Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் : இளைஞரின் மனைவி தற்கொலை முயற்சி
பதிவு : ஜூன் 18, 2019, 02:47 PM

மதுரையில் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அவரின் மனைவி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


[Image: 201906181447195139_security%20officer-atta...SECVPF.gif]

மதுரை சிம்மக்கல் அருகே கடந்த சனிக்கிழமை இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த விவேகானந்தகுமார், சரவணகுமார் ஆகிய இருவர் நிறுத்தாமல் சென்ற நிலையில், போலீசார் லத்தியால் அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த விவேகானந்தகுமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து நேற்றைய தினம் இந்த சம்பவம் தொடர்பாக, தாக்கிய காவலர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தின் போது பணியில் இருந்த 6 காவலர்களின் பெயரை ஆட்சியர் சாந்தகுமார் அளித்த பின்னரே, இரவு உடற்கூறாய்வு நடைபெற்றது. தொடர்ந்து, தாக்குதல் நடத்திய காவலர் மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால், உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி மறியலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை விவேகானந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 18-06-2019, 05:24 PM



Users browsing this thread: 63 Guest(s)