Romance வித்யா வித்தைக்காரி(நிறைவுற்றது)
#13
வித்யா வித்தைக்காரி
【11】

கட்டிலில் இருந்து எழுந்த வித்யா ஜன்னல் ஓரம் போய் நின்றாள். இருவரும் தங்கள் உணர்சிகளை கட்டுப்படுத்த ரொம்பவே சிரமப்பட்டார்கள்.

தன் மனைவிதானே என்ற எண்ணத்தில் அவளிடம் கேட்கலாம் என நினைத்து ஜன்னல் ஓரம் நின்ற வித்யாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

நடந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் வித்யாவும் தூண்டப் பட்டிருந்தாள். வளனைப் பார்ப்பதை தவிர்த்தாள். விவாகரத்து கேட்டிருக்காண்டி, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என தனக்குத் தானே பேசிக் கொண்டாள்..

10-15 நிமிடங்களுக்கு நகராமல் ஜன்னல் ஓரம் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் மனைவியை விவாகரத்து கேட்ட பிறகு எப்படி அணுகுவது என்ற தயக்கத்தில், வித்யா நின்ற திசைக்கு எதிர் திசையை பார்த்தபடி படுத்தான் வளன்.

வித்யா படுக்கையில் வந்து உட்காரும் வரை சிறு சிறு இடைவெளிகளில் தன் தொண்டையை செருமினான்.

மேட்டர் செய்ய கூப்பிடுகிறான் என நினைத்த வித்யா அவனை திரும்பிப் பார்க்கவே இல்லை. 4-5 முறை செருமியும் அவள் வராததால், எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அவனை அறியாமல் அவள் மேல் ஒரு ஈர்ப்பு, மேலிருந்து கீழாக பார்த்தான். தன் மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான். வித்யா தன் கால்களை அட்ஜஸ்ட் செய்ய. அய்யோ பாவம், கால் வலிக்குது என நினைத்தான்.

வித்யா...

ஹம் (திரும்பாமல் சப்தம் மட்டும் கொடுத்தாள்.)

அங்க என்ன பண்ற..

அழகா இருக்கு, அதான் பார்த்திட்டு இருக்கேன்.

இங்க வா..

எச்சில் விழுங்கினாள் வித்யா. அவள் வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வரவில்லை.

உன்ன தான், வா வந்து உட்காரு..

மீண்டும் ஹம் என்ற சப்தம். அய்யோ செக்ஸ் வைக்க கூப்பிடறான் என நினைத்தாள்.

காரணம் புரிந்த வளன் அவளை சீண்டும் நோக்கில் என்ன பயமா இருக்கா?

பயமா எனக்கா? என்று கேட்டவள் திரும்பி விட்டாள். அய்யய்யோ அவசரப்பட்டுட்ட வித்யா என்று நினைத்தாள்.

வளன் அருகில் வித்யா உட்கார, வளன் ரிமோட் எடுத்து சேனல் மாற்ற ஆரம்பித்தான்.

உன்கிட்ட ஜெர்க்கின் இருக்கா?

அப்படின்னா?

குளிருக்கு முழுசா கவர் பண்ற டிரஸ்..

இல்லை..

கொஞ்ச நேரம் கழிச்சு ஷாப்பிங் போலாம்..

6 மணியளவில் இருவரும் ஷாப்பிங் செல்ல கிளம்பினார்கள். வளனால் பெரிதாக சிரமம் இல்லாமல் நடக்க முடிந்தது.

ரிசப்ஷன் வரும்போது மறுநாள் சைட் சீயிங் அல்லது ட்ரெக்கிங் பேக்கேஜ் இருப்பதாகவும், உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்தால் ஏற்பாடுகளை வசதியாக இருக்கும் என சொல்ல...

ட்ரெக்கிங் பற்றி வித்யாவிடம்  கேட்டான். அவளால் முடியுமா என்ற சந்தேகத்தில் கேட்க, ட்ரெக்கிங் தான் எனக்கு பிடிக்கும் என புளுகினாள். அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே நாளைக்கு முட்டி வலிக்குது, அங்க வலிக்குது இங்க வலிக்குதுன்னு எதாவது சொன்ன உனக்கு இருக்கு என சொல்லிக் கொண்டே ட்ரெக்கிங் என சொல்லி அதற்கான பணத்தை கட்டினான்.

ஷாப்பிங் சென்ற இடத்தில் வட நாட்டு ஸ்டைல் சுடி ஒன்று வித்யாவுக்கு ரொம்ப பிடித்து போக அதை ட்ரையல் ரூம் சென்று அணிந்து வந்து எப்படியிருக்கு எனக் கேட்டாள்.

வாவ் என அவளை ரசித்தான் வளன். சூப்பர் என்றான். திரும்ப பழைய உடையில் திரும்பியவள் விலை என்ன எனக் கேட்டாள், விலை தெரிந்த பிறகு அது வேண்டாம் என சொல்லி 1000 ரூபாய்க்கு குறைவான சுடி ஒன்றை எடுத்தாள். பணம் கொடுக்க முயன்ற வளனை வேண்டாம் என சொல்லி அந்த செக்ஷனில் பில் செட்டில் செய்தாள் வித்யா.

ஒரு விஷயம் வளனுக்கு தெளிவாக புரிந்தது. காசு விஷயத்தில் ரொம்ப சிக்கனம் என்று. அவளிடம் இருந்த ஆடைகள் எதுவும் ஆடம்பரமாக இல்லை. எல்லாமே எளிமையாக அவளுக்கு பொறுத்தமாக இருக்கும். இன்று அவள் வாங்கிய ஆடையும் அப்படி தான். ஆனால் வளனுக்கு முதலில் வித்யா அணிந்த ஆடை தான் பிடித்தது. வளன் பில் செட்டில் பண்றேன் என சொல்லியும் வித்யா மறுத்தாள்.

ஜெர்க்கின் வாங்க சென்ற இடத்திலும் விலை குறைந்த பொருளாக பார்க்க, வளன் கொஞ்சம் நல்ல
ஜெர்க்கின் வாங்க சொன்னான், என்கிட்ட காசு இல்லை என வித்யா சொல்ல, வளன் பில் செட்டில் செய்தான். நான் ஊருக்கு போன பிறகு காசு தருவதாக சொன்னாள் வித்யா. இரவு உணவையும் முடித்துக் கொண்டு அறைக்கு வந்தார்கள். இருவரும் ஓரளவுக்கு சகஜமாக மீண்டும் பேசத் துவங்கியிருந்தார்கள்.

வளன் பார்ட்னராக இருக்கும் நிறுவனத்தில் வீக்லி அப்டேட் கால் துவங்க, அதை அட்டென்ட் செய்தான். வளன் கால் பேசுவதால் டிவியை சத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த வித்யா, பாத்ரூம் சென்று தான் அணிந்திருந்த ஆடைகளை மாற்றிவிட்டு இரவு உடைக்கு மாறினாள்.

அதேநேரம் இன்னும் இரண்டு மாதம் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தான் வளன். லாஸ்ட் வீக் நடந்த காலில் ஒரு மாதம் என சொல்லிவிட்டு இப்போது இரண்டு மாதம் என சொன்னால் என்ன அர்த்தம் என அந்த கம்பெனியின்
லார்ஜஸ்ட் ஷேர் ஹோல்டர் சீனிவாசன் சொல்லிக் கொண்டிருந்தார். இவர் பல வருடங்களுக்குப் முன்பு வளனின் அப்பா வாசு வேலை செய்யும் அதே கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து பின்னர் ராஜினாமா செய்தவர்.

தவிர்க்க முடியாத சூழ்நிலை என்ற வளனை சற்று கடுமையாக பேசினார். வெளியே வந்த வித்யா, வளன் முகம் வாடியிருப்பதை பார்த்தாள். கால் பேசி முடித்தவனை கிண்டல் செய்யும் நோக்கில்..

யாரு கூட கடலை..

என் ஆளு கூட..

அப்புறம் ஏன் சோகம்?

கல்யாணம் ஆயிட்டு, சீக்கிரம் விவாகரத்து வாங்கிட்டு வந்து கல்யாணம் பண்றேன்னு பேசிட்டு இருந்தேன்.

கரெக்ட்டு. உங்களை கட்டிட்டு அழணும்னு எனக்கென்ன தலையெழுத்தா என வளனுக்கு பதில் சொன்னாள். என்னதான் முகத்தை சிரிப்பது போல வைத்துக் கொண்டாலும், அவள் மனதெல்லாம் அந்த வார்த்தையை சொல்லும் போது அப்படியொரு வலி...

இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மனதின் ஒரு ஓரத்தில் காதலிக்க தொடங்கியிருந்தார்கள்.

இரவு 9 மணியை நெருங்கும் போது ஆயின்மென்ட் எடுத்துக் கேட்டான். அதை கையில் எடுத்த வித்யாவுக்கு வெட்கம் பீறிட்டது. வெட்கம் கலந்து தலை குனிந்து கொண்டே வளனை நோக்கி அந்த ஆயின்மென்டை நீட்டினாள்.

அதை வாங்காமல் வளன் தன் மனைவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.

நிமிர்ந்து பார்த்தாள்..

ஹம்.. என கையை மீண்டும் நீட்டினாள்.

அவள் கையையும் தன் முட்டியையும் பார்த்தான். ஆயின்மென்ட் போட்டு விடு என்பதை தன் கண்களால் சொன்னான்.

வித்யாவுக்கும் வளனின் எதிர்பார்ப்பு புரிந்தது.

இந்தாங்க, பிடிங்க..

தன் மனைவியை வெறிக்க வெறிக்க பார்த்தவன். ஆயின்மென்ட் போட்டு விடலாமே என்றான்.

அது என இழுத்தாள்..

உனக்கு உன்மேல நம்பிக்கை இல்லைன்னா குடு என அவளை உசுப்பேற்றினான் வளன்.

சாருக்கு ரொமான்ஸ் காலை கேக்குது என நினைத்தாள். ஒரு நிமிடம் என்று சொல்லி, குளிருக்கு போட வாங்கிய அந்த ஜெர்க்கின் எடுத்து அணிந்தாள். ஜிப்பை கழுத்து வரை ஏற்றி விட்டாள்.

ஆயின்மென்ட் அப்ளை செய்தாள். அவளின் இந்த செய்கையை பார்த்த வளன் சிரிக்க ஆரம்பிக்க மறுநொடி இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள். காமம் சிறு துளியும் இருவர் மனதிலும் அந்த கணத்தில் இல்லை. ஏற்கனவே பயணக் களைப்பிலிருந்த இருவரும் படுத்த கொஞ்ச நேரத்தில் நன்கு தூங்கி விட்டார்கள்...
[+] 4 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: வித்யா வித்தைக்காரி - by JeeviBarath - 09-03-2024, 08:25 AM



Users browsing this thread: 1 Guest(s)