Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
அனல்காற்று வீசும்: பகல் 11 முதல் 4 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம்!

தென்மேற்குப் பருவமழை காரணமாக, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


[Image: -11-4-.jpg]அனல்காற்று வீசும்: பகல் 11 முதல் 4 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம்!
ஹைலைட்ஸ்
  • வட தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்
  • சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸ் பதிவாகும்: வானிலை மையம்


வட தமிழகத்தில் இன்று அனல் காற்று வீசக்கூடும் என்பதால், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வட தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (ஜூன் 20) அனல் காற்று வீசக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அனல் காற்று வீசும். எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம். 

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 41 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸும் பதிவாகக் கூடும். அதேநேரம் தென்மேற்குப் பருவமழை காரணமாக, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் அடுத்த 3 நாள்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மத்திய அரபிக்கடலில் பல பகுதிகளில் அடுத்த 3 நாள்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது. இதேபோன்று, தென் அரபிக்கடல் பகுதியில் பருவமழை மிதமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. 

தமிழகத்தில் நேற்று 15 இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 107 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலூரில் தலா 105 டிகிரி, மதுரை தெற்கில் 104 டிகிரி, திருச்சியில் 103 டிகிரி, கடலூர், பரங்கிபேட்டை, தூத்துக்குடியில் தலா 102 டிகிரி, கரூர்பரமத்தி, பாளையங்கோட்டையில் தலா 101 டிகிரி, சேலத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 20-06-2019, 09:32 AM



Users browsing this thread: 103 Guest(s)