Gay/Lesb - LGBT பாவை அப்பார்ட்மெண்ட்
#1
சென்னையினுடைய பிரதானமான ஈஸியார் எனும் கிழக்கு கடற்கரை சாலையின் பிரபலமான ஒரு அப்பார்ட்மெண்ட். வழக்கமான அப்பார்ட்மெண்ட் வாசிகளின் ஒரு மீட்டிங்.

அபார்ட்மெண்ட் செகரெட்டரி குமுறிக் கொட்டிக் கொண்டிருந்தார். அதுவும் எல்லா இடங்களிலும் நடக்கக்கூடிய வழக்கமான ஒன்றுதானே.. பேச ஒன்றுமே இல்லாமல் கைகட்டி வேடிக்கை பார்த்து கொடுக்கின்ற ஸ்நாக்ஸை கொதித்து விட்டு ஒரு கப்பியை குடித்துவிட்டு களைந்து விடக்கூடிய வழக்கமான அப்பார்ட்மெண்ட் கூட்டமாக தான் அது தொடங்கி இருக்கக்கூடும் ஆனால் இம்முறை செகரட்டரிக்கு ஒரு பெரிய விஷயம் கைக்கு சிக்கி இருந்தது. 
"இதென்ன நூறு பேர் குடியிருக்கும் இடமா இல்லை கூத்தடிக்கும் மடமா?" என கொதித்தபடியே கொதித்துக் கொண்டே கேட்டார் அப்பார்ட்மெண்ட் செகடட்ரி.

உடனே ஒரு சனாதனவாதி மடங்களைக் கேலி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து சிலரும் அதே கருத்தை வலியுறுத்தினார்கள். இவ்வாறு சானதானவாதிகளினுடைய குரல்கள் இப்பொழுது அங்கங்கு கேட்கத் தொடங்கி இருக்கின்றன. பத்தம் பொதுவாக கேலிகளும் கிண்டல்களும் இருக்கும் பொழுது தாங்களும் இணைந்து கைதட்டி ரசித்த காலங்கள் மலையேறிக் கொண்டிருக்கின்றன. மெல்ல மெல்ல இந்த பூமி காவி நிறத்தை ஏற்றுக்கொள்ள தொடங்கி இருக்கின்றது. 

பொது ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிக்கும்படியாக ஏதாவது நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களைத் தனியே அழைத்து எச்சரித்தால் போதும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் சொன்னார். ஆனால் பொதுவெளிகள் ஒழுக்கக்கேடாக என்ன நடந்தது என்பதை அறிய அவருக்கு ஆவலாகவே இருந்தது. தன்னுடைய வயோதிகம் காரணமாகவும் தான் வகித்த நீதிபதி என்ற பதவி காரணமாகவும் அவர் மட்டும் படாமல் ஒரு கருத்தை மட்டும் வெளியே வைத்தார். 

பொது வெளியில் தவறு நடந்தால் அதைப் பொதுவில் கண்டிப்பதுதான் சரி என்று பிறர் நலனில் அக்கறை உள்ள பெண்மணி ஒருவர் ஆவேசப்பட்டார். பெண்களில் பலருக்கும் அது என்ன என்பதனை அறிந்து கொள்ளும் ஆவல் இருந்தது. அந்த ஆவல் ஆண்களுக்கு இருப்பதைப் போல ஒரு சபலத்தினால் அல்ல. குழாயடி சண்டை என்பதே.. அடுத்தவர்களின் அந்தரங்களை தாங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கின்றோம் தங்களுடைய ஞாபக சக்தி எவ்வளவு இருக்கின்றது என்பதனை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடிய ஒரு ஞாபக சக்தியை சோதித்துப் பார்க்கும் களம். 

விஷயம் இதுதான். செகரெட்டரி நேற்றிரவு படுக்கச் செல்லும் முன் எப்போதும்போலக் கடமை உந்தித் தள்ள, குடியிருப்பு வளாகத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்வையிட்டார். வளாகத்தின் பின்புறம் சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக உள்ள பிள்ளையார் கோயிலை அடுத்த அரச மரத்தின் அடியில் ஒரு ஆணும் ஆணும் தனியே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவ்வாறு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவர்கள் ஆடைகளை அணியவில்லை என்பதை அவர் பிறகுதான் கண்டு கொண்டார். ஒரு பெண்ணும் ஆணும் என்றால் செகரட்டரி மறைவாக இருந்து என்ன நடக்கின்றது என்பதை ஒரு பெரிய குறிப்புகளைக் எடுத்திருப்பார்.

தினமும் மறைவாக சென்று அதே பெண்ணும் ஆணும் தங்களுக்குள் புரிகின்ற கலவியை கண்டு ரசித்து இருப்பார். தன்னுடைய நண்பர் குலங்களுக்கு சொல்லி பொறாமை பட வைத்திருப்பார். ஆனால் அவர் எதிர்பார்த்து இருந்ததற்கு மாற்றாக அங்கு இருந்ததோ ஒரு ஆணும் மற்றொரு ஆணும்.. அந்த நிலையிலும் செகரட்டரிக்கு ஒரு ஆவல் மனதில் ஓரத்தில் இருந்தது. 

இதில் யார் கணவன்? யார் மனைவி? அவன் கணவனாக இருக்கும் பொழுது இவன் மனைவியாக இருப்பானோ? இவன் கணவனாக மாறும்பொழுது அவன் மனைவியாக மாறுவானோ... இல்லை கணவன் கணவனாகவே மனைவி மனைவியாகவே இருப்பார்களா.. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த இரு நிர்வாண ஆண்களும் பேசிக் கொண்டே இருந்தார்களே ஒழிய எந்த செயலிலும் ஈடுபடவில்லை. அது செகரட்டரிக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

ஆமாம் அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்.. என்ற கேள்வியும் செகரட்டரி எழுந்தது. பிரம்மச்சாரிக் கடவுளான பிள்ளையார் நிச்சயமாக சங்கடப்பட்டிருப்பார் என நொந்து கொண்டார். அருகில் சென்று அவர்களை மிரட்டுவோ.. அவர்கள் யார் என தெரிந்து கொள்வோம் செகரட்டரிக்கு பயமாக இருந்தது. ஒருவேளை அங்கு சென்று இருவரும் புதிதாக ஒரு நபர் வந்திருக்கிறார் என்று தங்களுக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டால் என்ன செய்வது என்ற பயம் செகரெட்டிரிக்கு.. அவருடைய பயத்தினால் அங்கிருந்து திரும்பிவிட்டார்.

கூட்டத்தின் தலைவராக இருக்கக்கூடிய தான் பயந்து ஓடிவந்தது குறித்து வெளிப்படையாக அவரால் கூற முடியுமா? மட்டும் படாமல் இரண்டு காதலர்கள் மிகவும் நெருக்கமாக ஆளில்லாத அந்த இரவின் சாட்சியாக பூங்காவில் இருந்ததை கூட்டத்தினருக்கு எடுத்துரைத்தார்.

"எல்லாம் இந்த பேச்சுலர் பசங்கதான்." 
"இரண்டு மீட்டிங்கில தீர்மானம் போட்டாச்சு. ஆனா கேட்க மாட்டேங்கறாங்க.." என்றார் செகரட்டரி
"அதிக வாடகை கிடைக்குதேனு வேற பக்கம் ஹவுஸ் வைச்சிருக்கிற ஓனர்ஸ் அப்பாட்மென்ட்டை கெடுக்கறாங்க. " 
" இந்தக் குடியிருப்பு வளாகத்தில் யாரும் காதலிக்கக்கூடாதா?" என்றார் ஒரு வாலிபர். அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
"குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் பொது இடத்தில் வயது வந்தவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டாமா" என்று கடிந்து கொண்டார் ஒரு பெண்மணி.
"காதல் என்று வந்துவிட்டால் பொறுப்பெல்லாம் மறந்துவிடும்"
"காதலிக்கிறதை தப்புனு சொல்லலை. நான் அங்கு நடந்தது காதலே இல்ல. வயசு பிள்ளைகள் எல்லாம் இருக்காங்க அதனால பொத்தம் பொதுவா சொல்லிக்கிறேன். இரவு அங்கு கூடியிருந்த இரண்டு காதலர்களும் இனிமேல் அங்க வரக்கூடாது" என்றார் செகரட்டரி.

அந்தக் குடியிருப்பின் வாட்சப் குரூப்பில் தற்போது எடுத்த தீர்மானத்தினை ஒரு செய்தியாக செகரட்டரி போட்டுக் கொண்டார். எல்லோரும் தங்களுடைய ஸ்நாக்ஸை தின்று கொண்டு வெட்டி கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு டீ வந்ததும் அதை குடித்துவிட்டு தங்கள் வேலைகளை பார்க்க சென்று விட்டார்கள்.

இரவு அதே நேரத்தில் வளாகத்தில் வசிக்கும் இருபது முப்பது பேருக்குத் திடீரென்று உடல் நலனின்மீது அக்கறை பிறந்து வாக்கிங் போனார்கள். பிள்ளையார் கோயிலைக் கடக்கும்போது உற்று உற்றுப் பார்த்துக்கொண்டே சென்றார்கள். மீண்டும் அதே இடத்தில் அதே நேரத்தில் அதே காதலர்கள் சந்திக்கூடும் என்ற நப்பாசை. காலையில் காதலர்களுக்கு எதிராக கோசமிட்ட பெண்மணியும் அக்கூட்டத்தில் ஒருவராக இருந்தார்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
பாவை அப்பார்ட்மெண்ட் - by sagotharan - 09-04-2024, 11:09 PM



Users browsing this thread: 1 Guest(s)