Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது?

சிறைக்குப் போனதற்காக... அல்லது பழிவாங்குவதற்கா எனத் தெரியவில்லை சசிகலா, இளவரசி பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
[Image: 159928_thumb.jpg]
ஜெயலலிதா வாக்களிக்கும் ஸ்டெல்லா மாரீஸ் வாக்குச் சாவடியில் பணியாற்றிய முகவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ``சசிகலாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்கள்'' என்கிற தகவலை பேச்சின் ஊடே, சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
சசிகலா வாழ்க்கையின் பெரும்பகுதி போயஸ் தோட்டத்தில்தான் கழிந்தது. ஜெயலலிதா, அ.தி.மு.க-வில் ஐக்கியமான காலத்தில், அவருக்கு பி.ஏ-வாக இருந்தவர் பிரேமா. அ.தி.மு.க-வின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்து, ராஜ்ய சபா எம்.பி-யாக உயர்ந்ததுவரையில் ஜெயலலிதாவுக்கு எல்லா வகையிலும் உதவிகளைச் செய்து வந்தார் பிரேமா. அப்போது, கடலூர் கலெக்டராக சந்திரலேகா ஐ.ஏ.எஸ். இருந்தபோது, அங்கே அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் எம்.நடராசன். அவரின் மனைவி சசிகலா, `வினோத் வீடியோ விஷன்' என்ற பெயரில் வீடியோ கடை நடத்தி வந்தார். ``ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளைக் கவர்செய்ய நல்ல ஒத்துழைப்பு தாருங்கள்'' என அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் சொல்ல...சந்திரலேகா மூலம் நடராசனுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. அதன்மூலம் நடராசனும் சசிகலாவும் ஜெயலலிதாவுடன் ஒட்டிக்கொண்டார்கள். இதனால் பிரேமா துரத்தியடிக்கப்பட்டார்.
[Image: 299972_18177.jpg]



இளவரசி வாக்களித்த போது...
[color][font]
சென்னை ஆழ்வார்பேட்டை, பீமன்ன கார்டன் தெருவில் வசித்து வந்த சசிகலா, 1987-ம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலேயே குடியேறினார். அன்றிலிருந்து `பழைய எண் 36. புதிய எண் 81, போயஸ் கார்டன்'தான் சசிகலாவின் முகவரி ஆகிவிட்டது. சசிகலாவின் ரேஷன் கார்டு, எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்கு என அனைத்தும் இந்த முகவரியில்தான் இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஜெயலலிதாவுடன் சசிகலாவும் வந்து, ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களிப்பார்.
சசிகலாவின் சகோதரர் ஜெயராமன்தான், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டார். அங்கே நடந்த மின்சார விபத்தில் அவர் இறந்துபோக, அவருடைய மனைவி இளவரசி சசிகலாவுடன் போயஸ் கார்டனில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அதனால் இளவரசிக்கும், ஜெயலலிதாவின் வீடுதான் நிரந்தர முகவரி ஆகிப்போனது. இருப்பிடச் சான்றிதழ் முதல் வாக்காளர் அடையாள அட்டைவரை இளவரசிக்கும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் முகவரிதான் தரப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை,  போயஸ்கார்டனில் அதிகாரம் செலுத்திவந்த சசிகலா, அவர் மறைவுக்குப் பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செலுத்த முயன்றார். முதல்வர் பதவியில் அமர ஆசைப்பட்டவர், கடைசியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குத் தள்ளப்பட்டார். எடப்பாடியும் பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு, ``ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும்'' என அறிவித்தார்கள். அதற்காக கருத்துக்கேட்பு கூட்டங்கள் எல்லாம் நடத்தப்பட்டன. சசிகலாவும், இளவரசியும் சிறைக்குப் போனபிறகு போயஸ் கார்டனில் இப்போது யாரும் வசிக்கவில்லை.
ஜெயலலிதா இறந்த பிறகு அவரின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அப்போதுகூட சசிகலா, இளவரசி மற்றும் கார்டனில் தங்கிப் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தன. கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதுதான் சசிகலா, இளவரசி ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.
[/font][/color]
[Image: 01_18393.jpg]

சசிகலா மற்றும் பணியாளர்கள் பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்...
[color][font]
ஜெயலலிதா இருந்தபோது சமையல்காரர், வாட்ச்மேன், தோட்டக்காரர், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என 15 பேர் போயஸ் கார்டன் வீட்டில் வசித்தார்கள். ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கடந்தும் தொடர்ந்து அங்கே வசித்தார்கள். அதன்பிறகுதான் அவர்கள் வெளியேறினார்கள். ஜெயலலிதா உட்பட கார்டனில் வசித்தவர்களுக்குச் சமைத்துப் போட்டவர் ராஜம்மாள். 74 வயதாகும் ராஜம்மாள், பல வருடங்களாக கார்டனிலேயே தங்கி சமையல் வேலை செய்துவந்தார். மணி என்பவரின் மகள் லட்சுமி, ஜெயலலிதாவின் சுற்றுப்பயணங்களில் அவரின் உதவியாளராக உடன் சென்றவர். தேர்தல் பிரசாரம் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்றபோது, அவருடன் லட்சுமியும் பயணம் செய்வார். கண்ணன், சுரேஷ்குமார், மற்றொரு சுரேஷ்குமார், ராஜீவ், பீம்தபா, ராஜன் பிரதான், ராவ் பகதூர், பாரதிராஜ், ஆனந்தன், யோகநாத், சதீஷ், தங்கமணி, கார்த்திக் என மொத்தம் 15 பேர் கார்டனில் வசித்து வந்தார்கள். இவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜெயலலிதா இருந்தவரையில் தேர்தல்களில் வாக்களித்து வந்தார்கள். சசிகலா, இளவரசியோடு இந்த 15 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
[/font][/color]
[Image: 299897_18385.jpg]

வாக்குச் சாவடியில் ஜெயலலிதாவும் சசிகலாவும்...
[color][font]
``எந்த அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசியின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும்" என வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டோம். ``மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 62 உட்பிரிவு 5-ன் படி, சிறையில் இருக்கிற கைதிகள் மற்றும் போலீஸ் காவலில்  இருக்கிற கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்த விதியில் உள்ள விதிவிலக்குப்படி, தடுப்புக் காவலில் இருப்பவர்கள் கைதி என்கிற கட்டுப்பாட்டுக்குள் வரமாட்டார்கள். அதனால், அவர்கள் வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை. வாக்காளர் பட்டியல் ஆய்வு செய்யும்போது, சம்பந்தப்பட்ட வீடுகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அங்கே வாக்காளர்கள் இல்லையெனில் அவர்கள் பெயர்கள் நீக்கப்படலாம். அல்லது யாராவது ஆட்சேபனை அளித்து, அதன் காரணமாக வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும்'' என்றார். 
[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 19-06-2019, 09:09 AM



Users browsing this thread: 81 Guest(s)