து உள்ளதோ என்பதை நானறியேன்.."

"காலத்தை நடத்துபவரே நீங்கள் தானே தேவி,அதனால் தானே உங்களை காளி என்று அழைக்கிறார்கள்.தாங்கள் அறியாததா என்ன..?

"நீ சொல்வது உண்மை தான்..ஆனால் இந்த காளியை இயக்குபவர் அந்த பரமன்..அவருக்கு தான் அந்த ரகசியம் தெரியும்.."

"தேவி அது ஏன் 2520 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் இந்திரஜித் மரபணு தோன்றுகிறது....?2000 வருடங்களுக்கு ஒருமுறையோ அல்லது 1000 வருடங்களுக்கு ஒருமுறையோ தோன்றகூடாதா?

"2520 என்பது ஒரு சிறப்பான எண்.அதற்கும் மரபணுவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது..ஒரு வருடத்திற்கு எத்தனை மாதங்கள் காத்தவராயா..?"

"12 மாதங்கள் தான் தேவி..?"

"சரி...ஒரு மாதத்திற்கு எத்தனை நாள்?"

"30 நாட்கள் தேவி.."

"நல்லது..ஒரு வாரத்திற்கு எத்தனை நாள் ?"

"குழந்தைக்கு கூட தெரியும்..7 நாட்கள் தேவி.."

"இப்பொழுது எல்லாவற்றையும் பெருக்கி பார் .."

"12*30*7=2520 சரியாக வருகிறது தேவி..."

"ம்ம்..2520 எண்ணை நீ ஒன்றில் இருந்து பத்து வரை எந்த எண்ணால் வகுத்தாலும் மிச்சம் இல்லாமல் வகுக்கும்."

காத்தவராயன் மனதில் கணக்கு போட்டான்

2520/1=2520
2520/2=1260
2520/3=840
2520/4=630
2520/5 = 504
2520/6 = 420
2520/7= 360
2520/8= 315
2520/9 = 280
2520/10= 252
"ஆம் அன்னையே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.."

"முன்னோர்களில் முதன்மை மரபணு ஒவ்வொரு தடவை இன்னொருவரின் மரபணுவோடு கலந்து தான் ஜீவன்கள் பிறக்கும்.அப்போது எல்லாம் முதன்மை மரபணுவோடு இன்னொரு மரபணு சேரும் பொழுது ஒன்று கூட அல்லது குறைவாக கலந்து கலப்பினமாக பிறப்பதால் முதன்மை மரபணுவின் தன்மை பிரகாசிக்காது.அதாவது 2000/3 என்றால் மிச்சம் வரும்..ஆனால் 2520 வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் முதன்மை மரபணுவோடு,மற்ற மரபணுக்கள் சேர்ந்தாலும் அது வகுக்கப்பட்டு அதாவது முற்றிலும் மற்ற மரபணுக்கள் ஒழிக்கப்பட்டு மீதம் இல்லாமல் முதன்மை மரபணு மட்டும் பிரதிபலிக்கும்.இந்திரஜித்தின் முதன்மை மரபணு தான் உன்னில் உள்ளது.. லக்ஷ்மணை போல் அழிக்க மதிவதனியிடம் அஸ்திரங்களும் இல்லை..அவனின் யோக சக்தியும் மதிவதனியிடம் இல்லை.உன்னை அவள் தோற்கடிக்கலாம்..ஆனால் கொல்வது எவ்வாறு என எனக்கும் தெரியவில்லை.ஆனால் கண்டிப்பா அதற்கும் ஒரு வழி இருக்கும்..தந்தைக்காக உயிரிழந்த  இந்திரஜித் என் மேல் மிகுந்த பக்தி உடையவன்.என் அன்பிற்கு உரியவன்.அவன் கொல்லப்படும் முன்பு என்னை நோக்கி நிகும்பலா யாகம் செய்ய வந்தான்.அவன் மட்டும் அந்த யாகத்தை செய்து முடித்து விட்டு இருந்தால் ராமாயண கதையே மாறி இருக்கும்.ஆனால் அந்த யாகம் கலைந்ததால் மட்டுமே அவன் வீரமரணம் அடைந்தான்..அவன் வம்சத்தில் வந்ததால் மட்டுமே எனக்கு உன் மேல் பிரியம். கடைசியாக ஒன்று சொல்கிறேன்.இப்பொழுது கூட நீ திருந்தி மதிவதனி உடன் சேர்ந்து வாழ முயற்சித்தால் உனக்கு எந்த தீங்கும் வராது.ஆனால் விதி உன்னை அதற்கு விடாது..விதி அதற்கான விளையாட்டை இன்னும் சிறிது நேரத்தில் துவங்கும்..எந்த உயிரும் ஒருநாள் மண்ணுக்கு செல்ல தான் வேண்டும்..சென்று வா"என கூறி காளி தேவி மறைந்து விட்டார்.

நடந்த உரையாடல்களை எல்லாம் இளைப்பாறுவதற்காக அங்கு கோவிலில் தங்கி இருந்த அகோரி ஒளிந்து இருந்து கேட்டான்..

"என்ன இந்திரஜித் வம்சம் இவனா..ஆகா அதிர்ஷ்டம் நம்மை தேடி வந்துள்ளது...இவனை வைத்தே என் எண்ணத்தை ஈடேற்றி கொள்ள வேண்டும்.."என அகோரி நினைத்தான்..

காத்தவராயனுக்கு காளி தேவி சொன்ன புத்திமதி எதுவும் மண்டையில் ஏறவில்லை.மதிவதனி தன்னை விட ஒருபடி மேல் இருக்கிறாளே என பொறாமையில் உள்ளுக்குள் குமைந்தான்.எந்த வீரர்கள் முன்னாடி நான் தோற்றேனோ..அவர்கள் முன்னாடியே நான் அவளை தோற்கடிக்க வேண்டும்..அப்பொழுது தான் பட்ட அவமானம் தீரும்.அவளை என் அடிமையாகவே வைத்து இருக்க வேண்டும்.."என நினைத்து கொண்டு கோவில் வெளியே வந்தான்..

அகோரி அவனை அழைத்தான்...

"மன்னர் மன்னா..."

காத்தவராயன் திரும்பி பார்த்து"யார் நீ " என்று கேட்டான்..

"கால பைரவரையும், காளி தேவியையும் வழிபடும் அகோரி நான்.தங்களை சந்தித்தது என் பாக்கியம்.தாங்கள் அதிமகாரதி இந்திரஜித் வம்சம் அல்லவா..."

"அது என்ன அதிமகாரதி.."காத்தவராயன் புரியாமல் கேட்டான்.

"கர்ணன்,அர்ஜூனன் ஏன் இராவணன்,கும்பகர்ணன் கூட மகாரதி தான் மன்னா...அதாவது ஒரே நேரத்தில் 14 லட்சம் வீரர்களை எதிர்த்து போராட கூடியவர்கள்..ஆனால் உலகத்தில் இதுவரை தோன்றியது ஒரேயொரு அதிமகாரதி தான்..அவன் தான் இந்திரஜித்..ஒரு அதிமகாரதி 8 மகாரதிகளுக்கு சமம் ஆனவன்..அவனின் மரபணு தற்பொழுது உங்களில் தேய்ந்து மங்கி போய் இருந்தாலும்,சில யாகங்கள் செய்து அந்த மரபணுவின் சக்தியை பல மடங்கு கூட்ட முடியும்..அதன் மூலம் தாங்கள் இளமையை பெறுவதோடு,இந்திரஜித்திடம் இருந்த அதே சக்தியை பெறலாம்..பிறகு உங்களை யாராலும் அழிக்க முடியாது..."என அவன் கூற காத்தவராயன் கண்கள் ஒளிர்விட்டது..

"என்ன யாகம் செய்ய வேண்டும்?சீக்கிரம் சொல்லு..தேவையானவற்றை உடனே ஏற்பாடு செய்கிறேன்..என காத்தவராயன் கேட்க..

"அதை உடனே செய்ய இயலாது மன்னா...தேவையான பொருள் இன்னும் உலகத்திற்கு வரவில்லை.. அகோரி பாபா யாகத்திற்கு தேவையான பொருளை பற்றி சொல்ல சொல்ல,அதை கேட்டு காத்தவராயனுக்கு தூக்கி வாரி போட்டது..

அவன் அகோரியிடம்,"நீ சொல்வதை நான் எப்படி..?அதுவும் என் கையால் செய்வது...!"

"செய்து தான் ஆக வேண்டும் மன்னா,உன் இளமை திரும்பி விட்டால் பிறகு கவலை என்ன எத்தனை முறை வேண்டுமானால் உன் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம்..அப்புறம் நீ நினைத்தது எல்லாம் நடக்கும்.."

காத்தவராயன் யோசித்தான்.இப்போது எனக்கு இருக்கும்  பலமே பல இளைஞர்களின் சக்திக்கு ஈடானாது.அதுவே என் வாலிப பருவமும்,கூட இந்திரஜித் முழு சக்தியும் கிடைத்தால்.....!" என யோசிக்கவே அவனுக்கு இன்பமாக இருந்தது..

காத்தவராயன் அகோரியிடம்,"எல்லாம் சரி,ஆனால் மதிவதனி என்னை தோற்கடித்த பின் அவளை ஏதாவது செய்ய வேண்டும் என என் மனம் துடிக்கிறது.."

[Image: IMG-0fha6n.gif]

அகோரி சில நிமிடம் யோசித்தான்..பிறகு அகோரி சில விசயங்களை சொல்ல சொல்ல காத்தவராயன் முகம் மலர்ந்தது..

"ஆகா அற்புதமான யோசனை...உடனே அதை செய்..பிறகு அவள் மாயமலை வரட்டும். நான் என் செயலை காட்டுகிறேன்.."காத்தவராயன் தன் மாளிகையை நோக்கி விரைந்தான்..

நான் சொன்னவை யாவும் உண்மை என்று நம்பி விட்டாய் காத்தவராயா..அது தான் இல்லை.நடக்க போகும் யாகம் உன் நன்மைக்கு அல்ல என் நன்மைக்கே... என சிரித்தான்..

அகோரி காத்தவராயனிடம்,என்ன பொருள் யாகத்திற்கு வேணும் என கேட்டான்..? இந்த உலகத்திற்கு ஏன் இன்னும் அந்த பொருள் வரவில்லை என்று சொன்னான்...?


மதிவதனி குதிரையில் வாயு வேகத்தில் மாயமலை திரும்பி கொண்டு இருந்தாள்.

மாயமலை உள்ளே பிரவேசித்த உடன் அவளை அழைக்கும் குரலை கேட்டு குதிரையை உடனே
நிறுத்தினாள்..ஓடிச்சென்று அவர் காலில் விழுந்து வணங்கினாள்..

"குருவே...இந்த இடத்தில் தாங்கள் எப்படி..?"

"காலம் என்னை உன்னிடம் அனுப்பித்தது மதி..."

"தாங்கள் எனக்கு குருவாக வந்தது என் பெரும் பாக்கியம்..ஏற்கனவே எனக்கு கற்று கொடுத்து நிறைய உதவி செய்து உள்ளீர்கள்.."

"என் அப்பா துரோணருக்கு அர்ஜுனன் போன்ற சிறந்த மாணவன் கிடைத்தான்.அது போல தான் எனக்கு நீ.அன்று நீ குரு தட்சணை தருவதாக சொன்னாய்..எனக்கு உன் வில் வேண்டும்"

மதிவதனி எந்த மறுபேச்சு பேசாமல் அவள் வில்லை எடுத்து அஸ்வத்தாமன் காலடியில் சமர்பித்து விட்டாள்..

"மிக்க சந்தோசம் மதி,இது தான் உண்மையான சிஷ்யைக்கு அழகு..உன்னை சிஷ்யையாக அடைந்ததிற்கு நான் பெருமைப்படுகிறேன்..அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்..நீ காத்தவராயனுக்கு அவன் வம்சம் விளங்க வாரிசை பெற்று தந்து விட்டு உயிரை துறப்பதாக எண்ணி உள்ளாய் சரியா..!"

"ஆம் குருவே..நீங்கள் நினைத்தது சரி தான்.அவனால் கறைப்பட்ட இந்த உடம்பை வைத்து கொண்டு வாழ எனக்கு விருப்பமில்லை.."

"ஆனால் உன் வயிற்றில் இன்னும் அவன் கரு உருவாகவில்லை.அது மட்டுமல்லாமல் அவன் உன்னிடம் தோற்ற அவமானத்தில் உன்னை வெறுத்து விலகி இருக்க போகிறான்.."

"அய்யோ அப்படியெனில் நான் எப்படி அவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றி என் உயிரை துறப்பது குருவே.."

"உன் அழகை வைத்து தான் நீ அவனை தூண்டி உடலுறவு கொள்ள வைக்க வேண்டும் மதி.அப்பொழுது தான் உன் எண்ணம் ஈடேறும்.."

"உத்தரவு குருவே..."என அவள் விடைபெற்றாள்.

அவள் குதிரை கண்ணில் மறைந்த பிறகு,அஸ்வத்தாமன் உருவில் இருந்த அந்த மாயாவி தன் பழைய உருவிற்கு மாறினான்..அந்த அகோரி தான் அதுவே..

"காத்தவராயா தெய்வீக வில்லை அவளிடம் இருந்து பறித்து விட்டேன்.இப்போ அவளாகவே உன்னை தேடி வரும்படி செய்தும் விட்டேன்..போரில் மிஞ்சிய அவள்,இப்போ உன்னிடம் கெஞ்ச போகிறாள்.."

அகோரி அந்த வில்லை தூக்க முயற்சி செய்தான்.ஆனால் அவனால் கொஞ்சம் கூட தூக்க முடியவில்லை..அதை அழிக்க காய்ந்த இலை தழைகளை வில் மேல் போட்டு தீப்பற்ற வைத்தான்..தீ கொழுந்து விட்டு எரிந்தது..

"உன்னோட தெய்வீக வில் இப்போ பஸ்மம் ஆகிவிட்டது மதிவதனி..காத்தவராயா உன்னை அழிக்கும் வில்லை அழித்து விட்டேன்.அவன் சிசு அவள் வயிற்றில் வளர்வது கூட தெரியாமல் அவனுக்கு மீண்டும் மீண்டும் முந்தி விரிக்க போகிறாள் மதிவதனி.. "ஹா ஹா....வென அந்த காடே அதிரும்படி சிரித்தான்..

ஆனால்.....அந்த வில்....

அடுத்து மன்னர் காலமா..?நிகழ் காலமா ?? Dodgy

குறிப்பு : இங்கே மரபணு என்று குறிப்பிட்டு இருப்பது ஜீன்..


[Image: Snapinsta-app-419075623-1072575333785883...n-1080.jpg]
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️ - by Geneliarasigan - 18-05-2024, 07:50 PM



Users browsing this thread: 126 Guest(s)