30-03-2024, 03:58 PM
வித்யா வித்தைக்காரி
【31】
【31】
என் ஆளுதான் கனவுல வந்தான் போதுமா..
உனக்கு லவ்வர் வேற இருக்கானா?
உங்களுக்கே இருக்கும்போது எனக்கு இருக்கக் கூடாதா..
அதென்ன உங்களுக்கே..
சும்மா டிஸ்டர்ப் பண்ணாம போங்க, நான் என் ஆள பார்க்கணும் என போர்வையை எடுத்து தலையை மொத்தமாக மூடிக்கொண்டாள்...
இன்னைக்கு டிவோர்ஸ் பேப்பர்ஸ் ஃபைல் பண்ணிடுவோம்னு உன் ஆளுகிட்ட சொல்லிடு என எழுந்து காலைக்கடன்களை முடித்து ஜாக்கிங் சென்றுவிட்டான்.
அத்தை பூஸ்ட் என சொல்லி அது ரெடியாகும் வரை பேப்பர் படித்துக் கொண்டிருந்த வாசுவையும் வள்ளியையும் தன்னால் முடிந்த அளவுக்கு கிண்டல் செய்தாள்.
ஏய் வித்யா இங்க கொஞ்சம் வாயேன் என வாசு கூப்பிட அவரின் அருகில் உட்கார்ந்தாள். கையில் பூஸ்ட் கப்புடன் வள்ளி ஹாலுக்கு வந்தாள். ஜாக்கிங் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த வளன் வித்யாவை முறைத்துக் கொண்டே சென்றான்.
வள்ளி : என்னடி பண்ணுன, இப்படி முறைச்சுட்டு போறான்...
அதுக்கு புள்ளைய பெத்துருக்கணும்..
ஏய்!
சிரிக்கத் தெரிஞ்ச புள்ளைய பெத்துருக்கணும்னு சொன்னேன்.
என்னால முடியலை. நீ அவனை மாத்துறது..
வாசு : அதுக்கு மருமக கையில லாஃபிங்க் கேஸ் எடுத்துட்டு தான் சுத்தணும்...
செஞ்சுட்டா போச்சு..
சரிம்மா. வளன விடு.. உனக்கு அடுத்து படிக்க ஆசை இருக்கா...
சும்மா ஜோக் அடிக்காதீங்க மாமா.
கேட்டதுக்கு பதில் சொல்லு..
நான் பாஸ் ஆக மாட்டேன். பாஸ் ஆனா பார்க்கலாம் என பாதி கப் பூஸ்ட் குடித்தவளின் வயிறு கலக்க மீதியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு ஓடிவிட்டாள்.
ஃபெயில் ஆகிடும்னு சொன்னவகிட்ட படிக்கிறியான்னு கேட்கிறீங்க..
வாசு சிரித்துக் கொண்டே வேலைக்காரி இவர்களை பார்கிறாளா என்பதைப் பார்த்தார். வள்ளி உன் காதை குடு என சொல்லி விஷயத்தை சொல்ல, அதைக் கேட்ட வள்ளி அதிர்ச்சியில் வாயடைத்துப் போனாள்.
வித்யா மற்றும் சீனியை ஐஸ் கிரீம் பார்லரில் பார்ப்பதற்கு சற்று முன்னர் பேப்பர் சேஸிங் தொடர்பாக ஒருவரை சந்தி்த்தார் வாசு..
நீங்களா இப்படி என்பதைப் போல அதிர்ச்சியில் பார்த்தாள் வள்ளி.
அவன் ரிசர்ச்க்காக லண்டன் போனா அவளுக்கு விசா உடனே கிடைக்குமான்னு தெரியலை. பாஸ்போர்ட் அவகிட்ட இருக்காது. கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ணனும்.அதுக்கு பிறகு தான் பாஸ்போர்ட் எடுக்க முடியும்.
எல்லாத்தையும் விட முக்கியமா அவள கூட்டிட்டு போவானான்னு தெரியலை. வீட்டுல இருந்தா அவளுக்கு வெறுப்பாக இருக்கும் அதனால தான்..
பார்த்து. ரொம்ப தான் மருமக மேல அக்கறை. மாமியார் வாய் விட்டு கேட்டு மூணு நாள் ஆச்சு ஒண்ணயும் காணோம் என கன்னத்தில் கிள்ள வேலைக்காரி அதைப் பார்த்து சிரித்து விட்டாள்.
இது எப்பத்துல இருந்து எனபதைப் போல வள்ளியைப் பார்த்தார் வாசு..
அய்யோ சாரி சாரி என்னை மன்னிச்சுருங்க..
கிழவிக்கு இளமை துள்ளி விளையாடுது போல, இன்னைக்கு அடக்குறேன்...
அது நடக்காது என வாசு காதில் கிசுகிசுத்தாள் வள்ளி..
வித்யா அவசர அவசரமாக மாடிக்கு ஓடும்போது வளன் தன் பள்ளிக்கால தோழனிடம் பேசிக் கொண்டிருந்தான். அந்த நண்பர்தான் இன்று வித்யா மற்றும் வளன் சந்திக்க போகும் வக்கீல். ஏற்கனவே வளன் கேட்டுக் கொண்டபடி எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். டேய் சொன்னது நியாபகம் இருக்கட்டும், எதுவும் பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்று சொல்லி முடித்தான் வளன்.