16-05-2024, 01:33 AM
21
பிராங்க்பர்ட், ஜெர்மனி.
நவம்பர் மாத குளிர் நகரத்தை முழுவதும் போர்த்தி இருந்தது. குளிருக்காக மக்கள் உடைகளை, உடம்பில் இடைவெளி தெரியாமல் அணிந்து நடந்துகொண்டிருந்தார்கள்.
ஒரு 6-அடி தடியன் சட்டென்று மறைவில் இருந்து எதிரே வெளிப்பட்டு நடந்துகொண்டுருந்த அந்த பெண்ணின் மீது மோதினான்.
“மன்னிக்கவும், நீங்கள் வருவது தெரியாமல் மோதிவிட்டேன்" என்று ஜெர்மனில் பேசினான்.
“பரவாயில்லை" என்று அவள் நகர்ந்தாள். சில நொடிகளில் தலை சுற்றி விழபோக, அவள் விழாமல் தாங்கிக்கொண்டான் அந்த மனிதன்.
என்ன நடக்கிறது என்று அவள் அறியும் முன்பே, அவள் அடையாளம் தெரியாத வாகனத்தில் ஏற்றப்பட்டாள்.
****
பிரகாசமான வெளிச்சதில் அந்த அறையின் நடுவே ஒரு நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு இருந்தாள்.
கண்களை மெல்ல திறந்து பார்க்க, அவள் முன் சம்யுக்தா கால்மேல்கால் போட்டு அதிகாரத் தோரணையில் உட்கார்ந்திருந்தாள்.
“வெல்கம் ரதி.. உன்னை இப்படி அழைத்து வந்ததற்கு மன்னித்துக்கொள்.”
ரதிக்கு கோவம் தலைக்கேறியது.
“நான் உன்னை முதலிலேயே எச்சரிச்சேன் . நீ இப்படி எல்லாம் செய்வேன்னு எனக்கு தெரியும். அதனால்தான் உன்னுடைய வண்டவாளங்களை தெருவில் வைக்க எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்திருக்கிறேன்.”, என்று சொல்லிவிட்டு அவளுடைய உள்ளங்கையை அழுத்தினாள். உள்ளங்கையில் இருந்து ரோபோட்டிக் சமிங்கைகள் சென்றன. ஆனால் அவள் எதிர்பார்த்த நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை.
சம்யுக்தா பலமாக சிரித்தாள்.
“நாம இப்போ பூமிக்கு மேல 50 கிலோ மீட்டர் உயரத்தில் Stratosphere மேல (அடுக்கு மண்டலம்) பறந்துகிட்டு இருக்கோம். உன்னோட 14G சிக்னல் எதுவும் இங்கிருந்து வெளியே போகாது. பயப்படாதே.. நான் உன்னை கொல்லறதுக்காக தூக்கிட்டு வர்ல. நாம மீட் பண்ணாதே ஒரு துரதிஷ்டவசமான சம்பவத்தாலே.... இல்லே இல்லே அது எனக்கு ஒரு அழகான சம்பவம். நீ வந்தது என்னோட துரதிர்ஷ்டம்.”
சம்யுக்தா தொடர்ந்தாள்.
“ ரதி கருணாகரன், பூர்வீகம் யாழ்ப்பாணம், ஈழம். அப்பா போராளி. அங்கிருந்து தப்பி ஜெர்மணியில் அடைக்கலம். போராட்டமான சின்ன வயசு வாழ்க்கை. நானோட்டெக் படிப்பில் தேர்ச்சி. 8 வருசத்துக்கு முன்னாலே அன்புநேசன் என்கிற அன்பு கூட கல்யாணம். பேருதான் அன்பு, ஆனா செயல்ல அரக்கன். 2 வருஷத்தில் டிவோர்ஸ். காரணம் 'குடும்ப வன்முறை'. அதில் உன்னோட குழந்தை கருவில் கலைஞ்சிருச்சு. ஒரு கண்ணும் போயிடுச்சு. இப்போ அந்த கண்ணில் embedded செயற்கை Cyborg கண் பொருத்தி இருக்கே. அதில் பாக்கறத எல்லாம் capture செஞ்சுடறே.
அதுக்கப்புரம் டிடெக்டிவ் சேனல் ஆரம்பிச்சு உன்னை மாதிரி கஷ்டபடுறவங்களுக்கு உதவறே. நோ money motive. துரதிஷ்டவசமா உன்னோட முன்னாள் கணவன் அன்பு என்னோட NGOல வேலை செய்யறான். அவனுக்கு எதிரா நீ புகார் குடுத்திருக்கே. ஆனா நடவடிக்கை எடுக்கலே. அந்த கோவம் என்மேலே இப்போ திரும்பி இருக்கு. என்ன நான் சொல்றது எல்லாம் சரியா ?”
ரதிக்கு மேலும் ஆத்திரம் கூடியது.
“என்னைபத்தி எல்லாம் தெரிஞ்ச உனக்கு நான் என்ன செய்வேன்னும் தெரியும்னு நினைக்கறேன்.”
சம்யுக்தா திமிராக, “ உனக்கு ஒரு பம்பர் ஆஃபர் தர்றேன். உனக்குத்தான் என்னோட ரியாக்சன் பாக்க பிடிக்குமே. அதனால இங்க நடக்கரதை எல்லாம் படம் பிடிச்சுக்கோ. நோ அப்ஜெக்சன்.”
சம்யுக்தா ரதியின் கைகளில் அவளுடைய சின்ன பெட்டியை கொடுத்தாள். ரதி அதை பிடுங்கி அவள் உள்ளங்கையில் சில சமிங்கைகள் செய்தாள். அந்த கையடக்க சின்ன பெட்டியில் ஒவ்வொன்றும் கடுகளவில் இருந்த 10000 நுண்ணிய கருவிகள் அந்த அறையை பல டிகிரியில் ஒரு அரைக்கோள வடிவில் ஆக்ரமித்தன. அவை ஒவ்வொன்றும் ஒரு சூப்பர் காமிராவின் இயந்திர பாகங்கள். அவற்றில் சில ஒளி பாய்ச்சுபவை. சில ஒலியை பதிவு செய்பவை. ஒரு சில பாகங்கள் மனிதர்களின் மீது படர்ந்து அவர்களின் இதய துடிப்பு, ரத்த ஓட்ட வேகம், உடல் சூடு என இன்னபிறவற்றை பதிவு செய்பவை. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அந்த பிம்பங்களை கட்டமைக்க உதவுவது PAI (Personal Artificial Intelligence ) tool (செயற்கை நுண்ணறிவு). இந்த காலகட்டதில் வசதி படைத்தவர்கள் AI-ஐ அவர்களுக்கு பிரத்யேகமாக மாற்றி அமைத்து அவர்களின் பல வேலைகளுக்கு உபயோகம் செய்துகொண்டிருந்தார்கள். சம்யுக்தாவிடம் இருந்தது மிக நவீனமான AI செயலி.
சம்யுக்தா ஆழமாக ரதியை பார்த்து, “ எனக்கு தெரியும். ஆனா உன்கிட்ட ஒன்னே ஒன்னு கேக்கறேன். பதில் சொல்லு .... உன்னோட குழந்தை சாவுக்கு காரணமான உன்னோட மாஜி புருஷன் இப்போ உன் கையில் கிடச்சா என்ன பண்ணுவே?”
ரதி பற்களை நரநரவென்று கடித்து, “ எனக்கு மட்டும் சக்தி இருந்தா அவனை உயிரோட தோலை உரிச்சு வெட்டிப் போட்டுடுவேன்.”
சம்யுக்தா ரதியை பார்த்து, “ உனக்கு ததாஸ்து தேவதை பத்தி தெரியுமா? அந்த தேவதை கிட்ட என்ன வரம் கேட்டாலும் உடனே 'ததாஸ்து' ன்னு சொல்லிடுமாமா. அது உடனே நடக்கும். இப்போ சொல்லு, நீ நெனைச்சது நடக்கணுமா?”
Quote: ததாஸ்து தேவர்கள் பற்றி அறிய Youtubeஇல் தேடவும்.
ரதி தலையை பலமாக ஆட்டினாள்.
“வாயை திறந்து சொல்லு!!”, சம்யுக்தா உருமினாள்.
“ எனக்கு அவனை உயிரோட தோல் உரிக்கணும். துண்டு துண்டா வெட்டனும். அதை என் கண்ணால பாக்கணும்" என்று வெறிபிடித்தவள் போல ரதி கதறினாள்.
சம்யுக்தா, “ ததாஸ்து!”
….
சொல்லி முடித்தவுடன் அந்த அறையின் ஒரு பகுதியில் வெளிச்சம் பரவியது. அங்கே அன்புநேசன் மேலாடை இல்லாமல் ஒரு சங்கிலியால் கட்டப்பட்டு நின்று கொண்டிருந்தான்.
2 நொடிகளில் அவன் உடலின் தோல் நானோ லேசர் கதிர்களால் துழைக்கப்பட்டு தனியாக வந்தது. அன்புநேசனின் கதறல் அந்த அறை முழுவதும் தெறித்தது. ரத்தம் வழிந்து ஓடியது.
ஒரு Cybernetic Terrorbot சில கருவிகளை எடுத்து அவன் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது.
….
கிர்...
கிர்...
கிர்...
…
....
…
...
ரதிக்கு சர்வமும் அடங்கிவிட்டது. அவனின் அலறல் அவள் காதைக் கிழித்தது. அவளால் எந்தவித எதிர்வினையும் ஆற்ற முடியவில்லை. உடலில் நடுக்கம் பரவி மயங்கி விழுந்தாள்.
****
ஒரு மணி நேரம் கழித்து விழித்தாள் ரதி.
“எழுந்திட்டியா? இந்தா இந்த தண்ணியை கொஞ்சம் குடி.” என்று சொல்லிவிட்டு அவள் குடிக்க தண்ணீர் கொடுத்தாள் சம்யுக்தா.
ரதிக்கு மயக்கம் முற்றும் தெளிந்தபின், சம்யுக்தாயை பார்த்து மீண்டும் பயந்தாள்.
“ பயப்படாதே. நான் உன்னை ஒன்னும் செய்யமாட்டேன்.”
ரத்தக்கறைகள் சுத்தமாக துடைக்கப்பட்டு அங்கே எந்தவித அசம்பாவிதமும் நடந்த அறிகுறியே இல்லாமல் காணப்பட்டது.
அப்போதுதான் கவனித்தாள். அங்கே சம்யுக்தாயுடன் சில பேர் இருந்தார்கள்.
“ இவங்க தான் என்னோட குடும்பம். இவங்களுக்காகத்தான் நான் வாழறேன்.
இவன் என் மகன் யுவராஜ வர்மா.. நான் செல்லமா யுவி யுவின்னு கூப்பிடுவேன்.”
ரதி குடித்த தண்ணீரில் அவளை அமைதிபடுத்தவும், கிளர்ச்சி ஊட்டவும் ஒரு சிறப்பு மருந்தை கலந்திருந்தாள் சம்யுக்தா.
“ இப்போ எப்படி ஃபீல் பண்றே..”, சம்யுக்தா கேட்க ரதி உடனே…
“ மே'ம் என்னை மன்னிச்சுடுங்க மே'ம்.. ஏதோ தெரியாம உங்கள படம் புடிச்சுட்டேன். இப்போவே அதை எல்லாம் அழிச்சுடறேன். என்னை விட்டுருங்க. ப்ளீஸ்.”, என்று கைகளை கூப்பி அழுதபடி பேசினாள்.
“ஏய் லூசு.. உன்னை கொல்லமாட்டேன்னு முதல்லயே சொன்னேன்ல. அப்புறம் எதுக்கு பயப்படறே. தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு நல்லது பண்ணி இருக்கே.”
ரதி புரியாமல் விழித்தாள்.
“ நீ எடுத்தியே அந்த வீடியோ.. அதை இப்போ பிளே பண்ணு. raw footage.”
ரதி தயங்கினாள்.
“Go on... play it. எப்படியும் நீ நாளைக்கு live பண்ண போறே.. ஊரே பாக்க போகுது... இப்போ எங்களுக்கு ஸ்பெஷல் ஷோ காட்டு”, சம்யுக்தா வலியுறுத்தினாள்.
ரதி உள்ளங்கையை அழுத்தி விரல்களை அசைத்தாள். அவள் கண்களில் இருந்து ஒளிக்கதிர்கள் விரிந்து ப்ரொஜெக்டர் திரை போல (digital Projector Screen) அவர்கள் முன்னால் தெரிந்தது.
****