14-04-2024, 07:42 AM
【44】
❖∘ மே ∘❖
⪼ ஜீவிதா ⪻
கணவனிடம் சுத்தமாக பேசுவதில்லை. பரத்தும் ஒரு முறை கூட வந்து ஜீவிதா மற்றும் குழந்தையை பார்க்கவில்லை.
குழந்தையை கூட பார்க்க வராமல் ஒரு அப்பன் இருப்பானா என அப்பா, அம்மா, உறவினர்கள் உசுப்பி விட்டனர். ஊரார் பேச்சைக் கேட்டு, ஜீவிதா விவாகரத்து வாங்குவதை பற்றி வழக்கறிஞர்களிடம் பேசி அவர்கள் அறிவுரையின் பெயரில் மே மாதத்தில் "வரதட்சனை கொடுமை" புகாரினை கொடுத்தாள். அந்த விசாரணைக்கு வந்த நேரத்தில் ஜீவிதா & பரத் சில நிமிடங்கள் பேசினார்கள். ஜீவிதா தன் முடிவில் தீவிரமாக இருந்தாள்.
மே மாதத்தில் ஒருநாள், அடிக்கடி காசு டெபாசிட் செய்துவிட்டு வணக்கம் போடும் அரவிந்த், கார் லோன் பற்றிய தகவல் கேட்க வந்தான். சில நாட்களில் தனது நிறுவனத்தை மேம்படுத்த பிராப்பர்ட்டி லோன் பற்றி கேட்டான். நன்றாக கலகலவென பேசினான்.
அந்த மாத இறுதியில் அரவிந்த் மீண்டும் வந்தான். இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக லோன் பற்றி கேட்க வரும் போது, அவனுடன் வந்தது ஜீவிதாவின் அம்மா வழி உறவினர்களில் ஒருவர். அவர் அவளுடைய தூரத்து உறவினர். வயதில் அவளை விட வயது சிறிய நபர்.
அவளின் உறவினர், ஹே நீ எப்படி இங்க, நீ எப்போ சென்னைல இருந்து இங்க வந்த என எல்லாம் விசாரித்தான். கார் தனக்கு வாங்குவதற்காக அரவிந்த் மூலம் தகவல்கள் கேட்டதாக சொன்னான். கார் வாங்க தேவையான எல்லா தகவல்கள் மற்றும் டாக்குமெண்ட்களை மறுநாள் கொடுத்து விட்டு போன் நம்பர் வாங்கிக் கொண்டான். ஜீவிதா, அவளும் அரவிந்த்தும் ஏதோ ஒரு வகையில் தூரத்து உறவு என அறிந்த நாள் அது...
⪼ பரத் ⪻
வரதட்சனை புகார் தொடர்பாக போலீஸ் அழைத்த போது ரொம்ப நொந்து போனேன். நான் நிறைய தவறு செய்திருக்கிறேன், ஆனால் என் குடும்பத்தார் என்ன தவறு செய்தார்கள்? என்னால் அவர்களுக்கும் தலைவலி என்ற கேள்வி அவனை நாளுக்கு நாள் தின்று கொண்டிருந்தது.
இந்த பாழா போன தொழில் செய்யும் ஆசையால் எல்லாம் இழந்தது தான் மிச்சம், தொழில் முயற்சி இனி வேண்டாம் என காசை வீணாக்குவதை நிறுத்தி மிச்ச மீதி கடன்களை அடைக்க அடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தான்.
⪼ சுனிதா ⪻
பரத் என்னை பார்க்கும் விதம் எனக்கு பிடிக்க வில்லை. ஒரு மாதிரி கடித்து தின்பது போல பார்ப்பது போல இருக்கிரது. நான் மீண்டும் அம்மாவிடம் சொன்னேன். அம்மா முதல் நாள் சொன்னது போலவே அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்கக் கூடாது என்றார்கள்.
ஆரம்பத்தில் இப்படி தனியா இருக்குற ஆளுக்கு வீடு வாடகைக்கு கொடுத்துருக்காங்க என ஹவுஸ் ஓனரை குறை சொன்ன என் அப்பா இப்ப பரத்துடன் நல்ல நெருக்கம்.
எனக்கு ரிசல்ட் வந்துவிட்டது. நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். இன்ஜினியரிங் படிக்க வைக்கும் அளவுக்கு வசதியில்லை. எனக்கு ஆசைதான், ஆனால் என்ன செய்ய? ஆசை மட்டும் போதுமா? பணமும் வேண்டுமே..
⪼ ரெஜினா ⪻
நான் ரெஜினா, சுனிதா என்னிடம் முதல் நாளே பரத் பார்வை சரியில்லை என்றாள். என்னை அவர் அப்படி பார்க்காமல் அல்லது அவர் அவளை அப்படி பார்ப்பதை என் கண்ணால் பார்க்காமல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. நான் சுனிதாவிடம் அப்படியா என்று மட்டும் கேட்டுக் கொண்டேன்.
இப்போதும் அவ்வப்போது குறை சொல்கிறாள். குறை சொல்லும் அளவுக்கு என்னிடம் தவறாக அவர் நடந்து கொள்ளவில்லை. அவ்வளவு ஏன் என்னை தவறாக பார்ப்பது போலக்கூட எனக்கு இதுவரை தோன்றவில்லை.
என் கணவரிடம் சுனிதா சொல்லிய விஷயங்களை சொன்ன போது, அவ கொஞ்சம் விட்டா என்னைப் பற்றியும் உன்கிட்ட குறை சொல்லுவா. அவ சொல்றத போய் சீரியஸ்னு நினைக்குற பாரு என நக்கல் செய்தார்.