Romance வித்யா வித்தைக்காரி(நிறைவுற்றது)
#10
【09】

புது டெல்லி வந்து சேரும் வரை வித்யா எதையாவது சொல்வது வளன் எதாவது கேட்டால் அதை சமாளிக்க எதையாவது சொல்வது என செய்து கொண்டே இருந்தாள்.

ஜன்னல் ஓர சீட்டில் இருந்தவர் அவர்களைப் பார்த்து சிரிக்கும் நேரங்களில் வளன் சிரிக்காமல் இருக்க தன்னால் ஆன முயற்சிகளை செய்தான். ஒரு சில நேரங்களில் அவனால் சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை. தன் பதில்கள் தான் அதற்கு காரணம் என்று தெரிந்தும் ஏன் சிரிக்கிறீங்க என கேட்டாள்.

புது டெல்லியில் இருந்து குலு மணாலி வந்து சேரும் வரை வித்யாவின் வாய் அடங்கவில்லை. அருகில் இருந்தவர்கள் பிற மொழியினர் என்பதால் வளனால் சிரிப்பை கொஞ்சம் சுலபமாக கட்டுப்படுத்த முடிந்தது.

இரண்டு மணியை தாண்டிய நிலையில் மணாலியில் உள்ள ரிசார்ட் வந்து சேர்ந்தார்கள்.

ரிசப்ஷனில் வளன் செக்-இன் செய்து கொண்டிருக்க வாயை பிளந்தபடி அந்த ரிசார்ட் உள்ளே மற்றும் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாவ், ரிசார்ட் செம...

நீ இந்த மாதிரி ரிசார்ட் போனது இல்லையா...

அது வந்து.. (எப்போதும் போல ஒரு பொய் சொல்லி சமாளிக்கத் தயார் ஆனாள்)

நீ போகாத ரிசார்ட் இருக்குமா, இதை விட பெட்டர் ரிசார்ட்க்கு நீ போய்ருப்ப..

அதெல்லாம் நம்ம ஊரு ரிசார்ட். இவ்ளோ குளிர் இருக்கும் மணாலி வ‌ந்தது இல்லையே..

அப்போ நீ மணாலி வந்தது இல்லையா?

எனக்கு பசிக்குது, வாங்க ரெடி ஆகிட்டு வந்து சாப்பிடலாம் என பேச்சை மாற்றினாள்.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார்கள் உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி. நண்பர் ஒருவர் ஹனிமூன் வந்தபோது தங்கிய ஹோட்டல் என்பதால் இந்த ஹோட்டலில் அறை புக் பண்ண முயற்சி செய்தான். ஹனிமூன் அறை தவிர வேறு டபுள் பெட்ரூம் அறைகள் இல்லை. அதனால் ஹனிமூன் ரூம் புக் செய்தான்.

உள்ளே இருந்த அழகான மெல்லிய விளக்குகளும், பலூன்களும், கிங் சைஸ் படுக்கை, அந்த படுக்கை முழுவதும் மலர்கள் என எல்லாம் பார்க்கும் போது அவனுக்கு கொஞ்சம் ஷாக்.

என்னதான் ஹனிமூன் ட்ரிப் என்று சொன்னாலும் ஊருக்கு திரும்பி செல்லும் சில நாட்களில் விவாகரத்து அப்ளை செய்ய வேண்டும். அவளிடம் விவாகரத்து கேட்டுவிட்டு முதலிரவுக்கு அறையை ரெடி செய்து வைத்தால் அவள் என்ன நினைப்பாள் என்ற ஷாக் தான்.

கொஞ்சம் கலக்கத்துடன் அவளைப் பார்த்தான்...

செமயா இருக்கு வளன். கலக்கிட்டீங்க..

அது வந்து வித்யா, சாரி..

எதுக்கு சாரி எனக் கேட்டுக் கொண்டே அய், சூப்பர் என சிறு குழந்தை போல துள்ளி குதித்து பலூன் ஒன்றை எடுத்து வளன் மீது வீசினாள்.

படத்துல இப்படி பாத்துருக்கேன். வாவ்.. சூப்பர். என சொல்லிக் கொண்டே நாலா புறமும் நின்று சுத்தி சுத்தி போட்டோ எடுத்தாள்.

அவள் செயலை பார்த்த வளன் ஷாக்கில் இருந்து வெளியே வந்தான்.

செமயா இருக்குல்ல..

ஆமா என சிறு புன்னகை வளன் முகத்தில்..

உண்மையிலேயே ஹனிமூன் கொண்டாடுற ஜோடி வந்தா எப்படி இருக்கும்?

வளன் முகம் கொஞ்சம் வாடியது...

நீ ஓகே சொன்னா நாமளும் என முணுமுணுக்க..

அய்யோ அங்க பாருங்க என கன்னத்தில் கை வைத்துக் கொண்டே ஜன்னல் ஓரம் நின்று வெளியே பார்த்தாள்.

வளன் அருகில் வந்தான்...

நீங்க எதோ சொல்ல வந்தீங்க, என்னது..

அது ஒண்ணுமில்லை.. உனக்கு பயமா இல்லையான்னு..

எதுக்கு பயம் என வளன் தன் கேள்வியை கேட்கும் முன்னர் இடைமறித்தாள்.

இல்லை, வீட்டுல ஹனிமூன் நடிக்கிறோம்னு சொல்லிட்டு இங்க உண்மையிலேயே ஹனிமூன் கூட்டிட்டு வந்திருந்தா?

வளனை மேலும் கீழும் பார்த்தாள்.

நீங்களா?

ஆமா..

சிரித்தாள்..

ஏன் சிரிக்கிற?

சும்மா..

பொய் சொல்லாத. உண்மைய சொல்லு..

நா‌ன் சொன்னா உங்களுக்கு கோபம் வரும். அப்புறம் என்னை எதாவது சொல்லுவீங்க..

நா‌ன் ஒண்ணும் சொல்ல மாட்டேன்..

சரி.. நீங்க என்ன சொன்னீங்க?

உண்மையிலேயே ஹனிமூன் கூட்டிட்டு வந்திருந்தான்னு கேட்டேன்..

நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க என்றாள். விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.

வளனுக்கு அர்த்தம் புரிந்தாலும், வடிவேலு காமெடி அவன் மண்டையில் நுழைய சில வினாடிகள் எடுத்தது. அடிப்பாவி என மனதில் நினைத்தவன் வித்யாவை பார்க்க, அவள் குலுங்கி குலுங்கி இன்னும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

பல்பு வாங்கக்கூடாது என நினைத்த வளன், அவளை பயமுறுத்தும் எண்ணத்துடன், மூச்சுக் காற்று அவள் மேல் படும் அளவுக்கு நெருங்கினான்...

அலங்காரம் ஆம்பியன்ஸ் எல்லாம் செமையா இருக்கு. நாமளும் ஹனிமூன் கொண்டாடலாமா?

வித்யாவுக்கு ஆம்பியன்ஸ் என்றால் என்ன என அர்த்தம் தெரியவில்லை. ஆனால் அந்த அறையை பார்த்தவுடன் இங்கே கன்னி கழிந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வராமல் இல்லை...

உடம்பு கசகசன்னு இருக்கு, குளிச்சிட்டு வர்றேன் அதுக்கு பிறகு ஃப்ரெஷ்ஷா என வெட்கப்படுவது போல முகத்தை வைத்துக் கொண்டே வளனைப்‌ பார்த்து புன்னகை செய்தாள்.

தன் லக்கேஜ் பேக் திறந்து மாற்றுத் துணி எடுத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கி சென்றாள்.

வளன் சில வினாடிகள் தடுமாறிவிட்டான்...

ஓரளவுக்கு வித்யா குறும்புத்தனம் பற்றி அறிந்தவன் அவள் கிண்டல் செய்கிறாள் என்பது நியாபகம் வர "ச்சை, என நெற்றியில் தன் உள்ளங்கையால் அடித்தான்". வளனுக்கும் தன் மனைவியை புணரும் ஆசைத்தீ பத்த வைக்கப்பட்டிருந்தது.

பாத்ரூமிலிருந்து அய்யோ! என சத்தம்...
[+] 1 user Likes JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: வித்யா வித்தைக்காரி【09】 - by JeeviBarath - 06-03-2024, 07:46 AM



Users browsing this thread: 3 Guest(s)