த(டு)டம் மாறும் விவாகரத்து தோழிகள்!
#39
ஜினா : என்ன விளையாடுறியா? என் காலேஜ் ஜூனியர் மகிழினிக்கு இன்னைக்கு கல்யாணம்னு சொன்னதுக்கே நான் மகிழினி அப்பனை திட்டிக்கொண்டு இருக்கேன்.
இதுல எனக்கு கல்யாணம்னா காலேஜே சிரிக்கும்.

ஜினா அம்மா: பார்த்தியா , உன்னோட ஜூனியர் பொண்ணே கல்யாணம் பன்றா உனக்கு என்ன?

ஜினா: படிக்கிற பொண்ணுங்களை கல்யாணம் பன்னிகொடுத்து அவங்க வாழ்க்கையை ஏன் இப்படி அழிக்கிறீங்க?

ஜினா அம்மா : படிச்ச திமிர்ல பெரிய பெரிய வார்த்தை பேசுறியா நீ? எந்த பெத்தவங்க புள்ளைங்க வாழ்க்கையை அழிப்பாங்க? 

ஜினா: ஒரு பொண்ணுக்கிட்டேந்து படிப்பை பறிச்சிட்டு கல்யாணத்தை பன்றது வாழ்க்கையை அழிக்கிறது இல்லையா?

ஜினா அம்மா: கல்யாணம் பன்றது வாழ்க்கையை அழிக்க இல்லை. வாழ்க்கையை உருவாக்க. கல்யாணம் பன்னிட்டு படி. யாரு உன்னை தடுத்தது. உன் ஜூனியர் பொண்ணு மகிழினிக்கு இன்னைக்கு கல்யாணம்னு சொன்னியே அவள் அப்பாக்கிட்ட கிட்டு பாரு. பொண்ண பெத்தவங்களுக்குத்தான் அவங்களோட பிரச்சினை புரியும்.
பெண்ணை பெத்தவன் தினம் தினம் வயித்துல நெருப்பக்கட்டிக்கிட்டு இருக்கனும். உனக்கு கல்யாணம். துபாய் மாப்பிள்ளை. மாசம் 5 லட்சம் சம்பாதிக்கிறான். கல்யாணத்துக்கு அப்பறம் நீயும் துபாய் போ. அங்க உள்ள காலேஜ்ல உன் படிப்ப முடி.துபாயிலையே உன் படிப்புக்கு ஏத்த மாதிரி வேலைக்கு வேணாலும் போ. 

ஜினாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. போனை வைத்துவிட்டு காலேஜை விட்டு வீட்டுக்கு புறப்பட்டாள் கல்லூரி மாணவியாக இல்லை, கல்யாண மணமகளாக.

அதே நேரத்தில் தந்தை மீது நம்பிக்கை வைத்திருந்த மகிழினி தன்னிடம் உள்ள அம்மாவின் பட்டு புடவையை எடுத்து உடுத்தினாள்.

அவளுக்கு தெரிந்த அலங்காரம் செய்தாள். 

கல்யாணத்துக்கு அலங்காரம் செய்ய கூட யாரும் இல்லை. காலேஜ்ல தோழிகளை கூட கல்யாணத்துக்கு அழைக்க முடியவில்லை.

இப்படி ஒரு கல்யாணம். என்ன செய்ய ஏழையாய் பிறந்தவளுக்கு கல்யாணமே ஒரு கனவுதான். அது இப்படியாவது நமக்கு நடக்குதே என ஆறுதல் அடைந்தாள்.

மகிழினி தந்தை வந்தான்.. 

அம்மாடி... அப்படியே அந்த அம்மன் சிலை மாதிரியே இருக்கம்மா... உன் புருஷன் கொடுத்து வைத்தவன். மகளை வாயார புகழ, வெட்கத்தில் தலை கவிழ்ந்தாள் மகிழினி.

வாம்மா வந்து கார்ல ஏறு...

தன் குடிசையின் வாசலில் நின்ற BMW காரை கண்டு அதிசயித்தாள் மகிழினி. 

யாரு காருப்பா? இந்த காருக்கு வாடகை கொடுக்க ஏது காசு? தந்தையை பார்த்து கேட்டாள் மகிழினி.

மகிழினி தந்தை: யம்மாடி... இது வாடகை காரு இல்லை. உன்னை கட்டிக்க போற சீமராஜாவோட காரு. நம்ம கஷ்டம் எல்லாம் இனி தீர போகுது. நம்ம வாழ்க்கை வசந்தமாக போகுது. காருல ஏறுமா... என சொன்ன அப்பனின் வார்த்தையை உண்மை என்று நம்பி காரில் ஏறிய மணப்பெண் மகிழினியை,  கறிக்கடைக்காரனை நம்பி கசாப்பு கடைக்குள் நுழையும் ஆட்டை போல நக்கலாக பார்த்தான் மகிழினியை அழைத்து செல்ல வந்த மகிழ்வானனின் பிஏ சன்முகம்.

-தொடரும்.
[+] 2 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: த(டு)டம் மாறும் விவாகரத்து தோழிகள்! - by Ishitha - 08-03-2024, 01:37 PM



Users browsing this thread: 8 Guest(s)