30-03-2024, 06:09 PM
வித்யா வித்தைக்காரி
【33】
【33】
வித்யா அப்பா அப்பா என சொல்லி பேசுவதை கவனித்தார் வாசு. அரை மணி நேரம் கழித்து வெளியில் செல்லும் போது முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வித்யா தொடர்ந்து பேசுவதைப் பார்த்தார். ஆனால் அவள் மலருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
ஒருவேளை தன் அப்பாவிடம் எல்லாம் சொல்லி விட்டாள் அதனால் தான் சோகமாக இருக்கிறாள் என நினைத்து காரில் ஏறியதும் நேசமணிக்கு அழைத்து நடந்த விஷயங்களை சொல்லிவிட்டார் வாசு. பாவம் வள்ளி தாயில்லா புள்ளைய அடிச்சிட்டேன்னு வள்ளி கவலையில் இருக்கா என்றார்.
அவ(வித்யா) யாரைப் பற்றியும் எதுவும் குறை சொல்ல மாட்டா. உங்க ரெண்டு பேரையும் பத்தி பேசும்போது அவ குரல்ல எப்பவும் சந்தோஷம் இருக்கும். மாப்பிள்ளைய பத்தி பேசும் போதுதான் ஒருநாள் சந்தோஷமா பேசுவா, இன்னொரு நாள் குரல் கொஞ்சம் டல்லா இருக்கும். அப்ப கூட கேட்டா எதுவும் சொல்ல மாட்டா. கவலைய விடுங்க சம்பந்தி என சிரித்தார் நேசமணி.
வித்யா டிவோர்ஸ் விஷயமாக வளன் சொல்லிய எல்லாவற்றையும் மலரிடம் சொன்னாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் ஓவர் என சோகமாக சொல்ல, மலர் சிரித்துவிட்டாள்.
ஏண்டி சிரிக்கிற..
லூசு மாதிரி பேசுனா சிரிக்காம என்ன பண்ண.
என்னடி இப்படி சொல்ற.
பின்ன என்னடி நேத்துதான 4 மணி நேரம் ட்ரைவ் பண்ணி அருமை பொண்டாட்டிய பார்க்க வந்தாங்க, அதுக்குள்ள எப்படி டிவோர்ஸ் ஃபைல் பண்ணுவாங்க..
சத்தியமா மலர். அவங்க அப்படிதான் சொன்னாங்க..
ஏய் லூசு! கோர்ட்ல டிவோர்ஸ் வாங்க நீங்க கல்யாணம் பண்ணுனா ப்ரூஃப் குடுக்கணும். உங்க கிட்ட என்ன ப்ரூஃப் இருக்கு?
ஒண்ணுமே இல்லை.
இன்னும் நீங்க ரிஜிஸ்டர் கூட பண்ணல.
ஆமா..
கோர்ட்ல கல்யாணம் பண்ணி வைப்பாங்க தெரியுமா?
கோர்ட்ல கல்யாணமா?
எனக்கு அவரு உன்னை டிவோர்ஸ்னு சொல்லி மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ண கூட்டிட்டு போறார்ன்னு தோணுது..
என்னடி சொல்ற..
செகண்ட் இயர் படிக்கும் போது எங்க பக்கத்து வீட்ல இருக்குற சொந்தக்கார அக்காவுக்கு டிவோர்ஸ் ஆச்சுன்னு சொன்னேனா?
ஆமா சொன்ன..
அவங்க டிவோர்ஸ் அப்ளை பண்ணும் போது கல்யாணப் பத்திரிக்கை, ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோ எல்லாம் அந்த மனுவோட சேர்த்து குடுத்த காப்பி நானும் பார்த்திருக்கேன்..
அப்படியா..
முக்கியமா கோர்ட் ஸ்டாம்பு இருக்கும். எல்லா பேப்பர்லயும் கையெழுத்து போடுவாங்க. முக்கியமா எதுக்கு டிவோர்ஸ்னு பாயிண்ட் பை பாயிண்ட் அதுல எழுதிருக்கும்.
இது மியூச்சுவல் டிவோர்ஸ்..
எல்லாம் ஒண்ணு தான். வாத்தி உன்னை முகத்தை சீரியஸா வச்சிட்டு கலாய்க்க ட்ரை பண்ணுது..
உண்மையா வா..
ரெண்டு பேரும் லவ்வ சொல்லித் தொலைங்க என்றாள் மலர்.
முகத்தில் புன்னகையுடன் அவளது அறைக்கு சென்றாள்.
என்ன சிரிப்பு..?
அப்பாகிட்ட சொல்லிட்டேன். பிடிக்காத மேரேஜ் வேணாம் டிவோர்ஸ் குடுத்துட்டு வான்னு சொல்லிட்டாங்க என தன் மொபைலை லாக் செய்யாமல் கட்டிலில் வைத்து விட்டு குளிக்க சென்றாள்.
ஃபோன் எடுத்து கால் ஹிஸ்டரியில் நேசமணிக்கு அழைத்து அவள் பேசியிருப்பதை உறுதி செய்தான்.. அவள் சொல்வது உண்மை என நினைத்து நேசமணி நம்பரை அவள் மொபைலில் இருந்து எடுத்தான் வளன்.
பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக எல்லா ஆப்களையும் குளோஸ் செய்துவிட்டான். அவள் வெளியே வந்து மொபைல் எடுத்துக் கொண்டு மீண்டும் பாத்ரூம் உள்ளே நுழைந்தாள்.
வளன் தன் மாமனாருக்கு அழைத்தான்.
சொல்லுங்க மாப்பிள்ளை..
வித்யா எதும் சொன்னாளா மாமா.
இல்லை மாப்பிள்ளை, அவ பேசுனா ஆனா எதும் சொல்லலை. அப்பா ஃபோன் பண்ணி எல்லாம் சொன்னாங்க. அம்மா ரொம்ப வருத்தமா இருக்குறதா சொன்னாங்க.
ஆமா மாமா என சொல்லி வைத்தான்.
பாத்ரூம் உள்ளே நுழைந்தவள் எல்லா ஆப்களும் குளோஸ் ஆகியிருப்பதை பார்த்து சிரித்தாள். அவள் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடித்து பறந்தன.
வளன் தன் நண்பனுக்கு அழைத்தான்...
மச்சி அவளுக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன் என அப்பாவிடம் சொல்லிவிட்டதாக சொன்னது, வித்யாவின் அப்பாவுக்கு அழைத்து பேசியது என நடந்த விஷயத்தை சொன்னான்.
எதிர் முனையில் வளனின் நண்பன் சிரித்தான்.
ஏண்டா சிரிக்கிற.
நீ லக்கி மச்சி, அவனவன் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிட்டு 1 வருசத்துல டிவோர்ஸ் வேணும்னு வர்றான். நீ அதிர்ஷ்டம் செய்தவன். தங்கச்சிகிட்ட எல்லாம் சொல்லி கூட்டிட்டு வா என்றான்.
ரிசர்ச் முடியற வரைக்கும் எதுவும் சொல்ல வேண்டாம்னு இருக்கேன் மச்சி.
ஏண்டா, அதுக்கும் இதுக்கும் என்ன இருக்கு. உன் தவத்தைக் கலைத்து விடுவான்னு பயமா இருக்கு.
அது இல்லடா என நைட்ரஸ் ஆக்சைடு கூத்தை சொல்ல நண்பன் குலுங்கி குலுங்கி சிரித்தான்.
தவத்தைக் சொன்னாக் கூட ஒண்ணும் பண்ணாம சும்மா இருந்துருவா.
அப்புறம்..
அந்த கையும் வாயும் சும்மாவே இருக்காது. அவளை பார்க்கும் போதெல்லாம் நான் முறைச்சு பார்த்துட்டு இருக்கும் போதே 2-3 மணி நேரத்துக்கு ஒரு நேரம் வந்து எதாவது என்னை கடுப்பேத்த பண்ணுவா. லவ் சொன்னா அப்புறம் நான் எல்லாம் பண்றேன் நீ சேர் போட்டு உட்கார்ந்து என்ன பண்ணனும் மட்டும் சொல்லுன்னு வந்து நிப்பா மச்சி..
உனக்கு தேவை தான் மச்சி. எத்தனையோ பேரை நீ நினைச்ச மாதிரி நடந்துக்கலைன்னா திட்டுவ, இப்ப பாரு. உனக்கு தேவை தான் மச்சி. ஹா ஹா ஹா...
டேய் என்ன பண்ண..?
நாம நம்ம பிளான் படி எல்லாம் ட்ரை பண்ணுவோம்.
டேய் இன்னொரு விஷயம், எல்லாம் அவளுக்கு தெரிஞ்சதால, அய்யோ என் வாழ்க்கை போச்சேன்னு அழுது புலம்பி எதாவது பண்ணுவா..
புரியல..
திரும்பவும் சொன்னான். அந்த கோர்ட் மேரேஜ் ஆபிசர்கிட்ட கொஞ்சம் கடைசியா சொன்ன விஷயத்தை பேசிடுடா பிளீஸ் என்றான் வளன்.
சரிடா மச்சி என ஃபோன் கட் செய்தான் லாயர். காலையிலேயே என்ன இவ்ளோ சிரிப்பு என்ற மனைவியிடம் வளன் சொல்லிய விஷயங்களை சொன்னான் லாயர்.
நானும் கோர்ட்டுக்கு வரவா?
எதுக்கு..?
சாட்சி கையெழுத்து போட..
இன்னைக்கு அது தேவையில்லை. ஜஸ்ட் எல்லா தகவலும் கொடுக்கணும். அவங்க ஒரு பப்ளிக் அறிவிப்பு ஒண்ணு போடுவாங்க, 30 நாளைக்கு பிறகு தான் மேரேஜ் ரிஜிஸ்டர் பண்ணனும்.
பரவாயில்லை நானும் வரேன்.
ஏன் அந்த பொண்ண பார்க்கணுமா?
ஆமா, வளன ஆட்டிப் படைக்க போகும் அந்த பொண்ண பார்க்கணும் என்றாள் லாயரின் மனைவி. அவள் வளனுடன் 12 வது வரை ஒன்றாக படித்தவள்.
குளித்து முடித்தாள், பாத்ரூம் உள்ளிருந்தே தன் அப்பாவுக்கு அழைத்து வளன் ஃபோன் பேசியதை உறுதி செய்தாள்.
மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான் கெமிக்கல் மண்டையன் மாட்டிக்கிட்டான் என சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள்.