23-03-2024, 08:32 PM
சாயந்திரம் வீட்டுக்கு வந்தவளுக்கு சாவகாசமாய் அவன் வீட்டிற்குள் கால் மேல் கால் போட்டு கொண்டு படுத்திருந்ததை கண்டதும் பொச்சு எறிஞ்சுச்சு.. காட்டுக்குள்ள இருந்துகிட்டு கம்பு உருண்டை சோத்துசட்டியை எடுத்துவாடானா.. இப்படி வீட்டுக்குள்ள வந்து உயரமாக படுத்து இருக்கானே கழுத.." என கோபத்தின் உச்சத்திற்கு போனாள். விடு விடுவென வீட்டிற்குள் சென்று கையில் கிடைத்த இரண்டு விளார் சாட்டைகளை எடுத்து வந்தாள். மல்லாந்து படுத்து கிடந்தவனின் முதுகில் பத்து போடும் அளவிற்கு பிய்த்து போட்டாள். சாட்டையை வைத்து... சுளீர் சுளீரென அவனுக்கு அடிகள் விழ.. அவன் துடித்து கத்தியதை அருகில் உள்ள ஒரு அனைவருமே கேட்டனர். ஆனால் நடப்பது அவர்களுக்கு புரிந்தது. எல்லோரும் அமைதியாக இருந்தனர். அவன் சித்தப்பன் மட்டும் எங்கிருந்தோ ஓடி வந்தான்.
சித்திகிடமிருந்து தப்பிக்க சித்தப்பன் காலை கட்டிக் கொண்டான் சிவசோமன்..
"ஐயோ காப்பாத்துங்க சித்தப்பா ஐயோ .." என காலைப் பிடித்துக் கொண்டு கதறினான்.
"ஒரு ஏங்கள் தாங்கலுக்கு வந்து உதவலைன்னாலும் பச்சைப் புள்ளையா கொஞ்சம் பொறுப்போட பாத்துக்கிடலாமில்லையா?" என அவன் சித்தப்பன் கொஞ்சம் இறக்கம் காட்டினான்.
"இன்னைக்கு இவன் பண்ண வேலைக்கு இதெல்லாம் போதாது. காட்டுக்கு நடுவுல இருந்து காட்டு கத்தலா கத்திக்கிட்டு இருக்கேன். ஓயாம உழைச்சிட்டு வீட்டுக்கு நான் வந்தா எதுவும் ஒய்யாரமா தூங்கிக்கிட்டு கிடக்கான். இவனுக்கு வடிச்சு கட்டணும்னு என் வாழ்க்கையில விதி இருக்கா?" என அங்கலாய்தாள்.
சோமன் துடுக்குதனம் மாறாமல் இருந்தான். தன்னை நல்லவள் போல் காட்டிக் கொள்ள தன்னுடைய கோபத்தை குறைத்துக் கொண்டு.. "ஏங்க.. அவனை குளத்துக்குப் போகாதமேன்னா கேக்கமாட்டேங்கான். பொழுதுக்கும் எருமை கணக்கா.. குளத்துக்குள்ளவே கிடக்கான். காட்டுல இருக்குற கல்லெல்லாம் பொறக்காவ குளத்துல குளிச்சிட்டு வந்தா இப்ப நடு வீட்டுல படுத்து கிடக்கான்"
"சரிடி.. நான் கண்டிச்சு வைக்கிறேன்." என சிவசோமன் தலையை வாஞ்சை ஓட தடவி விட்டான்.
"ம்கூம்.. பாத்துக்கிட்டேயிருங்க. ஒரு நாளைக்கி வலிப்பு வந்து தண்ணியிலே மிதக்கத்தான் போறான். பஞ்சாயத்துல நாம கையை கட்டிக்கிட்டு நிற்கப்போறோம்.."
"வாயை கழுவுடி.. வயசு பையனுக்கு சாவ சாபம் விடறவ.." என சித்தப்பன் கத்த.. சித்தி கோபித்துக்கொண்டு போய்விட்டாள்.
"இந்தக் கோவேறு கழுதையை எங்கேயாணும் கொண்டு போய் தொலைச்சிட்டு வாங்க இப்படி வீட்டுக்குள்ள வச்சிக்கிட்டு என்னால மாற முடியாது" என்றாள் வீட்டுக்குள் இருந்து.
சித்திக்காரி ஏசுவதால் சித்தப்பன் அவனை வீட்டுக்கு வர வேண்டாமென்றார். ஒரு ஆணுடைய கரிசனம் என்பது அவனுடைய மனைவி கொடுக்கக் கூடிய எல்லைக்குள் மட்டுமே அமைகிறது. சிவ சோமனை தன்னுடைய குழந்தை போல வைத்து பராமரிக்க சித்தப்பனுக்கு ஆசையாக இருந்தாலும் மனைவி மீது இருந்த ஒருவித பயம். அவன் அவர்களை விட்டு பிரிந்து வெகு தொலைவில் இருப்பதையே நலம் என்பது அவனுக்கு வெகு விரைவில் புரிந்து விட்டது. அவன் கால் வயிற்று கஞ்சிக்கு வாழ்க்கை இன்று சாணியை அள்ளியும் அவள் சொல்லும் வேலை எல்லாம் தலையால் செய்து முடித்து காத்திருந்தபோது கூட சரியான உணவு அவனுக்கு தராமல் ஏதோ பழங்கால பகையை தீர்க்கக் கூடியவள் போல அவள் நடந்து கொண்டாள். மீத சொந்தக்காரர்களும் அவனைக் கைகழுவிய பிறகு, ஊர்க்காரர்கள் கொஞ்சநாள் ஆதரித்தார்கள்.
ஊர் மந்தையில் படுக்கத் தொடங்கினான். அந்த கிராமத்தின் நெடும் குளிரில் அவனுக்கு ஒரு சீலை தந்து போர்த்தி விடக்கூட யாரும் இல்லை. உடலைக்குறுக்கி நெஞ்சோடு கால்களை மடக்கி அணைத்துக் கொண்டு கைகளில் இரண்டையும் கால் முட்டிகளோடு கட்டி அப்படியே கருவறையில் இருக்கும் குழந்தை போல சுருண்டு படுத்திருப்பான். மாட்டுத் துணையாக இரண்டு அரை டவுசர்களை வைத்திருந்தான் ஆனால் அதிகம் சரியானவளாக இல்லை. சொக்கம்பாறையில் இருந்து சறுக்கி கொண்டே ஒரு முறை அவன் வரும்பொழுது டவுசன் பின்பக்கத்தில் துணிகள் எல்லாம் நனைந்து சின்னதாக இரண்டு ஓட்டையை போட்டு வைத்திருந்தது.
இவனுடைய விளையாட்டுக் கூட்டாளிகள் அவன் அந்த டவுசர் அணிந்து வரும் பொழுது தபால் பெட்டி தபால் பொட்டி என்று கிண்டல் அடிப்பார்கள். கைகளில் கிடைக்க கூடிய இரண்டு சின்ன சின்ன கற்களை அந்த குண்டி ஓட்டைக்குள் போட்டு விடுவார்கள் அது சொத்தென கால் வழியாக கீழே விழும். சில காலம் வரை அவ்வாறு யாராவது தபால் பெட்டி என்று தொல்லை செய்தால் துரத்தி ஓடுவான். அவர்களை கண்டால் கோபமாக வரும் எல்லோரையும் துரத்தி விட்டுக் கொண்டே இருப்பான். பிறகு அது அவனுக்கு பழக்கம் ஆகிவிட்டது. இந்த விளையாட்டும் அவனுடைய தோழர்களுக்கு வெறுத்துப் போய்விட அவன் ஓட்டை டவுசரை போட்டு வந்தாலும் கூட எப்பொழுதும் போல அவனை பார்க்கத் தொடங்கினார்கள்.
பசி தாங்கமுடியாம, வயிறு நமட்டும்போது மட்டுமே சொந்தக்காரர்களின் வீடு தேடிவந்து குடிக்கத் தண்ணி கேட்பான். ஊரில் சில வீடுகளில் தண்ணீர் கிடைத்தாலும் கிடைக்கும்; வசவு கிடைத்தாலும்.. வாங்கிக் கொள்வான். வீடுகளில் ஏதேனும் வேலை சொல்லி அதை செய்து முடித்ததும் பழைய நீத்துப்பாகம் கிடைத்தாலும் கிடைக்கும். சில சமயம் தண்ணீர் மட்டுமே கிடைக்கும். ஊர்க்காரர்கள் நல்லது கெட்டதில் அவனுக்கு ஒரு இலை போட்டார்கள். அந்த இலைக்காக அவன் அங்குள்ளே எல்லா எச்சில் இலைகளையும் எடுக்க வேண்டியதாயிற்று.
பெரியோர்களை அழைத்து இந்த வேலையைச் சொன்னால் பன்மடங்கு காசு வாங்கி கொள்வர். ஆனால் இந்த ஏமாளியோ ஒரு ஜான் வயிற்றை காப்பாற்றிக் கொள்ள இரண்டு மடக்கு கஞ்சிக்காக அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்தான் . இந்த உலகத்தில் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு அவனுக்கு அவ்வளவு அறிவு இல்லை. தான் செய்யக்கூடிய வேலைக்காக பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ அதை வைத்துக் கொண்டு வேண்டுவதை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்பதோ பின்னாலில் அதனை சேமித்து வைக்கும் பொழுது பெரும் செல்வம் அவனுக்கு கிடைக்கும் என்பதோ அவன் அறியவே இல்லை.
சிவ சோமன் ஓர் அறியா பிள்ளையாய் வாழவே அவ்வூர் மக்கள் விரும்பினார்கள். அதுதான் அவர்களுக்கு மிகப் பிடித்தமான ஒன்றாக மாறியது. சிவசோமனின் கூட்டுக்கார பிள்ளைகளும் அவன் கஷ்டப்படுவதை குறித்தும் அவன் வாழ்க்கையின் ஈடுபாடுகள் குறித்தும் அக்கறைப்படாதவர்களாகவே இருந்தார்கள். இன்னும் சொல்ல போனால் சிவ சோமனை ஒரு ஒப்புக்கு சப்பானியாக தங்களுடைய விளையாட்டில் இணைத்துக் கொண்டு அவர்களும் வேலை வாங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இதெல்லாம் அறியாதவன் தன்னுடைய வாழ்க்கையின் குழந்தை பருவங்களை தொலைத்து விட்டு விடலை பருவத்தில் நுழைந்து இருந்தான்.
இந்தச் சமயத்தில், அந்த ஊரில் நடந்த பூங்கொடியின் விசேஷத்துக்காக வந்த தூரத்து ஊர்க்காரரும். அவனுடைய தகப்பன் சுப்பன்னாவின் சொந்தக்காரருமான சின்ன செங்கண்ணன் கண்ணில் பட்டான்.
ரேசன் கடையின் இரும்பு சட்டத்தில் உட்கார்ந்துகொண்டு, பிய்த்துபோன முட்டாகப் பெட்டியில் சிறிய குச்சியால் தாளம் போட்டுக்கொண்டு,
"அங்க முத்து மங்கமுத்து
தண்ணிக்குப் போனாளாம்
தவளையப் பாத்து
தவிச்சி நின்னாளாம் அவ
தவிச்சி நின்னாளாம்..." என பாடிக் கொண்டிருந்தான்.. சிவசோமன்.
"பலே.. பாட்டெல்லாம் பலமா இருக்குலே.. தம்பி" என பாராட்டினார் சின்ன செங்கண்ணன்.
"நன்றிங்க.." என உடலை வளைத்து நெளிந்துகொண்டே சொன்னான். சிவசோமனுக்கு வாலிப உடல் வர தொடங்கி இருந்தது. மாரில் முடிகள் குட்டியாக எட்டிப் பார்த்தன. ஆனால் அவன் சட்டையில்லாமல் பொத்தான்கள் பிய்ந்து போன ஒரு அரை கால் டவுசரை போட்டிருந்தான். அது அரைஞாண் கயிறின் உதவியோடு நின்று கொண்டிருந்தது.
அவனுடைய உடல் அசைவை பார்த்து செங்கண்ணனுக்கு சிரிப்பு வந்தது. விடலை பையன் தட்டிக்கிட்டு வாடானா கட்டிக்கிட்டு வர வயசு. இப்படி விவரம் புரியாம இருக்கானே.. புருவக்கட்டில் கையை வைத்து, வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு பார்த்து அவனை ரசித்தார். "இது யாரு மவன்டா?" என்று அருகில் விசாரித்தார்.
'"அவந்தான் புலிகுத்தி முருகேச பிள்ளையோட பேரன்" என்றார் ஒருவர்.
"அடடா.. எப்பேற்பட்ட குடும்ப பையன். இங்க வந்த தகரத்தை கொட்டிக்கிட்டு கிடக்கே" என விசணப்பட்டார்.
"அப்பன் ஆத்தா உசுரோட இல்லை. ஆதரிக்க ஒரவுகளும் இல்ல.. வேளைக்கு ஒரு வீடு விருந்து சாப்பிட்டுட்டு மந்தையில உறங்கி கிடக்கிறான்"
"அடடா.. கேட்கவே மனசு தாங்கள.." என பதறிப்போனார். ஆனால் அவனோ, அவரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, "தண்ணிக்குப் போனாளாம்" என்று ராகத்தை நீட்டி நீட்டிப் பாடிக்கொண்டிருந்தான்.
செங்கண்ணன் சிறுவனாக இந்த ஊருக்கு வரும் போது.. புலிகுத்தி குடும்பத்தில் வந்து மாசக்கணக்கில் தங்கி விருந்தாடியிருக்கிறார். ஊருக்குப் புறப்படும் போதெல்லாம் புத்தாடைகள் எடுத்துவைத்து வழியனுப்புவார்கள். அரண்மனை போல இருந்த வீடு எத்தனையோ பேருக்கு வாழ்க்கை அளித்த குடும்பம். அந்தக் குடும்பத்தில் இப்படி ஒரு பிறப்பா..
இந்த ஊருக்கு அகதி, பரதேசிகள் என்று யார் வந்தாலும், பசி அமர்த்தி நிழல் தரும் குடும்பம் அது. அட்டா! எப்பேர்ப்பட்ட கைகள் அவை?
"ஒரே சின்னய்யா.." என்ற அதூரத்துடன் அழைத்தார் அவனை, அந்தக் குரல் அவனை என்னவோ செய்தது. "ரொம்ப நாளைக்கப்புரம் இந்தக் குரலைக் கேட்கிறோம்" என்று பட்டது சிவசோமனுக்கு. அவர் உட்கார இருப்புச் சட்டத்தில் கொஞ்சம் இடம் ஒதுக்கித் தந்தான்.
"ஐயா சின்னையா.. உனக்கு நான், முறைக்கு மாமா வேனும்டா.. எங்க ஊருக்கு வாடா போயிருவோம்!" என்றார் திடீரென்று. ஆங்காங்காகே எட்டிப்பார்க்கும் நரை தலை படிய வாரியிருந்தது, கண்ணுக்கு கண்ணாடி, வலது கையில் தங்க காப்பு, வெள்ளி மோதிரம். வெள்ளை சட்டை, வேட்டியில் செங்கண்ணன் மிடுக்காக தெரிந்தார்.
"இதென்ன ..!" என்று சிவசோமனுக்கு புரியவில்லை. அவனது நிம்மதியான உலகத்துக்குள் புகுந்த சூறாவளி அங்கே நிம்மதியாய்க் கிடந்த தூசிகளை எல்லாம் வாரிச்சுழற்றியது.
"நான் வரல.. இது என் ஊரு"
"ஆமாய்யா.. இது உன் ஊருதான். உங்த முப்பாட்டன் கட்டி ஆண்ட பூமி. அதுல போய் நீ கையேந்தி வீடுவீடா நிற்கலாமா?"
"அது.."
"என் வீட்டுக்கு வாய்யா.. ராசாவாட்டம் இரு.. நல்லது கெட்டது தெரிஞ்சுக்கோ.. நிறைய சம்பாதிச்சு.. மறுபடியும் இந்த ஊருக்கு வா.. அதுதான் இந்த புலிகுத்தி வம்சத்துக்கு பேரும."
"அங்க வந்தா.. அரிசுசோறு போடுவிகளா"
"அதென்ன அரிசி சோறு.. அதைவிட பெரிய ருசியான உணவெல்லாம் ஆக்கிபோட சொல்லறேன். வாயா.."
அவர் அவனுக்குத் தரப்போகும் புது ஆடைகள், பலகார பண்டங்கள் எல்லாத்தையும் வர்ணித்தார். சோமனுக்கு அதையெல்லாம் கேட்கக் கேட்க ஏக்கம் வந்தது என்றாலும், அதெல்லாம் இங்கேயே கிடைத்தால் என்ன என்றிருந்தது. ஊரை விட்டு பிரிய மனமில்லை.
ஆனால் சின்ன செங்கண்ணன் விட்டபாடில்லை. பேசிபேசியே அவனை முழு மனதோடு அழைத்து செல்ல உடன்பட வைத்தார். கையோடு பஞ்சாயத்து பெரிய மனிதர்களை சந்தித்து உத்தரவு வாங்கிக்கொண்டார்.
"மாமா.. சோறுபோட்டவங்களுக்கு ஒரு கும்புடு போட்டுட்டு வந்திடட்டுமா"
"அடடா.. புலிகுத்தி வம்சம் தப்பு ஏதாவது செய்யுமா.. போடாதம்பி.. போய் சொல்லிட்டுவா. நான் ஊர் முடிவுல இருக்கேன்.."
"பட்டுனு போயிட்டு சட்டுனு வந்திடறேன்.."
சிவசோமன் இதுநாள் வரை உணவு தந்த வீடுகளுக்கெல்லாம் வழிநெடுக நன்றி சொல்லிக்கொண்டே ஊர் எல்லைக்கு வந்தான். "ஐயா ராசா நீ போல் வாயா நல்லா பிழைச்சுக்கோ நல்லபடியாக ஆளு நல்ல வேலை செய்ய போகுற போக்குல இங்க இருக்குற மாதிரி கடக்காதீங்க."
"கூட்டிகிட்டு போற ஆளு நல்லவரோ கொள்ளவரோ நீதான் சூதா இருந்துக்கணும் சொன்ன வேலையெல்லாம் கேட்டினா.. அவரு வேலைக்கு சோறு போடுவாரு.. நல்ல துணி வாங்கி தருவாரு இல்லேன்னா அடிச்சு பத்தி விட்டுடுவாங்க. நம்ம ஊருக்கு வர வழி எப்படி என்று கேட்டு தெரிந்து வைத்துக்கோ.." என மங்கம்மா பாட்டி எடுத்துச் சொன்னாள். ஆனால் இதெல்லாம் விளங்குகிற வரையிலா அவனுடைய மூளை இருக்கிறது. இன்னும் விளையாட்டு போக்கிலேயே திரிந்து கொண்டிருந்தான். அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே விடை பெற்றுக் கொண்டு அடுத்த வீட்டிற்கு ஓடிவிட்டான்.
"எலேய்..கோட்டிக்கார பயலே.. நீ எல்லாம் அசலூர்ல போய் பொழைக்கிறதா?" என்றாள் ஒருத்தி.
"நீயே சோம்பேறி தழுதை. வெளியூர்ல போய் என்ன பண்ண போற செவனேனு இங்கேயே கட.. இன்னைக்கு என்ன பார்த்து நான் கருவாட்டு குழம்பு வச்சிருக்கேன். கழுவி ஊத்தி கொஞ்சம் கருவாடு சாப்பிட்டு பாரேன்.." என்றெல்லாம் கூட சில அவனுக்கு சாப்பாட்டு ஆசை காட்டி அந்த ஊரிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். வெறும் கால் வெயிட்டச் சாப்பாட்டுக்காக ஓடி ஓடி உழைக்கக்கூடிய ஒரு உழைப்பாளியை தவற விடப் போகிறோம் என்பது அவர்களுக்கு இப்பொழுது புரியத் தொடங்கியிருந்தது. அவன் நல்ல வாழ்வை தேடிச் செல்கிறான் என்று மனதிற்குள் தெரிந்தாலும் அது எப்படியாவது கெடுத்து அங்கே அவனைத் தங்க வைத்து விட முடியுமா என சிலர் தங்களுக்குள்ளாக திட்டம் தீட்டிக் கொண்டனர். ஆனால் சிவ சோமன் அங்கு நிற்கவே இல்லை அவர்களின் தங்களுக்குள் திட்டத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் முன்பே அவன் அவ்விடத்தை விட்டு காலி செய்து விட்டிருந்தான் அவனுடைய நல்ல காலம் அது.

sagotharan