20-06-2019, 09:38 AM
திட்டமா?
'நீங்களே துார் வாரினதா பேர் வாங்க திட்டமா?
''என்னது, ஏரியை துார் வாரப் போறீங்களா... உங்களுக்கு நிதி எங்கேயிருந்து வருது...? 'பேங்க் ஸ்டேட்மென்ட்' இருக்கா... 'பிளான்' வச்சிருக்கீங்களா... கம்பெனி ஸ்பான்சர்னா, அந்த நிதியை எங்கக்கிட்டே கொடுங்க... நாங்க, 'டெண்டர்' விட்டு,ஏரியை துார் வாரிக்கிறோம்...''- ஏரியை துார் வார, அனுமதி கோரிச் சென்ற, நலச் சங்கத்தினரை, சரமாரியாக கேள்வி கேட்டு விரட்டியுள்ளார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், ராதாகிருஷ்ணன்.
[color][font]
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுக்கு முன் உள்ளது, மறைமலைநகர். இங்கு, 120 ஏக்கரில், மின்னைக்கரை பெரிய ஏரி உள்ளது. அப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக விளங்கிய ஏரி, தற்போது வறண்டு கிடக்கிறது.அரசே, பள்ளி கட்டடம், பஸ் நிறுத்தம் அமைக்க ஆக்கிரமித்து உள்ளது. தனியார் சிலரும் ஆக்கிரமித்ததால், தற்போது, ஏரியின் பரப்பளவு, 80 ஏக்கராக குறுகிவிட்டது.
குடிக்க தண்ணீரில்லை; நிலத்தடி நீரும் கிடைக்காததால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னை வராமல் தடுக்க, ஏரியை துார் வாரி, ஆழப்படுத்துவது தான் சரியாக இருக்கும் என, மறைமலைநகர் எக்ஸ்னோரா அமைப்பினர் முடிவுசெய்தனர்.
ஒரே நிபந்தனை
இதையடுத்து, நேற்று முன்தினம், காஞ்சிபுரம் கலெக்டர், பொன்னையாவைச் சந்தித்து, 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என, சங்கம் சார்பில், ஏரியை துார் வார அனுமதி கோரினர்.''சபாஷ், நல்ல முயற்சி; சிறப்பாக செய்யுங்கள். எங்களுக்கு ஒரே நிபந்தனை தான். எக்காரணம்
கொண்டும், ஏரியில் எடுக்கப்படும் மண், வெளியில் போகக்கூடாது. அப்படி ஏதாவது நடந்தால், என்னிடம் வரக்கூடாது; மற்றபடி ஏதுமில்லை. ''நீங்கள், ஊரக வளர்ச்சித் துறையில், திட்ட அலுவலரை சந்தியுங்கள். நான் அனுமதி தரச் சொல்கிறேன்,'' என்று கூறி, அனுப்பி வைத்தார், கலெக்டர் பொன்னையா.
கலெக்டரின் பரிந்துரை கையெழுத்துடன், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர், ஸ்ரீதரைசந்தித்தனர்.''கலெக்டர் அனுமதி தரச் சொல்லி விட்டார்;நானும் பரிந்துரைசெய்கிறேன். நீங்கள் செங்கல்பட்டில் உள்ள, மின்னைக்கரை ஏரியின் பொறுப்பாளரான, செங்கல் பட்டு உதவி பொறியாளர், ராதாகிருஷ்ணனை போய் பாருங்கள்,'' என, அனுப்பி வைத்தார்.
கொதித்த அதிகாரி
கலெக்டரும், அதிகாரியும், 'கிரீன் சிக்னல்' கொடுத்ததால் உற்சாகம் அடைந்த, அமைப்பினர், செங்கல்பட்டில் உள்ள, உதவி செயற்பொறியாளர், ராதாகிருஷ்ணனை சந்தித்தனர். கலெக்டர், திட்ட அதிகாரியின் பரிந்துரை விபரங்களை தெரிவித்து, ஏரியை துார் வார அனுமதி கோரினர். ''என்ன, ஏரியை துார் வாரப் போறீங்களா... உங்களுக்கென்ன அக்கறை?'' எனக் கேட்டார், ராதாகிருஷ்ணன்.
'எங்க ஏரியாவில குடிநீரும் கிடைக்கவில்லை. கொஞ்சம், நஞ்சம் கிடைத்த நிலத்தடி நீரும் கிடைக்காம, திண்டாடுறோம்.'நம்ம பகுதியில இருக்கிற ஏரியை, நாங்களே துார்வாரி, தண்ணீரை தேக்கினா, நிலத்தடி நீராவது கிடைக்குமேங்கிற, எண்ணத்தில தான், துார்வார முன்வந்துள்ளோம்' என, அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.''என்னது, எங்க இடத்திலேயே, நீங்க வீடு கட்டுவீங்களா... நல்லாருக்கே... இதுக்கு நாங்களே அனுமதி தரணும்... அப்படித்தானே...
சரி, பிளான் வச்சிருக்கீங்களா... நிதிக்கான ஆதாரம் என்ன? 'பேங்க் ஸ்டேட்மென்ட்' எங்கே?'' என, கேட்டார் ராதாகிருஷ்ணன்.'பேங்க்ஸ்டேட்மென்ட் கிடையாது.நாங்க, ரூ.39 லட்சம் செலவில், துார் வாரப் போறாம்.'இதுக்கு, ஆளாளும் ஒவ்வொரு வேலையை செய்யப் போறாங்க... கம்பெனிகளும் முன் வந்திருக்காங்க... அனுமதி கிடைச்சதும், நீங்க சொல்ற விதிமுறைப்படி, துார் வார வேண்டியது தான்...' என, நிர்வாகிகள் பதில் அளித்து உள்ளனர்.
''நீங்க, 39 லட்சம்ரூபாயில துார் வார போறீங்களா...[/font][/color]
நீங்க ஒண்ணும் துார் வார வேண்டாம். அந்த நிதியை, பொதுப்பணித் துறை அக்கவுன்டில போடுங்க... நாங்க, 'எஸ்டிமேட்' போட்டு, முறையா டெண்டர் விட்டு, துார் வாரிக்கிறோம்...''நாங்க அப்படியே அனுமதி கொடுத்தா... துார் வாரும்போது, மீடியாக்காரங்க கேமராவோட வருவாங்க... 'அரசாங்கமும், அதிகாரிகளும் ஒண்ணும் பண்ணலே... நாங்களே துார் வாருறோம்'னு, பேட்டி கொடுத்து, பேர் வாங்க பார்ப்பீங்க... உங்களுக்கெல்லாம் அனுமதி தர முடியாது.
''நீங்க மனு கொடுத்ததால, ஏ.இ., ஒருத்தரை, ஏரியாவ ஆய்வு செய்ய அனுப்புறேன்... அவரு ஆய்வு செஞ்சப்புறம், நான் கலெக்டருக்கு பதில் கொடுத்துக்கிறேன்... நீங்க கலெக்டரை போய் பாருங்க... என்கிட்டே, அனுமதி கேட்டெல்லாம் வராதீங்க...,'' என, கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக,நிர்வாகிகளை விரட்டி அடித்து இருக்கிறார், பொதுப்பணித் துறையின் பொறுப்பான அதிகாரி, ராதாகிருஷ்ணன்.
கமிஷன் கணக்கு
அதிகாரியின் இந்த செயல்பாட்டால், ஏரியை துார்வாரும் உயரிய எண்ணத்தில் சென்ற மறைமலைநகர் எக்ஸ்னோரா அமைப்பினர், நொந்து போய் திரும்பியுள்ளனர். '39 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விட்டால், எவ்வளவு கமிஷன்' என, அதிகாரி கணக்கு போட்டிருப் பாரோ என, எண்ணத் தோன்றுகிறது.
'கலெக்டர் உத்தரவிட்டாலும், நான் தான் முடிவு செய்யணும்' என்ற தோரணையில் செயல்படும் ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை, உயர்நீதிமன்றம் எத்தனை உத்தரவு போட்டாலும், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது என்பது தான் உண்மை
first 5 lakhs viewed thread tamil