25-04-2024, 07:03 PM
மாலை மங்கி இரவு கவிழ துவங்க, நான் என் கணவர் இருந்த ஜெனரல் வார்ட் ரூமுக்குள் நுழைந்தேன். படுக்கையில் என் கணவர் முழு தெம்புடன் எழுந்து சாய்வாக அமர்ந்திருந்தார். என்னை கொஞ்சம் அச்சத்தோடு பார்த்தார். நான் அவரை பார்த்து புன்னகைத்தேன். அவரும் ஒரு சந்தேகத்தோடு என்னை பார்த்து புன்னகைக்க, அருகில் அங்கிருந்த ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன்.
புதிதாக மாறிய சூழ்நிலைகள் என் மனதில் சில முடிவுகளை எடுக்க வைத்திருந்தன. என் பிடிவாதங்களை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன்.
கணவர் என்னிடம் எதையோ சொல்ல முயல, நான் அவரிடம் புன்னகை மாறாத முகத்தோடு, மனசை குழப்பிக்காதீங்க. நானும் என் சந்தோஷம் மட்டும் முக்கியம், நான் நினைச்சது நடக்கனும்ன்னு கொஞ்சம் ஓவராவே உங்களை ப்ரஷர் பண்ணிட்டேன். நாம இதுக்கெல்லாம் ஒரு நல்ல தீர்வை கண்டு பிடிக்கலாம். இப்போதைக்கு இந்த குழந்தை மேட்டரையும், நீங்க ட்ரீட்மெண்ட்க்கு போக வேண்டிய மேட்டரையும் மொத்தமா விட்டிடலாம். இயல்பான வாழ்க்கை வாழலாம். ஓகேவா என்றேன்.
இன்னும் என் கணவர் என்னை சந்தேகக் கண்ணுடனே பார்க்க, நான் சிரித்து, அப்படி பார்க்காதீங்க. நான் ஒண்ணும் வெறுப்பிலே இந்த முடிவை எடுக்கலை. எனக்கு எல்லாத்தையும் விட நீங்க முக்கியம். உங்க ஆரோக்கியம் முக்கியம். அதையெல்லாம் விட்டுக் கொடுத்து நான் குழந்தை பெத்துக்கிறது மட்டும் எனக்கு எப்படி சந்தோஷமா இருக்கும். இப்போதைக்கு எதையும் நினைக்காம இயல்பா இருக்கலாம். தேவைப்பட்டா வேற வழிகளை யோசிக்கலாம். இல்லை, ஒரு குழந்தையை தத்து கூட எடுத்துக்கலாம் என்றேன்.
என் கணவர் இன்னும் நம்ப முடியாதவராக என்னை பார்த்தாலும் மெலிதான ஒரு நிம்மதி உணர்ச்சி அவர் முகத்தில் வெளிப்பட்டது.
இருவரும் பொதுவாக பல கதைகளை பேசிக் கொண்டிருந்தோம். இரவு உணவு என் கணவருக்கு மட்டும் ஹாஸ்பிடலிலேயே கொண்டு வந்து வழங்கப்பட்டது. இரவு மாத்திரைகளையும் நர்ஸ்களே கொடுத்து விட, எனக்கு உணவு ஹாஸ்பிடல் கேண்டீனில் சாப்பிட்டுக் கொள்ள சொன்னார்கள். நான் என் கணவர் உறங்கிய பின் செல்ல்லாம் என்று என் கணவரின் அருகில் உட்கார்ந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
என் கணவர் கண்கள் சொருகி உறக்கத்தினுள் விழும் வேளையில் என் செல்போன் ரிங்கியது. எடுத்து ஸ்க்ரீனை பார்த்தவளுக்கு மெலிதான ஆச்சரியம்.
காரணம்...
அழைத்தது...
குப்தா....
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.