Romance வித்யா வித்தைக்காரி(நிறைவுற்றது)
#62
வித்யா வித்தைக்காரி
【32】

வயிற்றை சுத்தம் செய்தவள் "ஷப்பா இப்பதான் ஃப்ரீயா இருக்கு" என சத்தமாக சொல்லிக் கொண்டே வெளியே வந்தாள்.

அதைக் கேட்டவன் உள்ளுக்குள் சிரித்தான். வெளியில் முறைத்துக் கொண்டே..

இப்பதான் லாயர் கிட்ட பேசினேன். உன்கிட்ட அட்ரஸ் ப்ரூஃப் என்ன இருக்கு அதை கொஞ்சம் எடு. அப்புறம் பாஸ்போர்ட்‌ சைஸ் போட்டோ இருக்கா என தேவையான டாக்குமெண்ட்ஸ்களை சரி பார்த்தான். ஷார்ப்பா 11 மணிக்கு கிளம்பணும் என சீரியஸ் முகத்தை வைத்துக் கொண்டே சொன்னான்.

ஆனால் உள்ளுக்குள் டிவோர்ஸ் வேணாம்னு சொல்லு விது பிளீஸ் பிளீஸ் என கெஞ்சினான். வளன் சொன்னதுதைக் கேட்ட வித்யாவின் முகம் சோகமாக மாறியது. இருந்தாலும் அவன் கேட்டது ஒரு விஷயமே இல்லை என்பதைப் போல அவனிடம் பேசினாள்.

உங்ககிட்ட லாஃபிங்க் கேஸ் இருக்கா?

வாட்?

அதாங்க சிரிப்பு கேஸ்..

இருக்கு..

எனக்கு குடுங்க..

உனக்கு எதுக்கு அது..

டிவோர்ஸ் பேப்பர்ஸ் கையெழுத்து போட்டுட்டு வீட்டுக்கு வந்த பிறகு எல்லார்கிட்டேயும் எதுவும் நடக்காத மாதிரி சிரிச்சு பேசணுமே, அதான்..

இடியட் அதுக்கெல்லாம் யூஸ் பண்ணககூடாது.

உங்க பொண்டாட்டியா கடைசி ஆசை, குடுக்க போறீங்களா இல்லையா என உரிமையாக கேட்டாள்.

இப்ப கூட எப்படி எந்த கவலையும் இல்லாத மாதிரி நடிக்குறா என புலம்பிக் கொண்டே அவனது லேப் அறைக்குள் நுழைந்தான். அவன் நண்பர்கள் பிஎச்டி முடித்த போது கிண்டல் செய்யும் நோக்கில் இனியாவது கொஞ்சம் சிரி என சொல்லி வாங்கிக் கொடுத்த நைட்ரஸ் ஆக்சைடு இருந்த வாட்டர் பாட்டில் சைஸ் கண்டெய்னர் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

என்னை விட உங்களுக்கு தான் லாஃபிங்க் கேஸ் முக்கியமா தேவை என்று சொல்ல என்னடி திமிரா பேசுற என அவளை நெருங்கினான்.

மறு நிமிடம் அய்யோ அம்மா, அத்தை என்ன காப்பாத்துங்க மாமா என்ன காப்பாத்துங்க என ஒரே சத்தம். வாசு, வள்ளி, வேலைக்காரி மூவரும் ஹாலுக்கு வந்தனர்.

"எவ்ளோ திமிரு உனக்கு, உன்னை என்ன பண்றேன் பாரு" என மாடிப்படிகளில் வித்யாவின் கையைப் பிடித்து வளன் தரதர வென இழுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

மாமா காப்பாத்துங்க என பரிதாபமாக கையை நீட்டினாள் வித்யா..

வேலைக்காரி தம்பி விட்ருங்க தம்பி என்று சொல்ல..

வள்ளி டேய் அவளை விடுறா என்று கத்த..

டேய் உன்ன என லுங்கியை மடித்து கட்டிக் கொண்டு வாசு மாடிப்படிகளில் ஏற..

சத்தம் கேட்டு திரும்பிய வளன் 32 பல்லும் தெரியும் அளவுக்கு சிரித்தான்...

தன் மகனைப் பார்த்த வாசு மாடிப்‌படியில் ஏறுவதை நிறுத்தினார். அவர் பின்னால் ஓடி வந்த வள்ளி "ஏங்க எதாவது பண்ணிடப்‌ போறாங்க, காப்பாத்துங்க" என கத்தினாள்.

நீ வா என வள்ளி கையைப் பிடித்தார் வாசு. வித்யாவுக்கு கை வலித்தது. அம்மா கை வலிக்குது என்று சொல்ல அவள் கைகளை விட்டான் வளன்.

வள்ளி தன் கணவனின் கையை உதறிவிட்டு, பதறிப் போய் வித்யாவின் கைகளைப் பிடித்தாள். வள்ளி கண்களில் கண்ணீர்.

என்னாச்சு வித்யா..

ஒண்ணுமில்லை அத்தை.

"என்னடா பண்ணுன அவளை" என வளனை பார்த்து மீண்டும் கத்தினாள் வள்ளி. வள்ளி வளனை திட்ட திட்ட எல்லா பல்லும் தெரியும் படி வளன் சிரித்தான். அதைப் பார்த்த வித்யாவும் அவனைப் பார்த்து சிரித்தாள்.

வள்ளிக்கு ஓரளவுக்கு எல்லாம் புரிந்தது. உனக்கு விளையாடுறதுக்கு ஒரு அளவில்லையா என வித்யா கன்னத்தில் பளார்ரென ஒரு அறை கொடுத்தாள்.

வளனைக்கூட ஒரு நாளும் இதுவரை கை நீட்டி அடிக்காத வள்ளி வித்யாவை அறைந்ததை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.

வித்யாவை அடித்த வள்ளி ஷோபாவில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். வாசு அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்.

வித்யா மன்னிப்பு கேட்டாள்.

நீ என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா உயிரே போற மாதிரி காப்பாத்துங்கன்னு மட்டும் கத்தாதே என்று வித்யாவை கட்டிப் பிடித்து அழுதாள் வள்ளி.

சிறு வயதிலியே தாயை இழந்த வித்யாவுக்கு வள்ளியின் வலி  பெரிதாக புரியவில்லை.

உன்னை அவ பொண்ணு மாதிரி நினைக்குறா அதனால தான் தாங்க முடியாமல் அடிச்சுட்டா, மன்னிச்சுடும்மா என்றார் வாசு.

தப்பு என் மேல தான மாமா என சொல்லிய வித்யா கண்ணிலும் கண்ணீர்.

கண்களில் சோகம், உதட்டில் புன்னகையுடன் அவர்கள் மூவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் நைட்ரஸ் ஆக்சைடை சுவாசித்திருந்த வளன்.
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【32】 - by JeeviBarath - 30-03-2024, 04:08 PM



Users browsing this thread: 2 Guest(s)