14-04-2024, 07:53 AM
【46】
❖∘ ஜூலை ∘❖
⪼ ஜீவிதா ⪻
ஜூலை மாதத்தில் ஒருநாள் பரத்தின் உறவினர் என்று பேசிய ஒருவர் என்னிடம் சொன்ன விஷயங்களைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அன்று மாலை அரவிந்த் என்னுடன் லோன் தவிர்த்து பிற விஷயங்களை முதன்முதலாக பேசினான், என் குரல் கவலை மிகுந்து இருக்க, என்ன ஆச்சு ஏது ஆச்சு, ஏன் கவலைப் படுறீங்க என ரொம்ப ஆறுதல் சொன்னான்.
மன அழுத்தம் நிறைந்து இருக்கும் எனக்கு அவன் அன்று பேசியது ரொம்பவே நிம்மதியை தந்தது... நம்பிக்கையையும் தான். சில நாட்களில் பரத்தின் பெரியப்பா பய்யன் அப்புறம் இன்னொரு பாட்டி என சிலர் என்னிடம் பேசினார்கள். எல்லோரும் பரத் பற்றி நிறைய மோசமான விசயங்கள் சொன்னார்கள்.
ஏதோ என் மனதில் இருக்கும் கவலையை படித்தவன் போல, அந்த நாட்களிலும் எனக்கு அழைத்து, எனக்கு வந்த மன அழுத்தம் குறைய அரவிந்த் உதவி செய்தான். அதெப்படி நான் கவலையாக இருக்கும் நாட்களில் எனக்கு அழைத்துப் பேசுகிறான் என தெரியவில்லை.
விவகாரத்து அப்ளை செய்த பிறகும் ஏனோ தெரியவில்லை பரத் பற்றி கேள்விப்படும் விஷயம் இன்னும் என்னன பாதிக்கிறது....
ஜூலை மாதத்திலிருந்து, நான் கடன் வசூல் செய்வதற்காக போகும் இடங்களில் எதேனும் பிரச்சனை வந்தால், அநத இடங்களுக்கு இரண்டாவது முறை போகும் போது அரவிந்த்தை உதவிக்கு அழைக்க ஆரம்பித்தாள்.. எங்கள் பாங்க் விதிப்படி, ஊழியர்களை தவிர யாரும் துணைக்கு வந்து கஸ்டமர்களிடம் பேசக்கூடாது. என்னுடன் வேறு யாரை கூப்பிட? கூப்பிட்டாலும் வேலை அது இது என்றார்கள். இது தலைவலி பிடித்த வேலை. ஆனால் தானாகவே எனக்கு உதவி செய்ய தயாராக இருந்த அரவிந்த்தை கூப்பிடுவது எனக்கு சரியென பட்டது. ஏற்கனவே உதவி செய்த காரணத்தால், அவன் என்கூட நின்றால் ஒரு தைரியம் கிடைப்பது போல இருக்கும் என நம்பினேன்.
நான் கூப்பிடும் நேரங்களில் அரவிந்த் டிப்டாப்பாக வங்கி ஊழியர் என்று சொல்லும் அளவுக்கு உடை அணிந்து வருவான். கடன் வாங்கியவர்கள், நாங்கள் இருவரும் வங்கி ஊழியர்கள் என நினைத்துக் கொள்வார்கள். அரவிந்த் கொஞ்சம் பார்க்க முரடான ஆள் போல இருப்பான், அவன் என்கூட இருப்பதால் யாரும் என்னை திட்டவில்லை...
ஆண் ஊழியர் கூட இருந்தால் வார்த்தைகள் ரொம்ப தடிப்பதில்லை.. இது தான் உலகம்.. என்ன செய்ய.?
நானும் அரவிந்த்தும் ஓரளவுக்கு அலுவலக வேலை நேரம் அல்லாத நேரங்களிலும் பேச ஆரம்பித்து விட்டோம். ஜூலை மாத இறுதியில் ரொம்ப நல்ல ஃபிரண்ட்ஸ் போல நெருங்கியிருந்தோம்.
ஜூலை இறுதி வரை ஒரு ரிஜிஸ்டர்ட் போஸ்ட் கூட பரத் வாங்கவில்லை. எல்லா விதங்களிலும் நாங்கள் செய்த முயற்சி பலனளிக்காமல் போனது. என்னுடைய லாயர் இன்னும் 3 வாய்தாக்களுக்கு அவன் வரவில்லை என்றால் எக்ஸ் பார்ட்டே முறையில் நமக்கு சாதகமாக வழக்கு முடியும் என்றார். அப்படி நடந்தால் ஒரு தலைவலி குறையும் என்ற எண்ணம் எனக்கு....
அரவிந்திடம் கடன் மீட்டெடுக்க போகும் போது, ரீஜினல் மேனேஜர் அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங் பற்றி சொன்னேன்..
நான் ஜூலை மாதம் வாராக்கடன் வசூல், நிறைய லோன் கொடுத்த காரணத்தால் என்னை ஃபோனில் அழைத்து ரீஜினல் மேனேஜர் என்னை பாராட்டினார்.
அரவிந்த்திடம் ஃபோனில் பேசும் போது, நீ என்கூட வசூல் பண்ண வர்ற வரைக்கும், ரீஜினல் மேனேஜர் போன் பண்ணுனாலே பயமா இருக்கும். நல்லா திட்டு வாங்குவேன். பயங்கர டார்ச்சர் அந்த ஆளோட.. ஆனா இன்று ரீஜினல் மேனேஜர் "குட்" சொன்னதாக சொன்னாள்...
நான் ஓரளவுக்கு பழைய வாரா கடன்களை அரவிந்த் உதவியுடன் மீட்டேன், லோன் சம்பந்தமாக பரிசோதனை செய்ய போகும் இடங்களுக்கும் அவனை அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன். இந்த சூழலில் எனது ரீஜினல் மேனேஜர் மீட்டிங்கில் என்னை ஸ்பெஷலாக மீண்டும் பாராட்ட... ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு...
நான் ரீஜினல் மேனேஜர் அலுவலகம் விட்டு வெளியே வந்து அரவிந்த்க்கு போனில் அழைத்து தாங்க்ஸ் சொன்னேன். அவன் என்னிடம் எங்கே இருக்கீங்க என கேட்க, நான் இருக்கும் இடத்தை சொல்ல, அவனும் "நான் அங்கேதான் இருக்கேன்" என சொன்னான். என்ன ஒரு ஒற்றுமை.
அவன் நான் இருந்த இடத்துக்கு நேரில் வந்தான். என்னிடம் ட்ரீட் கேட்டான்..
நான் அவனிடம் இப்ப என்ன ட்ரீட், அப்புறம் பெரிய ட்ரீட் தரேன் என்று சொன்னேன்?
அதற்க்கு அவன் இப்போதைக்கு ஜூஸ்... பப்ஸ்.. கேக் போதும் என்றான்.
நாங்கள் இருவரும் ஜூஸ் & ஸ்நாக்ஸ் எல்லாம் சாப்பிட்டு முடிக்க...
உங்களை எனக்கு பிடிச்சிருக்கு என்றான்.....
நான் அவனிடம் எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயம் மற்றும் கணவனை பிரிந்து வாழ்வது, விவகாரத்து கேட்டு வழக்கு பதிவு செய்த விஷயம் என எல்லாவற்றையும் சொன்னேன்.
நான் சொல்வதை எல்லாம் ஷாக் அடித்தவன் போல கேட்டுக் கொண்டிருந்தான்...
அவன் தனது காதல் தோல்வி பற்றி சொன்னான்...
எனக்கு நீங்க சொன்ன விஷயம் எதுவும் பெரிதில்லை. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு... உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?
ஒருவர் வாழ்வின் விளிம்பு நிலை என நினைக்கும் ஒரு இடத்தில் இருக்கும் போது உதவி செய்யும் நபர் நமக்கு மிக மிக நல்லவர் என்று தானே தோன்றும்..
எனக்கும் அப்படியே...
நான் சில நாட்கள் அவகாசம் எடுத்துக் கொண்டேன். நான் அவனது காதலை ஏற்றுக் கொண்டேன்...
⪼ அரவிந்த் ⪻
நான் திட்டமிட்டு ஜீவிதாவை கவிழ்க்க முயற்சி செய்ய ஆரம்பித்த பிறகு ஜீவிதாவின் கணவன் பற்றி எனக்கு தெரிந்தவர்கள் மூலம் விசாரித்தேன். அவன் காசு செலவு செய்ததை தவிர, வேறு யாரும் எந்த குறையும் சொல்லவில்லை.
சரண் என்னிடம் சில விஷயங்களை முயற்சி செய்ய சொன்னாள். அதன் விளைவாக நான் ஜீவிதா கணவனின் உறவினர் என சொல்லி மூன்று பேரை அனுப்பி அவனைப் பற்றி சில மோசமான விஷயங்களை அவள் காதில் போட்டேன். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலயும் ஆட்டுவது போல உள்ளே புகுந்து அவளுக்கு ஆறுதல் சொல்வதைப் போல நெருக்கமானேன்.
எப்படியும் விவாகரத்து செய்யப் போகிறாள், அவனை இன்னும் கொஞ்சம் குறை சொன்னால் என்ன கெட்டுவிடும் என்ற எண்ணத்தில் தான் ஆட்களை அனுப்பினேன்.
அதே போல அவளுடைய மீட்டிங் தலைமை அலுவலகத்தில் நடப்பது பற்றி ஜீவிதா சொன்னாள். நான் ஜீவிதா சொன்ன எல்லா விசயங்களையும் சரணிடம் சொன்னேன். ஒரு வேளை ஜீவிதா சொன்னது போல் கடந்த வாரம் போனில் பாராட்டிய அதிகாரி, மீட்டிங்கில் ஒருவேளை அனைவர் முன்னாலும் பாராட்டலாம். அப்படி ஒரு வேளை நடந்தால் உன்னை உடனே அழைத்து பேசுவாள். உனக்கு அவளை கரெக்ட் செய்ய நல்ல வாய்ப்பு என சரண் எனக்கு அட்வைஸ் செய்தாள்.
நானும் பிளான் பண்ணி அந்த ஏரியாவில் சுற்றி திரிந்தேன். சரண் சொன்ன மாதிரியே நடந்தது நானும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி என் காதலை சொல்லி விட்டேன். அவளும் சரியென சொல்லி விட்டாள்.