Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
திரை விமர்சனம்: சுட்டுப் பிடிக்க உத்தரவு
[Image: 8c01e52aP2349612mrjpg]

விக்ராந்தின் மகள் காது கேட்காத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறன் குழந்தை. அவளது அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால், நண்பர் சுசீந்திரன் மற்றும் இருவருடன் சேர்ந்து ஒரு வங்கியில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்புகிறார் விக்ராந்த். இவர்கள் 4 பேரையும் காவல் உயர் அதிகாரி மிஷ்கின் தனது போலீஸ் பட்டாளத்துடன் துரத்து கிறார். கொள்ளையரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட, எஞ்சிய மூவரும் அருகே உள்ள குடியிருப்புக்குள் புகுந்துவிடுகின்றனர். அவர்களை சிறப்பு கமாண்டோ படை, ராணு வம் சுற்றிவளைக்கிறது. நெரிசலான குடியிருப்புக்குள் கிளைமாக்ஸ் வரை போக்கு காட்டும் கொள்ளை யர்கள் போலீஸிடம் பிடிபட்டார்களா? விக்ராந்த் குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்ததா? அந்த குடி யிருப்புக்குள் உண்மையிலேயே பின்னப்படும் சதிவலைகள் என்ன? அதை மிஷ்கின் எவ்வாறு கிளை மாக்ஸில் அவிழ்க்கிறார் என்பது மீதிக் கதை.
ஆங்கில ஆக்சன் திரில்லர் படப் பாணியில் தமிழில் ஒரு படம் கொடுக்க இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா முயற்சித்திருக்கிறார். அதற் கேற்ப, தொடக்கக் காட்சிகளும் பரபரப்பாக இருக்கின்றன. அதன் பிறகு லாஜிக் பற்றிய கவலையே இன்றி கட்டமைக்கப்பட்ட காட்சி அமைப்புகளும், சுவாரஸ்யமின்றி திரைக்கதை சொதப்பலாக நகர்வதும் ஒரு கட்டத்தில் ஆயாசத்தை தரு கிறது. கொள்ளையருக்கும், போலீ ஸாருக்கும் இடையில் பொழுது போக்கர்கள்போல வந்துசெல்லும் போராளிகள், பெண் பத்திரிகை யாளர் (கதாநாயகி) ஆகி யோர் திரைக்கதைக்குள் நுழைக் கப்பட்டதே வீண் என்று தோன்று கிறது.
ஆரம்பத்தில் இருந்து கிளை மாக்ஸ் வரை போலீஸாரும், கொள்ளையரும் மாறி மாறி சுட்டுக்கொண்டு, படத் தலைப்புக்கு நியாயம் சேர்க்கிறார்கள். கொள்ளை யரை போலீஸார் துரத்தும் சேஸிங் காட்சிகள் ஓரளவு நன்றாக எடுக் கப்பட்டுள்ளன. 
காவல் அதிகாரியாக கனத்த உடலுடன் உருட்டி மிரட்டி நடித் திருக்கிறார் மிஷ்கின். அதிரடி யாக கொள்ளையருடன் சண்டை போடுகிறார். விக்ராந்த் பொருத்த மான தேர்வு. நாயகி அதுல்யா ரவியும் பளிச்சென பார்வையாளர்களை ஈர்க் கிறார். முதல்முறையாக நடித்திருக் கும் இயக்குநர் சுசீந்திரனும் தேறி விடுகிறார்.
படத்தின் மிகப்பெரிய ஆறுதல், பாடல்கள் ஏதுமற்ற பின்னணி இசை. அதை திறம்பட வழங்கியிருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். அதேபோல ஓர் ஆக்சன் திரில்லர் கதைக் களத் துக்கு தேவையான துடிப்பான ஒளிப்பதிவை சாத்தியமாக்கித் தந் திருக்கிறார் சுஜித் சாரங். சண்டை மற்றும் ஆக்சன் காட்சிகளை ஈர்க் கும் வகையில் வடிவமைத்த தினேஷ் காசியின் பங்களிப்பும் படத்தை தாங்கிப் பிடிக்கிறது.
மிஷ்கின் ஆபரேஷனின் மர்ம முடிச்சுகள் அவிழ்கிற கிளைமாக்ஸ் காட்சி, பார்வையாளர்களிடம் ஒரு வித ஆச்சரியத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, ‘இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா!’ என்று பெருமூச்சு விடவைக்கிறது.
மாறுபட்ட ஆக்சன் கதை, ஈர்க்கும் விதமான டைட்டில், பரபரப்பான தொடக்கம் ஆகிய நல்ல அம்சங்கள் கையில் இருந்தும், திரைக்கதையில் இயக்குநர் கோட்டைவிட்டதால், பார்வையாளர்களின் மனதைப் பிடிக்க தவறிவிடுகிறது படம்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 19-06-2019, 09:17 AM



Users browsing this thread: 3 Guest(s)