Romance சும்மா ஒரு காதல் கதை!!!
#9
【08】

ஃப்ளைட் போர்டிங் அழைப்பு வரும்வரை துறுதுறுவென அங்கும் இங்கும் நடந்து நூற்றுக் கணக்கில் போட்டோ எடுத்தால்ள்...

போர்டிங் பாஸ் காட்டிவிட்டு பஸ் ஏறுவதற்கு கேட் வெளியே வந்து நின்றார்கள்.

ஏன் அருகில் நிற்கும் ஃப்ளைட்டில் ஏறாமல் நிற்கிறோம் என்ற எண்ணம் வித்யாவுக்கு . சில நிமிடங்களில் பஸ் வந்தது. பஸ் ஏறிய அடுத்த வினாடி ஃப்ளைட்ல போறோம்னு சொல்லிட்டு இப்படி பஸ்ல என்றாள்.

அவன் அவளைப் பார்க்க, அந்த பஸ் நகரும் திசையில் தெரிந்த பிளேன் ஒன்றை பார்த்து குழந்தையைப் போல இதுலயா நாம போகப் போறோம் என்றாள்.

கரெக்ட்டா தெரியலை..

பஸ் இன்னொரு ஃப்ளைட் அருகில் நிற்க.. மீண்டும் அவளுக்கு குஷி.. பஸ் விட்டு இறங்கி போட்டோ எடுத்தாள். என்னை போட்டோ எடுங்க, இல்லைன்னா என் ஃபிரண்ட்ஸ் நம்ப மாட்டாங்க..

அவன் அவளை ஃப்ளைட் பின்புறம் தெரிய போட்டோ எடுத்தான்..

ஒரு வீடியோ..

டைம் இல்லை.. ஸ்டெப்ஸ்ல ஏறு..

படி ஏறும் போதே இதுக்கு முன்ன ஃப்ளைட்ல போகும் போது நீ போட்டோ எடுக்காம உன் ஃபிரண்ட்ஸ் நீ பொய் சொல்றன்னு சொல்லிட்டாங்களா?

ஆமா என்று சமாளித்தாள்.

ஃப்ளைட் உள்ளே வந்ததும் விமான பணிப்பெண் வணக்கம் சொல்ல, வளனிடம் இருந்த டிக்கெட் வாங்கி பார்த்து அந்த பெண் திரும்ப கொடுக்கும் முன்னர் போய் கிடுகிடுவென ஜன்னல் சீட் ஒன்றை பிடித்து உட்கார்ந்தாள்..

சீட் நம்பர் பார்த்துக் கொண்டே வளன், வித்யா உட்கார்ந்திருந்த இடத்தை கடக்க...

எங்க போறீங்க, இங்க வாங்க ஜன்னல் சீட், வியூ சூப்பர்.

அவளைப் பார்த்து முறைத்துக்கொண்டே, எழுந்து வாடி என்றான். அவளும் எழுந்து அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

கடைசியில் இருந்து மூன்றாவது சீட். மூன்று பேர் இருக்கும் சீட்டில் ஏற்கனவே ஒரு ஆள் ஜன்னல் ஓரம் இருந்தான். அவளுக்கு செம கடுப்பு...

இப்படி கடைசில வந்தா சீட் போடுவீங்க, அழகா அங்க உட்கார்ந்திருக்கலாம் என்றாள்.

அவள் காதில், டிக்கெட்ல இருக்குற சீட் நம்பர்ல மட்டும் தான் உட்காரணும், நிறைய நேரம் ஃப்ளைட்ல போன உனக்கு இது தெரியாதா..

அது நான் போகும் போது கூட்டம் இல்லை. சீட் சேஞ்ச் பண்ணிட்டு ஜன்னல் ஓரம் உட்கார்ந்து போனேன். முன்னால சீட் நிறைய காலி அதான் அங்க உட்கார்ந்தேன் என சமாளிக்க முயற்சி செய்தாள்.

இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும் நிலை வந்தாலும் தன் கெத்தை விடாமல் எதாவது பேசி சமாளிக்கும் வித்யாவை ரசித்தான்.

விமான பணிப்பெண் ஒருத்தியை காட்டி செம அழகு என்றாள்.

ஓவர் மேக்கப் என காதில் கிசுகிசுத்தான்.

அவள் இப்படி ரொம்ப வெளிப்படையாக இருப்பது அவனுக்கு பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் அவள் அவனது லேப்ல செய்த காரியங்கள் நினைவுக்கு வரும் போது அவன் உடல் கொதிப்பது என அவள் மேல் உணர்ச்சிகளை மாறி மாறி காட்டும் நிலையில் இருந்தான் வளன்.

சீட் பெல்ட் அணியச் சொல்லி அறிவிப்பு வர அவளுக்கு தெரியவில்லை. முயற்சி செய்தாள் அவளுக்கு ஃப்ளைட் கிளம்ப போகிறது என்ற பயத்தில் சரியாக அதை அணிய முடியவில்லை.

வளன் அவளையே பார்த்தான்..

நா‌ன் போனது பாரின் பிளேன் இது நம்ம நாட்டு பிளேன், வேற மாதிரி இருக்கு என வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள்.

அவனுக்கு சிரிப்பு வந்தது இருந்தாலும் அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே சீட் பெல்ட் மாட்டிவிட்டான்.

ரன்வேயில் ஃப்ளைட் வேகமாக ஓட அவன் கைகளை பயத்தில் பிடித்தாள். டேக் ஆஃப் ஆகும் போது அம்மா என கத்த நிறைய பேர் அவளை திரும்பி பார்த்தார்கள். ஆனால் அவள் கண்களை மூடி வேண்ட, அவள் வாயைப் பொத்தி தன் தோளில் சாய்ந்தபடி அணைத்துக் கொண்டான்...

சில விநாடிகளுக்கு பிறகு விமான பணிப்பெண் வந்து எதாவது உதவி வேண்டுமா எனக் கேட்டாள். இல்லை இட்ஸ் ஓகே, ஃபர்ஸ்ட் டைம் என அவளிடம் சொல்ல சிரித்துக் கொண்டே சொன்னான். அந்த பெண் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

3-4 நிமிடங்களுக்கு பிறகு வித்யாவின் நடுக்கம் குறைந்ததை உணர்ந்த வளன் தோளில் மற்றும் வாயில் இருந்த கையை எடுத்தான். அவள் முதுகில் கொஞ்சம் தடவிக் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான்..

அந்த தொடுதலால் அவனது உணர்சிகள் தூண்டப்படும் நிலை வந்தது. வித்யா மேல் இருந்த தன் கைகளை எடுத்துக் கொண்டான். பஞ்சு போன்ற உடல் என்ற நினைப்பு வர எச்சில் முழுங்கினான். அவளை ரசித்துப் பார்த்தான் என் மனைவி எவ்வளவு அழகு, நான் அவள் அழகில் மயங்குகிறேனா என மீண்டும் நினைக்க..

வித்யா மெல்ல கண்விழித்தாள். அதைப் பார்த்தவுடன் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டான்..

இதுக்கு முன்ன ஃப்ளைட்ல போகும் போதெல்லாம் இப்படி தான் கத்துனியா..

அய்யோ எல்லாம் தெரிஞ்சு போச்சு.. இப்படியா கத்தி மானத்தை வாங்குவ என நினைத்தாள். அவன் பக்கம் திரும்பவும் இல்லை. வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டாள்..

என்ன என்று வளன் கேட்க..

இந்த ஆளுக்கு ஃப்ளைட் ஓட்டத் தெரியலை ரொம்ப வேகமா சர்ருன்னு எடுத்துட்டான் என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டே சற்று சத்தமாக சொன்னாள்...

இதைக் கேட்ட வளன் சிரிப்பை அடக்க முயற்சி செய்தான். ஆனால் ஜன்னல் ஓரம் இருந்த நபர் சிரிக்க அவனும் சிரித்து விட்டான்.

வித்யா உனக்கு இதெல்லாம் காமெடியா இருக்கா என்பதைப் போல பார்த்தாள். தன் முன்னே முதன் முதலாக வாய்விட்டு சிரிக்கும் கணவனை பார்த்து அவளும் ரசித்தாள்.

10 நிமிடத்தில் அவளுக்கு டாய்லெட் வர வளனை துணைக்கு கூப்பிட்டாள்.

அவன் துணைக்கு செல்ல, நான் வர்ற வரைக்கும் இங்கேயே நில்லுங்க என்று சொல்லிவிட்டு போனாள். வளனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. அந்த நேரத்தில் அவளிடம் தனியா போக பயமா என கேட்கவில்லை. கதவை வெறித்துப் பார்த்தான். எங்க கொண்டு நிறுத்திட்டா பாரு என்று அவன் மண்டையில ஓடியது..

வெறுப்பில் நின்று கொண்டிருக்கும் வளனிடம், கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி என்ன ஃப்ளைட் இது சரியான லோக்கல் ஃப்ளைட், த‌ண்ணீர் கூட வரலை..

கடுப்பாகிப் போன வளன் டிஷ்யூ யூஸ் பண்ணிட்டு வெளிய வாடி என்றான். இன்னும் என்னென்ன பண்ணப் போறான்னு தெரியலையே என்று நினைத்தான்.

வெளியில் வந்தவள் நெக்ஸ்ட் டைம் என்கிட்ட சொல்லுங்க நான் நல்ல ஃப்ளைட் புக் பண்றேன் இதெல்லாம் வேஸ்ட் உங்களை ஏமாத்திட்டாங்க என சொல்லி இருக்கை நோக்கி சென்றவளை "அடிப்பாவி, இன்னும் அடங்கலயா நீ.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையாடி" என்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தான் வளன்.
Like Reply


Messages In This Thread
RE: வித்யா வித்தைக்காரி【08】 - by JeeviBarath - 06-03-2024, 07:38 AM



Users browsing this thread: 5 Guest(s)