29-12-2018, 05:50 PM
ரயில்வே முன்பதிவென்றாலே இன்று பெரும்பாலும் ஆன்லைன்தான் என்றாகிவிட்டது. இதற்கான முன்பதிவு தளமான IRCTC தளத்திலும், ரயில் முன்பதிவு பற்றியும் ஓரளவு அனைவருக்கும் பரிச்சயம் இல்லாத சில வசதிகளைப் பற்றி பார்ப்போம்.
உங்கள் ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்ற முடியுமா?
முடியும், ஆனால் அவர் உங்களது தந்தை, தாய், மனைவி/கணவர், சகோதரர், சகோதரி ஆகிய உறவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இதை IRCTC இணையதளத்தில் செய்யமுடியாது. அருகில் உள்ள ரயில்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்துக்குச் சென்றுதான் இதைச் செய்யமுடியும். ரயில் புறப்படும் நேரத்திலிருந்து 24 மணிநேரங்களுக்கு முன் உங்களது இ-டிக்கெட்டை பிரிண்ட் செய்து (electronic reservation slip) அதையும், உங்களது ID ப்ரூஃப் ஏதேனும் ஒன்றையும், மாற்ற நினைப்பவருக்கும் உங்களுக்குமான உறவை உறுதிசெய்யும் ஏதேனும் ஓர் ஆவணத்தையும் அங்கு கொடுத்தால் உங்கள் டிக்கெட் அவர் பெயருக்கு மாற்றித்தரப்படும். பணிக்காகப் பயணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கும் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றச் சிறப்பு அனுமதி உண்டு.
டிக்கெட்டில் எழுத்துப்பிழை ஆகிவிட்டால் என்ன செய்வது?
ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது சிறிய எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுவிட்டால் கவலைகொள்ளவேண்டாம், டிக்கெட் பரிசோதனையாளரால் அதை மாற்றிக்கொள்ளமுடியும். ஆனால், அதற்கென்று பெயரே வேறு பெயராக தெரியும் அளவுக்குப் பிழை இருத்தல் கூடாது. இதைப்போன்ற விஷயங்களில் டிக்கெட் பரிசோதனையாளர் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. பெயர் வேறாக இருந்தால் நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகதான் எடுத்துக்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.