Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[img=0x0]https://makkalkural.net/news/wp-content/uploads/2019/06/20pic8.jpg[/img]
போஸ்டர் செய்தி
கேப்டன் வில்லியம்சன் அபார சதம்: நியூசிலாந்து அணிக்கு ‘திரில்’ வெற்றி பரிதாப நிலையில் தென் ஆப்பிரிக்க அணி
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. இந்த தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

பிர்மிங்காமில் நேற்று நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-–நியூசிலாந்து அணிகள் மோதின. முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் 1½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.

‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் தென்ஆப்பிரிக்காவை பேட் செய்ய அழைத்தார். இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் அந்த அணி ஆட்டத்தை துவங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான குயின்டான் டி காக்குக்கு 5 ரன்களில் பவுல்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து அம்லாவுடன் கேப்டன் டு பிளிஸ்சிஸ் கைகோர்த்தார். நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சு அபாரமாக இருந்ததால் தென்ஆப்பிரிக்க வீரர்களால் ரன்களை வேகமாக குவிக்க முடியவில்லை. அணியின் ஸ்கோர் 59 ரன்களாக உயர்ந்த போது டு பிளிஸ்சிஸ் 23 ரன்னில் பெர்குசன் பந்து வீச்சில் க்ளீன் போல்டு ஆனார். 25.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. மறுமுனையில் அரைசதம் எட்டிய அம்லா 55 ரன்களில் சான்ட்னெரின் சுழலில் சிக்கினார். பின்னர் மர்கிராம் (38), டேவிட் மில்லர் (36) பொறுப்புடன் ஆடி அணிக்கு ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது. வான்டெர் துஸ்சென் 64 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து 242 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. காலின் முன்ரோ 9 ரன்னிலும், மார்ட்டின் குப்தில் 35 ரன்னிலும், ராஸ் டெய்லர், டாம் லாதம் தலா ஒரு ரன்னிலும், ஜேம்ஸ் நீஷம் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதற்கு மத்தியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த கிரான்ட்ஹோம் 60 ரன்னில் கேட்ச் கொடுத்தார்.

கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை பெலக்வாயோ வீசினார். இதில் முதல் பந்தில் சான்ட்னெர் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை எதிர்கொண்ட வில்லியம்சன் அதை சிக்சருக்கு பறக்கவிட்டு தனது 12-வது சதத்தை எட்டினார். அதே சமயம் உலக கோப்பையில் அவர் அடித்த முதல் சதமாகும். அடுத்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றிக்கு வித்திட்டார்.

நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. வில்லியம்சன் 106 ரன்களுடனும், சான்ட்னெர் 2 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தார். 4-வது வெற்றியை பெற்ற நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இந்த தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணியின் உலக கோப்பை கனவு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது என்றே கூறலாம். 6-வது லீக்கில் ஆடிய தென்ஆப்பிரிக்க அணிக்கு இது 4-வது தோல்வியாகும். 3 புள்ளியுடன் உள்ள இந்த அணி எஞ்சிய 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் அரை இறுதிக்கு தகுதி பெறுமா என்பது சந்தேகத்திக்குரியது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 20-06-2019, 06:23 PM



Users browsing this thread: 103 Guest(s)