15-03-2024, 12:20 AM
(This post was last modified: 21-03-2024, 06:26 AM by JeeviBarath. Edited 1 time in total. Edited 1 time in total.)
வித்யா வித்தைக்காரி
【16】
【16】
வளனுக்கு லேப் ரூமை பார்க்கும் போதெல்லாம் அவனை அறியாமல் ஒரு கோபம் வித்யா மேல் வருவதுண்டு. ஆனால் இன்று காலை உணவு முடித்து இருவரும் மேலே வந்து கதவை திறக்கும் போது அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு இல்லை..
கதவை திறந்தவன் இப்படி நமக்கு திரும்பவும் வேலை வச்சுட்டாளே என நினைத்து பெருமூச்சு விட்டான்.
குட்டி பொண்ணு அழகா அம்சமா இப்படி பக்கத்துல இருக்கும் போது லேப் பார்த்து பெருமூச்சு விடுறான். ரசனை இல்லாதவன் என நினைத்தவள்..
"உவ்வே" என வாந்தி வருவது போல செய்தாள்..
வளன் வித்யாவை முறைத்தான்.
ஒரே கெமிக்கல் வாடை, எப்படித் தான் இங்க இருக்கீங்களோ...
வளன் முகம் கோபத்தில் மாறுவதை பார்த்தவள் குடுகுடுவென அவர்களது பெட்ரூம் உள்ளே ஓடிப் போய்விட்டாள்.
அவள் பின்னால் அவர்களின் பெட்ரூம் வந்தவன் லக்கேஜ் பேக் உள்ளே இருந்த நோட் எடுத்துக் கொண்டு மீண்டும் லேப் அறைக்குள் நுழைந்தான். அவன் ரெடி செய்ய வேண்டிய கெமிக்கல்களின் குறிப்புகளை ஓரளவுக்கு விமானத்தில் வரும்போது சரி பார்த்து விட்டான். அவன் எடுத்த குறிப்புகள் சரியாக இருக்கும் பட்சத்தில் பெரிய சிரமம் இருக்காது.
வாயடித்துப் பழக்கம் ஆகிப் போய்விட்டது. அரைமணி நேரம் கூட டிவி மற்றும் மொபைல் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அத்தையிடம் வாயாடிக்க கீழே போக கிளம்பினாள்.
இந்த முறை லேப் க்ராஸ் பண்ணும் போது வளன் பார்க்க வேண்டும் என்பதற்காக தொண்டையை செருமினாள். வளன் பார்த்த அடுத்த வினாடி மூக்கில் கைவைத்து நாற்றத்தை தள்ளி விடுவது போல மறு கையை அசைத்துக் கொண்டே கீழே இறங்கினாள்.
நான் சும்மா இருந்தாலும் என் கோபம் ஒரு இம்மி அளவுகூட குறைந்து போய் விடக் கூடாதுன்னு பண்றியா என நினைத்து சிரித்தான் வளன்.
வாசு தன் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்.
என்ன மாமா நான் வீட்டுல இல்லாத நேரத்துல அத்தை உங்களை நல்லா பார்த்துக்கிட்டாங்களா..
வாசு சிரிக்க...
வள்ளி : என்னடி இவ்ளோ நாளா நீ தான் எல்லாம் பார்த்துக்கிட்ட மாதிரி கேள்வி கேக்குற..
அது இல்லை அத்தை, இனி எதுனா ஆச்சுன்னா மருமக சரியா பார்த்துக்கலன்னு சொல்லுவாங்க..
வள்ளி : ஓஹ்! அப்ப இனி எங்களை நீ நல்லா பார்த்துக்க போறியா?
ஆமா, இல்லை, அய்யய்யோ. இப்போதைக்கு நீங்க எல்லாரையும் சரியா பார்த்துக்கிறீங்களா இல்லையான்னு மேற்பார்வை மட்டும்..
நீயும் உன் வாயும் என வள்ளி சொல்ல எல்லோரும் சிரித்தார்கள்.
வள்ளி கிச்சன் போக, அவள் பின்னால் வாயாடிக் கொண்டே வித்யாவும் சென்றாள்..
காலிங் பெல் அடிக்க, வாசு கதவை திறந்தால் அங்கே சீனிவாசன். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள். யார் என்று பார்த்த வள்ளி வித்யாவைப் பார்த்து வளனை கூட்டிக் கொண்டு வர சொன்னாள்..
மாடிப்படி ஏறும் வித்யாவை பார்த்த சீனிவாசனை, "இந்த விளங்காதவன் எதுக்கு இங்க வந்தான் என்பதைப் போல வள்ளி மற்றும் வாசு பார்த்தார்கள்.
லேப் அறைக்குள் நுழைந்தாள் வித்யா..
ஹலோ, ஏங்க..
வளன் அவளை கண்டு கொள்ளாமல் வேலை செய்தான்..
மிஸ்டர் வளன் என ராகம் பாடுவது போல இழுத்தாள்..
என்னடி..
கீழ வாங்க..
நான் வேலையா இருக்கேன், டிஸ்டர்ப் பண்ணாத..
ஹலோ மிஸ்டர், நாங்க மட்டும் என்ன வெட்டியாவா இருக்கோம்,நாங்களும் பிசிதான்.
சொல்லு..
உங்களை தேடி ஒரு ஆளு வந்திருக்கார்..
என்னை தேடியா? யார் சொன்னா..?
அத்தை சொன்னாங்க..
யாருடா அது என எரிச்சலுடன் கீழே இறங்கி வந்தான் வளன்.
கீழே வந்தவன் நைஸ் டூ மீட் யூ சார். என்ன இவ்ளோ தூரம் எனக் கேட்டான்.
சீனி : ரெண்டு நாளா ரீச் பண்ண முடியலை, அதான் நேருல வர்ற மாதிரி ஆகிடுச்சு..
நீங்க சொல்லியிருந்தா நானே நேர்ல வந்திருப்பேனே சார்..
உன்னை ரீச் பண்ண முடியலையே..
சாரி சர்.. வெளியூர் போயிருந்தேன்..
ஜூஸ் கிளாஸ்ஸில் ஊற்றி எடுத்துக் கொண்டு வந்தாள் வள்ளி.
அதை எடுத்து குடித்த சீனி இன்னும் எவ்ளோ நாளில் ஆராய்ச்சியை சமர்ப்பிக்க முடியும் எனக் கேட்டார்.
2 மாதம்.
அவ்ளோ நாள் வாய்ப்பே இல்லை வளன்.
எனக்கும் ரொம்ப டைட் வளன். எக்ஸ்ட்ரா 30 டேஸ் வாய்ப்பே இல்லை. 6 வீக்ஸ் பார்ட்னர்ஸ் கிட்ட பேசி ரெடி பண்றேன்.
தவறு தன்மேல் என்பதால் அமைதியாக இருந்தான் வளன்.
என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்க வந்த வித்யாவை, திஸ் இஸ் வித்யா வளன் என அறிமுகம் செய்து வைத்தான்.
வித்யாவிடம் மேலே போய் என் செல்போன் எடுத்துட்டு வா என அனுப்பி வைத்தான்.
சீனி வித்யாவை பார்ப்பதை தவிர்க்கவே அவளை மேலே அனுப்பி வைத்தான். வித்யா அங்கிருந்து கிளம்பும் வரை சீனி கண்கள் அவளை மேய்ந்தன..
கல்யாணம் ஆனத சொல்லவே இல்லை. ரிசப்ஷன் எப்போ?
இனிமே தான் என வாசு சொன்னார்.
ஒருநாள் விருந்துக்கு வீட்டுக்கு வாங்க என சீனி சொல்ல, கண்டிப்பா என தலையை ஆட்டி அவசர அவசரமாக சீனியை வெளியே அனுப்பி வைத்தான்.
செல்போன் தேடிப் பார்த்தேன் கிடைக்கலை என சொல்லிக் கொண்டே கீழே வந்தாள் வித்யா.
சாரி என் பாக்கெட்ல இருக்குது, மறந்துட்டேன் என்றான் வளன்.
பொண்டாட்டி மாடிப்படி ஏறிப் போறத பார்க்க அவ்ளோ ஆசையா (ட்ரெக்கிங் ஏறும் போது பின்னால் பார்த்து ஸ்டிக்கால் இடித்ததை சுட்டிக் காட்ட அப்படி பேசினாள்)
ஏன் எல்லோரும் இவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என வித்யாவுக்கு புரியவில்லை.
வாசு வளனை பார்க்க, நான் பார்த்துக்கிறேன் என சொன்னான் வளன். வாசு கொஞ்சம் கலக்கம் நிறைந்த மனதுடன் கல்லூரிக்கு சென்றார்.
☛ சீனிவாசன்
பிணம் தின்னும் கழுகைப் போன்றவன். பெண்கள் விஷயத்தில் மோசமான ஒரு நபர். வாசு வேலை செய்த கல்லூரியில் பேராசிரியராக இருந்து பிஎச்டி செய்த பெண்களிடம் செக்ஸ் உறவு வைக்க சொல்லி கேட்டதாக வந்த புகாரில் டிஸ்மிஸ் ஆகும் நிலை வந்த போது வேலையை ராஜினாமா செய்தான்.
அவன் அதிர்ஷ்டம் அடுத்து வேலைக்கு சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்த ஜோடியை பிரித்து அந்த பெண்ணை கல்யாணம் செய்து இப்போது அந்த கம்பெனியின் CEO. வளன் பார்ட்னராக சேர்ந்த கம்பெனியை சில கேடி வேலைகள் செய்து டேக் ஓவர் செய்தான்.
தனியாக ரிசர்ச் செய்யும் அளவுக்கு தேவையான வசதிகள் வளனிடம் இல்லை. இந்த ஆராய்ச்சி வெற்றிக்கரமாக முடிந்தால் இவர்களின் இந்த ஆராய்ச்சியின் பார்ட்னர் நிறுவனத்தின் லண்டன் கிளையில் ஆராய்ச்சி செய்ய வாய்புகள் கிடைக்கும்.
அந்த பிளானில் பெரிய பாதாளம் தோண்டி மண்ணைப் போட்டு மூடியிருந்தாள் வித்யா..