Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`சடன் பிரேக்’ கொடுத்த பாடம் ! - `தலை'தெறிக்க ஓடிய ரூட்டுத் தலைகள்

சென்னையில் கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் மீண்டும் திறந்தன. `பஸ் டே’ கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி, தியாகராய கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
[Image: bus_14211.jpg]
இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஏற்கெனவே தண்ணீர் பஞ்சத்தில் அடிபட்டுக் கிடக்கும் சென்னைவாசிகள் மாணவர்கள் ஏற்படுத்திய இடர்ப்பாடுகளால் கடுமையாக எரிச்சல் அடைந்தனர். காலையிலேயே வெயில் வேறு கொளுத்த பஸ் டே கொண்டாட்டத்தால் நெரிசலில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். ஷெனாய் நகரில் நேற்று காலை மாநகரப் பேருந்தில் ஏராளமான மாணவர்கள் பஸ்டே கொண்டாடினர். அலங்கரிக்கப்பட்ட பேருந்தின் மேற்கூரையில் ஏராளமான மாணவர்கள் அமர்ந்திருந்தனர். உற்சாகத்துடன் அவர்கள் கோஷமிட்டுக்கொண்டு வந்தனர்.


[Image: student__14050.jpg]
பேருந்தின் முன்புறம் இரு சக்கர வாகனத்திலும் மாணவர்கள் சென்றுகொண்டிருந்தனர். பேருந்து ஆடி அசைந்தபடி வந்து கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் முன்புறம் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் திடீரென்று பிரேக் அடித்தனர். இதனால், அவர்கள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் சடன் பிரேக் போட்டார். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் பேருந்தின் முகப்பில் அமர்ந்திருந்த ஏராளமான மாணவர்கள் மொத்தமாக அப்படியே கீழே விழுந்தனர்.
அதில் ஒருவர், இரு சக்கர வாகனத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த மாணவரின் கழுத்துமீது விழுந்தார். பல மாணவர்களுக்கு அடிபட்டது. 'ஐயோ அம்மா'னு கூச்சல் போட்டவாறு அங்கிருந்து நகர்ந்தனர். அடிபட்ட மாணவர்கள் பலர்  நடக்க முடியாமல் நடந்து சென்றனர். எனினும், மாணவர்களுக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. மாணவர்கள் கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவியது. இணையத்தில் மாணவர்களுக்குக் கண்டனம் எழுந்ததே தவிர, யாரும் பரிதாபப்படவில்லை. பேருந்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் பல மாணவர்கள் மீளவில்லை என்று சொல்லப்படுகிறது. 
பஸ்டே நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 26 மாணவர்கள் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 18-06-2019, 05:10 PM



Users browsing this thread: 96 Guest(s)