அபர்ணா அண்ணி
அப்பா கூறியதில் உண்மை இருந்தாலும் அம்மாவால் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..

"இங்க பாருங்க.. எனக்கு அபர்ணா பொண்ணு மாதிரி.. அவ இல்லாத வீடு இப்ப எப்புடி வெறிச்சோடிப் போய் கெடக்குது பாருங்க.. அவ இங்க எங்கயோ தான் இருக்குற மாதிரி எனக்கு தோணிட்டே இருக்கு.. பாவம்.. இப்ப என்ன பண்ணிட்டு இருக்காளோ..!" அம்மாவின் குரல் தழுதழுத்தது..

"சரி.. அபர்ணாவ நாம கூப்டுக்கலாம்.. அப்போ இந்த பொண்ணு லீனாவோட நிலம என்ன...? அவ யாருமே இல்லாம அனாதையா நிக்கிறா பாரு.." என்றார் அப்பா..

அம்மா கொஞ்ச நேரம் தலையில் கை வைத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.. நான் அங்கு இல்லாத நேரம் அப்பா அம்மா இது பற்றி என்ன பேசுகிறார்கள் என்று பார்ப்பதற்காக போனை எடுத்து வாய்ஸ் ரெர்கார்டரை ஓன் செய்து விட்டு கால் ஏதும் வந்தாலும் டிஸ்டர்ப் ஆகாமல் இருப்பதற்காக போனை பிளைட் மோடில் போட்டு அங்கேயே சோபாவில் வைத்து விட்டு எழுந்தேன்.. அவர்களிடம் லீனாவுடன் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு லீனா இருந்த ரூமுக்கு அருகில் சென்றேன்..

அவள் மேசையில் கைகளை வைத்து அதில் தலையை வைத்து படுத்தபடி அமர்ந்திருந்தாள்.. நான் கதவில் லேசாக தட்டி விட்டு,
"ஹாய்.. உள்ள வரலாமா...?" என்றேன்.

"ஹ்ம்ம்.. வாங்க.. வாங்க.." என்றபடி கண்களை மெல்ல விரல்களால் துடைத்துக் கொண்டாள்..

"இன்னும் அழுதுட்டு தான் இருக்கீங்களா...?"

"நோ.. நோ.. நா அழல.. நீங்க சொல்லுங்க.."

"அப்பா கேக்கும் போது அண்ணா தான் வேணும்னு சொல்லி இருக்கலாமே.. எதுக்கு அவன மறக்க ட்ரை பண்றேன்.. ஒரு வருஷம் டைம் தாங்கன்னு நல்ல புள்ள மாதிரி பேசுனீங்க...?"

"நல்ல புள்ள மாதிரி பேசல.. உண்மையிலேயே என்னோட மனசுல பட்டத தான் சொன்னேன்.."

"நீங்க அப்புடி சொல்லி இருந்தா ஒரு வேள அப்பா யோசிச்சிருப்பாரு.. உங்கள அண்ணனுக்கே கட்டி வச்சிருப்பாரு.."

"அப்போ உங்க அண்ணியோட வாழ்க்க என்னாகும்...? அத பத்தி யோசிக்கலையா நீங்க..?"

"எனக்கு உங்க காதல் ஜெயிக்கணும் னு ஒரு ஆச.. அபர்ணா அண்ணி ரொம்ப நல்லவங்க.. அவங்க புரிஞ்சிப்பாங்க.."

"புரிஞ்சிப்பாங்க தான்.. ஆனா.. அதுக்கப்புறமா அவங்கள யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க சொல்லுங்க..?"

"அவங்களுக்கு யாரையாச்சும் பாத்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்.. ஆனா உங்க காதல் ஜெயிக்கணும்.. அது தான் என்னோட ஆச..."

"அப்போ.. அபர்ணா அண்ணி உங்களுக்கு வேணாமா..?"

"அவங்க இந்த வீட்ல இல்லன்னாலும் என்னோட அண்ணியா எப்பவுமே என்னோட மனசுல இருப்பாங்க.."

"பட், எனக்கு அதுல இஷ்டமில்ல.."

"ப்ளீஸ் லீனா.. நீங்க அண்ணன கல்யாணம் பண்ணிக்க விருப்பமான்னு அப்பா கேட்டா யெஸ் னு சொல்லுங்க.."

"எனக்கு விருப்பமில்ல.."

"அப்போ உங்க காதல்...?"

"காதல் மனசுல இருக்கும்.. போகப்போக எல்லாமே மறந்துடும்.. ஒரு நாள்.."

"பட், நீங்க அப்புடியெல்லாம் எதுவும் தியாகம் பண்ண தேவல.."

"நானே வேணாம் னு சொல்றேன்.. நீங்க எதுக்கு என்ன போர்ஸ் பண்றீங்க சிவா..?"

"நீங்க அண்ணன கல்யாணம் பண்ணிக்கோங்க.. அபர்ணா அண்ணிக்கு அதுல ஒரு துளி கூட கவலை இருக்காது.."

"அத நீங்க எப்புடி சொல்வீங்க...?"

"அவங்க என்கிட்ட ஆல்ரெடி சொல்லிட்டாங்க.. இந்த இன்ஸிடன்டுக்கு அப்புறமா அவங்களுக்கு அண்ணன கொஞ்சம் கூட பிடிக்கல.. முழுமையாக வெறுத்துட்டாங்க.. அவன் கூட பெருசா பேசவும் மாட்டாங்க.. அதுக்கப்புறம் ஒரு நாள் கூட அவங்க ரூம் ல படுத்ததில்ல.. டெய்லி இங்க தான் ஹால் ல வந்து படுத்துப்பாங்க.."

"அப்புறம் எதுக்காக அத யார்கிட்டயுமே சொல்லாம இங்கயே இருந்தாங்க..?"

"அது அவங்க பேமிலிக்கு தெரிஞ்சா ப்ரோப்ளம் ஆகும்ன்னு தான்..

"சிவா.. அதுக்காகவெல்லாம் ஒரு பொண்ணு இப்புடி ஒரு துரோகத்த தாங்கிக்கிட்டு இருக்க மாட்டா.. உண்மைய சொல்லுங்க..."

அவள் அப்படி கேட்டதும் எனக்கு லீனாவிடம் சத்தியம் வாங்கிவிட்டு உண்மை எல்லாவற்றையும் சொல்லி விடலாமா என தோன்றியது.. இதன் மூலமாக லீனாவின் குழப்பமான மன நிலை மாறும்.. அவளும் குற்ற உணர்ச்சி இல்லாமல் அண்ணனை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிப்பாள் என தோன்றியது..

"அது.. அது.. வந்து.."

"சொல்லுங்க.."

"நீங்க இத யார்கிட்டயுமே சொல்ல கூடாது.."

"ஹ்ம்ம்.. சொல்ல மாட்டேன்.."

"ப்ரோமிஸ்..?"

"உயிரே போனாலும் வெளிய யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. ப்ரோமிஸ்.."

"ஹ்ம்ம்.."

"சொல்லுங்க.."

"ஷீ இஸ் இன் லவ் வித் மீ.."

"வாட்...?" அவளது கண்களை அகல விரித்து ஆச்சரியத்துடன் கேட்டாள்..

"யெஸ்.."

"இஸ் இட் ட்ரூ...?"

"யெஸ்.."

"சும்மா போங்க சிவா.. பொய் சொல்லாம.."

"பொய் இல்ல.. உண்ம.. எங்க அம்மா மேல ப்ரோமிஸ்.."

"ஆனாலும், நம்புற மாதிரி இல்லையே.."

"வேணும்னா என் போன் ல அவங்ககூட பண்ணுன சாட் இருக்கு.. அத காட்றேன்.."

"ஹ்ம்ம்.. காட்டுங்க பாப்பம்...?"

"போன் சோபால இருக்கு.. அப்புறமா எடுத்து காட்றேன்.."

"சரி.. இது உண்மையா இருந்தாலும், அதெப்புடி கல்யாணம் ஆன ஒரு பொண்ணு இன்னொருத்தர லவ் பண்ண முடியும்...? அதுவும் கொழுந்தனார..?"

"பின்ன..? அவன் பண்ணுன வேலைக்கு அவனையே நினைச்சி வருத்தப்பட்டுட்டு இருந்தா சரியா..?
அவங்க இங்க வந்ததுல இருந்து என்கூட நல்லா பழகுனாங்க.. நாங்க ரெண்டு பேருமே பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் மாதிரி தான் இருந்தோம்.. எப்பவுமே அவங்க கூடவே தான் இருப்பேன்.. அவ்ளோ க்ளோஸ்.."

"சோ...?"

வாயில் வந்த பொய்யை எல்லாம் உண்மை போல கூறினேன்..

"உங்க இன்ஸிடன்ட்டுக்கு பிறகு அவங்க ரொம்பவே ஹர்ட் ஆகி இருந்தாங்க.. அம்மா அப்பாவ நெனச்சி ரொம்ப கவலப்பட்டாங்க.. அவங்களுக்கு முழுக்க முழுக்க ஆதரவா இருந்தது நான் தான்.. ஒரு கட்டத்துல அவங்க உங்க நிலைமைய உணர்ந்து அவன உங்களுக்கே கல்யாணம் பண்ணி வச்சிட்டு இங்க இருந்து போகப்போறேன்னு சொன்னாங்க.. எனக்கு அவங்கள பாத்தா ரொம்ப பாவமா இருந்துச்சு.. சோ.. அந்த டைம் எதையுமே யோசிக்காம அவங்களுக்கு நா ஐ லவ் யு சொன்னேன்.."

"வாட்....?"

"யெஸ்.."

"பாவம் பாத்து காதலா...?" அவள் என்னிடம் கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள்..

"அப்புடின்னு இல்ல.. ஒண்ணு.. கட்டுன புருஷன அவன் காதலிச்ச பொண்ணுக்கே கல்யாணம் பண்ணிக் கொடுக்க நினைச்ச அவங்க நல்ல மனசுக்காக.. இன்னொன்னு.. எங்க அண்ணனால வாழவெட்டி ஆகப்போற அந்த நல்ல பொண்ணுக்கு நா வாழ்க்க குடுக்கலாம் ன்னு நெனச்சேன்.."

கவலை தோய்ந்திருந்த அவளது அழகான முகத்தில் அப்பொழுது தான் கொஞ்சம் சிரிப்பூ பூக்க ஆரம்பித்தது.. அவள் என்னை ஆச்சரியத்துடனும் பெருமிதத்துடனும் ஒரு பார்வை பார்த்தாள்.. நான் அவளது மனதில் ரொம்பவே உயர்ந்த ஒரு இடத்துக்கு போய் விட்ட மாதிரியான ஒரு பார்வையாக அது இருந்தது..

"சோ.. நீங்க ப்ரொபோஸ் பண்ணதுக்கு அவங்க என்ன சொன்னாங்க...?"

"உடனடியா ஒத்துக்கல.. அப்புறம் போகப்போக ஒருவழியா சம்மதிக்க வச்சேன்.. எப்புடியும் வீட்ல சும்மா இருக்க விட மாட்டாங்க.. அவங்க பிரஷர் பண்ணி இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கத் தான் போறாங்க.. அது நீயா இருந்தா நல்லது தான்னு சொன்னாங்க.."

"ஓஹோ.. இந்த லவ் ஸ்டோரியும் நல்லா தான் இருக்கு.. ஆனா உங்க அண்ணா கல்யாணம் பண்ண ஒரு பொண்ண கல்யாணம் பண்றது உங்களுக்கு மனசுக்கு கஷ்டமா இல்லையா..?"

"என்னோட அண்ணன் தானே.. ஏதோ கல்யாணம் பண்ணிட்டமே ன்னு தான் அவன் அண்ணி கூட வாழ்ந்துட்டு இருந்தான்.. அவன் மனசு பூரா நீங்க தான் இருக்கீங்க.. அண்ணிக்கும் அவன் மேல இப்ப துளி கூட எந்த ஒரு பீலிங்ஸும் இல்ல.. சோ.. நோ ப்ரோப்ளம்.."

"அப்போ அம்மா அப்பாகிட்ட சொல்லி கல்யாணத்த பண்ண வேண்டியது தானே..?"

"நோ.. நோ.. நோ.. இத நானே சொல்லி கல்யாணம் பண்றது சரி இல்ல.. தேவ இல்லாம அபர்ணாக்கு கெட்ட பேரு வந்தாலும் வரும்.. இத பெரியவங்களாவே முடிவு பண்ணி பண்ண வைக்குற மாதிரி செய்யப் போறேன்.. அதனால தான் யார்கிட்டயும் சொல்ல வேணாம் ன்னு உங்ககிட்ட ப்ரோமிஸ் வாங்கிக்கிட்டேன்.. தயவு செய்து அண்ணாகிட்ட கூட சொல்லிடாதீங்க.."

"ஹ்ம்ம்.. சொல்ல மாட்டேன்.. நோ வொர்ரிஸ்.. என்னதான் இருந்தாலும் நீங்க எனக்கு பெரிய ஒரு உதவி பண்ணி இருக்கீங்க.. இப்ப எனக்கு மனசுல இருந்த எல்லா பாராமுமே குறைஞ்ச மாதிரி ஒரு பீலிங்.. என்னோட எல்லா பிரச்சனையுமே தீர்ந்த மாதிரி இருக்கு.. இதுக்கெல்லாம் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போறேனோ எனக்கு தெரியல.. ஆனா.. உங்களுக்கு என்ன உதவியும் செய்ய நா தயாரா இருக்கேன்.."

"ஹாஹா.. அப்புடி என்ன உதவி செய்ய போறீங்க எனக்கு...?"

"நீங்க என்ன உதவி கேட்டாலும் செய்வேன்.."

"அதெல்லாம் எதுவும் வேணாம்.. ரெண்டு பேரும் சேர்ந்து இந்த ப்ராஜெக்ட்ட சீக்ரட்டா செஞ்சு முடிப்போம்..." என்று கையை நீட்டினேன்..

"யெஸ்ஸ்ஸ்ஸ்.." என்றவாறு அவளும் கையை நீட்டினாள்.. நான் முதல் தடவையாக அவளது மிருதுவான ஈரலிப்பான கையை பிடித்து குலுக்கிக் கொண்டேன்..

"சோ.. இனிமே நீங்க அழக் கூடாது.. உங்க அழகான முகத்துல கண்ணீர் பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.."

"ஓஹ்.. எதுக்கு இந்த ஐஸ்..?"

"ஐஸ் எல்லாம் இல்ல.. உண்மைய தான் சொன்னேன்.."

"ஓஹோ.. அப்போ நா அழகா.. அபர்ணா அழகா..?"

"எல்லா பொம்பளைங்களும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க..."

"ஹாஹா.. யேன்...?"

இதே கேள்விய தான் அவளும் ஒரு தடவ என்கிட்ட கேட்டா.."

"நீங்க என்ன சொன்னீங்க...?"

"ஏதோ ஒரு பொய்ய சொல்லி சமாளிச்சேன்.."

"அது என்ன பொய்...?"

"லீனா தான் அழகுன்னு சொன்னேன்.."

"ஓய்ய்ய்... உன்ன..." என்றவாறு கையை ஒங்கினாள்..

நான் சிரித்தேன்..

"அப்போ நா அழகா இல்லையா..?"

"உண்மைய சொல்லவா பொய் சொல்லவா...?"

"யப்பா சாமி.. ஆள விடுங்க.. நீங்க எதுவும் சொல்ல வேணாம்.."

"இப்ப தானே சொன்னேன்.. உங்க அழகான முகத்துல கண்ணீர் பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு ன்னு.. சோ.. அது தான் உண்ம.. நீங்க அழகு தான்.. ஈவ்ன் அபர்ணாகிட்ட நா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லாம இருந்திருந்தா.. நா உங்கள கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுருப்பேன்.." அவளை கொஞ்சம் சிரிக்க வைப்பதற்காக அப்படி ஒரு பொய்யினைக் கூறினேன்.. அடுத்த நொடியே மனசுக்குள் அபர்ணாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்..

"ஹாஹா.. அதுக்கு நா சம்மதிக்கணும் ல.."

"ஓஹ்... ஒரு வருஷம் டைம் கேட்டிங்கல்ல.. அது முடிஞ்சதுக்கு அப்புறமா உங்களுக்கு மாப்புள தேடி கிடைக்கலன்னு வச்சிக்கோங்க.. கடைசில அப்பா என்கிட்ட தான் வந்து நிப்பாரு.."

"ஹாஹா.. எதுவா இருந்தாலும் நா சம்மதிக்கணும் ல.."

"ஹ்ம்ம்.. அதுவும் சரி தான்.. உங்கள மாதிரி அழகான பொண்ணுங்களுக்கு என்னயெல்லாம் எங்க பிடிக்கப் போகுது.."

"ஹாஹா.. நீங்க இப்புடி தான் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும்.. ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங்.."

"ஹாஹா.. நானும் ஜஸ்ட் கிட்டிங் தான்.."

"ஹ்ம்ம்.. சோ.. பீ ஹாப்பி.. எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்.. சீ யு லேட்டர்.." என்றவாறு நான் அவளது ரூமில் இருந்து கிளம்பினேன்..

அப்பாவும் அம்மாவும் இன்னும் அங்கேயே தான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்..

நான் போனை எடுக்காமல் ரூமுக்குள் சென்று அவர்கள் பேசி முடிந்து எழுந்து செல்லும் வரை காத்திருந்தேன்..

(தொடரும்..)
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 08-03-2024, 01:24 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 26 Guest(s)