Romance சும்மா ஒரு காதல் கதை!!!
ஒரு கொடியில் பல மலர்கள்
【00】

இந்த கதை 12B பட பாணியில் ஒரே மையப் புள்ளியில் ஆரம்பித்து கதாநாயகன் அவருக்கு பிடித்த வேறு வேறு பெண்களை சந்திக்கும் போது கிளைக் கதைகளாக என்ன நடக்கிறது என்பதை பார்க்கப் போகிறீர்கள். 

இந்த பதிவில் அறிமுகம் செய்யப்படும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கிளைக் கதைகளில் அவ்வப்போது வந்து போவார்கள். அவர்களின் குணாதிசயங்கள் கதைகளின் சுவாரஸ்யம் கருதி ஹீரோவுக்கு உதவி செய்ய சில இட‌ங்க‌ளி‌ல் பச்சசோந்தி போல உருமாறும். 


முக்கிய கதாபாத்திரங்கள்

☛ நளன்
(கதையின் நாயகன்)

வயது 25, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் 4 வருடங்களாக பணிபுரிகிறான். அம்மா அப்பா இருவரும் இறந்து விட்டார்கள். வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவன். நீண்ட நெடுந்தூர பயணங்களை தனியாக செல்ல விரும்புபவன்.

[Image: fb88a72d6caa2345211fdda77f12b28b.jpg]


☛ பாஸ்கர்
(சீனியர் மேனேஜர்)

தமிழார்வலர், மிமிக்ரி, இமிட்டேட் செய்வதில் கில்லாடி. சொட்டை "கமல்", கருப்பு "கமல்" இரண்டும் அவரது நண்பர்கள் அவரை அழைக்கும் பட்டப் பெயர்.

[Image: afd3c3b3f712bfa6f1b5c14d1890ccf2.jpg]

☛ மனோகர்(மனோ)
(மளிகைக் கடை ஓனர்)

வெள்ளந்தி. நளனின் அப்பாவுக்கு பாலிய காலத்து நண்பர். சென்னைக்கு நளனை படிக்க கூட்டிக் கொண்டு வந்தது, இதர செலவுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டது என வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவர். இப்போதைக்கு அப்பா மாதிரி. குழந்தை இல்லை. நளன் இவருடைய வீட்டில்தான் குடியிருக்கிறான்...

[Image: images-19.jpg]


☛ ராஜேந்திரன் (ராஜ்)
(குட்டி தொழிலதிபர், குட்டி ரவுடி, ரியல் எஸ்டேட்)

மனோவின் தூரத்து உறவினர். நளன் சென்னையில் படிக்கும் காலங்களில் பொருளாதார உதவிகள் செய்துள்ளார். 

[Image: 4316cf29e25ab8faa44cec5044dc3231.jpg]


☛ சுவாமிநாதன் (ஸ்வாமி) 
(வங்கி மேலாளர்)

ராஜ் மற்றும் மனோவின் நெருங்கிய தோழர். நளன் சென்னையில் படிக்கும் காலங்களில் பொருளாதார உதவிகள் செய்துள்ளார்.

[Image: Swami-lollu-sabha.jpg]

☛ லீ (Lee)
(டீம் மெம்பர்)

நளனுடன் வேலை பார்க்கிறார். அவரது ஜூனியர். அந்த டீம் காமெடியன். பாஸ் கிட்ட அடிக்கடி மூக்கறுபடுவது வழக்கம்.

☛ அருண்
(ஆனந்தியின் காதலன்)

☛ மலர் @ சாய் பல்லவி
(ஸ்கூல் டீச்சர்) 

சித்தி மகள், நளனுக்கும் இவளுக்கும் ஒரே வயது, சில மாதங்கள் சிறியவள், அப்பா கிடையாது. சுமாராக படிப்பாள் இன்ஜினியரிங் படிக்காமல் பி.எஸ்.சி மேத்ஸ் படித்தாள். ஒரே நேரத்தில் இருவரையும் இன்ஜினியரிங் படிக்க வைக்கும் அளவுக்கு வசதியில்லை. நளன் படிக்கட்டும் என ஒதுங்கிவிட்டாள்.

[Image: c5d7a16fa238af68cf0bb714bdedc9d0.jpg]

☛ அம்மு @ அபிராமி
(இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு)

மலரின் தங்கை. படிப்பில் ரொம்ப ரொம்ப சுமார். தாயாருக்கு இன்ஜினியரிங் அனுப்ப விருப்பமில்லை. அவள் அடம்பிடிக்க நளன் கல்விக்கான முழு செலவும் ஏற்றுக் கொண்டுள்ளான்.

[Image: 719cd5c1d59f0e8de9cd606797e22df3.jpg]

☛ ஆனந்தி
(டீம் மெம்பர் - ஃப்ரெஸ்ஸர்)

நளன் டீமுக்கு இவள் வந்து 2 மாதங்கள் ஆகிறது. காதலன் கல்லூரி கிளாஸ் மேட் . நளன் அவளை கரெக்ட் செய்ய முயற்சி செய்கிறான் என்பதை அந்த டீமில் எல்லோரும் அறிவர். அவள் காதலை "பிரேக்-அப்" செய்ய முயல்கிறான் என்பதால் "ப்ரோ"  எ‌ன்று‌ அழைப்பாள். கார்ப்பரேட் நிறுவன கல்ச்சர் "கால் மீ நளன்" எ‌ன்று‌ சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

[Image: Kathir-Anandhi-HD-Stills-From-Pariyerum-...Cinema.jpg]

☛ ஸ்ரீ திகா

அருணின் (ஆனந்தியின் காதலன்) மேனேஜர்.

[Image: e9d0cf79bf25da3331ca6dfaa21b9ead.jpg]
Like Reply


Messages In This Thread
RE: வித்யா வித்தைக்காரி - by JeeviBarath - 02-05-2024, 12:22 PM



Users browsing this thread: 2 Guest(s)