14-04-2024, 07:52 AM
【45】
❖∘ ஜூன் ∘❖
⪼ ஜீவிதா ⪻
ஜூன் மாதத்தில் நீதிமன்றம் மீண்டும் இயங்க ஆரம்பித்த சில நாட்களில் விவகாரத்து கேட்டு வழக்கு பதிவு செய்தாள்.
அரவிந்த் தன்னுடைய உறவினர் பெயரில் உள்ள பிராப்பர்ட்டி வைத்து லோன் கேட்டு அந்த நபரை கூட்டிக் கொண்டு வந்து அப்ளை செய்தான், எங்கள் வங்கி வழக்கப்படி, நாங்கள் போய் அந்த இடம் பார்த்து அதன் மதிப்பு ஆராய்ந்து அதன் பிறகு தொகை முடிவு செய்ய வேண்டும்..
சில நாட்களில் மீண்டும் அலுவலகம் வந்த அரவிந்த், மேடம் பிராப்பர்ட்டி பரிசோதனைக்கு எப்போ வருவீங்க என்றான். இப்ப நீங்க சொந்தம் வேற, கொஞ்சம் பார்த்து சீக்கிரம் பண்ணுங்க. எனக்கு நீங்க கருணை காட்ட வேண்டும் என்றான்.
சரி நான் வர்றேன், அங்கே வரும் வாடகை வாகன செலவு, திரும்ப வரும் செலவு எல்லாம் உங்களது. எங்க பாங்க் பாலிசி.. .
சரி மேடம்..
அரவிந்த் கிளம்பும் போது ஃபோன் நம்பர் கேட்க, இருவரும் போன் நம்பர் பகிர்ந்து கொண்டனர். அவன் ஏற்கனவே அங்கு வந்த உறவினரிடம் நம்பர் வாங்கிவிட்டான் என்பதை அவள் அறியவில்லை.
தொடர்ந்து ஒரிரு நாட்கள் எப்போ வருவீங்க என ஃபோன் மற்றும் மெசேஜ் செய்து கேட்பான். இப்ப நீங்க சொந்தம் வேற, நீங்க நினைத்தால் மட்டும்தான் பிசினஸ் இன்னும் டெவலப் ஆகும் அப்படி இப்படி என அவள் மனம் குளிர பேசுவான்.
ஜீவிதா பரிசோதனைக்கு சென்ற இடம் நர்ஸரி. பார்க்க செமையாக இருந்தது. அங்கே வேலை செய்த "மதி" என்னும் வாலிபனை முதல் முறையாக சந்தித்தாள். அந்த மதியும் அரவிந்தும் நன்றாக கவனித்துக் கொண்டார்கள். பாங்க் மேனேஜர் என்ற காரணத்தால் இந்த மாதிரி சோதனை செய்ய போகும் இடங்களில் வரவேற்பு பலமாக இருக்கும்.
தன் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் காரணமாக ஜீவிதா மிகுந்த மன உளைச்சளில் இருந்த காலம் அது. அவளுக்கு அரவிந்த் மற்றும் மதி கவனித்த விதம் மற்றும் பேசும் விதம் எல்லாமே பிடித்துப் போய் விட்டது. மன உளைச்சலில் இருக்கும் நிலையில் யாராவது கொஞ்சம் உதவி செய்தாலும் மிகப்பெரிய விஷயம் போல் இருக்குமே! அப்படித்தான் அவளுக்கும் இருந்தது.
வங்கி வேலையை பொறுத்த வரை, வங்கியில் கேட்ட கடன் கொடுத்தால் ஆகா சூப்பர் என்பார்கள்... கடன் கட்டவில்லை என கேட்டுப் போனால் திட்டுவார்கள். அதே மாதிரி தான், லோன் பிராசஸ் செய்ய தாமதம் ஆனாலும். ஒரு சிலர் அவ்வளவு மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் அரவிந்த் அப்படியில்லை, வேறு வேலைகள் அதிகமாக இருந்த காரணத்தால் நான் நிறைய நாட்கள் தாமதித்த போதும் அமைதியாக இருந்தான். என்னை சாடவில்லை.
என்னுடைய விவகாரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றம் ரிஜிஸ்டர்ட் போஸ்ட் அனுப்ப ஆரம்பித்து விட்டது என லாயர் என்னிடம் தகவல் சொன்னார். நான் பரத்துக்காக எவ்வளவோ பண உதவி செய்தும் என்னை அவன் கொடுமை படுத்தியிருக்கிறான். வரதட்சனை வழக்கு காவல் நிலையத்தில் இருப்பதால் நிச்சயமாக பயந்து பரஸ்பரம் சுமூகமாக விவாகரத்து கொடுப்பான் என்று நம்புகிறேன். ஆனால் ஜூன் மாத இறுதிவரை அவன் ஒரு ரிஜிஸ்டர்ட் போஸ்ட் கூட வாங்கவில்லை என்ற தகவலை மீண்டும் எனக்கு லாயர் தெரிவித்தார்.
விவகாரத்து பிரச்சனை ஒரு தலைவலி என்றால் வேலை செய்யும் இடத்தில் இந்த வாராக் கடன் தலைவலி பெரிய தலைவலி.
ஒருமுறை கடன் கட்ட தவறிய ஒருவர் வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. நீங்கள் பணம் கட்டவில்லை என்றால், வங்கி சீக்கிரம் ஜப்தி பண்ண நோட்டீஸ் அனுப்பும், அதில் எத்தனை நாட்களில் உங்கள் வீட்டை வங்கி ஜப்தி பண்ணும் என்ற தகவல் இருக்கும் என எனக்கு தெரிந்த தகவலை அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன்.
அந்த ஆள் மற்றும் அவரது மனைவி இருவரும் என்னிடம் மன்றாட ஆரம்பித்தார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்த ஹவுஸ் ஓனருக்கு ஃபோன் கால் வந்தது, அவர் அதை பேசி முடித்த பிறகு என்னை ரொம்ப வசை பாடினார். எனக்கு ஏன் இவர் திடிரென்று இப்படி பேசுகிறார் என புரியவில்லை. எனக்கு அந்த நபரின் பேச்சு தாங்க முடியாமல் கண்கள் கலங்கியது.
அந்த நிமிடம் அந்த வழியே வந்த அரவிந்த் எனக்கு உதவி செய்தான். அந்த வினாடி அவன் எனக்கு ஆபத் பாந்தவன் போல இருந்தான்.
அந்த ஆளை அவன் முதலில் திட்ட ஆரம்பித்தான். பின்னர் மிரட்டடினான். அந்த ஹவுஸ் ஓனர் என்னிடம் மன்னிப்பு கேட்டான்..
நான் அரவிந்த்திடம் என்ன இங்கே எதுக்கு வந்தீங்க என்று கேட்க அவனும், காசு வசூலிக்க வந்ததாக சொன்னான். இவரிடமா என்று நான் கேட்க அரவிந்த் இவர் இல்லை. அது வேற என்றான்.
என்னிடம் அரவிந்த், காசு வந்து வேணும்னா மட்டும் சார் சார்னு வந்து கெஞ்சி வாங்குவானுங்க, ஆனால் வசூல் பண்ண மட்டும் நாம அலையணும்.. இதுல இவனுங்களை வேற துணைக்கு கூட்டிட்டு வரணும் என்று சொல்ல அங்கே 3 பசங்க நின்று கொண்டிருந்தார்கள். மூணு பேரும் ஹாய் ஹலோ சொன்னார்கள். அந்த பசங்க வசூல் செய்ய அரவிந்த் கூடவே வந்த அடியாட்கள் என நினைத்துக் கொண்டேன்.
நான் ஆம்பளை, நான் தனியா வந்தாலே அவ்ளோதான், என்னையே ஒரு வழி பண்ணுவானுங்க...நீங்க ரொம்ப பாவம் இப்படி தனியா வந்திருக்கீங்க என்றான். எனக்கு அவனது பேச்சுக்கள் ரொம்ப ஆதரவாக இருந்தது.
அவள் கிளைக்கு வந்து சேரும் வரை, மனதில் அந்த ஆள் ஏன் ஃபோன் வந்த பிறகு அப்படி திட்டினான் என குழப்பமாக இருந்தது. அதே நேரம் திட்டியதை நினைத்து அவளுக்கு ரொம்ப மனவருத்தம் இருந்தது. அங்கே அரவிந்த் மட்டும் வரவில்லை என்றால்.. அய்யோ, அவளுக்கு அதை நினைத்துப் பார்க்கக் கூட பயமாக இருந்தது. அவ்வளவு கெட்ட வார்த்தைகள்.
ஜீவிதா கிளைக்கு வந்து சேர்ந்த பிறகு, அரவிந்த்க்கு ரொம்ப தாங்க்ஸ் என வாட்ஸ்ஸாப்பில் மெசேஜ் அனுப்பினாள்.
பரவாயில்லை மேடம். இதெல்லாம் ஒரு விஷயம் இல்லை. இனி வசூல் போகும் போது உதவி வேணும்னா என்னை கூப்பிடுங்க. எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்க என அரவிந்த் பதில் அனுப்பினான்.
இப்படி சிறு சிறு உதவிகள் என ஆரம்பித்து எங்களுக்குள் ஓரளவுக்கு நெருக்கம் ஆரம்பித்தது. அவளின் நம்பிக்கைக்குறிய நபர்களில் ஒருவனாக அரவிந்த் மாறிக் கொண்டிருந்தான்...
⪼ அரவிந்த் ⪻
ஜீவிதா பற்றிய தகவல் எல்லாம் எங்கள் இருவருக்குமே உறவினராக இருந்தவன் மூலம் தெரிந்து கொண்டேன்.
நான் திட்டமிட்டு ஜீவிதாவை கவிழ்க்க முயற்சி செய்ய ஆரம்பித்தது என்னவோ மேட்டர் செய்ய மட்டும் தான். ஆள் நல்லா கொழு கொழுன்னு கும்முன்னு இருந்தாள்.
ஆனால் சரண் ஏண்டா மேட்டர்ன்னு மட்டும் அலையுற, ஆள் பார்க்க அழகாக இருக்கா, நிரந்தர வேலை, கைநிறைய சம்பளம், அவளை மடக்கி கல்யாணம் பண்ணுனா உன் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என அறிவுரை செய்தாள்.
எங்கள் நிதி நிறுவனத்துக்கு வரவேண்டிய வட்டி வசூல் செய்ய போன இடத்தில் ஜீவிதா ஆட்டோவில் அதே வீட்டில் வந்து இறங்கினாள். நாங்கள் வட்டி வசூலிக்க வந்த அதே வீட்டினுள் ஜீவிதா செல்வதைப் பார்த்தேன். அவள் எங்களிடம் வாங்கியதைப் போல வீட்டின் மேல் கடன் வாங்கி கட்டவில்லை அல்லது புது கடன் எதாவது கேட்டிருப்பான் என நினைத்தேன்.
நான் கடன் / வட்டி வசூல் செய்ய தனியாக செல்வதில்லை. நான் 2 பைக்கில் என் நண்பர்கள் 3 பேருடன் சென்றிருந்தேன்.
நான் ஐடியா கேட்க சரணை அழைத்துப் பேசினேன். அவள் சொன்ன மாதிரி, அந்த வீட்டு ஓனருக்கு ஃபோனில் அழைத்தேன். ஆனால் அவன் எடுக்கவில்லை.
ஜீவிதா என்னைப் பார்த்து விடக்கூடாது என்பதால் என் நண்பர்களில் ஒருவனை அனுப்ப, அந்த நண்பன் வீட்டு ஓனரை காம்பவுண்ட்க்கு வெளியே வரவழைத்துப் பேசினான். ஜீவிதா என்னைப் பார்த்து விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன்
என் கூட வந்தவன் அங்கே சென்று நான் வெயிட் பண்ணும் விஷயத்தை சொல்லி, ஒழுங்கு மரியாதையா போன் எடுத்து பேசு என சொல்லிவிட்டு வந்தான். ஹவுஸ் ஓனர் ஜீவிதா அருகில் சென்ற பிறகு, எங்கள் திட்டப்படி நான் அவனுக்கு ஃபோன்கால் செய்து பேசினேன்.
இப்ப நீ அந்த வங்கி மேனேஜர கண்ணா பின்னானு திட்டுற, திட்டுனா நான் உனக்கு இன்னும் 1-2 மாதம் வட்டி கட்ட டைம் தரேன். நீ திட்ட ஸ்டார்ட் பண்ண பிறகு நான் அவளுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி அங்க வருவேன். நீ அதை கண்டுக்க வேண்டாம் என சொல்ல, அவனும் அதையே செய்தான். எல்லா விஷயங்களும் சரண் சொன்னது போல நடக்க, எங்கள் திட்டங்கள் வெகு சுலபமாக அரங்கேறியது.
⪼ மதி ⪻
எனக்கு தெரிந்த உறவினர் மூலம், என் பாட்டி வீட்டுக்கு அருகில் இருக்கும் நர்சரியில், கல்லூரி படிப்பு முடிந்த சில வாரங்களில் வேலைக்கு சேர்ந்தேன்.
எனக்கு மன உளைச்சல் மற்றும் அதிக கவலை இருக்கும் காலங்களில் எல்லா உதவிகளும் செய்யும் தேவதையை நான் நேரில் சந்தித்தேன். என்
கனவில் ஒரு முறை கூட முகத்தை பார்க்க அனுமதிக்காத அதே தேவதை தான். உனக்கு உதவி தானே தேவை எதற்கு என் முகத்தை பார்க்க வேண்டும் என என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் தேவதை. எனக்கு அவள் உருவம் மனதில் அப்படியே பதிந்து போய் விட்டது.
![[Image: 3b8856fc62c5161ec6eb55bc3148a284.jpg]](https://i.ibb.co/rx88ywn/3b8856fc62c5161ec6eb55bc3148a284.jpg)
என் கனவில் வந்த அந்த தேவதை பெயர் ஜீவிதா. நான் இதுவரை என் அம்மா என்று நினைத்த அந்த தேவதையை நேரில் பார்த்த போது எனக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம்.