Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
பாகம் - 69

மன்னர் காலம்..

பாகம் 68 ஐ படிக்காத வாசகர்கள் அதை படித்து விட்டு இதை படிக்கவும்..அப்பொழுது தான் கதையின் தொடர்ச்சி புரியும்..அடுத்தடுத்து இரண்டு பதிவுகள் போட்டுள்ளதால் தவறவிட வாய்ப்புண்டு..நன்றி..

மதிவதனி காத்தவராயன் பயன்படுத்தும் ஆயுத கிடங்கை பார்வையிட்டு கொண்டு இருந்தாள்..அதில் அவன் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பலம் மிகுந்த ஆயுதத்தை எடுக்க பார்க்க அவளால் தூக்க கூட முடியவில்லை.அதிலிருந்தே அவனின் பலம் அவளுக்கு புரிந்தது..

அப்பொழுது அருகில் இருந்த வாயிற்காப்பாளன்,"தேவி இந்த ஆயுதத்தை காளிதேவி காத்தவராயனுக்கு அருளியது..மன்னரை தவிர இதை யாரும் தூக்க முடியாது என வரம் அருளி உள்ளார்..பரசுராமர் பயன்படுத்தும் பரசு ஆயுதத்தை ஒத்த ஆயுதம் இது" என கூறினான்.


"ம்ம்ம்.நானும் தெய்வீக வில்லை வரம் வாங்கி வைத்து உள்ளேன் காவலாளி..என்னை தவிர யாரும் அந்த வில்லை உபயோகிக்க முடியாது..அதில் இருந்து புறப்படும் அம்புகள் எதிரிகளை கொன்று குவித்து விடும்.அந்த வில் என் கையில் இருக்கும் வரை என்னை யாரும் இதுவரை வீழ்த்தியது இல்லை."

"ஆனால் என் மன்னர் உங்களை சண்டையில் வீழ்த்தி உள்ளாரே தேவி...!"

"ஆமாம்,அப்போ என்னிடம் வில் இல்லை.. வாள் சண்டை மட்டுமே போட முடிந்தது.. வாள் சண்டையில் தான் நான் தோற்றேன்..என்னுடைய வில் மகத்துவமானது."

"சரிங்க தேவி,வாங்க வெளியில் போகலாம்..அப்பொழுது வெளியே செல்லும் பொழுது அழகிய வேலைப்பாடு மிகுந்த பெட்டி ஒன்று கண்ணில் பட்டது.அதை பார்த்து மதிவதனி நின்று"என்ன அது என கேட்க.."

"தேவி,அதை தயவு செய்து தொட வேண்டாம்..அதை திறக்க கூடாது என மன்னரின் ஆணை"

"ஏன் இதில் என்ன பரமரகசியம் அடங்கி இருக்கு.."

"தேவி,நாங்கள் அரக்கர் வம்சம்..எங்கள் வம்ச அரசர் கும்பகர்ணனை அழிக்க ஶ்ரீராமர் பயன்படுத்திய அக்னி அஸ்திரம் தான் அது..அதை பிரயோகிக்க சரியான வில் வேண்டும்.மேலும் இதை சரியான இலக்கு மீது தான் பிரயோகிக்க வேண்டும்..சாதாரண நபர்கள் மீது பிரயோகிக்க கூடாது அப்படி பிரயோகித்தால் அது நமக்கு தான் அழிவை தரும்..இதை பிரயோகிக்கும் வில் எங்கள் மன்னரிடம் கிடையாது..அதனால் மன்னர் அதை தொடுவதே இல்லை.."

"ம்ம்..அக்னி அஸ்திரம் பற்றி எனக்கும் தெரியும் காவலாளி.இந்த மாதிரி தெய்வீக அஸ்திரங்களை வலிமை மிகுந்த நபர்கள் மீது தான் உபயோகிக்க வேண்டும்..மேலும் இந்த அஸ்திரத்தை என் வில்லில் இருந்து எய்ய முடியும்..இதை எப்படி பிரயோகிக்க வேண்டும் என்று மட்டும் தான் எனக்கு தெரியாது..ஆமாம் உங்களிடம் இந்த அஸ்திரம் எப்படி கிடைத்தது..?"

"தேவி நான் தான் சொன்னேனே..!இது ஶ்ரீராமரின் அஸ்திரம்,அவர் விபிஷணனுக்கு கொடுத்து,பின்பு அவர் வம்சாவளியான எங்கள் கையில் வந்தது.."

மதிவதனி அடுத்த நாள் உப்பரிகையில் காற்றாட நடந்து கொண்டு இருக்கும் பொழுது,கீழே பெண்களின் கூக்குரல் கேட்டது..அங்கு நடந்த நிகழ்ச்சியை பார்த்து முற்றிலும் அதிர்ந்து விட்டாள்..எப்பொழுதும் எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் பெண்ணான அவளுக்கே அது உள்ளூர நடுக்கத்தை கொடுத்து விட்டது.

நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரு பெரிய திடலில் ஒரு பெரிய குழியை சுற்றி வட்டமாக நிற்க வைக்கப்பட்டு இருந்தனர்..அவர்கள் அனைவரும் பயத்தில் கதறி அழுது கொண்டு இருந்தனர்.அந்த குழி முழுக்க நிறைய மரக்கட்டைகள் போட்டு எரியூட்டி இருந்தனர்.

மதிவதனிக்கு உடனே புரிந்து விட்டது..அதை தடுக்க உடனே கீழே பாய்ந்து ஓடினாள்...

[Image: IMG-4ah0a9.gif]

மதிவதனி தளபதியிடம் கோபத்துடன் "தளபதி இங்க என்ன நடக்குது...ஏன் இத்தனை பெண்களை குழியை சுற்றி நிக்க வச்சி இருக்கீங்க..."

தளபதி அவளிடம்,"தேவி, உங்கள் நாடு மீது படையெடுத்த போது உங்களால் கொல்லப்பட்ட வீரர்களின் மனைவிகள் இவர்கள்...எங்கள் நாட்டு வழக்கப்படி கணவனை இழந்த மனைவிகள் வேறொரு ஆடவனை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள வேண்டும்..அப்பொழுது தான் நாட்டின் மக்கள் தொகை உயரும்.சேனைக்கும் ஆட்கள் கிடைப்பார்கள்,அப்பொழுது தான் நாட்டை பாதுகாக்க முடியும்.ஆனால் இவர்கள் உயிர் இழந்த தங்கள் கணவனை தவிர வேறொரு ஆடவனை மணக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.ஏற்கனவே போரில் நிறைய வீரர்களை நாங்கள் இழந்து விட்டதால் பாதிக்கு பாதி ஆட்கள் குறைந்து விட்டார்கள்..எனவே குழந்தை பிறப்பை அதிகப்படுத்த வேண்டிய முக்கியமான தருணத்தில் இவர்கள் முடியாது என்று சொல்வது நியாயமா..?இது இவர்கள் நாட்டுக்கு செய்யும் துரோகம் அல்லவா..!தண்டமாக இவர்களுக்கு ஏன் உணவளிக்க வேண்டும் என மன்னர் இவர்கள் அனைவரையும் உடன்கட்டை ஏற்ற சொல்லி விட்டார்.அதை தான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்.."

"இது அக்கிரமம்...முட்டாள்தனமான தீர்ப்பு இது..!இவர்களை உடனே விடுவியுங்கள்"என்று மதிவதனி கூற...

"தயவுகூர்ந்து மன்னியுங்கள் தேவி,ராஜாங்க விசயங்களில் பெண்கள் தலையிட கூடாது என்பது மாயமலையின் சாசனம்..தாங்கள் இதில் விலகி இருப்பது உங்களுக்கு தான் நல்லது..மன்னர் தீர்ப்பை யாராலும் தடுக்க முடியாது..."

"சரி மன்னர் எங்கே.?சொல்லுங்கள் நான் அவரிடம் சொல்லி விடுவிக்க சொல்கிறேன்.."

"மீண்டும் மன்னிக்கவும் தேவி,இன்று மகா சிவராத்திரி,அவர் மாயமலையின் இன்னொரு கோடியில் உள்ள தக்ஷின கைலாயம் சென்று உள்ளார்.அவர் நாளை இரவு தான் நாடு திரும்புவார்.அதுவரை நீங்கள் அவரை பார்க்க இயலாது.."

"அதுவரையாவது தயவு செய்து இந்த தண்டனையை நிறுத்தி வையுங்கள்."

தளபதி சிரித்தான்..

"இவர்களின் கணவர்களை கொன்றதே தாங்கள் தான்..தாங்கள் இவர்கள் மீது பரிவு காட்டுவதை நினைத்து எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது.."

மதிவதனி விடாமல்"படையெடுத்து செல்லும் பொழுது எதிரிநாட்டு வீரர்களை கொல்வது என்பது ஷத்ரிய தருமம்..அதிலும் பெண்களை,பசுக்களை கொல்ல கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா..!இப்படி அநியாயமாக பெண்களை கொல்வது ஏன்?அதுவும் உங்க நாட்டு பெண்களையே கொல்வது முறை தானா?

"உங்கள் நாட்டு சட்ட திட்டங்கள் இங்கே செல்லுபடியாகாது தேவி.. மாயமலையின் போர் விதிகளே வேறு.."

"சீக்கிரம் வேலைகள் ஆரம்பம் ஆகட்டும் .."என தளபதி கத்தினான்..

அப்பொழுது தீடீரென அபாய சங்கு முழங்கியது..கோட்டை கதவுகள் படாரென்று இழுத்து மூடப்பட்டன..

கோட்டை வாசல்வீரர்கள் தளபதியை நோக்கி ஓடி வந்தனர்.."தளபதி குந்தவை நாட்டு சேனையும்,விதர்பா நாட்டு சேனையும் நம் நாட்டை முற்றுகை இட்டு உள்ளன."

தளபதி திகைப்புடன் "எப்படி அவர்கள் அடர்ந்த காட்டை தாண்டி முன்னேறி வந்தார்கள்?மாயமலையை முற்றுகையிடும் தைரியம் அவர்களுக்கு எப்படி வந்தது.?"

காவலர்களோ.."தளபதி யோசிக்க நேரம் இல்லை..அவர்கள் நாட்டை ஏற்கனவே பிடித்து விட்டார்கள்.இன்றிரவே கோட்டை கதவை தகர்க்க முயற்சி செய்து கொண்டு உள்ளார்கள்.அதற்காக அகழி மேல் தற்காலிக பாலம் அமைத்து கொண்டு உள்ளார்கள்.."

இன்றிரவே பதில் தாக்குதல் தொடங்க வேண்டுமே..வியூகம் அமைக்க மன்னர் வேறு இல்லையே என தளபதி கவலையில் ஆழ்ந்தான்.அவனுக்கு என்ன செய்வதென புரியவில்லை..நாட்டை காப்பாற்ற மதிவதனியை தவிர அவனுக்கு வேறு வழியில்லை என்று தோன்றியது..

"தேவி தாங்கள் தான் இப்போது எங்கள் நாட்டை காப்பாற்ற வேண்டும்"என அவள் காலில் விழுந்தான்.

[Image: Snapinsta-app-441178255-787213216683225-...n-1080.jpg]

மதிவதனி கைகளை கட்டி கொண்டு"எங்கள் நாட்டு விதியின் படி நான் நடந்து கொள்ள வேண்டுமெனில் நான் இருக்கும் நாட்டுக்கு சாதகமாக செயல்படுவது தான் தருமம்..ஆனால் என் நாட்டு சட்ட திட்டங்கள் தான் இங்கே செல்லுபடி ஆகாதே...!உங்கள் நாட்டு சட்டதிட்டபடி நடந்து கொள்ள வேண்டுமெனில் நான் இப்போ உங்களுக்கு உதவவே கூடாது..!நான் இப்போ எந்த நாட்டு சட்ட திட்டத்தை பின்பற்ற வேண்டும் என நீங்களே கூறுங்கள் தளபதி.."

"தேவி கண்டிப்பா உங்கள் நாட்டு சட்டதிட்டம் தான் இப்போ சரியானது.அதையே தாங்கள் பின்பற்ற வேண்டும்.நாங்களும் அந்த சட்டங்களையே ஏற்று கொள்கிறோம்.."

"அப்படியென்றால் என் நாட்டு சட்டதிட்டபடி எந்த பெண்களையும் துன்புறுத்த கூடாது.இவர்களை உடனே விடுவிக்க வேண்டும் .",

"உத்தரவு தேவி..."

பெண்களின் கைகட்டுக்கள் உடனே அவிழ்க்கபட்டன.அவர்கள் அனைவரும் மதிவதனியை பார்த்து கைகூப்பினர்.

மதிவதனி உடனே அவர்களை பார்த்து,"நீங்கள் என்னை பார்த்து கைத்தொழ வேண்டும் என அவசியமில்லை..உங்கள் கணவர்களை கொன்றவள் நான்.இப்பவும் உங்கள் நாட்டை காக்க நான் எதிரி நாட்டு வீரர்களை கொல்ல தான் வேண்டும்.இது தான் சத்ரிய தருமம்..நான் செய்தது தவறாக பட்டால் என்னை மன்னியுங்கள்"என கை கூப்பினாள்.

மந்திர ஆலோசனை கூட்டம் உடனே நடைபெற்றது..

"மொத்தம் எத்தனை வீரர்கள் உள்ளனர் தளபதி" என மதிவதனி கேட்டாள்.

"மொத்தம் 2 லட்சம் வீரர்கள் உள்ளனர் தேவி."

"எதிரி நாட்டு படையில் மொத்தம் பத்து லட்சம் வீரர்களுக்கு மேல் உள்ளனர்..யானை படை கூட நம்மை காட்டிலும் இரண்டு மடங்கு,கண்டிப்பா நேரே எதிர்த்து போர் செய்ய இயலாது.கோட்டையில் இருந்து வெளியேற வழி ஏதேனும் உள்ளதா..!தளபதி,"

சுரங்கப்பாதை ஒன்று உண்டு தேவி,அது காட்டில் இருக்கும் காமக்யா தேவி கோவில் வாசலில் முடிவடைகிறது..ஆனால் அதன் வழியே குதிரைகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும்..."

"இங்கே பாருங்கள் தளபதி,நேரம் குறைவாக உள்ளது.விடிந்து விட்டால் அவர்களுக்கு தான் சாதகம்..நான் சுரங்கப்பாதை வழியே பத்தாயிரம் வீரர்களைக் கூட்டி சென்று உடனே பின்பக்கமாக போர் தொடுக்கிறேன்.தாங்கள் இங்கு இருக்கும் மீதி வீரர்களை வைத்து கொண்டே கோட்டை மதில் சுவர் மீது இருந்து அவர்களை முன்னேற விடாமல் தடுத்து கொண்டே இருங்கள்.நான் பின்பக்கமாக அவர்களை தாக்க தொடங்கியதும் நீங்களும் கோட்டை கதவை திறந்து தாக்க தொடங்க வேண்டும்.சரியா...!"

"தேவி,உங்களுக்கு பத்தாயிரம் வீரர்கள் போதுமா...!"

சுரங்கப்பாதையில் அவ்வளவு தான் கொண்டு செல்ல முடியும் தளபதி..அதிகமான வீரர்களை கொண்டு சென்றால் நெரிசல் ஏற்பட்டு வீண் தாமதம் ஆகி அதுவே எதிரிகளின் வெற்றிக்கு வழி வகுத்து விடும்...நான் சொன்னபடி செய்யுங்கள்..நான் இதுவரை பயன்படுத்தாத ஆயுதத்தை இன்று போரில் பயன்படுத்த போகிறேன்..வெற்றி நமதே...! "என தன் வில்லை எடுத்து கொண்டு கிளம்பினாள்..

மாயமலை வீரர்கள் முடிந்த வரை எதிரிகள் பாலம் அமைக்கவிடாமல் கோட்டை சுவர் மீது இருந்து தடுத்து கொண்டு இருந்தனர்..இரண்டு பக்கமும் வீரர்கள் பலியாகி கொண்டே இருந்தனர்..அவர்கள் பக்கம் வீரர்கள் அதிகமாக இருந்ததால் கணைகள் அதிகமாக மாயமலை வீரர்கள் மீது வந்து விழுந்தன..அதில் மாயமலை வீரர்கள் அதிகமாக பலியாகினர்...

மதிவதனி,சுரங்கப்பாதையில் நுழைந்து வெளிவருவதற்குள் ஒரு நாழிகை ஆகி விட்டது..

"தேவி விடிவதற்கு ஒரு நாழிகைக்கும் குறைவான நேரமே உள்ளது.."என மதிவதனி கூட இருந்த உபதளபதி கூறினான்..

"நமக்கு அது போதும்."மதிவதனி கூறினாள்..

போர் முரசை மதிவதனி ஒலிக்க படையின் பின்பக்கம் வந்து ஓசை வந்ததை கண்டு எதிரி நாட்டு மன்னன் அதிர்ந்தான்..

பின்னாடி திரும்பி பார்க்க சொற்ப வீரர்கள் மட்டும் இருப்பதை பார்த்து,உடனே குந்தவை நாட்டு மன்னன் விதர்ப நாட்டு சேனையிடம் அவர்களை நோக்கி போரிட சொன்னான்..

பாதி படைபிரிவு  பிரிந்து மதிவதனி படை பிரிவை நோக்கி ஓடி வந்தது..பெரிய சுறா வாயை திறந்து இரையை விழுங்க வருவது போல் எதிரி படைப்பிரிவு மதிவதனி படையை நெருங்கியது.

மதிவதனி பக்கம் இருந்தவர்கள்,அவ்வளவு தான் தொலைந்தோம் என நினைத்தார்கள்.

மதிவதனி தன் வில்லை எடுத்து அரண்யா அஸ்திரத்தை ஏவினாள்.அது அப்படியே சில அடிகள் பாய்ந்து பல்லாயிரம் அம்புகளாக மாறி ஒன்றாக பிணைந்து அம்புகளால் சுவர் போன்ற ஒரு தடுப்பை உருவாக்கியது...கையில் உள்ள ஆயுதங்களை கொண்டு எதிரி நாட்டு வீரர்கள் அதை உடைக்க முயன்றனர்.ஆனால் அவர்களால் கிஞ்சித்தும் உடைக்க முடியவில்லை.மீண்டும் ஒரு அரண்யா அஸ்திரத்தை மதிவதனி ஏவினாள்.அது அவர்கள் படை பிரிவில் நடுவில் விழுந்து தடுப்பு உருவாகி படைப்பிரிவை இரண்டாக பிரித்தது.அதே போன்று இன்னும் ஐந்து அரண்யா அஸ்திரங்களை ஏவ,மூன்று லட்சம் வீரர்கள் சிறு சிறு பிரிவாக பிரிக்கபட்டனர்..இதை மாயமலை வீரர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்..

"என்ன அப்படி பார்க்கறீங்க..போரிட தயாராகுங்கள்.."என கட்டளையிட்டாள்.

முதலில் விட்ட அரண்யா அஸ்திரத்திற்கான மாற்று அஸ்திரத்தை மதிவதனி ஏவ,அது உடைந்து முதல் படைப்பிரிவு வெளியே வந்தனர்... மாயமலை வீரர்கள் முன்னேற, தன் குதிரையில் அமர்ந்து இருந்த மதிவதனி கிருபாக்னீ என்ற அஸ்திரத்தை எய்தாள்.அவள் வில்லில் இருந்து புறப்படும் பொழுது ஒன்றாக புறப்பட்ட அஸ்திரம் ஆயிரக்கணக்கான அம்புகளாக மாறி பல்லாயிரம் வீரர்களை கொன்று குவித்து விட்டது...அதாவது மாயமலை வீரர்கள் படைபிரிவை நெருங்கும் முன்பே...அவர்கள் போரிட அவசியம் ஏற்படவே இல்லை.அடுத்து ஆக்னேயா அஸ்திரத்தை ஏவ பல பெரிய பெரிய பாறைகள் குந்தவை நாட்டு வீரர்கள் மீது விழுந்து இறந்தனர்.

அப்படியே ஒவ்வொரு அரண்யா அஸ்திரமாக  உடைத்து,ஒவ்வொரு படைப்பிரிவாக கிருபாக்னீ அஸ்திரம், ஆக்நேயா அஸ்திரம் மூலம் கொன்று கொண்டே வந்தாள்...சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

எதிரி நாட்டு வீரர்களை தளபதியும் முன்னோக்கி தாக்கி கொண்டே வர,பின்பக்கமாய் மதிவதனி தாக்க,பின்வாங்க முடியாமல் குந்தவை நாட்டு மன்னன் நடுவில் சிக்கி தவித்தான்..கடைசியில் மதிவதனி மோகனாஸ்திரத்தை ஏவினாள்..அது அங்கு இருக்கும் யானைகளை மதம் பிடிக்க செய்து தங்கள் வீரர்களையே கொன்றது..

தன் படையில் பெரும்பகுதி, மடிவதை கண்டு காப்பாற்ற முடியாமல் குந்தவை நாட்டு மன்னன் திணறினான்..அவன் விட்ட அம்புகளுக்கு அனாசயமாக பதில் அம்புகளால் வெட்டி தள்ளி அவன் வில்லை ஒடித்தாள்.அவன் கீரிடத்தை குறிவைத்து இடித்து தள்ளினாள்.. ரதத்தில் இருந்த குதிரை ஒட்டியை  அம்பை விட்டு கொன்றாள்.ரத சக்கரத்தை ஒடித்து அவனை தரையில் தள்ளி,அவன் கழுத்துக்கு அம்பை குறிவைக்க,குந்தவை மன்னன் தரையில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறினான்..

"தேவி,சரணம் சரணம்...என்னை விட்டு விடுங்கள்...தங்கள் சக்தி அறியாமல் உங்களிடம் சமர் புரிய வந்தது எனது மாபெரும் தவறு தான்.அடியேனை மன்னியுங்கள்..நான் வெறும் அம்பு தான்..என்னை எய்தவர் வேறு ஒருவர்...என்னை விட்டு விடுங்கள்..நானும் என் வீரர்களும் இப்பவே சரணடைந்து விடுகிறோம்..."என கீழே விழுந்து மன்றாடினான்..

அதை கேட்டு உடனே அவன் வீரர்கள் உடனே கையில் இருந்த ஆயுதத்தை போட்டு சரணடைந்து விட்டனர்..

"சொல் யார் உன்னை இங்கே அனுப்பியது?எப்படி உனக்கு மாயமலையை முற்றுகை இடும் தைரியம் வந்தது..?என தளபதி அவன் கழுத்தில் கத்தி வைத்து கேட்டான்...

அவன் மதிவதனியை பார்த்து,"தேவி தங்கள் தந்தை தான் இங்கே அனுப்பி வைத்தார்..அவர் உங்களை கொல்ல சொல்லி ஆணை.."

இதை கேட்டு மதிவதனி தலையில் இடி விழுந்தது...

"என் தந்தையார் கண்டிப்பா அவ்வாறு சொல்லி இருக்க மாட்டார்.நீ பொய் சொல்கிறாய்"என கத்தினாள்..

"ஈசன் மேல் சத்தியமாக சொல்கிறேன்.நான் சொல்வது முற்றிலும் உண்மை.காத்தவராயனின் கரு உங்களுக்குள் உருவாகி இருக்கிறதாம்.ஒரு அரக்கனின் வாரிசை எப்படி தன் வம்சத்தில் உருவாகலாம் என்று உங்களை கொன்று வரச்சொன்னார்.."

மதிவதனி தலைகுனிந்தாள்.

பின் தளபதியிடம்,"இவரை சிறைப்பிடித்து அழைத்து செல்லுங்கள்.."என்று தளுதளுத்த குரலில் கூறினாள்.

மனதளவில் மதிவதனி நொறுங்கி போய் இருந்தாள்..

"தளபதி,நான் உடனே மகேந்திரபுரி சென்று என் தந்தையை காண வேண்டும்..சில வீரர்கள் மட்டும் நான் உடன் அழைத்து செல்கிறேன்.."

"தேவி,இதுவரை தாங்கள் பயன்படுத்திய போர் முறையை நாங்கள் கண்டதே இல்லை.சில மணிபொழுதில் ஒரு படையை ஒற்றை ஆளாக வீழ்த்தி விட்டீர்களே..!எப்படி..?"என தளபதி கேட்டான்.

"இந்த போர்முறை எனக்கு என் குரு அஸ்வத்தாமனால் பயிற்றுவிக்கப்பட்டது.இந்த தெய்வீக அஸ்திரங்கள் யாவும் அவர் சொல்லி கொடுத்தது...ஆனால் இன்னும் இதைவிட பல வியத்தகு அஸ்திரங்களை உங்கள் முன்னோர்கள் வைத்து இருந்தனர்.அதில் ஒருவன் இராவணன் மகன் இந்திரஜித்..நான் விட்ட அஸ்திரங்களை அவன் நொடிப்பொழுதில் பஸ்மம் ஆக்க கூடியவன்.நான் வியந்து பார்க்கும்  அஸ்திரம் ஒன்று உள்ளது.அது மகாமாயா அஸ்திரம்..அந்த அஸ்திரத்தை அறிந்தவர்கள் இந்த பிரபஞ்சத்தில் இருவர் மட்டுமே..ஒருவர் சிவன்..இன்னொருவர் ராமர்..அந்த அஸ்திரத்தை ஏவினால் எத்தனை லட்சம் வீரர்கள் உள்ளனரோ,அத்தனை பேர் முன்னாடி நம் உருவம் தோன்றி போரிட்டு அவர்களை அழிக்கும்.அதை ராமர் தான் முதன்முதலில் இராவணன் போரின் போது பயன்படுத்தி கோடிக்கணக்கான அரக்கர்களை கொன்றார்.சரி நேரமாகி விட்டது நான் வருகிறேன்"

"தேவி,மன்னர் வந்து உங்களை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வது..?

"உங்களுக்கு அந்த சிரமம் இருக்காது தளபதி..காத்தவராயன் வருவதற்குள் நான் திரும்பி விடுவேன்..வருகிறேன் என குதிரையை முடுக்கினாள்."

அது மகேந்திரபுரியை நோக்கி பறந்தது...அவளுடன் சில வீரர்களும் சென்றனர்.

[Image: Snapinsta-app-439879898-392000597041149-...n-1080.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 9 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️ - by snegithan - 15-05-2024, 10:29 PM



Users browsing this thread: 14 Guest(s)