Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[Image: chennai-college-has-been-closed-for-water-crisis.jpg]
சென்னை கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவி பெரும் பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இதில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள்.இதனிடையே சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு இந்த பள்ளியையும் விட்டு வைக்கவில்லை.தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி துறையின் முறையான அனுமதி பெற்றே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இருப்பினும் இது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில் ''இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. அதிகமான விலை கொடுத்தே தண்ணீரை வாங்கும் சூழ்நிலை உள்ளது.
அத்துடன் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கும் வசதியும் இல்லை.எனவே கீழ்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.அந்த பணியானது இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும்.அதன் பின்பு பள்ளியானது வழக்கம் போல செயல்படும்'' என தெரிவித்துள்ளனர். சென்னையின் தண்ணீர் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் சில ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.இதனிடையே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தாம்பரத்தில் உள்ள பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






'சென்னை'க்கு சோதனை மேல் சோதனை'...'பள்ளி எடுத்த அதிரடி முடிவு' ... அதிர்ச்சியில் பெற்றோர்கள் !

first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 19-06-2019, 09:07 AM



Users browsing this thread: 14 Guest(s)