08-05-2024, 11:07 PM
20
அவசர அவசரமாக ஜெர்மனிக்கு கணவனை, "எமர்ஜென்ஸி, உடனே வரவும்" என்று அழைத்தால் சம்யுக்தா. அவரும் உடனே Trans-Continental Hyperloop மூலம் கிளம்பி வந்தார், கூடவே ரூபாவும் தொற்றிக்கொண்டாள்.
யுவராஜன் கவலையாக இருந்தான். இந்த பிரச்சனையை தான் சமாளித்துக் கொள்வதாக மகனுக்கு ஆறுதல் சொன்னாள் சம்யுக்தா. யுவியை வாய் திறக்கக் கூடாது என்று கட்டளை இட்டாள்.
இருவரும் கவலையாக இருப்பதை பார்த்த அப்பாவுக்குக்கும், ரூபாவுக்கும் தூக்கி வாரிப் போட்டது.
“என்னம்மா கான்பரன்ஸ் நல்லா முடிஞ்சுதா? என்ன இப்படி அவசரமா வரச் சொன்னீங்க?”, ரூபா கேட்க, அம்மா அதற்கு பதில் சொல்லவில்லை.
“ அப்பா எங்கே? நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே இருங்க.”, சம்யுக்தா மகனையும், மகளையும் வெளியேற்றினாள்.
***
கணவரிடம் மெதுவாக ஆரம்பித்தாள்.
“ என்னங்க... ஒரு சின்ன ப்ராப்ளம்.. இதில் இருந்து நீங்களும் பசங்களும் தப்பிக்கணும்னா ஒரே வழிதான் இருக்கு. எனக்கு டிவோர்ஸ் (விவாகரத்து) குடுத்திருங்க. ப்ளீஸ். என்னை எந்த கேள்வியும் கேக்காதீங்க. லாயரை ஆன்லைன்ல வரச்சொல்லி இருக்கேன். நாளைக்கே டிவோர்ஸ் ஃபைல் பண்ணி சொத்தை எல்லாம் பசங்க பேருக்கு மாத்தபோறேன்.”
பட படவென்று சம்யுக்தா சொல்லி முடிக்க அவர் திகைத்து நின்றார்.
தலை குனிந்து நின்ற சம்யுக்தாவை அவள் கைகளை பிடித்து உக்காரவைத்தார்.
சம்யுக்தா மடை திறந்து ஆழ ஆரம்பித்தாள். அவர் அவளை தேற்றினார். கட்டாயபடுத்தி கேட்க அவள் மேலும் அழுதாள்.
அவள் மனம் தாங்காமல் உண்மையை உடைத்தாள்.
“ஒரு பொம்பள ப்ளாக்மெயில் செய்யராப்பா... எல்லாம் சட்டுனு நடந்துருச்சு. . சாரி.. எல்லாம் என்னாலதான்.” என்று கண் கலங்கி தலை குனிந்தாள்.
ரதி கொடுத்த சாம்பிள் காட்சிகளை அவரிடம் காண்பித்தாள்.
பார்த்த அப்பாவும் அதிர்ந்தார். அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவியது.
ஒரு ஐந்து நிமிடம் கழித்து, அப்பாவே வாய் திறந்தார்.
“நானும் நீயும் எவ்வளவோ பிரச்சனையை சமாளிச்சு இருக்கோம். இந்த பிரச்சனையையும் ஒண்ணா ஃபேஸ் செய்வோம். சரியா?”
அவர் மேலும் தொடர்ந்தார்.
“என் மேலே கோவம் வரலே?”
சம்யுக்தா இப்போது அவர் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.
“உனக்கு என்னைப் பத்தி நல்லா தெரியும். நான் எப்பவும் உனக்கு கூட நிப்பேன். இப்பவும் நிக்கறேன். இது நமக்கு புதுசு இல்ல. இது உன்னை மட்டுமில்ல, என்னோட அரசியல் வாழ்க்கையை கூட பாதிக்கும். அதனால இது உன்னோட பிரச்சனை மட்டுமில்ல.. நம்ம எல்லோரோட பிரச்சனை. பயப்படாதே. நாம handle செய்வோம்.”
சம்யுக்தாவுக்கு ரதியின் ப்ளாக்மெயில் அந்த சந்தர்ப்பதை இன்னும் சோகமாக்கியது.
மேலும் சில பழைய விஷயங்களை பேச சம்யுக்தாவுக்கு சற்று தெம்பு வந்தது.
அவர் அப்படி என்ன சொன்னார்? எப்படி அவளுக்கு தைரியம் வந்தது?
காத்திருங்கள். பதில் விரைவில்...
****
தனியாக பேசிவிட்டு நீண்ட நேரம் கழித்து வெளியே வந்த அம்மாவின் முகத்தில் பழைய சந்தோஷம் இருந்ததைப் பார்த்து யுவி மகிழ்ந்தான்.
“யுவி கண்ணா... அம்மாவும் அப்பாவும் இந்த ப்ராப்ளத்தை எப்படி சமாளிக்க போறோம்ன்னு முடிவெடுத்துட்டோம். நீ ஒண்ணும் கவலைப்படாதே. ரூபாவுக்கு ஊர் சுத்திக்காட்டு. ஜாலியா என்ஜாய் பண்ணுங்க. ஓகே?”, சம்யுக்தா முகமலர்ச்சியுடன் சொன்னாள்.
யுவிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் அம்மா ஏதோ செய்யப்போகிறாள் என்று புரிந்துகொண்டான்.
அன்புத் தங்கையை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினான். ரூபா அப்பாவை ஒரு பார்வை பார்க்க, அவர் கண்களாலே அவளை யுவியுடன் போகச் சொன்னார்.
***