27-03-2024, 01:32 AM
நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தன.. இரண்டு மூன்று நாட்களாக அப்பா அம்மா இருவரும் சரிவர பேசி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.. அண்ணனால் சரியான ஒரு முடிவினை எடுக்க முடியவில்லை.. முடிவு என்பதனை விட அவனுக்கு ஓப்பனாக இவள் தான் எனக்கு வேண்டும் என அப்பா அம்மாவிடம் கூற முடியவில்லை.. தவறு செய்து விட்டு தனக்கு இவள் தான் வேண்டும் எனக் கேட்டு வாதிடவோ சண்டை போடவோ அவன் தயாராக இல்லை.. ஆனாலும், அபர்ணா வீட்டை விட்டு சென்றதன் பின்னர் அவளுக்கு அவன் ஒரு தடவை கூட கால் பண்ணி பேசியிருக்கவில்லை.. தன்னால் அவளுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கு மன்னிப்புக் கேட்டும், எது நடந்தாலும் அதனை மனம் நோகாமல் ஏற்றுக் கொள்ளும் படியும் சில மெசேஜ்களை மாத்திரமே அனுப்பி இருந்தான்.. அதற்கு அபர்ணா ரிப்ளை அனுப்பி இருக்கவும் இல்லை.. ஆனால், லீனாவுடன் அவன் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருந்தான்.. அவற்றை அவதானித்துத் தான் அம்மாவுக்கும் அந்த இறுதி முடிவினைத் தெளிவாக எடுக்க முடிந்திருந்தது.. அந்த முடிவினை முறைப்படி அபர்ணாவின் வீட்டுக்குச் சென்று அபர்ணாவின் பெற்றோர்களிடம் நேரடியாகவே பேசி கலந்தாலோசிக்க அப்பாவும் அம்மாவும் ஆயத்தம் ஆனார்கள்.. என்னையும் அவர்களுடன் அங்கு வருமாறு கேட்டுக் கொண்டார்கள்.. ஏற்கனவே அபர்ணாவைப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்ட படியால் அந்த நாள் ஆபிசுக்கு லீவ் சொல்லி விட்டு நானும் அவளைப் பார்க்க ஆர்வமாக கிளம்பினேன்..
அப்பா அம்மா வருகிறார்கள் என்று நான் அவளுக்கு ஏற்கனவே தகவல் சொல்லி இருந்தேன்.. ஆனால், நிறைய நாட்களுக்குப் பின்னர் என்னைத் திடீரென காணும் போது அவளது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதனை காணும் ஒரு அற்ப ஆசையில் சர்ப்ரைஸாக இருக்கட்டுமே என்று நானும் வருகிறேன் என அவளிடம் சொல்லவில்லை..
என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனப் பயந்து பயந்து நெஞ்சம் படபடக்க ஒரு வழியாக அவளது வீட்டினை அடைந்தோம்.. அபர்ணாவின் அப்பா எல்லோரையும் உள்ளே அழைக்க நாங்களும் உள்ளே சென்று அமர்ந்தோம்.. ஆனாலும், அபர்ணா ரூமை விட்டு வெளியே வரவில்லை.. ஒரு வேளை அவளது அப்பா அம்மா அவளை வெளியே வர வேண்டாம் எனக் கூறி இருப்பார்களோ என்னவோ.. எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.. இவ்வளவு நாளைக்குப் பின்னர் அவளைப் பார்க்கலாம் என்று ஆசை ஆசையாக ஓடி வந்தால் இவள் இப்படி பண்ணுகிறாளே என்று மனம் நொந்துகொண்டேன்..
பயங்கரமாக சண்டை போட்டு நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த இரண்டு குடும்பங்கள் மீண்டும் சந்திப்பதனைப் போல ஒருவருக்கொருவர் பேசாமல் ஒருவர் மாறி ஒருவர் முகத்தினைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்..
அப்பா தான் தயங்கித் தயங்கி தான் கூற வந்திருக்கும் விடையத்தினைக் கூற ஆரம்பித்தார்..
"எல்லோரும் எங்கள மன்னிக்கணும் சம்பந்தி.. நாங்க உங்களுக்கு ரொம்பவே கஷ்டத்த குடுத்துட்டோம்.."
"நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும் சம்பந்தி.. தயங்காம சொல்லுங்க.." என்றார் அபர்ணாவின் அப்பா..
"அது வந்து.. உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.. நாங்க அபர்ணா மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கோம் ன்னு.. எங்க வீட்டு மருமகள் மாதிரி இல்லாம எங்க சொந்தப் பொண்ணு மாதிரி தான் அவள நாங்க இப்பவும் நினைக்கிறோம்.. ஆனா, எங்க பையன் வாழ்க்கைல இருந்த பழைய லவ் பத்தியும் அதனால நடந்த விஷயங்கள் பத்தியும் எங்களுக்கு எதுவுமே தெரியாததனால அவன உங்க பொண்ணுக்கு கட்டி வச்சி ரொம்பவே பெரிய ஒரு தப்பு பண்ணிட்டோம்.. லீனா இன்னொருத்தர் மனைவியான பிறகு செய்ய வழி எதுவும் இல்லாமத் தான் அவன் உங்க பொண்ண கட்டிக்கொள்ள சம்மதம் சொல்லி இருக்கான்.. ஆனாலும், அந்தப் பொண்ணு இவன மறக்க முடியாம அவ புருஷன் கூடவும் ஒழுங்கா சந்தோசமா வாழம இவன் கூட பேசிட்டு இருந்திருக்கு.. யார் மேல தப்பு சொல்றதுன்னு தெரியல.. இருந்தாலும் எங்க பையன் செஞ்சது பெரிய தப்பு.."
"சோ.. உங்க பையன எங்க பொண்ணுகிட்ட இருந்து டைவர்ஸ் எடுத்து அந்த பொண்ணு லீனாவுக்கே கட்டி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கீங்க.. அப்புடித்தானே..?" என்றார் அபர்ணாவின் அப்பா..
"நீங்க சொல்றது சரி தான் சம்பந்தி.. அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே லவர்ஸ்.. இப்ப அந்தப் பொண்ணு இவனால வாழ்க்கைய இழந்துட்டு வந்து நிக்கிறா.. அப்பா அம்மாவும் அவள வீட்ட விட்டு வெளிய அனுப்பிட்டாங்க.. என் பையனால அவளுக்கு ஏற்பட்டிருக்குற பிரச்சனைகளுக்கு நான் தான் பாத்து ஏதாச்சும் நல்லது பண்ணனும்.. அதே நேரம் இவங்க ரெண்டு பேரையும் மறுபடியும் சேத்து வச்சாலும் மறுபடியும் இதே தவறுகள் நடக்காதுன்னு எங்களால சொல்ல முடியாது... எங்க பையனால உங்க பொண்ணும் இன்னும் இன்னும் கஷ்டப்பட எங்களுக்கு விருப்பம் இல்ல.. நானும் அடுத்த சராசரி அப்பாக்கள் மாதிரி புள்ளைங்களுக்கு விருப்பம் இல்லாத ஒரு வாழ்க்கைய வாழ வச்சு அவங்கள இன்னும் இன்னும் கஷ்டப்படுத்த விரும்பல.. அபர்ணா எங்க பொண்ணு மாதிரி.. அவளுக்கு நானே ஒரு நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. கல்யாணத்துக்கு உண்டான முழு செலவையும் நாங்களே பாத்துக்குறோம்.. தயவு செஞ்சி எங்கள மன்னிச்சிருங்க சம்பந்தி.. நீங்க இதுக்காக எங்களுக்கு என்ன பனிஷ்மென்ட் தந்தாலும் கூட நாங்க ஏத்துக்குறோம்.."
அப்பா கூற வந்த விடயங்களை மிகவும் தெளிவாக அவர்களிடம் கூறி விட்டார்.. ஆனால் அது அவர்களுக்கு மேலும் கோபத்தினை உண்டு பண்ணியது..
"அப்போ.. உங்களுக்கு லீனா மட்டும் தான் பாவமா...? உங்களுக்கு எங்க பொண்ண பாத்தா பாவமா இல்லையா...? அவளுக்கு இனிமே யாரு நல்ல வாழ்க்க குடுக்கப் போறாங்க..? " இப்படி பல வாய் தர்க்கங்கள்.. அபர்ணாவின் அப்பா ஒன்று கூற.. அபர்ணாவின் அண்ணா ஒன்று கூற.. அபர்ணாவின் அம்மாவும் எனது அம்மாவும் அழுது வடித்துக் கொண்டிருக்க.. அப்பா மட்டும் அவர்களை அமைதியாக சமாளித்துக் கொண்டிருந்தார்.. கிட்டத்தட்ட அரைமணி நேர வாய்த் தர்க்கங்களுக்குப் பிறகு அபர்ணாவின் அம்மா குரல் தழுதழுக்க பேச ஆரம்பித்தார்..
"எங்க பொண்ணு நல்ல மனசுக்கு அவள இப்புடி ஏமாத்த உங்க பையனுக்கு எப்புடித் தான் மனசு வந்திச்சோ எங்களுக்கு தெரியல.. ஆனா.. இனிமே எங்க பொண்ணு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவ.. வாழாவெட்டி.. இனிமே அவள யாருக்கு நாங்க கட்டிக்குடுக்கப் போறோமோ எங்களுக்கு தெரியல.. அவ வாழ்க்க என்ன ஆகப்போகுதோ தெரியல.. இருந்தாலும், பரவால்ல.. அவளுக்கு நாங்க எப்புடியாச்சும் ட்ரை பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.. உங்க எந்த உதவியும் எங்களுக்குத் தேவையே இல்ல.. இது எங்க பொண்ணு வாழ்க்க.. அத நாங்களே பாத்துக்குறோம்.. தயவு செஞ்சு நீங்க எல்லாரும் கெளம்புங்க.."
"என்னம்மா சொல்றீங்க நீங்க...? அபர்ணா எங்க பொண்ணு மாதிரி.. அவளுக்கு எங்களால ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நாங்களே ஒரு நல்லது பண்ணனும்ன்னு நினைக்குறது தப்பா...? அப்புடியாச்சும் எங்களுக்கு ஒரு மனசு நிறைவு கிடைக்கும்ன்னு நினைக்கிறோம்.. தயவுசெஞ்சு எங்களுக்கு அந்த ஒரு சந்தர்ப்பத்த தாங்க..." என்றார் அம்மா..
சட்டென அபர்ணாவின் ரூம் கதவு திறந்தது.. மெல்லிய சிகப்பும் மஞ்சளும் கலந்த வர்ணமயமான சேலையில் அழகே உருவாக அவள் மெல்ல வெளியே வந்தாள்.. அவளை நான் நேரில் கண்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஆகி இருந்தது.. அவளைக் கண்டதும் என்னை அறியாமலே எனது இமைகள் இரண்டு முறை மூடித் திறந்தது.. அவளது அழகில் மீண்டும் முதலில் இருந்து அவள் மேல் காதலில் விழுந்தேன்.. ஆனால், அவள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.. என்னை பார்த்து விட்டாளா இல்லையென்றால் பார்த்தும் பார்க்காதது போன்று நடிக்கின்றாளா எனத் தெரியவில்லை.. ஆனால், நேராக அம்மா அருகில் ஓடி வந்து எனது அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்..
"என்ன மன்னிச்சிரும்மா" என்று கூறிக்கொண்டே அம்மாவும் அவளை கட்டி அணைத்து அவளது தலையினை தடவிக் கொண்டு அவளுடன் சேர்ந்து அழ ஆரம்பித்தார்..
சற்று நேரத்தில் எல்லாருமே அமைதியாகிப் போனார்கள்.. அந்த உணர்ச்சி பூர்வமான தருணத்தினை கண்களில் கண்ணீர் ததும்ப பார்த்துக்கொண்டிருந்தனர்..
அங்கிருந்த எல்லோருக்கும் இருவரையும் சமாளிக்க நிறைய நேரம் ஆகியது.. அவள் அம்மா மீது வைத்திருந்த பாசமும் அம்மா அவள் மீது வைத்திருந்த பாசமும் அப்பொழுது தான் எல்லோருக்கும் புரிய ஆரம்பித்தது..
"இப்புடி ஒரு பொண்ண வேணாம் ன்னு சொல்ல இவங்களுக்கு எப்புடித்தான் மனசு வந்துதோ.." என்று புதிதாக ஒரு குரல் கேட்க குரல் வந்த திசையில் நோக்கினேன்.. அது அபர்ணாவின் பெரியம்மா.. சில பெண்கள் நின்று கொண்டிருக்க அவர்களுடன் தான் அவரும் நின்றுகொண்டிருந்தார்.. ஆனால் அவரால் தான் எனது மனதில் இருக்கும் திட்டங்கள் யாவும் ஈஸியாக வெளியே வரப்போகின்றது என்பதனை நான் அப்பொழுது அறிந்திருக்கவில்லை..
"யாருங்க உங்க பொண்ண வேணாம்ன்னு சொன்னாங்க..? இவ இங்க வந்ததுல இருந்து நா டெய்லி அழுதுக்கிட்டே தான் இருக்கேன்.. இவள நா ரொம்பவே மிஸ் பண்றேன்.. ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினால தான் இப்புடி பண்ண வேண்டிய ஒரு நிலம எங்களுக்கு.. மருமகளா இல்லாம ஒரு மகளா இப்ப கூட இவள எங்க கூட அனுப்பி வைங்க.. இவள நா பாத்துரமா பாத்துக்குறேன்.." அழுதபடியே கஷ்டப்பட்டு தழுதழுத்த குரலில் அம்மா கூறி முடித்தார்..
"எதுக்குங்க மகளா கூட்டிப் போகணும்..? உங்க மருமகளாவே கூட்டிப் போங்க.."
"அது முடியாமத்தாங்க இவ்வளவு பிரச்சன.. இவ்வளவு அழுக.." என்றார் அப்பா..
"ஏங்க...! உங்க பையன் செஞ்ச தப்புக்கு எதுக்குங்க எங்க பொண்ணு வாழாவெட்டியா இங்க வந்து கஷ்டப்படணும்...? அவள யாருங்க இனிமே கல்யாணம் பண்ணிப்பாங்க...? டைவர்ஸ் ஆன பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் பண்றது என்ன அவ்வளவு லேசானா வேலையா என்ன...? உங்க மூத்த பையன் செஞ்ச தப்புக்கு உங்க ரெண்டாவது பையன வச்சு பரிகாரம் தேடிக்கோங்க.." என்றார் கோபமாக..
"என்னங்க சொல்றீங்க நீங்க...?" முகத்தில் ஒரு பிரகாசத்துடன் அப்பா அவரைப் பார்த்துக் கேட்டார்..
"அவளுக்கு நானே ஒரு நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னீங்க... ஊர்ல அங்க இங்க மாப்புள தேடி அலையிரத விட உங்க ரெண்டாவது பையன அபர்ணாக்கு கட்டி வைக்க நீங்க சம்மதம் சொல்லுவீங்களா என்ன...?"
"ஹாஹா.. எங்களுக்கு பூரண சம்மதம்.. ஆக்சுவலி இதத் தான் நா உங்ககிட்ட சொல்ல இவ்வளவு நேரமும் ட்ரை பண்ணேன்.. ஆனாலும் நீங்கெல்லாம் அதுக்கு என்ன சொல்லுவீங்களோன்னு மனசு சங்கடமா இருந்ததனால தான் இவ்வளவு நேரமும் சொல்லாம தயங்கிக்கிட்டே இருந்தேன்.." என்றார் அப்பா..
"இதுல தயங்குறதுக்கு என்ன இருக்கு சம்பந்தி..? இது மாதிரி சம்பவங்கள் ஊர்ல உலகத்துல நடக்காததா என்ன..? நீங்க இதத் தான் முதல்லயே சொல்லி இருக்கணும்.." என்றார் அபர்ணாவின் அப்பா..
"இல்ல சம்பந்தி.. ஏற்கனவே குடும்பத்துல பிரச்சன இருக்கும் போது அதே குடும்பத்துல இன்னொரு முற மாப்புள எடுக்க விரும்புவீங்களான்னு தெரியல.. ஊர்ல உள்ளவங்க என்ன சொல்லுவாங்கன்னும் தெரியல.. அதனால தான்.." என்றார் அப்பா..
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல சம்பந்தி.. நாள் ஆக ஆக எல்லாமே சரியாகிடும்.. சம்பந்தப்பட்டவங்க மனசுல எதுவும் இல்லன்னா எந்தப் பிரச்சனையும் இல்ல.. உங்க பையன் மனசுல அந்தப் பொண்ணு தான் இருக்கா.. அதே மாதிரி எங்க பொண்ணு மனசுலயும் உங்க பையன் இல்ல.. எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கு இத மாதிரி.. எல்லாருமே நல்லா தான் இருக்காங்க.. எல்லாமே புரிதல்ல தான் இருக்கு.." என்றார் அபர்ணாவின் அப்பா..
"ஹப்பாடா.. இப்பதான் எனக்கு மனசு நிம்மதியா இருக்கு.. எங்களுக்கும் பூரண சம்மதம்.. உங்களுக்கும் சம்மதம்.. எங்க பையன் நாங்க எடுக்குற முடிவுக்கு கட்டுப்படுறேன்னு சொல்லிட்டான்.. அவனுக்கு மனசுல யார்மேலயும் எந்த லவ்வும் கிடையாது.. உங்க பொண்ணுக்கு ஓகேன்னா அடுத்து நாம நடக்க வேண்டிய விஷயங்கள பாக்க வேண்டியது தான்.." என்றார் அப்பா..
"ஏம்மா அபர்ணா...! உனக்கு இதுல சம்மதமா...?" என்று அபர்ணாவின் அப்பா அவளைப் பார்த்துக் கேட்க.. அவள் எதுவும் கூறாமல் தலை குனிந்து அமைதியாக அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள்..
"ஏம்பா..! உனக்கு சம்மதமா..?" என்று அப்பா என்னைப் பார்த்துக் கேட்டார்..
"நானும் அவங்களும் இதுவரைக்கும் அண்ணியும் கொழுந்தனுமா தான் பழகி இருக்கோம்.. திடீர்னு இப்புடி கேட்டா என்ன சொல்றதுன்னு தெரியல.. நா அண்ணி கூட கொஞ்சம் தனியா பேசணும்.. அவங்க கூட பேசிட்டு ஒரு முடிவு சொல்றேன்.." தைரியமாக கூறினேன்..
(தொடரும்..)