19-06-2019, 06:32 PM
`போஸ்டரை அகற்றுங்கள்; மன்னிப்பு கேளுங்கள்!'- ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
சமீபத்தில் வெளியான `சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் போஸ்டரில், மகாத்மா காந்தியின் படத்தை அவமதித்திருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சமீபத்தில் வெளியான `சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் போஸ்டரில், மகாத்மா காந்தியின் படத்தை அவமதித்திருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி ஆகியோர் நடித்திருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படம், கடந்த 14-ம் தேதி திரைக்கு வந்தது. இந்தப் படத்தை ‘தமிழுக்கு எண்-1 ஐ அழுத்தவும்’ படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க சண்டை, துப்பாக்கிச்சூடு என த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டரில், மகாத்மா காந்தியின் படம் இடம்பெற்றிருக்கிறது. அதில், துப்பாக்கிக் குண்டுகள் பாய்வதைப்போன்று தெரிவதால், 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள ராஜேஸ்வரி திரையரங்கம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் போஸ்டரில் வன்முறைக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அதில், எதற்காக மகாத்மாவின் படத்தையும், அவர்மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்வதைப் போன்றும் காட்டியிருக்கிறார்கள்? அதுமட்டுமின்றி, இந்திய ரூபாய் நோட்டையும் அவமதித்திருக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. சுட்டுப்பிடிக்க படக்குழுவினர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்தப் படம் வெளியான திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டுள்ள போஸ்டர்களை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
first 5 lakhs viewed thread tamil