Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
பீகாரில் மூளைக்காய்ச்சல் பலி: முதல்வர் மீது பொதுநல வழக்கு

[Image: Tamil_News_large_2300861.jpg]

குழந்தைகளின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் மூளைக்காய்ச்சலுக்கு குழந்தைகள் பலியான சம்பவத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள்பாண்டே, மத்திய சுகதாரம் மற்றும் குடும்பல அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி சவுபே உள்ளிட்டோர் மீது பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 26-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.


[Image: gallerye_001648318_2300861.jpg]









ஹர்ஷ்வர்தன், நிதிஷ் ஆய்வு:
முன்னதாக முஷாபர்நகர் மருத்துவமனையில் மேலும் 290 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர். பருவமழை இல்லாத நிலையில் இந்த நோய் குழந்தைகள் இடையே பரவியதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முஷாபர்நகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

தொடர்ந்து முதல்வர் நிதிஷ்குமார் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் போதிய மருந்து மாத்திரைகளை இருப்பு வைக்கவும் உத்தரவிட்டார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 19-06-2019, 08:57 AM



Users browsing this thread: 34 Guest(s)