Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
அன்று இரவு எனக்கு முதலிரவு,

        திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் மாலையே கிளம்பியிருந்தனர். லக்ஷ்மி ஆண்டியின் உறவினர்கள் மற்றும் பார்வதி ஆண்டிக்கும் சேர்த்து ஊரில் தங்க ஏற்கனவே செய்திருந்ததால் இரவு சாப்பிட்டுவிட்டு அவர்களும் அங்கு சென்றுவிட்டனர். நானும் சாப்பிட்டுவிட்டு என் மகனுடன் விளையாடி கொண்டிருந்தேன், அவன் கண் அசந்த நேரம் அம்மா அவனை வாங்கி கொண்டு தொட்டிலில் கிடத்தினாள். என்னை என்னறைக்கு சென்று ரெடியாகுமாறு சொல்ல, அத்தானும் என்னை கிண்டல் செய்தபடி அறை வரைக்கும் வந்து உள்ளே தள்ளிவிட்டார்.

[Image: deepikasingh150-20231101-0003.jpg]

        நானும் ரெடியாகி வேஷ்டி சட்டைக்கு மாறி அமர்ந்தேன். சற்றுநேரத்தில் வெளியில் சலசலப்பு, அக்கா அக்ஷ்ரா-வின் கையில் பால் சொம்பை கொடுத்து அறையினுள் அனுபினாள். உள்ளே வந்த என்னவள் சட்டென என் காலில் விழுந்தாள், அவள் தோள் தொட்டு எழுப்பினேன். கண்கள் முழுதும் நீருடன் என்னை கட்டி கொண்டாள். அவளை அணைத்து கொண்டு ஆசுவாசப்படுத்தினேன்.

‘ஹே… என்ன இது…’ என்றவாறு அவள் கண்களை துடைத்துவிட்டேன்
‘இல்ல இது தான் சம்பரதாயம்னு உங்க அக்கா தான் சொல்லி கொடுத்தாங்க..’ என்றாள்
‘ஹ்ம்…’
‘என்னங்க இந்தாங்க…’ என தன் கையிலிருந்த பால் சொம்பை நீட்டினாள்,

        நானும் குடித்து விட்டு மீதியை அவளிடம் கொடுத்தேன், அவள் தலையில் இருந்த முக்காடை எடுத்துவிட்டேன். அவள் தயங்கியபடி நாணத்துடன் அன்னாந்து பாலை பருகினாள். அவள் முடிக்கும் வரையில் நான் அவளையே ரசித்திருந்தேன். பால் சொம்பை டேபிளில் வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.

‘என்னங்க அப்டி பாக்குரீங்க?’ என்றாள் வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டு
‘இல்ல… உன்ன இப்டி பாக்க ரொம்ப வித்தியாசமா இருக்கு…’ என்றேன்
‘ஏன்..?’ என நிமிர்ந்து கேட்டாள்
‘இல்ல… எப்பயும் உங்கள நான் இப்டி பாத்ததே இல்லியா அதான், ஆமா முகத்துல இருக்க செவப்பு என்னது மேக்கப்பா இல்ல வெட்க்கமா?’ என கேட்க
‘…….போங்க…’ என மீண்டும் தலை குனிந்து கொண்டாள், அது வெட்க சிவப்பு தான்
‘ஆனா எனக்கு இது பிடிக்கலங்க?’
‘எது?’ என திரும்பி தன்னை தானே பார்த்து கொண்டாள்
‘இப்டி நீங்க ரொம்ப ஃபார்மலா பேசுரீங்க, நான் உங்க வீட்டுக்கு வந்தப்போ கூட நீங்க எவ்ளோ உரிமையா ஆர்டர் பண்ணீங்க, எனக்கு அந்த அக்ஷராவ தான் பிடிச்சிருக்கு…’
‘அப்போ என்ன பிடிக்கலையா?’
‘உங்க இந்த மாற்றம் ரொம்ப பிடிச்சிருக்கு, ஆனா அப்போ இருந்த அக்ஷராவ தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்…’ என்றேன்
‘ஓ…’
‘ப்ளீஸ் என்ன உங்க உரிமைபடியே பேசுங்க பழகுங்க சரியா..’ என்க
‘சரிடா…’ என கலகல’வென சிரித்தாள்
‘ஹ்ம், சரி ஆரம்பிக்கலாமா….’ என்க
‘ஹ்ம்…’ என தலை குனிந்து கொண்டாள்

        அவள் நான் கேட்டதனால் தான் ஒப்பு கொண்டாள், உண்மையில் எனக்கும் சரி அக்ஷரா-விற்கும் சரி ஓய்வு தேவைப்பட்டது. நான் கல்யாண வேலையில் ஓடியாடி திரிந்து உடல் சோர்வில் இருந்தேன், அவளோ யாரும் தன்னை பற்றி தப்பாக பேசிவிடுவார்களோ என்று உள்ளம் சோர்ந்திருந்தாள். இப்போது நான் அவள் கணவனல்லவா?, அவள் உள்ளத்தை அறியமாட்டேனா. அவளை அள்ளி அணைத்து கொண்டு முத்தமிட்டேன். அவள் காதோரம் போய் சொன்னேன்,

‘எனக்கு தெரியும் அக்ஷரா, நாம இன்னைக்கு ஓய்வெடுக்கலாம்…’ என்றேன்
அவளை நான் சரியாகவே கணித்திருக்கிறேன், என்னை கட்டி பிடித்து முத்தமாய் கொடுத்தாள். அவளுடன் ஒத்துழைத்து கொண்டே லைட்டை அணைத்தேன். இருவரும் முத்தமிட்டபடி தூங்கி போனோம்.


தொடரும்…
[+] 4 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Black Mask VILLIAN - 13-03-2024, 06:08 AM



Users browsing this thread: 5 Guest(s)