எனக்கு வாய்த்த தேவதைகள்
#7
அவளது பிளாஷ்பேக் கொஞ்சம் கரடுமுரடாக இருந்தது. கேட்கவே கஷ்டமாக இருந்தது.

ஐ ஆம் சாரி மேம்.

எதுக்கு சாரி?

உங்கள பத்தி புரிஞ்சிக்காம பேசிட்டேன்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல.

ஹ்ம்ம்.

உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றாரு?

அவரு ஒரு டாக்டர்.

ஹ்ம்ம். அப்போ கல்யாணம் ஆனதுக்கு அப்புறமாவாச்சும் இறந்து போன உங்க அம்மா பாசம் மறுபடியும் உங்களுக்கு கிடைச்சிருக்கும் ல.

அவளது கல்யாண வாழ்க்கை சந்தோசமாக போகின்றதா என அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன்.

நீங்க வேற. அவரும் எங்க சித்தியோட ரிலேடிவ் தான். எல்லாரும் பணப் பிசாசுங்க. பணம் பணம் னு சாகுதுங்க. ட்ரைனிங் போறேன்னு அவரையும் என்கூட வந்து ட்ரோப் பண்ணிட்டு வர சொன்னேன். ஆனா, அவ்ளோ தூரம்லாம் என்னால வர முடியாது வேல இருக்குன்னு சொல்லிட்டாரு.

அவரு டாக்டர் ல? பிஸியா இருப்பாரு தானே.

அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவரு அத சேவையா பண்ணல. பிசினஸ்ஸா பண்றாரு.

புரியல.

அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது.

ஹ்ம்ம்.

அவளது முழு லைஃப் ஸ்டோரியையும் என்னிடம் ஒப்பிவித்து முடித்தாள். ஒவ்வொரு திமிரு பிடித்த பெண்களுக்குள்ளும் இப்படி ஏதாவது ஒரு பிளாஷ்பேக் இருக்கத் தான் செய்கிறது. பாவம் அவள். இவ்வளவு நாளும் திமிரு பிடித்த ராட்சசியாக தெரிந்த அவள் இப்பொழுது ஒரு அப்பாவி போல எனக்கு தோற்றம் அளித்தாள்.

இப்படியாக பேசிக்கொண்டு அவளது ரூமை அடைந்தோம். எனது நண்பன் கதிரும் அங்கு வந்திருந்தான். மூவருமாக மாடிக்கு சென்று ரூமைப் பார்வை இட்டோம். அட்டாச் பாத்ரூம் வசதிகளுடன் நான்கு ரூம்கள். வாடகைக்கு கொடுப்பதற்கென்றே கட்டி வைத்திருந்தனர். ஏசி வசதி உள்ள ஒரு ரூமை அவள் எடுத்துக்கொண்டாள். என்னையும் இங்கயே அடுத்த ரூமில் தங்குமாறு கூறினாள்.

ஆனால் கதிர் அதற்கு பதில் கூறினான்.
இல்ல மேம். கார்த்திக் வாறேன்னு சொன்னதும் நா எங்க பசங்ககிட்டல்லாம் சொல்லி தடல் புடலா எல்லாம் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன். சோ அவன் எங்ககூடவே தங்கட்டும்.

என்ன ஏற்பாடு?

அது வந்து..... பிரியாணியெல்லாம் செஞ்சி வச்சிருக்கோம் என்று பேச்சை மாற்றினான்.

அப்போ எனக்கு பிரியாணி இல்லையா?

உங்களுக்கு இங்கயே சாப்பாடு தந்துருவாங்க மேம். அதனால தான் கொண்டு வரல என்று மறுபடியும் சமாளித்தான்.

உங்க ஏற்பாடு என்னனு எனக்கு தெரியாதா என்ன? சரி ஓகே. குட் நைட். கார்த்திக் மார்னிங் இங்கயே வந்துடுங்க. ஒண்ணா போகலாம் என்றாள்.

ஓகே மேம். குட் நைட்.
என்று கதிருடன் விடைபெற்றேன்.
[+] 1 user Likes XmanX's post
Like Reply


Messages In This Thread
RE: எனக்கு வாய்த்த தேவதைகள் - by XmanX - 07-03-2024, 12:22 AM



Users browsing this thread: 1 Guest(s)