Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
யாரவது ஹிந்திய வெறுக்கறன்னு கமன்ட் பண்ணா நீக்கிடுவேன்.! கோபப்பட்ட வைஷ்ணவி.!


[Image: Vaishnavi-2-696x392.jpg]

பிக் பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் பெரும் புகழையும் ஏற்படுத்தி தந்துள்ளது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பார்வையாளர்களால் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு பின்னர் தனது பெயரை படு டேமேஜ் செய்து கொண்டவர் வைஷ்ணவி தான்.

பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக ஆர் ஜேவாக இருந்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. வைஷ்ணவி, அஞ்சான் ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்துவந்தார் . அஞ்சான், விமான ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்தனர்
இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக லிவிங் டுகேதார் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வைஷ்ணவி தனது நீண்ட வருட காதலரான அஞ்சானை திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைஷ்ணவி.மேலும் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டார் வைஷ்ணவி.
[Image: Vaishnavi-1.jpg]
அந்த வீடியோவில் இருவரும் கேக்கை மாறி மாறி ஊட்டிவிட அவர்கள் அருகில் இருந்தவர்கள் இந்தியில் ஏதோ பேசுகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு கடுமையாக வலுத்து வருகிறது. இதனை நன்றாக புரிந்துகொண்டுள்ள வைஷ்ணவி, இந்த பதிவில் ‘யாராவது கமெண்டில் ”இந்தியை வெறுக்கிறேன்'(i hate hindi ) என்று பதிவிட்டால் அதனை நான் கண்டிப்பாக டெலீட் செய்து விடுவேன்.
நானும் இந்தி தினிப்பிற்கு எதிரானவள்தான். ஆனால், வேறு ஒரு மொழியைப் பேசுவதில் எந்த தவறும் இல்லை. என்னுடைய குடும்பத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று அனைத்தையும் பேசுவார்கள். ஒரு மொழியை விட மற்றொரு மொழி சிறப்பானது அல்ல. ஆனால், மக்களை தெரியாத மொழியை பேச வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தான் தவறு. வாழு வாழ விடு என்று பதிவிட்டுள்ளார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 19-06-2019, 09:24 AM



Users browsing this thread: 2 Guest(s)