Romance இரு துருவங்கள்
#38
பொழுது விடிந்தது 
பிரபு மெதுவாக கண்கள் முழித்தான் அருகில் ராகவி தூங்கி கொண்டு இருந்தால், பொன்மாரிக்கு காலை சீக்கிரம் எழுந்து பழகியதால், அவள் குளித்து முடித்து,, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று,, வந்தால். அழகான டார்க் ப்ளூ சுடிதார். வைட் லெக்கின்ஸ், அதுக்கு மேட்ச் வைட் ஷால். நெற்றியில் விபூதி, தாலியில் குங்குமம், நெற்றிக்கு மேலே குங்குமம்,  கோயில் அருகில் உள்ள பூ கடையில் பூ வாங்கி, தலையில் வைத்து இருந்தால் 
பிரபு, : நீங்க காலைல இன்டெர்வியூக்கு வந்திங்க தானே, அது சரி நீங்க எப்படி இங்க,,  ராஜ் ராஜ் எங்க டா இருக்க கூப்பிட்டு ராகவியை பார்த்தான், இவங்களுமா வந்து இருக்காங்க.இவன் பேசும் சத்தம் கேட்டு. ராகவியும் கண் முழித்தால் 
ராகவி : சார் கண் முழிச்சிட்டிங்களா. இப்போ எப்படி இருக்கீங்க. மயக்கம், வாந்தி அது மாதிரி ஏதும் வருதா 
பிரபு : அப்போது இவனுக்கு நியாபகம் வந்தது, நேத்து ராத்திரி நடந்தது., இப்போ இல்ல. நா எப்படி இங்க வந்தேன். யாரு கொண்டு வந்தா சேர்த்தா 
ராகவி : ராஜ் தகவல் சொன்னான் சார். இரவு நடந்ததை அனைத்தையும் சொன்னால். கல்யாணம் தவிர் 
பிரபு : தேங்க்ஸ். ஆமா இவங்க எப்படி வந்தாங்க. பொன்மாரியை கேட்டான் 
ராகவி : நா தான் சார் தகவல் சொல்லி வர வச்சேன்,
பிரபு : ஓஹோ சரி, என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம் 
ராகவி : சார் என்ன பேசுறீங்க. இது என் கடமை சார் 
பிரபு : பொன்மாரியை பார்த்தான், கழுத்தில் தாலியை பார்த்து. நீங்க நேத்து இன்டெர்வியூக்கு வரும் போது, உங்க செர்டிபிகேட்ல, உங்க ப்ரொபைலை பார்த்தேன், உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா.
பொன்மாரியும், ராகவியும் திரு திரு வென முழித்தார்கள் 
ராகவி : சார் சார் அது வந்து சொல்லும் முன் டாக்டர் உள்ளே வந்தார் 
டாக்டர் : எப்படி இருக்கிங்க, காதில் ஸ்டேதாஸ்க்கோப் மாட்டி கொண்டே கேட்டார் 
பிரபு : குட் டாக்டர். 
டாக்டர் : பிரபுவை செக் பண்ணி கொண்டே, பொன்மாரியை பார்த்து இவருக்கு கரெக்ட் டைம்க்கு மாத்திரை கொடுத்துருங்க, நல்லா பாத்துக்கோங்க சரியா மேடம் 
பிரபு : டாக்டர் அவங்க கிட்ட ஏன் சொல்றிங்க, இவன் தான் என் சர்வன்ட் இவன்கிட்ட சொல்லுங்க ராஜ்யை காமித்தான் 
டாக்டர் : இவுங்க தான் சார் உங்க wife. உங்களுக்கு நேத்தே இவங்க கூட கல்யாணம் ஆகிடிச்சி,
பிரபு : வாட் நான்சென்ஸ் your talking, எனக்கு கல்யாணமா. அதுவும் இவங்க கூடவா 
டாக்டர் : ஆமா இவங்க தான் கல்யாணம் செஞ்சி வச்சாங்க, ராகவியை காமித்தார் 
பிரபு : வாட், என்ன ராகவி டாக்டர் சொல்றது எல்லாம் உண்மையா 
ராகவி : ஆமா னு தலை ஆட்டினால் 
பிரபு : வாட் எந்த தைரியத்துல இப்படி செஞ்சீங்க. சென்ஸ் இல்ல, இவங்களுக்கு எப்படி நா சரியா இருப்பேன் உங்களுக்கு தோணுச்சு, இவங்க ஸ்டேட்டஸ் எங்க, என் ஸ்டேட்டஸ் எங்க, இவுங்க வருஷம் முழுக்க உழைக்கிற காசு, என் oneday பாக்கெட் money you know,  நான்சென்ஸ், see ராகவி, இனி உங்களுக்கு என் கம்பெனில வேலை இல்ல, இவங்களுக்கும் இல்ல, லாயர் நோட்டீஸ் அனுப்பறேன், இவங்கலை சைன் பண்ணிட்டு, டைவைஸ் வாங்கிட்டு போக சொல்லுங்க, டாட் 
டாக்டர் : சார் நா சொல்றத கொஞ்சம் கேளுங்க, உங்க உசுருக்கு ஆபத்து இருக்கு,
பிரபு : சட் up டாக்டர், நா உங்க மேலே கேஸ் கொடுத்து, உங்களை உள்ள தள்ள போறேன். டேமிட், சொல்லிட்டு விருவிரு வென வெளியே சென்றான்,
பொன்மாரி : அழுது கொண்டே இருந்தால்.
ராகவி : சாரிடி, இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. சொல்லிட்டு போன் எடுத்து மோகனுக்கு கால் செய்தால் 
ராகவி : சார் 
மோகன் : சொல்லுமா 
ராகவி : வந்து ஒரு பிரச்சனை சார் 
மோகன் : என்ன பிரச்சனை மா 
ராகவி :  சார்னு ஆரம்பித்து இரவு நடந்ததை அனைத்தையும் சொல்லி முடித்தால்.
மோகன் : ஏன்மா உனக்கு சப்போர்ட் பண்ணி. நீ நேர்மையானவள், நீ நல்லவள்னு நினைச்சி தான், உனக்கு சப்போர்ட் செஞ்சேன். இப்போ நீ செஞ்சி இருக்குற விஷயம் எவ்ளோ பெரிய தப்புனு தெரியுமா, நா பணத்தை பாக்குறவன் இல்ல, மனுஷங்க குணத்தை மதிக்கிறவன்.நீ இத செய்றதுக்கு முன்னாடி என்கிட்ட கேட்டு இருக்கலாமே. நீயே ஒரு முடிவு எடுப்ப, அத செஞ்சி முடிச்சிட்டு என்கிட்ட தகவல் சொல்லுவ, அந்த பொண்ணு கூட்ப்பிட்டு, என்னவேணாலும் செய். ஆனா இந்த வீட்டுக்கு வேண்டாம் சொல்லிட்டு கட் பண்ணான்.
வேலைகாரன் : ஐயா என்னாச்சு யாரு போன்ல 
மோகன் : நடந்தை சொன்னான் 
வேலைக்காரன் : என்ன ஐயா சொல்றிங்க, சின்ன ஐயாவை கொல்ல பாத்தாங்களா.ரொம்ப அதிர்ச்சி ஆனான் 
மோகன் : நீ ஏன் டா ரொம்ப அதிர்ச்சி ஆவுற 
வேலைக்காரன் : ஐயா, சின்ன ஐயா இங்க இருக்கும் போது, கார்ல போகும் போது. ஒரு லாரி இடிக்க வந்துச்சின்னு சொன்னாரு ஐயா 
மோகன் : என்னடா சொல்ற இத ஏண்டா என்கிட்ட சொல்லல 
வேலைக்காரன் : உங்க கிட்ட சொல்ல கூடாதுனு, சொல்லிட்டாரு ஐயா 
மோகன் : ஒரு நிமிடம் யோசிச்சான். குடுக்குடுப்பு காரன் சொன்னது,  எல்லாம் நினைத்து விட்டு ஒரு வேலை இந்த பொண்னு தான் மஹாலக்ஷ்மியா இருப்பாளோ.. ராகவி க்கு போன் போட்டான் 
மோகன் : ராகவி நீ அந்த பிரான்ச்லையே வேலை பாரு.
அந்த பொண்ண, இங்க அனுப்பு. டிரைவர்ட்ட சொல்லிடுறேன் நம்ம கம்பெனி கார்ல வர சொல்லிடு,. நீயும் கூட வா. அந்த பொண்ணு வீட்ல சொல்லி. இங்க தான் வாழ போறானு சொல்லி கூப்பிட்டு வா, நா சம்மதிக்கிறது எல்லாம் என் மகனுக்காக மட்டும் தான்,  அந்த பொண்ணு எவ்ளோ திறமையான பொண்ணுனு நானும் பாக்க தானே போறேன், என் மகன் என் பேச்சை கேப்பான். இன்னொன்னு என் மகன் ரொம்ப கோவம் படுவான். அவனை அட்ஜஸ்ட் பண்ணி இருக்கணும்.  என் மகன் கோவத்தை குறைச்சி அவனை நல்ல மனுசனா மாத்தணும்,, இந்த வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளா இருக்கணும்., 


பொன்மாரி எப்படி சமாளிக்க போகிறாள் 
சூழ்ச்சி காரர்களை கண்டு புடிப்பளா 

அடுத்த பதிவில்
[+] 3 users Like Murugansiva's post
Like Reply


Messages In This Thread
RE: இரு துருவங்கள் - by Murugansiva - 08-05-2024, 02:15 PM



Users browsing this thread: 22 Guest(s)