14-05-2024, 12:12 AM
(This post was last modified: 28-05-2024, 11:09 PM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
அழுது அழுது கண்கள் சிவந்து, உடல் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் சுகன் என்கிற சுகுணா. உடல் வலி அவளுக்கு அதைவிட மன வலி அதிகமாக இருந்தது. ஏன் தான் இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்கும் மனிதர்களை கண்டால் எவருக்குமே பிடிப்பதில்லை என தெரியவில்லை. அருகில் இருக்கும் வீட்டுக்காரன் ஏதாவது ஒரு புது பொருளை வாங்கினால் அவனை ஒருவர் கூட பாராட்டி மகிழ்ச்சியோடு வாழ்த்துவதில்லை.
அவனுக்கு வந்த வாழ்வு எப்படி இருக்கிறான் பார் புதிதாக இத்தனை வாங்கி வைக்கின்றான் என்று புகார்கள் அவன் மீது வம்படியாக சில பொய் பேச்சுக்கள் என்றே மக்கள் இருக்கின்றார்கள். ஒரு ஆண் என்றால் அவனுடைய வேலையை எள்ளி நகையாடுவது, அவனுடைய இயலாமையை சொல்லி காண்பிப்பது.. அதுவே ஒரு பெண் என்றால் அவ்வளவுதான். அவனுடைய அத்தியாவசியமான ஒழுக்க நெறிகளை பற்றிய புகார்களையும் பொய்களையும் அவிழ்த்து விடக் கூடிய தந்திரமிக்க நரிகளை போல அருகில் உள்ளோர் செயல்படுவர்.
"அம்மா..அம்மா... அப்பா காணாம்?” மழலையில் கேட்கும் மகனின் வார்த்தைகள், அவள் சோகத்தைக் கிளற, மகனை மார்போடு அணைத்து தேம்பினாள். அவள் எடுத்துக் கூறினாலும் புரிந்து கொள்ளக்கூடிய வயதில்லை அந்த குழந்தைக்கு. வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாய் தேடித்தேடி தன்னுடைய தகப்பனைக் காணாமல் அன்னையிடம் புகார் சொல்ல வந்திருந்த குழந்தை அவளுடைய சோகத்தை மேலும் அதிகரிக்கின்றோம் என்பதே அறியாதது.
"சுகன்.. என்னம்மா இது? இப்படியே நொடி கூட விடாமல் அழுதுகிட்டே இருந்தா என்னம்மா ஆவரது?"
"..."
"மனசை தேத்திக்கம்மா. பாண்டியனோட காரியங்கள் முடிச்சாச்சு. வந்த ஜனமும் கிளம்பி போயிருச்சு. இனியும் இப்படியே இடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தா, உன் உடம்பு என்னத்துக்காகும். அண்ணன் அண்ணி.. என்னைக்குமே உனக்கு துணையாயிருப்போம்.”
சுகனின் சகோதரன் திவாகர் சொல்ல, அதை ஆமோதிப்பது போல் அண்ணியும் குழந்தைகளும் அவள் அருகில் உட்கார்ந்து அவளை ஆறுதல் படுத்தினர்.
"சுகுணா நாங்க இருப்போம் நீ எதுக்கும் கவலைப்படாதே. யாரும் இல்லைன்னு நினைக்காத.. இனி மிச்சம் இருக்குற வாழ்க்கையை எங்க வீட்டுல வந்து வாழு. உங்க அண்ணன பத்தி நான் சொல்லனுமா என்ன உனக்கு நல்லா தெரியும் உன்னை தங்க தட்டுல வச்சு தாங்க கூடியவரு.. அவர் இருக்கும் பொழுது நீ இப்படி கண்ணகசிக்கிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு நீ அழுவ அவரு பாரு எவ்வளவு வருத்தத்தோடு இருக்காருன்னு.."
"..."
"இப்படி எதுவும் சொல்லாமல் எதுவும் சாப்பிடாம இன்னும் எத்தனை நாளைக்கு சுகுணா இப்படியே இருக்க முடியும்?. நீ நல்லா சாப்பிட்ட தானே பிள்ளைக்கு பால் கொடுக்க முடியும். அந்த குழந்தைக்கு குட்டி பால் கொடுத்து தூங்க வைக்க முடியுமா? அதுதான் ஆரோக்கியமா?. நிலைமையை புரிந்துகொள்வதற்கு இல்லை என்றாலும் உங்க அண்ணனுக்கு இல்லை என்றாலும் உன் குழந்தைக்காக நீ கொஞ்சமாவது சாப்பிடனும்.. வா.. வா.. எழுந்து வந்து கொஞ்சமாச்சு நீ சாப்பிடு."
வாசலில் தள்ளாமையால் உடல் மெலிந்து, வயசான காலத்தில், தனக்குக் கொள்ளி வைக்க வேண்டிய மகன், அல்பாயுசில் போய்ச் சேர்ந்ததை ஜீரணிக்க முடியாமல், நிலைகுத்திய பார்வையுடன், ஜடமாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் சிவவாக்கியர்.
"மாமா, நீங்களும் இப்படி இடிஞ்சு போயி உட்கார்ந்திருந்தா, அப்புறம் உங்க மறுமகளை யார் தேத்தறது சொல்லுங்க"
".."
ஆறுதல் சொல்வதற்காக சுகன்யாவின் அண்ணன் சிவவாக்கியரை துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.
"நீங்கதான் அவளுக்கு நல்ல வார்த்தை சொல்லணும். நாங்க எவ்வளவோ சொல்றோம். அவளால் இன்னும் மீள முடியலை. நீங்கதான் நல்ல வார்த்தை சொல்லி எங்க கூட அவளை அனுப்பி வைக்கும் இப்படியே ஒரு மூலையில அவளும் இன்னொரு மூலையில நீங்களும் அழுதுகிட்டே கடந்தீங்கன்னா.. அந்த பச்சைக் குழந்தையை யார் பார்த்துக்குறது?”
மெதுவாக கண் திறந்து, எதிரில் நிற்கும் சுகுணாவின் அண்ணன் திவாகரை பார்த்தார் சிவவாக்கியர்..
"எப்படிப்பா… நடந்திருக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்! அதிலிருந்து அவ மீளமுனா கொஞ்சம் காலம் ஆகும்ப்பா.."
"பெரியவங்களே இப்படி சொன்னா எப்படிங்க.."
"இது ஒன்னும் வினோதமான விஷயம் இல்லை தம்பி. என்னோட பையன் இப்படி அல்பாய்ஸ்ல போவான்னு எனக்கு தெரியாது. அவன தோழியும் மாருலேயும் போட்டு வளர்த்த எனக்கே அவனுடைய பிரிவு வேதனைனா.. சுகம் துக்கம் அப்படின்னு எல்லாத்தையும் ஒன்னாவே அனுபவிச்சு.. உடம்பு மனசுனு எல்லாமே ஒண்ணா இருந்தவ மீள்றது ரொம்ப கஷ்டம்ப்பா.."
"அப்ப அவளை இங்கேயே விட்டு விட்டு போக முடியுங்களா?!"
"இங்கையே விட்டுட்டு போக சொல்வேனா.?. தங்கையின் நிலையை உணர்ந்து, அவளை ஆறுதல்படுத்த நினைக்கிறீங்களே… உங்க பாதுகாப்பில் அவள் இருந்தா தான் நல்லது. நல்லா அழைச்சுட்டுப் போங்க. ஆனா இப்பவே வேணாம். அவளா கொஞ்சம் கொஞ்சமாக மனச தேத்திக்கிடட்டும். அவளா வாரேனு உங்க கூட வரப்ப கூட்டிக்கிட்டு போங்க. உங்களால தான், அவளை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். "
"சரிங்க. அவளும் எவ்வளவு சொன்னாலும் அசைஞ்சு தர மாட்டேங்கிறா.. என் பொஞ்சாதி மயிலை இங்க அவளுக்கு ஒத்தாசைக்கு விட்டுட்டு போறேன். அப்பப்ப வந்து பார்த்துக்கிறோம். "
சிவவாக்கியர் எழுந்து.. அவளருகே போனார்.. தலையில் கையை வைத்து ஆசிர்வதிப்பது போல தடவினார்.
"அம்மாடி. என் ஒருத்தனுக்கு, இவ்வளவு பெரிய வீடு தேவையில்லைம்மா. இதை காலி செய்து, வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணணும். அந்த பணத்தை, என் பேரன் பேரில் வங்கியில் போட்டால், பிற்காலத்தில் அவனுக்கு அது உதவும். அப்படியே, என் கடைசிக் காலத்தைக் கழிக்க, ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிட பார்க்கிறேன். அவனே போன பிறகு நான் எதுக்குமா உனக்கு சுமையா இருக்கனும்"
"ஐயோ.. மாமா உங்க பையன் அல்பாயுசில் போக வேண்டியவனா… ஆஜானுபாகுவாக எவ்வளவு களையாக இருப்பாரு. படிப்பும், அழகும் சேர்ந்து, ராஜகுமாரனாக இருந்தாரு… அந்த பாழாய்ப் போன எமன், லாரி ரூபத்தில் வந்து, உங்க மகன் உயிரை நிமிஷமாக குடிச்சுட்டு போயிடுச்சே… என் பையனை நான் எப்படித் தேற்றுவேன்…" அவள் அழுது கொண்டே மாமனார் சிவவாக்கியரை அணைத்தாள்.
"ஐயோ.. அழாதே தாயி. நீங்க வாழ்ந்த சந்தோஷ வாழ்க்கையை பார்த்து, பாவி நானே கண் வச்சுட்டேனே… சின்னப்பிள்ளைக போல துள்ளி குதித்து நீயும் அவனும் இந்த ஹால்ல விளையாடதைப் பார்த்து பாவி நானே கண் வச்சுட்டேனே… அவனே போன பிறகு எனக்குனு யார் இருக்கா?.. இனி எனக்குனு யார் இருக்கா?”
"அழுவாதிங்க மாமா.. அவரோட இடத்துல இருந்து நான் பார்த்துக்குவேன் உங்களை.. தாயில்லாத மகனை வளர்க்க நீங்க மறுபடியும் கல்யாணம் பண்ணிக்காம ஒத்தையாவே வளர்த்த கதையை என்கிட்ட அவர் சொல்லி இருக்கார் மாமா?!. நானும் உங்களைப் போல உங்க பேரனை வளர்ப்பேன் மாமா.."
"வேணாம் தாயி. இந்த சின்ன வயசுல தனியா இருந்து பையனை வளர்க்கிறது அவ்வளவு சுலபம் இல்லை. ஆம்பளை நானே படாத கஷ்டம் பட்டிருக்கேன். உனக்கும் அதெல்லாம் வேணாம்.
"அண்ணா.. அவரு நிறைய கனவுகளோட இருந்தாரு. அந்த கனவுகளை என்கிட்ட சொல்லிட்டு போயிருக்காரு. மகனை நல்லபடியா படிக்க வச்சு, ஒரு பொறுப்புள்ள மனிதனாக உருவாக்கணும். வயசான அவரோட அப்பாவை, கடைசி வரை நம் பொறுப்பில் நல்லபடியா கவனிச்சுக்கணும்ன்னு, அவர் அடிக்கடி சொல்வாருண்ணா. அதையெல்லாம் ஏன் அவர் அடிக்கடி சொன்னாருனு இப்பதான் புரியுது. இனி, அவர் ஸ்தானத்தில் இருந்து அவரோட கனவுகளை நான் நிறைவேத்த முடிவு பண்ணிட்டேன்." அவள் மூச்சு விட்டாள்..
“நீங்க தங்கச்சிக்கு ஏதும் செய்யணும்ன்னு நினைச்சா, என் படிப்புக்கு தகுந்த ஒரு வேலையை எனக்குத் தேடிக் கொடுங்க. இந்தக் குடும்பப் பொறுப்பை நான் ஏத்துக்கிட்டு, எந்தக் குறையுமில்லாமல், என் மாமனாரையும், மகனையும் பார்த்துப்பேன். வயசு காலத்தில், எனக்கு பாதுகாப்பாக, துணையாக என் மாமனார் இருப்பாரு. அவருக்குப் பின், என் வயசான காலத்தில், என் மகன் எனக்குத் துணையாக இருப்பான். நாங்க ஒருத்தருக்கொருத்தர் துணையாக வாழ்வோம். பிறந்த வீட்டு ஆதரவு, எனக்கு என்னைக்கும் இருக்குங்கிற தைரியத்தோடு, நான், என் வாழ்க்கையை தொடருவேன். தயவு செய்து என்னை புரிஞ்சுக்குங்க அண்ணா.”
கண்ணீர் மல்க, அதே நேரம், உறுதியுடன் பேசும் தங்கையை, பாசத்துடன் பார்த்தான் திவாகர். மருமகள் பேசுவதை, கேட்ட மாமனார் சிவவாக்கியர், மனம் நெகிழ்ந்து கண்ணீர் வடித்தார்.

sagotharan