29-04-2024, 08:55 PM
(28-04-2024, 03:04 AM)Manmadhan67 Wrote:இது இந்த கதையின் ஒரு பகுதியல்ல. வேறு சில கதைகளைப் பற்றியது. ஒரு கீழ்தரமான செயலைக் கண்டு பொறுக்க முடியாமல் இந்த பதிவை எழுதுகிறேன்.ஒரு கதை வ்யூஸ் அடிப்படையில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பதை கண்டு அதை படிக்க முயன்றேன். கடைசி வரை போய் பார்த்தாலும் கதையையே காணவில்லை. ஆனால் கமெண்ட்களில் கதைக்கு ஏகப்பட்ட வரவேற்பு.கவனித்துப் பார்த்த பின் தான் புரிந்தது. எழுத்தாளர் அவர் விரும்பிய மாதிரி கமெண்ட்கள் வராததாலோ, வ்யூஸ் கிடைக்காததாலோ, அல்லது வேறு தளங்களில் யாராவது விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொன்னதாலோ என்னவோ தெரியவில்லை, தான் பதிவு செய்த கதைகளின் பகுதிகள் அனைத்தையும் எடிட் ஆப்சனை பயன்படுத்தி மொத்தமாக டெலிட் செய்து சில புள்ளிகளை மட்டும் அந்த இடங்களில் வருவது போல செய்திருக்கிறார்.இதைக் கண்டு அவர் எழுதிய மற்ற மூன்று கதைகளை பார்த்தாலும் இதே நிலை தான். எல்லா கதைகளிலுமே தன் பதிவுகளை எடிட் செய்து சில புள்ளிகள் ......... இது மாதிரி மட்டும் வருமாறு மாற்றி வைத்திருக்கிறார்.இந்த செயலை நான் விமரிசிக்க விரும்பவில்லை. அதே சமயம் ஒரு பதிவு கூட இல்லாத கதைகள் இப்படி இந்த தளத்தில் இருப்பது இந்த தளத்தின் வளர்ச்சிக்கு உதவாது.எழுத்தாளர் செய்தது கண்டிப்பாக கண்டனத்துக்குரியது. அதற்கு தள நிர்வாகிகளும் அவருடைய கதைகளை மொத்தமாக நீக்கி அவருக்கு தளத்திற்கு வர தடை விதித்து பாடம் கற்றுத் தர வேண்டும்.அப்போது தான் வேறு யாரும் இப்படி செய்யாமல் இருப்பார்கள்.
https://xossipy.com/user-110583.html KUMARAN ST இவரை தான சொல்லுறீங்க ??