04-04-2024, 01:05 PM
தீபா வெங்கட் அர்ஜுன் ரூம் உள்ளே சென்றாள்
அவள் பின்னாடியே தயக்கத்துடன் சுமங்கலி தீபாவை பின்தொடர்ந்தாள்
ஆனால் அர்ஜுன் ரூமுக்குள் சென்ற தீபா வெங்கட் சற்றென்று கதவை சாத்தி உள்பக்கம் தாழ் போட்டுகொண்டாள்
அம்மா அம்மா என்று சுமங்கலி ஓடி சென்று கதவை தட்டினாள்
என்னை தொந்தரவு பண்ணாத சுமங்கலி.. நான் கொஞ்சம் நேரம் கழிச்சி வர்றேன்.. என்று தீபா வெங்கட் குரல் உள்ளே இருந்து கோபமாகவும் கடுமையாகவும் கேட்டது..
தீபா அப்படி சொன்னதும் அதுக்கு அப்புறம் சுமங்கலி கதவை தட்டவில்லை..
ஆனால் அவசர அவசரமாக ஹாலுக்கு ஓடி வந்தாள்
தன்னுடைய இடுப்பு முந்தானையில் சொருகி வைத்து இருந்த பட்டன் செல்போனை எடுத்தாள்
"ஐயா" என்று சேவ் பண்ணி வைத்து இருந்த நம்பருக்கு அவசரமாக போன் போட்டாள்
ரொம்ப நேரம் ரிங் மட்டும் போனது
ஆனால் கணபதி ஐயர் அவள் போனை அட்டென்ட் பண்ணவில்லை..
திரும்ப திரும்ப அவருக்கு கால் போட்டுக்கொண்டே இருந்தாள்
ஒரு 4-5 முயற்சிக்கு பின் கணபதி ஐயரே அவளுக்கு போன் பண்ணார்
ஏய் உனக்கு அறிவு இல்ல.. முக்கியமான மீட்டிங்ல இருக்கேன் போன் அடிச்சி தொந்தரவு பண்ற.. என்று காட்டு கத்து கத்தினார் கணபதி ஐயர்
ஐயா.. அதை விட முக்கியமான விஷயம்ய்யா ..
என்ன சொல்லித்தொலை.. என்று எரிந்து விழுந்தார் கணபதி ஐயர்
தீபாம்மா அர்ஜுன் ரூமுக்குள்ள போய் இருக்கங்காய்யா என்றாள் சுமங்கலி
ஐயோ.. அவன் ரூமுக்கு தீபா ஏன் போனா.. நீ ஏன் அவளை அங்கே போகவிட்ட.. என்று எரிச்சல் குறைந்து இப்போது பதட்டமாக கேட்டார் கணபதி ஐயர்
நான் எவ்ளோ தடுத்தும் கேக்காம தீபாம்மா உள்ளே போய்ட்டாங்கய்யா..
என்ன சுமங்கலி.. நீ கொஞ்சம் கவனமா இருந்திருக்க கூடாது.. இரு இரு நான் அவளுக்கு போன் அடிச்சி பேசுறேன்.. நீ வை.. என்று சொல்லி போனை கட் பண்ணார் கணபதி ஐயர்
தொடரும் 40