Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
உலகக்கோப்பை கிரிக்கெட்: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி


[Image: 201906200023462964_World-Cup-Cricket-New...SECVPF.gif]

பர்மிங்காம்,

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் பர்மிங்காமில் இன்று நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். மழையின் காரணமாக ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக ரஷி வான்டெர் துஸ்சென் 67(64) ரன்களும், ஹசிம் அம்லா 55(83) ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக லோக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளும், கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், டிரண்ட் போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 242 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில் மார்ட்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் காலின் முன்ரோ 9(5) ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய கப்தில் 35(59) ரன்களில் ஹிட் விக்கெட் ஆனார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராஸ் டெய்லர் 1(2) ரன்னும், டாம் லாதம் 1(4) ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜேம்ஸ் நீ‌ஷம் ஜோடி சேர்ந்தார். துவக்கத்தில் இருந்தே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 72 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். 

இந்த ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் மெதுவாக உயர்ந்தது. அப்போது இந்த ஜோடியில் ஜேம்ஸ் நீ‌ஷம் 23(34) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக கேன் வில்லியம்சனுடன், கிரான்ட்ஹோம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இடையிடையே தென் ஆப்பிரிக்க வீரர்கள் சில கேட்ச்சுகள் மற்றும் ரன் அவுட் எடுக்கும் வாய்ப்புக்களை தவறவிட்டனர். இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. அதில் அதிரடியாக ஆடிய கிரான்ட்ஹோம் தனது அரைசதத்தை பதிவுசெய்திருந்த நிலையில் 60(47) ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

இறுதியில் கேன் வில்லியம்சன் 106(138) ரன்களும், மிட்செல் சான்ட்னெர் 2(3) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி 48.3 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளும், பெலக்வாயோ, நிகிடி மற்றும் ரபடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 20-06-2019, 09:40 AM



Users browsing this thread: 15 Guest(s)