Romance வித்யா வித்தைக்காரி(நிறைவுற்றது)
#17
வித்யா வித்தைக்காரி
【13】

⪼ சென்னையில்... ⪻

வளன் பார்ட்னராக இருக்கும் அந்த அலுவலகத்தில், பிற பார்ட்னர்களுடன் பேசிய சீனிவாசன் தனக்கு கீழே வேலை செய்யும் மேனேஜர் ஒருவரை அழைத்து 2 மாதம் குடுக்க முடியாது. 40-42 நாள் டைம், அதுக்குள்ள முடிக்கணும் என இன்ஃபர்மேஷன் வளனுக்கு பாஸ் பண்ணுங்க என்றார்.

அந்த மேனேஜர் பலமுறை முயற்சி செய்தும் வளனை ரீச் பண்ண முடியவில்லை. விஷயத்தை சீனிவாசன் காதில் சொல்ல அவருக்கு கடுமையான கோபம். இப்படி ஏன் திடிர்னு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம நடந்துக்கிறான். வெண்ணெய் திரண்டு வந்த நேரத்துல தாழியை உடைச்ச கதையா இருக்கு. அவனுக்கு இருக்கு எனக் கருவிக் கொண்டார்.

⪼ குளு மணாலியில்... ⪻

மதிய உணவு வேளையில் எல்லா ஜோடிகளும் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வளன் மட்டும் வித்யாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தான். அவள் நெருங்கி வர தன் பார்சலை பிரிக்க ஆரம்பித்தான்.

வா சாப்பிடு எ‌ன்று‌ சொல்லி அவளுடைய பார்சல் எடுத்துக் கொடுத்து ஒரு வாய் எடுத்து சாப்பிட்டான்.

எங்க பராக்கு பாத்துட்டு வர? எல்லாரும் சாப்பிட்டு முடிக்க போறாங்க என இரண்டாவது வாய் சாப்பாட்டை வாயில் எடுத்து வைத்தான்.

நீங்க தான் அடிச்ச இடத்துல சிவந்து போய் இருக்கான்னு பார்த்து தடவி விடணும்னு சொன்னீங்க அதான் பிரைவசி இருக்குற ரூம் தேடினேன்.

பிரைவசியா எதுக்கு?

டிரஸ் எல்லார் முன்னாலயுமா கழட்டி போட்டுட்டு இந்தா தடவுங்கன்னு சொல்ல முடியும்?

இந்த பதிலை கேட்ட வளனுக்கு புரையேறி சிரசில் அடிக்க, சில நிமிடங்களுக்கு சிரமப் பட்டான். வளன் சாதாரண நிலைக்கு வரும்வரை முதுகில் தடவிக் கொடுப்பது, தலையில் தட்டுவது, தண்ணீர் எடுத்துக் கொடுப்பது என எல்லாம் செய்தாள்.

சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் வாயை மூடிக்கிட்டு இரு..

வாயை மூடி சாப்பிடவும் என சொல்லி வாயை மூடிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

அவள் சாப்பிடாமல் உதட்டைக் குவித்து அவனைப் பார்ப்பது அவனுக்கு சிரிப்பை வர வழைக்க..

ரொம்ப பண்ணாதடி என சொல்லி நிமிர்ந்து பார்க்க, வித்யாவின் கண்கள் அவர்கள் அருகிலிருந்த ஜோடி ஒருவருக்கு ஒருவர் சாப்பாட்டை ஊட்டி விடுவதை பார்த்துக் கொண்டிருந்தது.

வளன் ஒரு கையில் சாப்பாடு மறு கையில் ஸ்டிக் எடுக்க...

நா‌ன் ஒண்ணும் குழந்தையில்லை, குச்சி எடுக்க அவசியம் இல்லை..

அப்போ ஒழுங்கா சாப்பிடு இன்னும் நிறைய தூரம் நடக்க உடம்புல சக்தி வேணுமே..

அதான் எல்லாம் அளவுக்கு அதிகமாதான இருக்கு, ஒரு நேரம் சாப்பிடலன்னா குறைஞ்சி போய்டாது..

உன் விருப்பம் என சொல்லி தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

விவகாரத்து பற்றி பேசினாலும் சில ஜோடிகள் ஊட்டி விடுவதை பார்க்கும் போது தன் கணவனும் அப்படி செய்ய மாட்டானா என வித்யா ஏங்கினாள்.. இது கூடவா உனக்கு புரியலைடா என்பதை போல தன் கணவனைப் பார்த்தாள்.

அவனுக்கும் அவளது எதிர்பார்ப்பு முதலில் புரியவில்லை. தங்களுக்கு பின்னால் வந்த கைடு வளனைப் பார்த்து சாப்பாடு ஊட்டுவதைப்‌ போல கையை உயர்த்த நிலமையை புரிந்து கொண்டு வளன் அதையே செய்தான்.

வித்யா அந்த சாப்பாட்டை வாயில் வாங்கவில்லை. ஆனால் அவள் மனது நிறைந்தது...

தாங்க்ஸ் என சொல்லி சாப்பிட ஆரம்பித்தாள்.

பாதி கூட சாப்பிடவில்லை..

ஏன் போதுமா..

சாப்பாடு நல்லாவே இல்லை. இதையெல்லாம் எப்படி சாப்பிடுறாங்கன்னு தெரியலை என பசியில் ரவுண்ட் கட்டி சாப்பிட்ட வளனை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னாள்..

இருவரும் சாப்பிட்டு முடித்து கை கழுவினார்கள். மீண்டும் கணவனுக்கு தாங்க்ஸ் சொன்னாள் வித்யா, கணவன் சாப்பாடு வேண்டுமா என ஊட்டிவிட தூக்கிய கைகள் அவள் வயிறு மற்றும் மனம் இரண்டையுமே நிறைத்திருந்தது.

இரவு டென்ட் அமைத்து தங்க வேண்டும் என்றார்கள். அவளுக்கு அது புரியவும் இல்லை, அதைப் பற்றி கவலையும் இல்லை. வெளிச்சம் குறைந்து இருட்ட துவங்கும் போது தான்..

இங்க எப்படி தங்குவது? ரூம் எதுவும் இல்லையே..

டென்ட்...

டென்ட்லயா..

எல்லாருக்கும் அப்படிதான், அங்க பாரு என சொல்ல, ஜோடிகளுக்கு டென்ட் அமைக்க கைடுகள் உதவி செய்தார்கள்...

டென்ட் ரெடி ஆனது...

இது ரொம்ப சின்னது, இதுல எப்படி ரெண்டு பேரு நான் மாட்டேன் என முரண்டு பிடிப்பது போல பேச ஆரம்பித்தாள்.

நமக்கு மட்டும்னு இங்க ஹோட்டல் ரூம் கிடைக்காது, இருக்குறத வச்சி அட்ஜஸ்ட் பண்ணு என சொல்லும் போதே சில ஜோடிகள் தங்கள் டென்ட் உள்ளே புகுந்தனர்.

நா‌ன் மாட்டேன் பா..

அப்ப வெளியில தூங்கு..

வெவ்வவெவ.. லூசு...

என்ன சொன்ன..

ஓகே மிஸ்டர் வளன்னு சொன்னேன்.

பயமா இருக்கா?

மிருகங்கள் வருமா?

அதெப்படி வராம இருக்கும்..

அய்யோ, உண்மையாவா..

எனக்கு எப்படிடி தெரியும். நானும் உன்கூட தான வந்தேன்.

கேட்டு சொல்லுங்கப்பா பிளீஸ்..

இது காடு. கண்டிப்பா மிருகங்கள் வரும். நம்மள கொல்லும் அளவுக்கு எதுவும் இருக்காது, போதுமா..

எப்படி நம்ப?

அப்படி இருந்தா, அந்த கைடுங்க டென்ட்ல தங்குவாங்களா..

நா‌ன் உள்ள போறேன், நீ வர்றியா இல்லையா எனக் கேட்க...

அவன் படுத்த பிறகு, உள்ளே பார்த்தவளுக்கு அழுகை மட்டும்தான் வரவில்லை. கொஞ்சம் அசைந்தாலும் இருவர் உடலும் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு இருந்தது.

கைடுகள் தீ மூட்டி உட்கார, கொஞ்ச நேரம் அங்கே உட்காரலாம் என்றாள். தீயை சுற்றி வளன் & வித்யா உட்கார மேலும் சில ஜோடிகளும் சேர்ந்து கொண்டார்கள். இரவு உணவாக கொஞ்சம் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார்கள்.

தூங்கலாம் என சொல்லி வித்யா டென்ட் உள்ளே நுழையும் வரை அவளை ரசித்தான். உள்ளே இருவரும் படுத்த பிறகு இடம் போதவில்லை. நகரும் போது இருவரும் இடித்துக் கொண்டார்கள். அவர்களின் பின்புறம் இடிக்க..

ஏங்க, கொஞ்சம் தள்ளிப் படுங்க..

இதுக்கு மேல தள்ளிப் படுக்கணும்னா நான் வெளிய தான் படுக்கணும்..

ஒரு பொண்டாட்டிக்காக இது கூட செய்ய மாட்டீங்களா?

அவன் முகத்தில் புன்னகை, ஆனாலும் கோபம் நிறைந்து உன்னை நான் கடிச்சு திங்க மாட்டேன் என்றான்.

ஓஹ்! அப்பிடியா..

ஆமா, நீ அந்த அளவுக்கு ஒர்த் இல்லை..

யாரு நான் ஒர்த் இல்லையா என மனதுக்குள் சிரித்தாள்.

ஆமா நீ தான் என அவள் காதில் அவன் சொல்வது போல இருந்தது. அவன் கைகள் அவள் கைகள் மேல் உரச, அடுத்த நொடி அவள் கழுத்தில் வளனின் மூச்சுக் காற்று விழ, அவசர அவசரமாக திரும்பினாள்.

இருவரின் மூச்சுக் காற்றும் மற்றவர் மேல் விழும் அளவுக்கு நெருக்கம்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
வித்யா வித்தைக்காரி 【13】 - by JeeviBarath - 10-03-2024, 11:25 PM



Users browsing this thread: 10 Guest(s)