Romance சும்மா ஒரு காதல் கதை!!!
#19
வித்யா வித்தைக்காரி
【15】

வளனின் செயலால் ஒரு கணம் ஆடிப் போய் விட்டாள். இருந்தாலும்...

ச்ச.. இப்படியா என் ஃபர்ஸ்ட் நைட் நடக்கணும் என வளன் காதுகளில் விழவேண்டும் என சத்தமாக சொன்னாள்.

தன் கணவனிடம் எந்த அசைவும் இல்லை..

இப்படி நேரம் காலம் பார்க்காம ஒண்ணு சேரந்துட்டமே, இனி என்ன ஆக போகுதோ, இனி என்னை யாரு கட்டிப்பா என ஒப்பாரி வைப்பது போல பேசினாள்.

ஸ்டாப் இட், யூ இடியட் என திரும்பி வித்யாவை பார்த்தான்.

ரேப் பண்ணிட்டு என்னையே திட்டுறீங்களா?

யாரு, யார ரேப் பண்ணுனா?

இங்க யாரெல்லாம் இருக்கா?

ஹலோ, எல்லாம் ஆரம்பிச்சது நீ, அது நியாபகம் இருக்கட்டும்.

நா‌ன் சின்ன புள்ள, 20 வயசு முடியலை. குளிர்ல ஏதோ தெரியாம எங்கேயாவது தொட்டா இப்படி தான் பண்ணுவீங்களா..

அய்யய்யோ நம்ம வாயில இருந்து உண்மைய வரவழைக்க டிராமா போட ஆரம்பிசுட்டா..

நடந்தது நடந்து போச்சு, அதுக்கு இனி என்ன பண்றது..

என்ன இவ்ளோ சாதாரணமா சொல்றீங்க..

நீ தான் காரணம்..

சரி எனக்கு நிதானம் இல்லை. 4 கழுதை வயசு ஆகுது, என்னை தள்ளி விடாம‌ இப்படி தான் மேல..

வளன் முறைப்பதை பார்த்தவள் மேற்கொண்டு பேசாமல் வாயை மூடிக் கொண்டாள்..

நாம ஊருக்கு எப்போ போறோம்?

இன்னைக்கு ஈவினிங்.

ஓகே.

ஏன் கேக்குற..

எக்ஸாம் பேப்பர் சேஸ் பண்ண முடியுமான்னு ஆளு தேடணும்.

என்ன?

காசு குடுத்து பாஸ் பண்ண ஆளு தேடணும்.

படிச்சு பாஸ் பண்ற எண்ணம் இல்லை?

படிப்பு வந்தா நான் படிக்க மாட்டேன்னா சொல்ல போறேன்.

இப்படி பிட் அடிக்கிறது, ஃபிராடு பண்றதுன்னு பாஸ் ஆகிறதுக்கு சும்மா இருக்கலாம்.

என்ன பண்ண? பாஸ் ஆனா தான நாளை பின்ன வேற கல்யாணம் பண்றப்ப டிகிரி முடிச்சேன்னு சொல்ல முடியும்.

நீ எப்படியும் போ, ஊருக்கு போனவுடன் எனக்கு விவாகரத்து குடு..

இது நல்லா இருக்கே, ராத்திரி ஒண்ணும் தெரியாத பச்சை மண்ணு மேல பாய்வாறாம். ஊருக்கு போனவுடனே விவகாரத்து கேட்பாறாம்.

திரும்பவும் சொல்றேன், எல்லாம் உன்னால.

இப்படியே பேசுனா அத்தை (வள்ளி) கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடுவேன்.

என்ன சொல்லுவ?

உங்க புள்ளை விவாகரத்து கேட்டுட்டு, வாய்ப்பு கிடைச்சதும் என் மேல் பாய்ஞ்சுட்டாருன்னு சொல்வேன். எனக்கு நீதி வேணும்னு ரோட்ல இறங்கி போராட்டம் பண்ணுவேன்.

அய்யோ, உன்கிட்ட பேசி... ச்சய்.. என சொல்லி டென்ட் விட்டு வெளியே வந்தான். ட்ரெக்கிங் முடிந்து சென்னை வந்து சேரும் வரை வளன் காதில் அடிக்கடி ஏன் இப்படி பண்ணுனீங்க என குத்திக் காட்டிக் கொண்டே இருந்தாள்.

செ‌ன்னைக்கு நடு இரவில் வந்து சேர்ந்தார்கள். கதவை திறந்த தாயார்...

போன காரியம் எல்லாம் சக்ஸஸ்தான என வித்யா காதில் கேட்க..

அய்யோ அத்தை இதெல்லாமா கேட்பீங்க எனக்கு வெட்கமா இருக்கு என சத்தமாக வளன் காதில் விழ வேண்டும் என்பதற்காக சொன்னாள். வளன் எப்போதும் போல வித்யாவை முறைத்துக் கொண்டிருந்தான்.

டைம் ரொம்ப லேட் ஆகிடுச்சு, நீங்க போய் தூங்குங்க..

ஆமா அத்தை, உடம்பெல்லாம் ஒரே வலி... குட் நைட் அத்தை, குட் நைட் மாமா என சொல்லி தங்கள் அறையை நோக்கி நடந்தாள்.

உடம்பு வலி அர்த்தம் புரிந்த வாசு மற்றும் வள்ளி ஒருவரை ஒருவர் பார்க்க, வளன் காதில் புகை மட்டும்தான் வரவில்லை.

வித்யாவின் பின்னால் வந்தவன்...

ஏண்டி, உனக்கு அறிவு இருக்கா இல்லையா?

எந்த அறிவு?

அந்த கேள்வி அவனை கோபத்தின் உச்சத்துக்கு கூட்டிச் சென்றது..

உடம்பு வலிக்குதுன்னு ஏண்டி சொன்ன..

உடம்பு வலிச்சா வலிக்குதுன்னு சொல்லாம வேற எப்படி சொல்றது?

அய்யோ, அவங்க என்ன நினைப்பாங்க..

பேரன் பேத்தின்னு..

என்ன?

ஒண்ணுமில்லை..

இவளிடம் பேசி எந்த அர்த்தமும் இல்லை என்று வளன் இலேசாக குளியல் போட்டுவிட்டு வரும்போதே தூங்கி விட்டாள்.

லைட் ஆஃப் பண்ணும்வரை வித்யா முகத்தை பார்க்கும் போதெல்லாம் சிரித்துக் கொண்டிருந்தான் வளன்..

மறுநாள் காலை வித்யா எழுந்த போது வளனை காணவில்லை. காலையிலே எங்கே போய்ருப்பான் என நினைத்துக் கொண்டே காலைக் கடன்களை முடிக்க பூஸ்ட் வேண்டும் என்பதால் லேப் அறை வழியே நடக்கும் போது வளனைப் பார்த்தாள். பாருடா இவ்ளோ பொறுப்பான ஆளு...

தன்னை பார்த்துக் கொண்டே செல்லும் மனைவியைப் பார்த்து...

என்ன?

வயிற்றில் குழந்தை இருக்கும் போது தடவினால் எப்படி இருக்குமோ, அதேபோல் வயிற்றை தடவிக் காட்டிக் கொண்டே வெட்கப் படுவது போல தலையை கொஞ்சம் வெட்டிக் கொண்டு கீழே இறங்கினாள்.

லேப் அறையை விட்டு வித்யா வெளியேறும் வரை உர்ரென முகத்தை வைத்திருந்த வளன், அவள் அறையை விட்டு வெளியேறியதும் சிரித்தான். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் ரெடி பண்ணிடலாம் வித்யா என கதவை திறந்து அவள் கிச்சனுக்குள் நுழைவதை பார்த்தான். கிச்சனுக்குள் நுழைந்த வித்யா..

அத்தை, நாக்கு செத்து போய் வந்திருக்கேன், இன்னைக்கு என்னவெல்லாம் எனக்கு சமைச்சு குடுக்க போறீங்க?

வள்ளி சிரித்தாள். ஹாலில் இருந்த வாசுவும் சிரித்தார்.

உனக்கு என்ன வேணும்னு சொல்லிடு அதையே பண்ணிடலாம் என பூஸ்ட் ரெடி செய்தாள் வள்ளி..

வளன் எங்கே...

அவங்க லேப்ல இருக்காங்க..

இன்னும் அதை கட்டிகிட்டு தான் அழுறானா?

அதானே, நல்லா கேளுங்க அத்தை..

பூஸ்ட் குடித்து முடித்தாள், குடு குடுவென ஓட, சாப்பிட வரும் போது அவனை கூட்டிட்டு வா என வள்ளி கத்தினாள்..

வாசு, வளன், வித்யா மூவரும் உட்கார்ந்து காலை உணவு அருந்த, வள்ளி பரிமாறிக் கொண்டிருந்தாள்.

மாமா..

சொல்லு மருமகளே..

உங்களுக்கு பேப்பர் சேஸ் பண்றது பத்தி தெரியுமா?

தெரியும், ஏன் கேக்குற?

ஃபெயில் ஆன பாடம்..

வளன் : ஏய் வாய மூடு..

நீ சொல்லும்மா..

அதான் ஒரு எருமை மாடு வந்து பிட் அடிக்க விடாமல் ஃபெயில் ஆகிடும்னு சொன்னேனே. வளனைப் பார்த்து முறைத்துக் கொண்டே சொல்ல, வாசுவுக்கு பொறி தட்டியது.. அதே கல்லூரியில் சமீபத்தி்ல வேலைக்கு சேர்ந்த வளன்தான் அந்த எருமை மாடு என..

ஆமா..

அந்த சப்ஜெக்ட்க்கு பேப்பர் சேஸ் பண்ண ஆள் தெரிஞ்சா சொல்லுங்க..

கண்டிப்பா சொல்றேன்...

இது உண்மையிலே என்னோட அப்பா தானா இவருக்கு என்ன ஆச்சு?

வளன் மற்றும் வித்யா சாப்பிட்டு முடித்து மேலே செல்ல, நடந்த விஷயங்களை வள்ளியிடம் சொன்னார் வாசு.

நீங்க எதுவும் பண்ண போறீங்களா?

அய்யோ, இல்லை வள்ளி. வித்யா பிட்ட பிடிச்சது வளன்தான். அதான் அவனை கடுப்பேத்த அப்படி கேக்குறா..

அய்யய்யோ, கோபத்துல எதாவது பண்ணிட போறாங்க அவன்..

ஹா ஹா. அந்த கட்டத்த வளன் தாண்டிட்டான் வள்ளி..
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【15】 - by JeeviBarath - 13-03-2024, 05:44 PM



Users browsing this thread: 2 Guest(s)