Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
பாகம் - 66

நிகழ் காலம்

"மாறா அதுதான் ஆள் யாரு என்று கண்டுபிடிச்சாச்சே...வா உடனே போய் அந்த பொண்ணை பார்த்து நடந்த விசயத்தை சொல்லுவோம்..."

"ஆரூ..நான் ஏற்கனவே காலையில் அந்த பொண்ணை ஃபாலோ பண்ணி சில விசயம் தெரிஞ்சுக்கிட்டேன்..அந்த பொண்ணு பேரு அனு..அந்த காத்தவராயன் ஆவி அவள் கூடவே சுத்திட்டே இருக்கு..அவள் வீட்டுக்குள்ளேயே தான் எந்நேரமும் கூடவே இருக்கு.அனு வீட்டுக்குள் போய் சந்தித்து பேச வாய்ப்பே இல்ல..அந்த பொண்ணு இன்னிக்கு மதியம் பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் போக போறதா வாட்ச்மேன் கிட்ட பேசிச்சு.அதனால் நாம அங்கே போய் பேசிக்கலாம்.அதுவரை காத்து இருப்போம்.."

மதியம் அனு ஸ்கூட்டரில் பக்கத்தில் உள்ள சூப்பர் மார்கெட் சென்றாள்.காத்தவராயன் ஆவியும் அவளை பின்தொடர்ந்து சென்றது..ஆனால் போகிற வழியில் அம்மன் கோவில் வந்தது..சித்திரை மாதம் கோவில் விசேஷம் காரணமாக பொங்க வைத்து கூழ் ஊற்றி கொண்டு இருந்தனர்..அம்மன் வீதி உலா எதிரில் வர காத்தவராயன் ஆவி திடுக்கிட்டு நின்றது.ஆனால் அனு தொடர்ந்து முன்னேறி செல்ல ஆவியால் பின்தொடர முடியாமல் போனது..

அனு சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்கி கொண்டு இருக்கும் பொழுது சப்பென்று யாரோ கன்னத்தில் அறையும் சத்தம் கேட்டது...

அனு ஓடிவந்து எட்டிபார்க்க,அங்கே இரு பெண்கள் நின்று கொண்டு இருந்தனர்.அவர்கள் இருவர் பேசி கொண்டு இருந்ததை அனு கேட்க நேர்ந்தது.

அவர்கள் இருவர் யார் என்பது என்னோட இன்னொரு கதை "நினைவோ ஒரு பறவை"படித்தவர்களுக்கு புரியும்.ஆம் அந்த இருவர்  சஞ்சனா,சுஜிதா தான்.

[Image: 1500x900-857339-malvika-sharma-1.jpg]

"இப்போ நான் ஏன் உன்னை அறைந்தேன்? ஏன் முத்தம் கொடுத்தேன் என்று உனக்கு புரியல இல்லை" என சஞ்சனா கேட்க சுஜிதா மலங்க மலங்க புரியாமல் விழித்தாள்.

உன் புருஷன், உனக்கு குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால், விரட்டி விட்டான் என்று தானே என்கிட்ட வந்து வாழ வழி கேட்டு வேலை கேட்டே.அதுக்காக நான் உனக்கு வேலை கொடுத்தேன் என நினைச்சியா..!ஒரு காலத்தில் என்னவன் உன்னை நேசிச்சி இருக்கான். அதுக்காக தான்.ஆனால் நீ என் புருஷன்கிட்ட இருக்கும் சின்ன குறையை நீ கிண்டல் பண்றீயா. தொலைச்சிபுடுவேன். அவன் சுத்த தங்கம். ஒரு சின்ன கீறல் இருந்தாலும் அந்த தங்கத்தின் மதிப்பு குறைவது இல்லை.அவன் வேகத்திற்கு குறைந்தபட்சம் உன்னால் நடக்க முடியுமா?அவன் இப்போ இருக்கிற கம்பெனியில் ASM ஆயிட்டான். அதுவாவது உனக்கு தெரியுமா? கூடிய விரைவில் மேனேஜர் ஆக போறான். அவனோட மாச சம்பளம் மட்டும் மாதம் 1 லட்ச ரூபாய்க்கு மேல். உன்னோட சம்பளத்தை விட 7 மடங்கு. அது தவிர இப்போ நீ வேலை செய்கிற எங்க கம்பெனியில் இருந்து வரும் லாபம் மட்டும் மாதம் 2 லட்ச ரூபாய்க்கு மேல்.ஆக மொத்தம் மாத வருமானம் அவன் சம்பாதிப்பது 3 லட்ச ரூபாய். இதை நான் ஏன் உனக்கு சொல்கிறேன் என்றால் எந்த பணத்திற்காக அவனை விட்டு போனாயோ அதை விட இப்போ அவன் அதிகமாக சம்பாதிக்கிறான்.நீ வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளியோட எஜமானன் ..!be careful.

சுஜிதா கலக்கமுடன்" மேடம் நான் அவனோட முன்னாள் காதலி என்று எப்படி உங்களுக்கு தெரியும்..?

"நீ என் கம்பெனியில் வேலை கேட்டு வரும் போதே எனக்கு தெரியும். தெரிந்தும் தான் நான் உன்னை சேர்த்தேன்.அவனுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி, உன்னோட பேர் எல்லாம் என்கிட்ட சொல்லி இருக்கான். ஆனா உன்னோட ஃபோட்டோவை அவன் காண்பிக்கல.நானும் அவன்கிட்ட கேட்டு கஷ்டப்படுத்த விரும்பல.ஆனா உன்னோட ஃபோட்டோ வேறு வழியில் எனக்கு கிடைத்தது. உன்னோட ஞாபகம் கொஞ்சம் கூட அவனுக்கு வரக்கூடாது என்று தான் நீ இங்கே வேலை செய்யும் விசயத்தை கூட அவன் கிட்ட சொல்லவில்லை.

மேடம்,அடிச்சீங்க ஓகே.ஆனா ஏன் எனக்கு முத்தம் கொடுத்தீங்க..என கேட்க

அது எதுக்கு என்றால், ஒருவேளை நீ அவனை விட்டு போகாமல் இருந்திருந்தால் அவன் எனக்கு கண்டிப்பாக கிடைத்து இருக்க மாட்டான். அதுக்கு தான். கொஞ்சம் கூட ஈகோ கிடையாது. குழந்தை மனசு அவனுக்கு.எங்கேயும் என்னை விட்டு கொடுக்கவே மாட்டான். எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வீட்டில் செய்கிறான்.எனக்கு கிடைத்த பொக்கிஷம் அவன்..!
அவன் எனக்கு கிடைத்தது என் அம்மாவே எனக்கு திரும்ப வந்தது போல் இருக்குது.நீ கார்,வீடு இது இல்லை என்று தானே அவனை விட்டு போனே. இப்போ அவன்கிட்ட கார் இருக்கு. எங்கள் இருவரின் இரண்டு வருட உழைப்பில் நாங்கள் சம்பாதித்தது,அவன் சொந்த ஊரில் உள்ள வீடு விற்று வந்த பணம், மற்றும் ஷேர் மார்கெட்டில் அவனுக்கு வந்த லாபம் 15 லட்சம் எல்லாம் சேர்த்து நாங்க ஆசையா ஒரு வீடு கட்டி இருக்கோம். சொந்த வீடும் வந்தாச்சு.அந்த வீட்டின் கிரஹ பிரவேசம் நாளை தான்.அவன் கண்ணில் நீ படக்கூடாது என்று நினைத்தேன்.ஆனால் பட்டுட்டே.போனால் போகுது நாளை நடக்கும் கிரஹபிரவேச விழாவில் மட்டும் கலந்து கொள். அது தான் நீ ராஜாவை கடைசியாக பார்ப்பதாக இருக்க வேண்டும்.அப்புறம் உன் நிழல் கூட அவன் மேல் படக்கூடாது.புரிஞ்சுதா?என சஞ்சனா அதட்டினாள்.

"ம்" என அமைதியாக சுஜிதா தலை ஆட்டினாள்.

சஞ்சனா பேசி விட்டு ராஜாவிடம் வந்தாள்.

[Image: IMG-cyrnbk.gif]

"என்ன சஞ்சு,இவ்வளவு நேரம்?பொருட்கள் வீட்டுக்கே டெலிவரி பண்ண சொல்லிட்டேன். போலாமா?"என்று கேட்க,

"ம் போலாம்" என்று ராஜா கைபிடித்து நடந்து கொண்டே "என்னடா உன் தோழி பற்றி எதுவும் கேட்காமல் நடந்து வர" சஞ்சனா கேட்டாள்..

சஞ்சனா மற்றும் ராஜா இருவரை அனு பின்தொடர்ந்தாள்..

"அது தான் என் எஜமானி நீ பேசி இருப்பியே.நீ பேசினா என்ன, நான் பேசினா என்ன, எல்லாம் ஒன்னு தான்."ராஜா சொல்ல

"அப்படியா..!அப்போ ஏன் உன் முகம் வாட்டமா இருக்கு கண்ணா.."

"இல்லையே அந்த மாதிரி எல்லாம் ஒன்னும் கிடையாது சஞ்சு."ராஜா மறுத்தான்.

"டேய் என் ராஜாவை பற்றி எனக்கு தெரியாதா? உன் முன்னாள் காதலியை பார்த்ததால் தானே மூஞ்ச இப்படி தூக்கி வச்சு இருக்கே"என்று சஞ்சனா கேட்ட உடனே ராஜா அதிர்ச்சி அடைந்தான்.

"உனக்கு எப்படி தெரியும் சஞ்சனா?"

"எனக்கு தெரியும் நீ பதில் சொல்லு."

"அவளை பார்த்ததால் எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை செல்லம். நான் உன்கிட்ட எந்த விஷயத்தையும் மறைச்சது கிடையாது. ஆனால் அவ தான் என் முன்னாள் காதலி என்று சொன்னால் உன் மனசு வருத்தப்படுமே..!என்று தான் நான் சொல்லாம மறைச்சேன். அது தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது. இப்போ அதுவும் உனக்கு தெரிந்து விட்டதால் எனக்கு அந்த வருத்தம் கூட போய் விட்டது.

"டேய் நான் அவளை நாளைக்கு நம்ம வீட்டு கிரஹ பிரவேசத்திற்கு கூப்பிட்டு இருக்கேன்."

"வரட்டுமே சஞ்சு, என் முன்னாள் காதலியாக அல்ல.உன்கிட்ட வேலை செய்யும் தொழிலாளியாக மட்டுமே அவள் வரட்டும்."

ராஜாவின் மொபைல் சஞ்சனா குரல் ரிங்டோனில் பாடி அழைத்தது.

"யாருடா போனில்,"

"அம்மா தான் கூப்பிடறாங்க சஞ்சனா.."

"சரி எடுத்து பேசு,"

ராஜா போனில்"ம் சொல்லும்மா"

"ஏண்டா நீ மட்டும் போய் பொருட்களை வாங்கி வா என்று சொன்னால் பாவம் புள்ளைதாச்சி பொண்ணை வெயிலில் கூட்டிட்டு போய் இருக்கியா"

ராஜா பதிலுக்கு "இல்லம்மா,நீ தான் வெளியே காற்றாட கூட்டிட்டு போக சொன்னதா சஞ்சனா சொன்னாம்மா"

"அத்தை அவர் பொய் சொல்றாரு, நான் மாட்டேன் என்று சொல்லியும் அவர் தான் வலுக்கட்டாயமாக என்னை வெளியே கூட்டிட்டு வந்தார்" என்று சஞ்சனா கத்தினாள்.

"அடிப்பாவி ஏண்டி இப்படி பொய் சொல்ற", என்று ராஜா கேட்க சஞ்சனா உதட்டை சுழித்து பழிப்பு காட்டினாள்.

"டேய் என் மருமகளை ஒழுங்கா பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு உடனே வா உனக்கு பூஜை இருக்குது."என அவன் அம்மா அவனை திட்ட

"அம்மா, அவ சும்மா விளையாடுற.நீ அவளை நம்பாதே. நான் உன் பையன், நான் பொய் சொல்வேனா..!

"இல்ல அத்தை, உங்க கிட்ட இப்போ சொன்னதுக்கு என்னை தொடையில் கிள்ளுறாரு". சும்மாவே" அய்யோ அம்மா வலிக்குதே" என்று சஞ்சனா கத்தினாள்.

இருவரின் விளையாட்டை பார்த்து அனுவுக்கு சிரிப்பு வந்தது..

"டேய் வளர்ந்து கெட்டவனே,அவமேல ஒரு அடி பட்டிச்சு.. உனக்கு வீட்டில் விளக்குமாறு பிஞ்சிடும். ஒழுங்கா வீடு வந்து சேரு"என்று அவன் அம்மா கத்தினார்.

"சரி கூட்டி வரேன் அம்மா, அங்கே என்ன சாரா அழுவுற சத்தம் கேட்குது."

"அது அவங்க அப்பனை கேட்டு அழுவுது,சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு..."

"சரி போனை சாராவிடம் கொடும்மா.."

"ஹாய் சாராகுட்டி,அப்பா உனக்கு நிறைய சாக்லேட், பிஸ்கட் வாங்கிட்டு வந்திட்டு இருக்கேன்.அதுவரை அழாம சமர்த்தா இருக்கணும்.சரியா" என்று கொஞ்சினான்.

"ம் சரிப்பா"என்று மழலை குரலில் சொன்னது..

அதுவரை இந்த அப்பா தரும் முத்தத்தை வச்சிக்க என்று போனில் "ம்ம்மா ம்ம்ம்மா" என்று அழுத்தி முத்தம் கொடுத்தான்.

" வா சஞ்சனா உடனே வீட்டுக்கு போலாம்"ராஜா அவசரப்பட

"டேய் இருடா என்ன அவசரம்? பொண்ணு குரல் கேட்ட உடனே சுடுதண்ணீர் பட்ட மாதிரி அப்படியே குதிக்கிற.நீ முதலில் எனக்கு தான் சொந்தம்.அப்புறம் தான் பொண்ணு. என்னை விட அதிகமா அவ மேல பாசம் வைச்ச அவ்வளவு தான் நீ.."

"ஏண்டி போட்டி போடுகிற நேரமா இது. இதோ இப்போ ரெண்டாவது ஆண் குழந்தை தான் பிறக்க போவுது. அப்புறம் பாரு நீ என்னை கண்டுக்க கூட மாட்டே."

"அப்பகூட நீ தான் எனக்கு முதல் குழந்தை. உனக்கு அப்புறம் தான் எனக்கு எல்லாமே.."

"அதையும் பார்க்கத்தானே போறேன்...!சரி நம்ம பொண்ணை விட உன் மேல தான் எனக்கு பாசம் அதிகம் போலாமா சஞ்சு?"

"அதை இப்பவே prove பண்ணு கண்ணா..."

"எப்படி prove பண்ணனும் நீயே சொல்லு சஞ்சனா"

"நம்ம பொண்ணுக்கு ஃபோனில் கொடுத்ததை எனக்கு இப்ப இங்கேயே கொடு.."

"இங்கேயா..ஒரு சில பேர் நம்மை வேடிக்கை பார்க்கிறாங்கடி..வீட்டுக்கு வாடி கண்டிப்பா தரேன்.."

"யாரு பார்த்தா எனக்கென்ன..?நீ என் புருஷன்.எனக்கு இப்ப இங்கேயே நீ முத்தம் கொடுத்தால் தான் வருவேன் என சஞ்சனா தன் கன்னத்தை காட்டினாள்.."

அவள் நெற்றியில் இருந்த முடியை விரலால் சுருட்டி கொண்டு அவள் நிலவு முகத்தை பார்த்து கொண்டே  "அன்று காதல் பண்ணியது,உன் கன்னம் கிள்ளியது,அட இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது"என அவள் கன்னத்தில் முத்தம் இட்டான்..சஞ்சனா மெல்லிய சிரிப்புடன் மறு கன்னத்தை காட்ட அங்கும் முத்தமிட்டான்..


[Image: IMG-s9i7f8.gif]

"இப்ப போலாமா தேவி.."

"என்னை தூக்கிட்டு போடா.."என சஞ்சனா கைகளை நீட்ட, நிறைமாத நிலவான சஞ்சனாவை தூக்கி கொண்டு ராஜா சென்றான்..


[Image: IMG-4wdg3m.gif]
bouquet langston hughes[/url

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அனுவின் கண்களில் கண்ணீர் சிந்தியது.

"என்ன அழகான couples..ஒருவர் மேல் ஒருவர் எப்படி அன்பு வைத்து உள்ளார்கள்.அந்த பெண் அவள் கணவன் மீது எவ்வளவு லவ் வைத்து இருக்கிறாள்.காதலித்து கரம் பிடித்து அவன் வாழ்வையே முன்னேற்றி இருக்கிறாள்.அந்த பெண் போல தானே நானும் என் கணவனுடன் வாழ ஆசைப்பட்டேன்..ஆனால் இப்போ என் கணவனுக்கு துரோகம் இழைத்து விட்டேனே....எப்படி என் கணவர் முகத்தில் விழிப்பேன்.?அவருடன் எப்படி காலம் முழுக்க வாழ முடியும்?இந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்று விடாதா..."என மனதுக்குள் புழுங்கினாள்.

இதற்கு மேல் நான் உயிர் வாழவே கூடாது என சாலையில் குறுக்கில் நடந்து சென்றாள்..தண்ணீர் லாரி வேகமாக ஒலி எழுப்பி கொண்டு வந்தாலும் அனு கண்டு கொள்ளவே இல்லை..

அங்கே வந்த இருவர் அனுவின் கைபிடித்து சாலை ஓரம் இழுக்க கணநேரத்தில் அனு உயிர் தப்பினாள்..

[Image: meenakshi10022022-018.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 9 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: 。⁠◕⁠‿⁠◕⁠。காற்றாய் வந்த காத்தவராயனின் மோக அட்டகாசங்கள் ♥️♥️♥️ - by snegithan - 09-05-2024, 05:39 PM



Users browsing this thread: 23 Guest(s)