27-03-2024, 07:07 AM
வித்யா வித்தைக்காரி
【25】
【25】
வளன் சிறு முயற்சி செய்தால் போதும் இன்று இரு உடல்களும் ஆடைகள் இல்லாமல் பின்னி பிணைந்து விடும். "அவரு யதார்த்தமா கேட்டாரு நானும் பதார்த்தமா விட்டுக் கொடுத்துட்டேன்" என்பதைப் போல எல்லாம் நடக்கும். வளனுக்கு மறுப்பு சொல்ல வாய்ப்பே இல்லை.
வளனுக்கும் டெஸ்டோஸ்டிரோன் காட்டும் வேலைகளை கட்டுப்படுத்த கடினமாக இருந்தது. மனமும் உடலும் தன் மனைவியுடன் கூடலையே நாடியது...
அவன் பார்வையே அவளின் டெஸ்டோஸ்டிரோனையும் தூண்டிக் கொண்டிருந்தது. அவள் மூச்சின் வேகம் அதிகமானது. தொண்டையில் எச்சில் இறங்க மறுத்தது. வாடா வந்து கேளுடா என்ற சொல்ல நினைத்தவளின் வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன.
தன் மனைவியை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்தான். இருவருக்கும் ஸ்லோ மோஷனில் எல்லாம் நடப்பது போல இருந்தது.
"அட நாசமா போன எடுபட்ட பயலுகளா, அதை தொட்டுடீங்க கையை வெட்டிப்புடுவேன், முத டெட் பாடி நீங்க தாண்டா" என ஃபோன் ரிங் டோன் சத்தம் கேட்டது.
காம உணர்ச்சிகளால் ஹிப்னாடிசம் செய்யபட்டது போல கடந்த சில நிமிடங்களில் செயல்பட்ட இருவரும் அந்த சத்தத்தில் இயல்பு நிலைக்கு வந்தனர்.
தன் அப்பா நேசமணிக்கு வைத்திருந்த ரிங்டோன் தான் அது. கல்யாணம் முடிந்த பிறகு அப்பாவுக்காக வைத்திருந்த ரிங் டோனை மாற்றியிருந்தாள். ஆனால் சில நாட்களுக்கு முன் தன் அத்தையிடம் பேசுவதற்காக கீழே போகும் முன் இந்த ரிங் டோன் அப்பாவுக்கு மீண்டும் செட் செய்தவள். அதை மீண்டும் மாற்ற மறந்துவிட்டாள்.
இன்று காலை வித்யா அவளது அப்பாவுக்கு அழைக்கவில்லை. குளு மணாலியில் அவர்கள் இருந்த போது அவளுக்கு கடைசியாக அவுட் கோயிங் கால் செய்த பிறகு இன்று தான் அவளை அழைத்தார்.
வளன் நிம்மதி பெருமூச்சு விட்டான். லேப் அறைக்கு செல்லும் எண்ணத்தில் திரும்பினான்.
சொல்லு நேசமணி என கொஞ்சம் கோபமாக பேசினாள் வித்யா.
தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்றார் நேசமணி. மகள் குரலில் இருந்த கோபத்தை அறிந்தவர்.
தூங்கல, ஆனா டிஸ்டர்ப் பண்ணிட்ட..
இளம் ஜோடி தூங்கல ஆனா டிஸ்டர்ப் பண்ணிட்ட என சொல்வதின் அர்த்தம் தெரியாதவரா நேசமணி. சரிம்மா அப்புறம் பேசுறேன் என அழைப்பை துண்டித்தார்.
இது (செக்ஸ்) தேவையில்லாத ஆணி என நினைத்துக் கொண்டே லேப் அறையில் நுழைந்தான். செக்ஸ் ஆசையில்லாமல் இல்லை. வித்யா அவனை நெருங்கும் நேரங்களில் அவனது டெஸ்டோஸ்டிரோன் ரொம்ப பாடாய்படுத்தி கவனத்தை சிதற வைக்கிறது.
சாரி விது, நீ பக்கத்துல வந்தாலே வேலை ஓட மாட்டேங்குது. இன்னும் கொஞ்ச நாள்தான் ஆராய்ச்சி முடியட்டும் என சத்தமாக சொன்னான். கதவு மூடியிருந்ததால் விதுவுக்கு எதுவும் கேட்கவில்லை.
அடேய் நேசமணி, தேவையில்லாத ஆணின்னு நினைச்சு தேவையான ஆணியை பிடுங்கிட்டியே என கதவுக்கு இந்த பக்கம் விது சத்தமாக வளன் காதுகளுக்கு விழாது என நினைத்து பேசினாள்.
சிறிது நேரம் கழித்து வித்யாவின் தோழி மலர் அவளுக்கு கால் செய்தாள். ஹே ஒரு வேலையா உங்க ஏரியாவுக்கு வர்றேன், உன்னால வரமுடியுமா என்றாள். மீட் செய்ய வேண்டிய ஐஸ் கிரீம் பார்லர் பெயரை சொன்னாள். வளனுக்கு கால் செய்து அனுமதி கேட்டாள். அவனும் சரியென சொல்ல வித்யா கிளம்பி சென்றாள்.
அவசர அவசரமாக ஜாலி மூடில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வாசுவுக்கு ஒரு முக்கியமான அழைப்பு வந்தது. அது ஒரு ரகசியமான சந்திப்பிற்கான அழைப்பு. சார் நேர்ல வாங்க ஃபோன்ல பேச முடியாது என்றார் எதிர் முனையில் பேசியவர். நேர்மையான பேராசிரியரை அவரது மனசாட்சிக்கு விரோதமான செயலை செய்ய வைத்திருந்தாள் விது.
இங்கே தோழிகள் இருவரும் ஐஸ் கிரீம் பார்லரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களையே கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு ஜோடி கண்கள், சார் உங்களுக்கு வாட்ஸ்ஸாப்பில் லொக்கேஷன் அனுப்பியிருக்கேன். கூடவே ஒரு பொண்ணு இருக்கா என்றது.
அடுத்த 20 நிமிடத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று 20-25 மீட்டர் தொலைவில் ஐஸ் கிரீம் ஷாப்பின் எதிர் புறம் நின்றது. நான்கு ஜோடி கண்கள் விதுவை கண்காணிக்க ஆரம்பித்தது.
விது பில் செட்டில் செய்வதை பென்ஸ் காரிலிருந்து கவனித்த கண்கள் அந்த காரிலிருந்து வெளியே வந்தது..
விதுவும் மலரும் வெளியில் வந்து கட்டிப் பிடித்து விடைபெற்றுக் கொண்டார்கள். எதிரெதிர் திசையில் பேருந்துகளை பிடிக்க வேண்டிய இருவரும் படியில் இறங்கினார்கள்...
ஹாய் வித்யா, என்ன இந்த பக்கம் என்றது பென்ஸ் காரிலிருந்து இறங்கி வந்தவரின் குரல்.
அய்யோ நீங்களா, நானும் உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்னு இருந்தேன் என்றாள் வித்யா...