Gay/Lesb - LGBT கொழுஞ்சிப்பூ - ஆண்களின் அந்தரங்க கதை
#17
செங்கண்ணன் பண்ணையபுரம் வந்து சேர மறுநாள் மதிய வேளை ஆகிவிட்டது. வழியில் தேவேறுபாளையத்தில் அவர்கள் கம்மங்கூழை குடித்துவிட்டு திருப்தியாக வந்திருந்தார்கள். சிவசோமணும் செங்கண்ணனும் கீழக்கரை வீதியில் இறங்கிக் கொண்டார்கள். மாட்டு வண்டி ஒட்டி வந்தவன் பொருள்களை எல்லாம் செங்கண்ணன் குடிசையில் வைத்துவிட்டு வண்டியை ஓட்டிச் சென்றான்.
செங்கண்ணன் ஒரு இளைஞனுடன் வந்து இறங்கியதே கண்ட அருகில் உள்ள வீட்டில் எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள். செங்கண்ணிடம விசாரித்தார்கள். அதில் பக்கத்து வீட்டுக்கார சின்ன ஒருத்தி ரெட்டை சடையை போட்டுக் கொண்டு விடுப்பில் வெறும் பாவாடையோடு புதிதாக வந்த சிவசுமணியின் ஆசிரியத்தோடு பார்த்தாள். சிவசாமி அரைடவுசரைப் போட்டுக்கொண்டு அவளைப் போலவே மேலாடை இல்லாமல் இருப்பதை கண்டதும்.. இவன் நம்ம இனம் என்று அவளுக்கு தோன்றியிருக்கும்.

ஒரு வயதான கிழவியிடம் "ஆத்தா போய் வந்து அலுப்பு இன்னும் தீரல நம்ம வீட்டுல ஒரு தூக்கத்தை போட்டுட்டு பிறகு வாரேன்" என்று செங்கண்ணன் அவர்களை விட்டு விலகி வந்தார்.
சிவசோமனுக்கு அந்த குடிசை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. ஆடை வாங்கி தருவதாகவும், விதவிதமாய் தின்பண்டங்கள் வாங்கி தருவதாகவும் அல்லவா இவர் சொல்லி நம்மை கூட்டி வந்தால் அத்தனையும் பொய்யான பேச்சுகளா?. அத்தனை வசனங்களை பேசிய செங்கண்ணன் ஒரு சாதாரண குடிசையில் வசிக்கக்கூடிய நபரா என்று வியந்தான். அதனை எவ்வாறு செங்கண்ணிடம் கேட்பது என சிவசோமனுக்கு புரியவில்லை.

"என்னங்க சின்னையா ஏழை குடிசையை பார்த்ததும்.. என்னங்கன கூட்டிட்டு வந்து இருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா?"
"ஆமாங்க மாமா நீங்க நிறைய தின்பண்ட எல்லாம் தரீங்கன்னு சொன்னீங்க.. நாம் பெரிய பங்களா வீடாட்டும் இருக்கணும்னு நினைச்சேன்"
"எனக்கும் ஆசைதான் சின்னையா பெரிய பங்களாவுல இருக்கனுமுனு. அதெல்லாம் நடக்குமா.. இப்பவே உங்கள கொண்டு போய் பங்களாவுல விடனும்னு எனக்கு ஆசைதான். ஆனா உடனே பங்களாவுக்கு போக முடியாதில்ல பண்ணையாடியைப் பாத்து பேசிட்டு வரேன். அவர் எப்ப வர சொல்றாரோ அப்போ உங்களை கூட்டிட்டு போறேன். உங்களுக்கு இங்க வேலை இல்ல.. இந்த ஊர்ல இருக்கிற பெரிய பண்ணையாடி பங்களாவுல.. எப்படியும் சீக்கிரம் பாக்க போறீங்க."
"அப்ப நீங்க பண்ணையாடி இல்லையா" என்ற வெகுளியாக.. செங்கண்ணனுக்கு சிரிப்பாக வந்தது
"அடடா நீங்க அப்படி புரிஞ்சிக்கிட்டீங்களா.. நான் இந்த கிராமத்தில் இருக்கக்கூடிய சாதாரண ஆளுங்க தம்பி. ஆனா எங்க பண்ணையாரு அப்படி இல்லை. ஏகப்பட்ட நிலப்புலம் அவருக்கு.. தொழுவத்திலேயே 25 எருமை மாடு இருக்குதுன்னா பாத்துக்கோங்களேன். இப்ப இங்கன கடந்து உறங்குங்கள். நான் சாயந்திரம் போய் பண்ணையறிய பார்த்துட்டு.. உங்களை எப்ப கூட்டிட்டு போறதுன்னு சொல்றேன். மனச போட்டு குழப்பிக்கிட்டு கிடக்காதீங்க எல்லாம் நல்லது தான் நடக்கும். நீங்க மறுபடி அந்த ஊருக்கு போகும் போது பெரிய பண்ணையாடியா தான் போக போறீங்க" இன்று அவருடைய ஆறுதல் மொழிகளை கூற.. சிவசாமனுக்கு இதுவரை இழந்த குழப்பங்கள் எல்லாம் பட்டென பறந்தது போல இருந்தது.‌
***
செங்கதிர்களை வீசிக்கொண்டு சூரியன் மேற்கு பக்கமாக மறைய தொடங்கும் வேளையில்.. இரட்டை ஏரியின் வடபுறம் உள்ள தென்னந்தோப்புக்கு செங்கண்ணன் மிதிவண்டியை மிதித்துக் கொண்டு சென்றார். இன்னும் சற்று நேரத்தில் இருள் சூழ்ந்து விடும் என்பதனால் கண்டிப்பாக பண்ணையாடி அங்கு தான் இருப்பார் என்பது செங்கண்ணனுக்கு நன்றாக தெரியும்.

மிதிவண்டியை தென்னந்தோப்பு தொடங்கும் இடத்திலேயே நிறுத்திவிட்டு ஓட்ட முன்னாடி தென்னந்தோப்பில் இருந்த குடிசைக்கு அருகே சென்றார்.
“வணக்கங்க” என சத்தமாக சொன்னார் சின்ன செங்கண்ணன். குரல் வந்த திசையில் அந்த ஊரின் பெரும் பண்ணைகாரர்களில் ஒருவரான மேத்யூ. ஜோசப் மேத்யூ அவரைப் பார்த்து திரும்பினார். தீவிரமான சமயப்பற்று உள்ளவர். நெடுநெடுவென உயர்ந்த உருவம். தும்பைப் பூ போல துவைத்த வெள்ளை அங்கி. பரிசுத்தமான ஜபமாலை, கழுத்தில் நீண்டு தொங்கிக் கொண்டிருந்த மாலையில் ஏசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார். எப்படியும் மேத்யூ வித் 45க்கு மேல் வயதிருக்கும். அவர் ஏறக்குறைய சாமியார் போல அங்கு திரிந்து கொண்டிருந்தார். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எண்ணற்ற பெண்கள் அவருடைய தோட்டங்களிலும் பண்ணைகளிலும் வேலை செய்தாலும் ஒருவரை கூட மேத்யூ ஏரெடுத்து பார்த்ததில்லை.

இத்தனை பெரும் செல்வமும் பெரும்புகலும் உள்ள குடும்பத்தில் பிறந்துவிட்டு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது அவருடைய வீட்டில் பெரிய விஷயமாகவே இருந்து வந்தது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லாத ஒருவராக மேத்தியு வளம் வந்து கொண்டிருந்தார்.

“கர்த்தருக்கு தோத்திரம். உன்கிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன்.. தோத்திரமுனு சொல்லிப் பழகுனு. எப்ப பாரு வணக்கம் வணக்கமுனு” என கடிந்து கொண்டார் ஜோசப் மேத்யூ.
தலையை சொறிந்து கொண்டு.. “டக்குனு வணக்கம் தான் பண்ணையாடி வருது...” என வழிந்தார் சின்ன செங்கண்ணன்.
“சரிசரி… உன்னையெல்லாம் திருத்த முடியாது. யாருக்கோ சடங்குன்னு போனீங்க போன வேலை எல்லாம் நல்லா முடிஞ்சுதா?"
"சடங்கு நல்லபடியா முடிஞ்சிடுச்சு பண்ணையாடி... எல்லாம் உங்க தயவு. வேலைக்கு ஆள் கேட்டிருந்தீங்கள்ள.. புதுப் பையனை கூட்டி வந்திருக்கேன். நம்ம ஊரு பையன். நல்ல பையன். நல்ல பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவன்.“
"அப்படியா.. போன தடவை ஒரு பையனை கூட்டிகிட்டு வந்து இருந்தியே.. ஒரு வாரம் தாங்கல.."
"இப்ப அப்படி அப்படி இல்ல பண்ணையாடி. இவங்க பரம்பரையா புலிகுத்தி பரம்பரை என்று தான் சொல்லுவாங்க அவ்ளோ வீரம் நிறைந்த பாரம்பரியத்தில் இருந்து வந்தவன். எதுக்கு அஞ்ச மாட்டான். பையனுக்கு சூதுவாது தெரியாது மத்தபடி சொல்லிக் கொடுத்தோமுன்ன சாமி.. சட்டுனு புரிஞ்சுக்குவான். நல்ல கற்பூர புத்தி பையனுக்கு.."
"அது என்னய்யா புலிகுத்தி பரம்பரை"
"பண்ணையாடி... புலி குத்தினா.. காட்டுல இருந்து புலி ஊருக்குள் வரும் போதை அதை எதிர்த்து சண்டை போட்டு வீரமரணம் அடைஞ்சவங்க. அந்த ஊர்ல அவங்க தாத்தாவுக்கு நடுகல் கூட இருக்குதுங்க"
“அடடா.. கேட்கவே நல்லா இருக்குயா.. செங்கண்ணா.. இந்த தடவை சோடை போகலன்னு நினைக்கிறேன்.‌ பையனைப் பார்க்கனுமே. எங்க இருக்கான்?. கூட்டி வந்திருக்கியா”
“நம்ம குடிசையில இருக்கான் பண்ணையாடி. கூட்டிக்கிட்டு வரட்டுமா.”
“இப்ப வேண்டாம். நீ காலையில நம்ம கத்திரிக்காய் தோட்டத்துக்கு தண்ணி எடுத்து வருவேயில்ல.. அப்ப அங்க கூட்டிக்கிட்டு வந்திடு” என்றார்.

ஆனால் செங்கண்ணன் அந்தப் பதிலைக் கேட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
"என்ன செங்கண்ணா.. அதான் சொல்லிட்டேன்ல.."
"வந்து.. வந்து.. "
"எப்பயுமே காரியத்திலேயே கண்ணா இருக்கிறது. அதனாலதான் உனக்கு செங்கண்ணன் என்று பெயர் வைத்துவிட்டார்கள் போல.. என்ன வேணும் பணம் தானே? உன் பையன பார்த்துட்டு அதுக்கு தகுந்த போல தான் பணம் தருவேன் ஆளு ஆளுக்கு பணம் தர வழக்கம் என்னிடம் இல்லை. பையனோட பழக்கவழக்கம் எப்படி நடவடை எப்படி எல்லா விஷயத்தையும் நான் கண்ணால பாக்கணும்."
“சரிங்க ஐயா. முன்பணம் ஏதாவது கொடுத்தீங்கன்னா பசனுக்கு ஏதாவது ஒன்னு ரெண்டு சட்டை எடுத்து கொடுத்து புள்ளைய கொஞ்சம் ரெடி பண்ணி எடுத்துட்டு வருவேன். ” வெள்ளைச்ச ஜிப்பாவிற்குள் கையை விட்டு துலாவி இரண்டு பச்சை நிற 100 ரூபாய் தாள்களை செங்கண்ணனிடம் நீட்டினார் மேத்யூ..
"பண்ணையக்காருனா.. பண்ணையக்காரக தான்" என பணத்தை வாங்கிக் கொண்டு செங்கண்ணன் விடைபெற்றார்.

***
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: கொழுஞ்சிப்பூ - ஆண்களின் அந்தரங்க கதை - by sagotharan - 28-03-2024, 09:30 PM



Users browsing this thread: 2 Guest(s)