மான்சி கதைகள் by sathiyan
விடியலைத் தேடும் மான்சி - அத்தியாயம் - 5

அம்மா அப்பாவுடன் உற்சாகமாக பேசிய சந்தோஷமான மனநிலை மாறாமலேயே தனது லாப் டாப்பை திறந்து மெயிலை ஓபன் செய்தான்...

சாட் லிஸ்டில் அவன் கண்கள் சிமியின் ஐடியைத்தான் முதலில் தேடியது... அது பச்சை வட்டத்தோடு ஆன்லைனில் இருக்கிறாள் என்று கூற... அவனது சந்தோஷம் இரட்டிப்பானது....

"ஹாய் சிமி,, என்று டைப் செய்து அனுப்பி வைத்தான்.....

சற்று நேரம் பதில் இல்லை... மூன்று நிமிடங்கள் வரை ஸ்கிரீனை வெறித்தவாறு சத்யனை நகம் கடிக்க வைத்துவிட்டு நான்காவது நிமிடம் வந்தாள்...

"யெஸ் சத்யன்"

"எப்படியிருக்கீங்க சிமி?"

மீண்டும் சில நிமிட நேர இடைவெளிக்குப் பிறகு "ம் நல்லாருக்கேன்.... நீங்க சீக்கிரமே எழுந்தாச்சுப் போலருக்கே?" என்று பதில் வந்தது…

"ஆமாங்க... இப்பல்லாம் கரெக்ட்டா நாலரை மணிக்கே மணிக்கெல்லாம் விழிப்பு வந்துடுது"

"ஏன் அப்படி?"

"என்னங்க தெரியாத மாதிரி கேட்குறீங்க? என் ஆஸ்தான கவிதாயிணி உங்க கூட பேசுறதுக்கு தான்"

".............. "

"என்னங்க எதுவுமே பேசலை? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா?"

"என்ன விஷயம்?"

"ம்ம்,, நான் உங்களைத் தொடர்பு கொண்டு இன்று நூறாவது நாள்" சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பொம்மைகள் ஐந்தாறு போட்டிருந்தான்

"ஓ........ "

"என்னங்க வெறும் ஓ மட்டும் தானா? வேற எதுவும் கிடையாதா?"

"வேறன்னா?"

"அதாங்க ஒரு கவிதை சொல்லி பாராட்டலாம்ல... எவ்வளவு கவனமா ஞாபகம் வச்சிருக்கேன்" என்பதோடு அசடு வழிய சிரிக்கும் பொம்மை

"ம்ம்........"

"ப்ளீஸ் ஒரு கவிதை சொல்லுங்கள் கவிக்குயிலே"

சிலநிமிடங்கள் பதிலே வரவில்லை...



"என்னங்க? எழுதுறீங்களா? ஓகே ஓகே வெயிட் பண்றேன்" ஹேப்பி என்று குதித்தாடும் ஸ்மைலி ஒன்றுடன்

சற்று நேரம் கழித்து "ஸாரி எதுவும் எழுத வரலை" என்று பதில் வந்தது...

லாப்டாப்பை வெறித்தபடி அமர்ந்திருந்தான் சத்யன்,, ஏமாற்றமாக இருந்தது.....

"ஸாரி" மீண்டும் சிமி

ஒரு நெடு மூச்சுடன் "ஓகே,, பரவால்லங்க..... ஆனா உங்களுக்கு ஏதாவதுப் பிரச்சனையா? ஒவ்வொரு முறையும் பதில் ரொம்பத் தாமதமா வருதே? அல்லது ரொம்ப பிஸியா?"

தாமதமான நிமிடங்கள் தயங்கியபடி செல்ல.....

"பிஸியில்லை சத்யன்,, சும்மா கையில் ஒரு வலி"

"கையில் வலியா? ஏன் என்னாச்சு?"

"அதான் சும்மான்னு சொன்னேன்ல"

"இல்லைங்க,, ப்ளீஸ் என்னாச்சுனு சொல்லுங்க.... வலின்னு நீங்க சொன்ன பிறகு என்னால அமைதியா இருக்க முடியலை" உண்மையாகவே சத்யனுக்கு பதட்டமாக இருந்தது...

இவனது பதட்டம் சிமிக்கு எப்படியிருந்ததோ? "ஹாஹாஹாஹா அமைதியா இருக்க முடியலைன்னா? என்ன பண்ண முடியும் உங்களால்?"

"எதுவும் செய்ய முடியாது தான், பரிதாபமோ ஆறுதலோ உங்களுக்குப் பிடிக்காது தான்,, ஆனா வலி எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சுகிட்டா என் மனமாவது அமைதி பெருமே... அதுக்காக தான் கேட்குறேன்"

அமைதியே உருவான மான்சிக்குள் திடீரென்று ஒரு வக்கிரம்... எதிராளியின் அன்பை அழ வைத்துப் பார்க்கும் சிறு வக்கிரம் புகுந்து கொள்ள.... "அப்படி என் வலியெல்லாம் தெரிஞ்சா உங்க மனது அமைதியாயிடுமா? ஹாஹாஹாஹா இது வித்தியாசமா இருக்கே? ஓகே சொல்றேன் கேட்டுக்கங்க.... காலையில என் சித்திக்கு சூடா காபி கொண்டு போய் கொடுத்தேன்..."

"உங்களுக்கு சித்தி இருக்காங்களா?"

"ம் என் அப்பாவின் இரண்டாவது மனைவி"

"ஓ..... நல்லவங்களா? கொடுமை படுத்துவாங்களா?”

"வாட்?? நான் சொல்றதை குறுக்கே பேசாம கேட்கவே முடியாதா?"

"ஸாரி,, ஸாரி,, சொல்லுங்க சிமி"

"சித்தி டிவி பார்த்துக்கிட்டே காபி கப்பை வாங்கினதில் தவறி அவங்க விரல்கள்ல காபி சிந்திடுச்சு..... அதுல கோபமான சித்தி என் கையைப் பிடிச்சு சூடான காபியை உள்ளங்கைல ஊத்திட்டாங்க,, அதுல கை வெந்து போச்சு... அதான் வேகமா டைப் செய்ய முடியலை" அவன் துடிக்க வேண்டும் என்று தான் எல்லாவற்றையும் கூறினாள்.... ஆனால் துடிப்பானே என்று இவள் உள்ளம் துடித்தது....

சற்றுநேரம் அவனிடமிருந்து பதிலே இல்லை.....

"என்னாச்சு? பயந்துட்டீங்களா?" என்று இவள் கிட்ட மறு நொடி...

"ஏன்ங்க? ஏன் பயப்படுனும்? சத்தியமா இதை என்னால ஏத்துக்க முடியலைங்க..... இன்னொரு காபியை எடுத்துட்டு வந்து சித்தியோட மூஞ்சியில் ஊத்திட்டேன்னு நீங்க சொல்லியிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்..... அதெல்லாம் ஒரு பொம்பளையா?" கொதிப்புடன் வந்து விழுந்தன அவனது வரிகள்..

"ம்ம்,, நான் அப்படி செய்ய மாட்டேன்.... எனக்கு என் குடும்பம் முக்கியம்"

"இல்ல,, நீங்க டைப் செய்ய வேண்டாம்.... அப்படியே இருங்க...... அய்யோ ரொம்ப வலிக்கிதாம்மா.... சத்தியமா என்னால முடியலை சிமி.... அழுகையா வருது..... உங்க கவிதைகளையும் வார்த்தைகளையும் வச்சு நீங்க எவ்வளவு மென்மையானவங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.... உங்களைப் போய் காயப்படுத்திப் பார்க்க நினைக்கும் அந்த மிருகம்? அம்மம்மா... பெண்கள்ல இப்படியும் இருக்காங்களா? சிமி... சிமி.. அழறீங்களா? வலிக்கிதா சிமி" அவன் பாட்டுக்கு நிறுத்தாமல் டைப் அடித்துக் கொண்டே போனான்....

முதன் முறையாக அவளுக்காக கலங்கும் ஒரு ஜீவன்,, அதுவரை வலியால் அழாத மான்சிக்கு இவன் ஆறுதல் கூறியதும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.... பெண்ணாய் பிறந்ததிலிருந்து பட்ட துயரையெல்லாம் அவனிடம் சொல்லி ஆறுதல் தேடத் துடித்தது இதயம்.... அலுவலகம் காலியாக இருக்க கண்ணீரை கர்சீப்பில் ஒற்றியெடுத்தாள்....

"சிமி,, இது முதல் முறையா? அல்லது இது போல் நிறைய நடந்திருக்கா?" வெறும் எழுத்துக்கள் தான்... ஆனால் அதில் அவனது உக்கிரத்தைக் காணமுடிந்தது 

ம்ம்,, என்னோட ஏழாவது வயசிலிருந்தே அனுபவிக்கிறேன்.... பழகிப் போச்சு.... அவங்களுக்கு தகுந்த மாதிரி நடந்துப்பேன்.. அதனால் வலிகள் அதிகம் கிடையாது... ஆனா இந்த ரெண்டு மாசாமா சித்தி ரொம்ப கோபமா இருக்காங்க... அதான் இப்படி அடிக்கடி நடக்குது"

"ஏய்,, ஏய்.... லூசா நீ? இந்த காலத்துல இப்படி யாராவது இருப்பாங்களா? அதுவும் இத்தனை வருஷமா கொடுமைகளை தாங்கிக்கிட்டு? சுத்தப் பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு?" கோபத்தில் ஒருமையில் அழைத்ததை அவன் கவனிக்கவில்லை போலும்....

மான்சி கவனித்துவிட்டாள்... இரும்பாய் இறுகியிருந்த இதயத்தில் இளக்கத்தை ஏற்படுத்தியது.... "அது அப்படித்தான் சத்யன்,, மாத்த முடியாதது..... அந்தக் காலமோ இந்தக் காலமோ... பெண்கள் சொந்த வீட்டுலயே அகதிகள் தான்.... ஆணுக்கு பெண் சமம்னு போர்க் கொடி தூக்கினாலும் ஆணுக்குக் கிடைக்கும் எல்லாமும் பெண்ணுக்கு கிடைப்பதில்லை... அப்படி கிடைச்சாலும் அது நிலைப்பதில்லை.... எனக்கு என் அப்பாவும் அவரது குடும்ப கௌரவமும் ரொம்ப முக்கியம் சத்யன்... அதை உடைக்க மாட்டேன்.... ஆனால் இந்த வலிகள்?????????? இதை நான் தாங்குவதற்கும் ஒரு காரணம் இருக்கு...."

"வலிகளைத் தாங்க காரணமா? இதென்ன முட்டாள்த்தனமா இருக்கு?"

"ஆமா முட்டாள்த்தனம்தான்..... இந்த வலிகளை நான் தாங்காமல் எதிர்த்து நின்னா... எல்லாம் என் அப்பாவுக்கு திரும்பும்... வார்த்தையால் விழும் அடிகளை என் அப்பா தாங்க மாட்டார் சத்யன்... அப்பா செய்த ஒரு பாவத்துக்கு நான் தண்டனையை ஏத்துக்கிறதா கூட வச்சுக்கலாம்"

"சத்தியமா எனக்குப் புரியலை.... எனக்கு உன் குடும்பத்தைப் பத்தி தெரியனும்.... கொஞ்சம் சொல்லமுடியுமா?"

சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தாள்.... "அது எதுக்கு? சொல்லிக்கும் படி எதுவுமில்லை..... நீங்க காலேஜ் கிளம்புங்க நேரமாச்சு"



"உனக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லைனு நேரடியாவே சொல்லலாம்.... காலேஜ் போக இன்னும் ஒன் அவர் இருக்கு" கோபமாக இருக்கு பொம்மை ஒன்றும் கூடவே

"ம்ம்"

"சிமி,, நான் கேட்குறதுக்கு மறைக்காம பதில் சொல்வியா?"

"அது நீங்க கேட்கும் விஷயத்தைப் பொருத்திருக்கு"

சுவற்றில் முட்டிக்கொள்ளும் படத்துடன் "அம்மா தாயே,, உன் பேமிலி பத்தி இனி கேட்கலை... இது வேற"

"சரி கேளுங்க"

"ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ரெண்டு நாள் தொடர்ந்து சாட் வராம இருந்தியே.... அப்பவும் இதுபோல எதாவது நடந்ததா? நிஜத்தை சொல்லு சிமி"

அவனது அறிவுக் கூர்மையை எண்ணி வியப்பதா? அல்லது தன்னைப் பற்றியே யோசிப்பதை எண்ணி மகிழ்வதா? புரியவில்லை மான்சிக்கு "ம்ம்" என்று அனுப்பினாள்...

சிலநிமிட மவுனத்திற்கு பிறகு "என்னம்மா ஆச்சு.... என்ன பண்ணாங்க? இதுபோல வலியா? அல்லது இதைவிட அதிகமா? ரெண்டுநாளா தொடர்ந்து ஆபிஸ் வராம இருந்தியே சிமி?" அவனின் உள்ளக் கதறலே வார்த்தையாக வந்தது....

அன்று நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள்..... ரீத்துவைத் தேடி வந்த ஒரு இளைஞனுக்கு பதில் சொல்வதற்காக வெளியே வந்தாள்.... அவனது சகோதிரியோ மான்சியின் கல்லூரித் தோழியாக இருந்த காரணத்தால் சற்று நேரம் நின்று பேசியபின் ரீத்து இல்லையென்ற தகவலைக் கூறி அனுப்ப வேண்டிய நிலைமை.... அவனை அனுப்பிவிட்டு உள்ள வந்தவளைக் கண்டு ஆத்திரமாக விழித்தாள் கலா.... அவள் கையில் மான்சி அயர்ன் செய்துகொண்டிருந்த கலாவின் காட்டன் புடவை பொசுங்கிய நிலையில்....

அய்யய்யோ சேலை பொசுங்கிவிட்டதா?...... இல்லையே? அயர்ன் பாக்ஸை எடுத்து தனியாகத் தானே வைத்துவிட்டு வந்தாள்... புடவை பொசுங்க வாய்ப்பே இல்லையே?

"ஏன்டி என் சேலையை பொசுக்கிட்ட எந்த மாப்ளை கூடடி கதை பேசிட்டு வர்ற?" இன்னும் எழுத்தில் வரிக்க முடியா வக்கிர வார்த்தைகள்.... திட்டி முடித்தவள் வீடு துடைக்கு மாப்பில் இருக்கும் ஸ்டிக்கை உருவி மான்சியை விலாசித் தள்ளிவிட்டாள்.... சரமாரியாக விழுந்த அடிகளில் சில முழங்கால் மூட்டில் விழ.... இரண்டு நாட்களுக்கு காலை நேராக வைத்து நடக்க முடியாத நிலைமை... அதனால் அலுவலகத்துக் கூட வரமுடியவில்லை..... புடவை மான்சியால் பொசுங்கவில்லை,, கலாவே அயர்ன் பாக்ஸை எடுத்து வைத்து பொசுக்கியிருக்க வேண்டும்.... அன்று மான்சியை வதைக்க ஒரு காரணம் தேவைப்பட்டது அவ்வளவுதான்.....

மான்சியும் அன்று காலையிலிருந்தே எதிர்பார்த்தது தான்.... வீட்டுக்கு வந்த நண்பரிடம் மான்சியை மட்டுமே அறிமுகம் செய்து வைத்த பத்ரியின் மீதான ஆத்திரம் இது... மான்சி இதை ஏற்கவில்லையென்றால்.... கலா தெருவுக்கு போயிருப்பாள்... ரகசியமாக நடக்கும் சில அந்தரங்ககள் அம்பலமேறியிருக்கும்......

"என்ன சிமி பதிலே வரலை?" மீண்டும் ஞாபகப்படுத்தினான் சத்யன்...

"ம்ம்,, சித்தியோட புடவையில் அயர்ன் பாக்ஸ் பட்டு பொசுங்கிடுச்சு... அதனால அடிச்சிட்டாங்க"

"அடியா? எதால் அடிச்சாங்க?"

"வீடு தொடைக்கும் ஸ்டிக் இருக்குல்ல அதால தான்"

சத்யனிடம் இருந்து பதில் இல்லை.....

“அது ஸ்டீல் ஸ்டிக்... கால் முட்டில அடி பட்டதும் பயங்கர வலி... நடக்கமுடியலை.... அதான் ரெண்டுநாள் ஆபிஸ் லீவு"

சத்யனின் உணர்வுகளை வரையறுக்க முடியாது... நெஞ்சம் கொதித்தது.... அந்த நெருப்புக்கிடையே சிமியின் மீது இரக்கமெனும் ஈரமும் கசிந்தது..... அவள் கவிதைகளில் இருக்கும் வலியும் துயரும் இப்போது இரட்டிப்பாகத் தெரிந்தது....... தாயைத் தேடியலையும் சிறு சிறுமியொருத்தியா சிமி அவன் கண்களுக்குத் தெரிந்தாள்..... கண்களில் தேங்கிய நீரை சுண்டியெறிந்தான்....

எதுவுமே பேசத் தோன்றாமல் "சரி நீ கிளம்பு சிமி..... நாளைக்கு பேசுவோம்" என்று அனுப்பினான்...

"ம் ம் சரி,, ஆனா நீங்க இன்னைக்கு கவிதையே கேட்கலையே?"

நிஜமாகவே கண்ணீர் வந்தது சத்யனுக்கு "ம்ம் மறந்துட்டேன்ம்மா,, நீ கவிதைகளை பதிவு செய்... நான் குளிச்சிட்டு வந்து படிக்கிறேன்" என்று பதில் செய்து விட்டு "பை சிமி" என்ற வார்த்தையுடன் ஆப்லைன் போய்விட்டான்......

சற்றுநேரம் வரை ஸ்கிரீனையே பார்த்திருந்தாள்... ரொம்பவே வலிக்கும்படி செய்துட்டமோ..... ஆனாலும் அவனிடம் சொல்ல மட்டுமே உரிமையிருப்பது போல் உள்ளுக்குள் தவிப்பாக இருக்கிறதே......

அம்மா,, இந்த ஆறுதலேனும் என் வாழ்வில் நிலைக்குமா??



" உன்னை உறவாகத் தேடும்

" எனது ஒவ்வொரு விடியலும்!

" தீண்டாமை சுவருக்கு அப்பால் நிற்கும் ....

" தாழ்த்தப்பட்ட சிறுமியாய்...

" விடியலைத் தேடி....

" கண்ணீருடன் காத்திருக்கிறது....

" என் இதயம்!!

*** *** *** *** *** *** *** *** *** ***

" கேட்காமல் கடவுள் கொடுத்த

" வரமும் நீதான்,

" நான் தேடாமல் கிடைத்த

" தேவதையும் நீ தான்!

" உன்னை நிஜத்தில் தொலைத்து..

" கனவில் தேடும் சாபம் மட்டும் எனக்கு!

*** *** *** *** *** *** *** *** *** ***

" அம்மா!

" அன்பு காட்ட ஆளில்லை...

" ஆனாலும் அழவில்லை!

" ஆசைப்படாத பொருளில்லை...

" ஆனாலும் கேட்கவில்லை!

" எனதுத் தேவையெல்லாம்...

" உனது பாசமெனும் கவசம் கொண்டு..

" எனை நேசத்துடன் காப்பாய் என்றே!!

கவிதைகளைப் பதிவு செய்துவிட்டு கடையை மூடாமல் காத்திருந்தாள்... அவனிடமிருந்து லைக் வருகிறதா என்று தான்....

சில நிமிடங்களில் லைக் கொடுத்து " நல்லாருக்கு சிமி " என்ற கமெண்ட்டும் வந்திருந்தது.... எப்போதும் ஏதாவது ஒரு வார்த்தைக்கு அர்த்தம் கேட்பான்... கேள்விகள் இல்லாமல் அவனது கமெண்ட்ஸ் இருக்காது... இன்று ஒரே வார்த்தையில் முடித்திருந்தான்....




ரொம்பவும் குழம்பித் தவிக்கிறான் என்று அவள் நினைக்கும் போதே அவனிடமிருந்து ஒரு மெயில்......

அன்பு சிமி,,

நான் சொல்ல வந்ததை சொல்ல மெயில் தான் சரியானது....
சிமி,, உனது துயர் கேட்டு என் இதயம் கண்ணீர் வடிப்பது நிஜம்... நான் வாழும் வாழ்வில் இப்படியெல்லாம் அறிந்ததும் இல்லை தெரிந்ததும் இல்லை.... உனக்கு ஆறுதல் கூற வார்த்தையும் இல்லை....

ஆனால் துயரத்தைக் குறைக்க வழி சொல்ல முடியும்.... ஆம் சிமி,, நீ இப்படியே மனதுக்குள் புதைத்து வைத்தால் விரைவில் மன அழுத்தம் ஏற்பட்டு டிப்ரஷன் வர வாய்ப்புள்ளது.... அப்படி வராமல் தடுக்க ஒரே வழி.. உனக்கு நடந்தவைகள்... நடப்பவைகள் எல்லாவற்றையும்... என்னிடம் பகிர்ந்து கொள்.... என்னடா இப்படி கேட்கிறானே என்று எண்ண வேண்டாம்.... அருகில் இருக்கும் உனது நண்பன் எனது தோளில் சாய்ந்து கொண்டு உனது வலிகளை சொல்வது போல் எண்ணிக்கொள்.... உனது குடும்ப விபரங்கள் எனக்குத் தேவையில்லை.... சம்பவங்களை மட்டும் சொல்லி உனது மன அழுத்தம் குறைய வழி செய்கிறேன்.... நண்பனாய் நினைத்தால் சொல்லியழு சிமி... கண்ணீருடன் உன் கதையை என்னிடம் சொல்லியழு.... இரும்பாக கனக்கும் இதயம்... துரும்பாக மிதக்கும்..... சாட்டில் சொல்ல முடியாது என்றால் மெயிலில் சொல்லு சிமி....

உனது வலிகளை சுமக்க காத்திருக்கும் நண்பன் சத்யன்,,

நான்கைந்து முறை வாசித்துப் பார்த்தாள்.... வார்த்தைகள் மனப்பாடமானது..... எனது வலிக்களை கேட்கவும் தாங்கவும் ஒரு இதயம்...... நான் தேடிய தாய்மையின் மறு உருவம் இது தானா? இவன் தானா அந்த விடியல்? இல்லை பரிதாபத்தால் வந்த பரிவா? அழவேண்டும் போல் இருந்தது..... அடக்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினாள்......
காலேஜூக்கு சென்று அமர்ந்த சத்யனுக்கும் எதிலுமே கவனம் செல்லவில்லை..... சூடான காபி கையில் ஊற்றப்பட்டு துடிக்கும் முகம் தெரியாத ஒரு இளம்பெண்..... ஸ்டீல் ஸ்டிக்கினால் அடி வாங்கி நடக்கமுடியாமல் கால்களை இழுத்துச் செல்லும் ஒரு இளம் பெண்... சித்திரவதையாக இருந்தது... முஷ்டியை மடக்கி டேபிளில் குத்தியவனை சக மாணவர்கள் வித்தியாசமாகப் பார்த்தனர்.....

தாயில்லாப் பெண்,, தாயை நினைத்து ஏங்கி கவிதையில் கொட்டுகிறாள் என்று எண்ணினால்.... அவளுக்கு இப்படியொரு துயர் துணை நிற்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை.... கவனம் சிதற... எப்போது இரவு வரும் என்று காத்திருந்தான்....
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM
RE: மான்சி கதைகள் by sathiyan - by johnypowas - 19-06-2019, 11:21 AM



Users browsing this thread: 3 Guest(s)