10-03-2024, 01:21 PM
வித்யா வித்தைக்காரி
【12】
【12】
வளனுக்கும் இதுவரை ட்ரெக்கிங் சென்ற அனுபவம் இல்லை. ஆனால் தினமும் ஜாகிங் செல்வதால் ஃபிட்டாக இருந்தான். வித்யா அப்படியல்ல. அதனால் தான் ட்ரெக்கிங் புக் செய்வதற்கு முன் கேட்டான். அவள் எப்போதும் போல நானெல்லாம் யாரு தெரியுமா, இதெல்லாம் சப்ப மேட்டர் என்பதைப் போல பதில் சொன்னாள். அதன் விளைவு இருவரும் கிளம்பி லாபி வந்தார்கள்.
அங்கே இருந்த ஜோடிகளிடம் ஹோட்டல் நிர்வாகி ஒருவர், "இது மே மாதமாக இருந்தாலும், குளிர் இருக்கும். அதனால் நல்ல குளிர் தாங்கும் ஜெர்க்கின் கையில் வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரை செய்தார்.
போகும் வழியில் சில ஆட்கள் ஏற, இப்படி தான் கடத்திட்டு போய் ஆள உயிரோட அனுப்பனும்னா காசு குடுன்னு அந்த படத்துல கேட்பாங்க என்றாள். சும்மா அமைதியாக இருந்தவன் மனதில் பீதியை கிளப்பி விட்டாள்.
வாகனம் ஒரு இடத்தில் வந்து நிற்க, இனி இவர்கள் உங்களுக்கு உதவி செய்வார் என இருவரை காட்டிவிட்டு அந்த வாகனம் கிளம்பியது. மொத்தம் 12 ஜோடிகள், 3 கைட்கள். அந்த படத்துல என ஆரம்பித்த வித்யாவை பார்த்து முறைத்தான்.
சரியான பயந்தாங்கொள்ளி என அவன் காது படவே சொன்னாள். அவனது கெமிக்கல்ஸ் நாசம் ஆனபோது எரிந்து விழுந்த வளன், இப்போது கொஞ்சம் கொஞ்சம் ரசிக்க ஆரம்பித்திருந்தான்.
பெருசா ஒயிட்டா பனிக்கட்டி எல்லா இடத்துலயும் இருக்காது, ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம். சில இடங்களில் பனி முழுதும் உருகாமல் ரொம்ப திக்கா இருக்கும் பிளாக் ஐஸ்னு சொல்வாங்க. சோ நாங்க சொல்ற விஷயங்களை கவனித்து கேட்டு அதன்படி எங்க பின்னால வரணும் என அறிவுரை செய்தார்கள். கையில் ஆளுக்கு ஒரு குச்சியை கொடுத்தார்கள்.
அதை கையில் வாங்கிய வித்யா "இது ரசனை இல்லாத உங்களை அடிக்கவா என்று வளனிடம் கேட்டாள்"
தன் மனைவி மேல் ஆசை முளைத்த வளன், தன் மனைவிக்கு தன் மேல் ஆசை இன்னும் வரவில்லை என நினைத்துக் கொண்டான். நேற்று ஷாப்பிங் போன இடத்தில் அந்த விலையுயர்ந்த ஆடையை வாங்க சொன்ன போது "ஊருக்கு போன பிறகு இப்படி யாரு வாங்கி கொடுப்பா? அதனால வேண்டாம் " என்று வித்யா சொன்னபோது இருந்த அதே பீல்.
ட்ரெக்கிங் துவங்கியது. தூரத்தில் பனிமலைகள் தெரிந்தாலும், அவர்கள் துவங்கிய இடத்தில் பெரிதாக பனிக்கட்டி இல்லை. பனி மலைகளை ரசித்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தார்கள். ஒற்றைப் பாதையாக இல்லாமல் ஜோடியாக நடந்து செல்ல வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் மற்ற எல்லா ஜோடிகளும் நன்கு நெருக்கமாக கைகளை பிடித்துக் கொண்டும் இடித்துக் கொண்டும் நடப்பதை பார்த்த வித்யாவுக்கு பொறாமை. இதெல்லாம் நமக்கு எங்கே என்று முணுமுணுத்துக் கொண்டே நடக்க, கையை பிடித்தாள் எதுவும் சொல்வாளோ என்ற எண்ணத்தில் குறும்புக்கார மனைவியின் பின்னழகைப் பார்த்து ரசித்தபடி வந்தான் வளன்.
எல்லோரையும் நிற்க சொல்லி, இதோ பாருங்க என முதல் சைட் சீயிங் பகுதியை காட்ட எல்லோரும் வாய் பிளந்து பார்த்ததைவிட போட்டோ எடுப்பதில் கவனம் செலுத்த, வளன் அந்த அழகை ரசித்தான். வித்யாவுக்கு வீடியோ எடுக்க ஆசை, வளனிடம் சொன்னால் செய்வானா இல்லையா என தெரியாதே. கைடு ஒருவரை கூப்பிட்டு வீடியோ எடுக்க சொல்ல, அவன் வளனை நெருங்கி நிற்க சொல்லி வீடியோ எடுத்தான்.
ஏற்கனவே பிளேன் முன்னால் வீடியோ எடுக்க முடியாது என்றவன், இந்த முறை வீடியோ எடுக்கணுமா எனக் கேட்டான். அவள் ஆமா என்று சொல்ல, வீடியோ மற்றும் போட்டோ எடுக்க அவள் கொடுக்கும் போஸ் பார்த்து சிரித்துக் கொண்டான்.
குடுங்க எப்படியிருக்குன்னு பார்க்கணும் என அவசரமாக வந்தவள் கால் வழுக்கி அவன் மேல் விழுந்தாள். வளன் கீழே கிடக்க வித்யா அவன்மேல் இருந்தாள்.
அந்த பக்கம் (எதிர் திசையில்) விழுந்திருந்தா ரெண்டு பேருக்கும் சங்கு தான். தன் மார்பகங்களை வளன் நெஞ்சில் நசுங்கிக் கொண்டிருக்க சட்டென எழும்பி விடுவாள் என நினைத்த வளன் எண்ணத்தை பொய்யாக்கும் விதமாக இப்படித்தான் அந்த படத்துல என ஆரம்பிக்க, இருவரும் எழுந்து நிற்க கைடு உதவி செய்தார்கள். நல்ல ரொமான்டிக் ஸீன் என ஒரு ஜோடி சொன்னது அவர்கள் காதில் விழுந்தது.
கொஞ்ச நேரத்தில் மீண்டும் பள்ளத்தாக்கில் அவ்வளவு அழகான வியூ. அவர்கள் நின்ற இடத்தில் சற்று ஓரமாக கொஞ்சம் பனிக்கட்டி இருக்க போட்டோ எடுங்க என சொல்லிக் கொண்டே அங்கே சென்றாள்.
படங்களில் பனிக்கட்டியை ஜோடிகள் வீசுவதை பார்த்து பழக்கமான வித்யா அதே போல செய்தாள்.
ஏய் சும்மா இருடி..
முடியாது என்ன பண்ணுவீங்க..
உன்னை என மொபைல் ஃபோன் எடுத்து பாக்கெட்டில் வைத்துவிட்டு அவளை நோக்கி மூஞ்சை கோபமாக வைத்துக் கொண்டு நெருங்க, அவசரமாக ஓட முயன்றவள் கால்கள் வழுக்க, கீழே விழப் போனவளை இடுப்பில் கைவைத்து தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
இப்படித்தான் ரோஜா படத்துல அரவிந்த் சாமி பிடிப்பாரு..
என்ன?
புது வெள்ளை மழை பாட்டுல இப்படி தான் அரவிந்த் சாமி அவரு ஆள பிடிச்சிப்பாரு..
எப்படியும் போ என கையை எடுக்கவா முடியும்?
இப்படியே என்னை சென்னை எக்ஸ்பிரஸ் படம் மாதிரி தூக்கிட்டு போங்க..
நீ ரொம்ப படம் பார்த்து கெட்டுப் போயிருக்க..
நீங்க படம் பார்க்காம தான் ரொமான்ஸ்னா என்னன்னு தெரியாம இருக்கீங்க..
ஓஹ்! இது ரொமான்ஸ்? கடுப்ப கிளப்பாம எழும்பு என அவளை நிற்க வைத்தான்.
நீங்க அரவிந்த் சாமி மாதிரி இல்லாட்டியும் நான் மதுபாலா மாதிரி அழகான கிராமத்து பிகர்...
யாரு? நீ மதுபாலாவா?
ஆமா, நல்லா பாருங்க நான் மதுபாலா மாதிரி செம அழகு..
நீ அதை விட அழகு வித்யா என மனதில் நினைத்தான், ஆனால் வெளியில் முறைத்தான்.
நல்லா பாருங்க என கைகளை உயர்த்தி ஒரு சுற்று சுற்றினாள்..
இப்ப தெரியுதா...
நல்லாவே தெரியுது..
என்ன நல்லாவே தெரியுது..
என்ன தெரியுது? என் அழகா இல்லை அறிவா?
கைடு மீண்டும் கூப்பிட எல்லாரும் நடக்க ஆரம்பித்தார்கள்..
மிஸ்டர் வளன் டெல் மீ. மது பாலா கிட்ட இருந்ததில என்கிட்ட எதுவும் இல்ல என கேட்டுக் கொண்டே சமதளப் பரப்பை தாண்டி மேலே செல்ல காலடி எடுத்து வைத்தாள் வித்யா..
வித்யாவின் குண்டிக் கன்னங்கள் ஏறி இறங்குவதை பார்த்தவன்..
"எல்லாமே அளவுக்கு அதிகமா பெருசா இருக்கு" என்றான்.
உள்ளுக்குள் சந்தோஷம், ஆனால் பேயறைந்தது போல முகத்தை வைத்துக் கொண்டு வளனை திரும்பிப் பார்த்தாள்.
போ எல்லாரும் போறாங்க..
இதெல்லாம் ஒரு விஷயமா என சும்மா விடுபவளா வித்யா..
என்ன பெருசா இருக்கு..
எல்லாம் தான்..
ஹலோ நான் ஒண்ணும் குண்டு இல்லை..
நான் அப்படி சொல்லவே இல்லை..
எல்லாம் பெருசா இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்.
தெரியாம சொல்லிட்டேன்..
நடக்காமல் திரும்பி அவன் செல்ல முடியாமல் வழி மறித்து நின்றாள். வளன், வித்யா அவர்களுக்கு பின்னால் வந்த கைடு மட்டும்...
இப்ப சொல்ல போறீங்களா இல்லையா எனக் கேட்டவள் கெமிக்கல் மூஞ்சி மாட்டிக்கிட்டான் என நினைத்தாள்.
உனக்கு எங்கெங்கே வீங்கியிருக்குன்னு உனக்கே தெரியாதா?
அதெல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க எத என கேட்டு முடிக்கும் முன்னர் தன் கையில் இருந்த ஸ்டிக் எடுத்து வித்யா பின்னால் தட்டி இங்கே என்றான்..
இதுக்காக பயந்து வாயை மூடிக் கொண்டு போகும் ஆளா வித்யா..
இப்ப தான புரியுது சார் எதுக்கு என் பின்னால வர்றீங்கன்னு. நானும் ஏதோ பொண்டாட்டி மேல பாசத்துல விழுந்தா தாங்கிப் பிடிக்க பின்னால வர்றீங்கன்னு நினைச்சேன்..
அடிப்பாவி இதுக்கும் கவுன்டர் குடுக்குற என்பதைப் போல தன் மனைவியைப் பார்க்க...
ரொம்ப பார்க்காதீங்க, அப்புறம் அழகுல மயங்கி விழுந்துடுவீங்க என்றவள், மற்ற ஜோடிகளை வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
இவளுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்பதைப் போல நடந்து செல்லும் மனைவியை பார்த்தான்.
சார், லெட்ஸ் கோ என்றான் கைடு..
நீ அழகு தான், ஆனால் உன்னைவிட அழகா நிறைய பேர பார்த்துட்டேன். படிப்புல உன் அறிவு தெரியுது..
நீ சாமர்த்தியமான பொண்ணு, குறும்புக்கார பொண்ணும் கூட. அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு... பட் நீ என் கெமிக்கல்ஸ பண்ணுனதுக்கு உன்ன பழிவாங்க துடிக்குதுடி என் மனசு என மனைவியை நெருங்கும் எண்ணத்தில் வேகமாக நடக்க ஆரம்பித்தான்..
கெமிக்கல் மூஞ்சி ரொமான்டிக்கா பீல் பண்ணி நம்மள நமக்கு தெரியாம ரசிக்கிறான் போல என நினைக்கும் போதே வித்யாவின் முகத்தில் புன்னகை..
சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்க்க..
என்ன நக்கலா இருக்கா என ஸ்டிக்கால் இலேசாக மீண்டும் அவள் குண்டி கன்னங்களில் தட்ட..
ஆ.. வலிக்குது என பாவ்லா செய்தாள்..
இது உனக்கு வலிக்குதா, ரொம்ப பண்றடி..
ஆமா வலிக்குது..
தடவி விடவா..
நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன். உங்களால அதை செய்ய முடியுமா மிஸ்டர் வளன் என சொல்லி கண்களில் காதல் வழிய கணவனைப் பார்த்தாள்.
வளன் தன் கைகளை உயர்த்த...
அவனுக்கு வசதியாக திரும்பி நின்றாள்...
வெட்கமே இல்லையாடி உனக்கு...
புருஷன்கிட்ட போய் இதுக்கெல்லாம் வெட்கப்பட முடியுமா?
ஏண்டி இப்படி பண்ற..
வலிக்குற இடத்துல தடவினாதான வலி போகும், தடவி விடுங்க...
கொஞ்சம் கோபம் நிறைந்து சற்று வலிக்கும் அளவுக்கு ஸ்டிக்கால் ஒரு அடி அடித்தான்.
அம்மா என்றாள் வித்யா...
தடவி விட சொன்னா இப்படி தான் அடிப்பீங்களா...?
வேகமா அடிச்சாதான அடிபட்ட இடத்துல சிவந்து போய் இருக்கான்னு பார்த்து அதுக்கு தகுந்த மாதிரி மருந்து போடமுடியும்...
இரண்டாவது முறையாக தன் கணவனுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் வித்யா...
இந்தமுறை அவளுள் காதல் காமம் வெட்கம்...
வளன் பின்னால் வந்த அந்த கைடு பாவம். அவனுக்கு அவர்கள் பேசும் மொழி புரியவில்லை. அவர்களின் காதல் மொழி நன்றாகவே புரிந்தது...
வளனுக்கோ மெலிதாக துளிர்விடும் காதலை ஒருவேளை காமமாக நினைத்து விடுவாளோ என்ற தயக்கம்.
பாவம் வித்யா அவளுக்கு அவன் தனக்கு கம்பெனி கொடுக்க பேசும் வார்த்தைகள் பிடித்தன. விவாகரத்து கேட்ட பிறகு கெமிக்கல் மூஞ்சியான வளனின் அந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல அது காதல் மொழி என்பதை வித்யா மெல்ல மெல்ல புரிந்து கொள்வாளா???