18-03-2024, 02:34 PM
எங்கள் வகுப்பில் நாங்கள் கீழே தான் அமர்ந்து இருப்போம். நான் எப்போதும் கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் அமர்ந்திருப்பேன். எனக்கு பின்னால் மாடசாமி என்ற பையன் அமர்ந்திருப்பான். அவன் என்னை விட 4, 5 வயது பெரியவன். பல வகுப்புகளில் பெயில் ஆகி ஆகி படித்ததால் இந்த வித்தியாசம். நான் அவன் நெஞ்சு உயரம் தான் இருப்பேன். அவன் பார்ப்பதற்கு கருப்பாகவும் முரட்டு உடம்புடனும் இருப்பான். எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவன் முரட்டுத்தனம் காரணமாக அவனுக்குத் தெரியாமல் அவனை ரசிப்பேன்.