Romance வித்யா வித்தைக்காரி(நிறைவுற்றது)
#8
【07】

நா‌ன் எப்போ உங்ககிட்ட குடிச்சேன்னு சொன்னேன்.

இது என்னடா புதுக் குழப்பம் என்று கண்கள் விரிய அவளைப் பார்த்தான்..

சரக்கு ஆர்டர் பண்ணுன..

ஆமா..

அது குடிக்க இல்லையா...?

இவனுக்கு சரக்கு பத்தி எதுவும் தெரியாது என நினைத்து கலாய்க்க முடிவு செய்தாள். அவளுக்கும் பெரிதாக தெரியாது, ஆனால் பகார்டி லெமன் பற்றி தெரியும்.

உங்களுக்கு பகார்டி லெமன் பத்தி தெரியுமா?

இல்லை தெரியாது..

அது லெமன் சோடா என்றாள்.

ஓஹ்!

"நாம பச்ச புள்ளைத்தனமா" அதுவும் அவ சொல்ற விஷயத்தை அப்படியே நம்பிட்டமே என்று அவனே நினைக்கும் அளவுக்கு அவனைப் பார்த்து சிரித்தாள். அவனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அவளையே பார்த்தான், பின்னர் முறைத்தான்.

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. சளி, இருமலுக்கு நல்ல மருந்து, லைட்டா சாப்பிட்டா உடம்பு வலி பறந்து போய்டும். அதான் ஆர்டர் பண்ணினேன்.

இட்ஸ் ஆல்கஹால் ரைட்..

எஸ், பட் ஒன்லி 35%.

அடிப்பாவி ஒன்லி 35%? குடிக்க என்ன கதையெல்லாம் விடுறா என நினைத்தான்.

வளனுக்கு தோசை உடனே வந்தது. வித்யா கேட்ட பகார்டி லெமனும் வந்தது...

பாட்டிலில் இருந்த ஆல்கஹால் அளவை அவனுக்கு காட்டினாள். இங்க பாருங்க 35% ஒன்லி..

இவள் சரக்கு அடிக்க மாட்டேன் என்பதால் வெறுப்பேற்றி பார்க்க இப்படி செய்கிறாள் என்று நினைத்தவன்..

நீயும் ஸ்டார்ட் பண்ணு என்றான்..

சைடு டிஷ் இல்லாம எப்படி. இது என்ன நீங்க சாப்பிடுற தோசையா? சரக்கு சைடு டிஷ் இல்லாம சாப்பிடக் கூடாது.. இது கூட உங்களுக்கு தெரியலை.

வளனுக்கு தொண்டையில் எதையோ வைத்து அ‌டை‌த்தது போல உணர்ந்தான். தோசை உள்ளே போக மறுத்தது.

அவள் ஆர்டர் செய்த சைடு டிஷ் வந்தது. அவள் அவற்றை சில நிமிடங்களில் பாதிக்கு மேல் சாப்பிட்டு விட்டாள்.

அவள் சொல்லும் பதில்களால் ஒரு தோசை கூட திங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த வளனை பார்த்து, தோசை திங்க விருப்பம் இல்லைன்னா, இதை சாப்பிடுங்க என காடை இருந்த பிளேட்டை நீட்டினாள்.

சைடு டிஷ் தீரப் போகுது இன்னும் நீ சரக்கு ஓபன் பண்ணல என கேட்டான். அவளை எப்படியாவது நான் பொய் சொன்னேன் என அவள் வாயாலேயே ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணம்.

நம்ம ஊரு வெயிலுக்கு இப்ப வேண்டாம், அப்புறம், இப்ப அடிச்சா காலையில சீக்கிரம் எழும்பும் போது தலைவலிக்கும், அதான் டெல்லில போய் காதல் சின்னம் தாஜ் மகால் சுத்திப் பார்த்துட்டு வந்த பிறகு நம்ம விவாகரத்து பத்தி நினைப்பு வந்தா எப்படியும் சோகம் வரும். அங்க குளிர் வேற, அதான் அங்கே போய் பார்த்துக்கலாம்னு நினைக்கிறேன் என சமாளித்தாள்.

நாம டெல்லியில சுத்திப் பார்க்க மாட்டோம். டெல்லி ஃப்ளைட், அப்புறம் குலு மணாலிக்கு போக வேற ஃப்ளைட்..

பாருங்க, டெல்லியை விட அங்க குளிரா இருக்கும் என சொல்லிக் கொண்டே சாப்பிட்டு முடித்தவள் தன் ஹேண்ட் பேக் உள்ளே அந்த சரக்கு பாட்டில் எடுத்து வைத்தாள்.

நிச்சயமாக அவள் பொய் தான் சொல்கிறாள் என்பதை தெளிவாக உணர்ந்தான் வளன்.

பில் பே பண்ணுங்க, சீக்கிரம் வீட்டுக்கு போய் தூங்கணும்..

பார்ப்பவர்களை உடனேயே எடைபோடும் பழக்கம் உள்ளவன். பெரும்பாலும் அவன் கணிப்பு சரியாக இருக்கும்.

ஆனால் வித்யாவை தப்புக் கணக்குக்கு மேல் தப்புக் கணக்கு போடுவது போல் உணரும் அளவுக்கு அவளது செயல்கள் இருக்கின்றன. இவளைப் புரிந்து கொள்ள ஒரு யுகம் வேண்டும் என நினைத்தான்.

வெயிட்டர் பில் கொண்டு வரும்வரை வளன் அவளையே பார்த்தான்.

என்னதான் அவனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிண்டல் செய்தாலும் அவன் பார்வையை அவளால் எதிர் கொள்ள முடியவில்லை...

இன்னொரு நாள் இங்க வந்தா பகல் நேரம் வரணும் சூப்பரா இருக்கும்ணு நினைக்கிறேன் என பேச்சை மாற்ற முயற்சி செய்தாள்.

வளன் பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏன் இப்படி பார்க்கறீங்க..?

கொஞ்சம் கூட முகபாவனை மாறாம பொய் சொல்ற, எப்படி உன்னால மட்டும் முடியுதுன்னு தெரியலை. அதான் அந்த மூஞ்சிய பார்க்குறேன்.

அய்யோ!! பொய்யா? யாரு? நானா? எனக்கு பொய் சொல்ல தெரியாது..

ஆமா நீதான்..

நா‌ன் எப்போ பொய் சொன்னேன்.

சரக்கு அடிப்பேன்னு சொல்லி வாங்கிட்டு இப்படி ஹேண்ட் பேக்ல எடுத்து வைக்கிற..

நா‌ன் எப்போ சரக்கு அடிப்பேன்னு உங்ககிட்ட சொன்னேன்.

அப்புறம் எதுக்கு வாங்குன?

சளி, இருமல், உடம்பு வலி தீர..

சரக்கு அடிக்காம அது எப்படி தீரும்?

வார்த்தையால் விளையாடி அவனை மடக்க நினைத்தாள்..

அது "உடம்பு வலி"க்கும் போது பார்த்துக்கலாம் என அழுத்தி சொன்னாள்..

அவள் மேட்டர் பத்தி பேச, அவனுக்கு தொடர்ந்து அவளிடம் தொடர்ந்து அதைப் பற்றி கேட்க முடியவில்லை. அடிப்பாவி இப்ப கூட, சரக்கு அடிக்க மாட்டேன்னு சொல்ல மனசு வருதா பாரு என நினைத்துக் கொண்டான். பில் செட்டில் செய்தான்..

வீட்டுக்கு வரும் வழியில் "இப்படியும் ஒரு பெண்ணா" என்ற எண்ணம். இவளைப் புரிந்து கொள்ள ஒரு யுகம் வேண்டும் என மீண்டும் நினைத்தான். ஆனால் அதற்குள் விவாகரத்து என நினைத்தபடி அவளைப் பார்த்தான். அவள் எதையோ ரசிக்க, அந்த வினாடி அவன் அவளை ரசித்தான். அவள் பார்க்கவில்லை என்று நினைக்கும் தருணங்களில் அவளைப் பார்த்தான்.

வித்யா படிப்பில் பெரிய கெட்டிக்காரி இல்லை. ஆனால் விவரம் நன்கு தெரிந்தவள். கார் ஜன்னல் கதவுகளில் அவன் பிம்பம் திரும்புவதை அவள் கவனிக்காமல் இல்லை.

அவர்கள் வீட்டுக்கு செல்லும் வழியில், அவர்கள் முன்னே சென்ற கார் ஒன்று கொஞ்சம் தாறு மாறாக ஓடியது. என்ன இப்படிப் போறாங்க என சொல்லிய வித்யாவிடம் இதெல்லாம் சகஜம் என சொல்லி வண்டியை ஓட்டுவதில் தன் கவனம் முழுவதையும் செலுத்தினான் வளன்.

திட்டாமல் அமைதியாக கார் ஓட்டும் வளனை பார்த்தவள், நீ அவ்ளோ நல்லவனாடா என அவன் பாட்டி சொல்லிய சில விஷயங்களை நினைத்தாள். அவளை மறந்து அவனை ரசிக்க ஆரம்பித்தாள். மீசை, குட்டி தாடி வச்ச விஞ்ஞானியைப் போல் இருக்கிறான். ஆள் நல்லா தான் இருக்கான் சிரிக்க மட்டும் தெரியலை என நினைக்க..

என்ன அப்படி பார்க்குற என்ற கேள்வி வளனிடமிருந்து வந்தது.

அவள் அமைதியாக இருக்க..

என் மூஞ்சில என்ன இருக்குதுன்னு சொன்னா நானும் பார்ப்பேன் என அவன் முன்னே இருக்கும் கண்ணாடியை இறக்கி பார்த்து மீண்டும் ஏற்றினான்.

என்ன வித்யா "இப்படியா சைட் அடிச்சு மாட்டுவ சரியான லூசு டி நீ "என தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.

அவனைப் பார்த்து ஒண்ணுமில்லை என சொல்லி சிரித்தாள்.

வளனுக்கு பயங்கர ஆச்சரியம், முதன்முறையாக பதில் சொல்ல முடியாமல் வித்யா தன் வாயை மூடிக் கொண்ட உணர்வு அவனுக்கு..

வளன் இவளுக்கு என்னாச்சு என்பதைப் போல பார்த்தான்.

அவள் விஷயத்தை திசை திருப்ப நினைத்து பாட்டு போடவா எனக் கேட்டாள்..

சரியென FM பிளே செய்தான்.

அது வேண்டாம் என புளூடூத் கனெக்ட் பண்றேன் என அவளது மொபைல் கனெக்ட் செய்தாள்.

உங்களுக்கு என்ன பாட்டு வேணும்...?

எது வேணும்னாலும் போடு, சவுண்டு கொஞ்சம் கம்மியா வை என வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

இது நம்ம ஆளு என்ற படத்தில் ஷோபனா பாக்யராஜை மேட்டர்க்கு கரெக்ட் செய்யும் முயற்சியில் பாடும் பாடலை பிளே செய்தாள்.

"இஸ்ஸ்ஷ்...ஆஆஆ"
"நான் ஆளான தாமரை"
"ரொம்ப நாளாக தூங்கல"

என்ற வரிகள் முடியும் போது ஆடியோ பிளேயரை ஆஃப் செய்தான் வளன்.

என்ன பாட்டு இதெல்லாம்? ஒரு பொண்ணு மாதிரி பிகேவ் பண்ண மாட்டியா? உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க என கோபமாக கத்திவிட்டான்.

இதுல என்ன இருக்கு? எனக்கு சந்தோஷம் கொடுக்குற பாட்டு. அதான் பிளே பண்ணுனேன் என ரொம்ப ரிலாக்ஸாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.

அம்மா இல்லை என்பதால் ரொம்ப செல்லமாக வளர்ந்தவள். அவளது அப்பா இதுவரை ஒருமுறை கூட இந்த அளவுக்கு சத்தமாக எதுவும் அவளிடம் பேசியதில்லை. என்னதான் ரொம்ப ரிலாக்ஸாக பதில் சொன்னாலும் அவள் கண்களில் நீர் தேங்காமல் இல்லை.

யாரு இந்த மாதிரி பாட்டை விரும்பி கேட்பா...

அதெல்லாம் நிறைய பேருக்கு பிடிக்கும். என்ன வெளிய சொல்ல மாட்டாங்க. நீங்களும் வீட்ல தனியா இருக்கும்போது இந்த பாட்டு வந்தா ரசிச்சு பார்ப்பீங்க..

வளனுக்கு கோபம் இன்னும் அதிகமானது...

நா‌ன் வெளிபடையா எக்ஸ்பிரஸ் பண்றேன், இன்னும் பண்ணுவேன்..

அப்ப நீ இப்படித்தான் இருப்ப..

நா‌ன் ஏன் என்னை மாத்திக்கணும் என சொன்ன வித்யா நேரே பார்க்காமல் ஜன்னல் வழியே இடது புற சாலையை பார்த்துக் கொண்டே வந்தாள். அப்படியே தூங்கிவிட்டான்.

அவள் சொல்வது உண்மை தானே என்ற எண்ணம் அவனுக்கு வர கொஞ்சம் நேரம் ஆனது. இன்னும் சில நாளில் பிரியப் போகும் தனக்காக அவள் ஏன் மாற வேண்டும்?

வீட்டிற்கு வந்து சேர்ந்த பிறகு, காலையில் 6 மணிக்கு ஃப்ளைட் 4:15-4:30 க்கு வீட்டை விட்டு கிளம்ப வேண்டும் என தெளிவாக வித்யாவிடம் சொல்லிவிட்டான்.

அதிகாலை 3:30 க்கு அலாரம் வைத்து எழுந்து அவளையும் எழுப்பி விட்டு குளித்து முடித்து வந்து பார்த்தால் அவள் மீண்டும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்..

குளித்து முடித்தவன் அவள் தூங்கும் அழகை சில வினாடிகள் ரசித்தான். அவன் அறையில் ஒரு பெண் இருப்பது வளனுக்கு ஆனந்தத்தை கொடுக்காமல் இல்லை.

மீண்டும் அவளை எழுப்பி, அவசர அவசரமாக அவர்கள் கிளம்பி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

செக்யூரிட்டி செக் நடக்கும் இடத்தில் அவன் பின்னே வந்தாள். அவன் ட்ரே ஒன்றை எடுத்து செல்போன், பர்ஸ் என பொருட்களை அதில் வைக்க, தன் பின்னால் வந்தவள் அவன் செய்வதை செய்ய ஒரு ட்ரே எடுக்க, அதைப் பார்த்தான்...

லேடீஸ் அங்கே, இந்தா போர்டிங் பாஸ் என கையில் கொடுத்தான்.

என்னது பாஸ்ஸா என்று இழுத்தாள்..

நீ இதுவரைக்கும் ஃப்ளைட்ல போனது இல்லையா..?

அய்யய்யோ மாட்டிகிட்டோமே என்று நினைத்தாள். இருந்தாலும் அவள் வாய் சும்மா இருக்குமா..

அதெல்லாம் நிறைய நேரம் போய்ருக்கேன், தூக்க கலக்கம், இங்க பாருங்க என முகத்தை காட்டினாள்.

அவன் அவள் கண்களை பார்க்கும் முன்னே பெண்கள் நிற்கும் வரிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..

அவனுக்கு சிரிப்பு வந்தது. அவளைப் பார்த்து "என்னடி பண்ற" என்பதைப் போல தலையை அசைத்துக் கொண்டே வரிசையில் நகர ஆரம்பித்தான்.

சரியான லூசுடி நீ என தன்னைத் தானே திட்டிக் கொண்டே அவன் எங்கே தனக்கு முன் தன்னை விட்டு போய்விடப் போகிறானோ என்ற எண்ணத்தில் வளன் நகர்வதை பார்த்துக் கொண்டிருந்தாள் வித்யா.

அவள் செக்யூரிட்டி செக் முடிந்து அவனுக்காக வெயிட் பண்ண ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு பிறகு அவன் வந்தான்.

வெயிட்டிங் ஏரியாவில் போய் உட்கார, பின்னால் ஃப்ளைட் தெரியும்படி செல்ஃபி ஒன்றை கிளிக் செய்தாள்.

சிறு குழந்தை போல அவளிடம் இருக்கும் குதூகலத்தை பார்த்தவன் அவளது நடிப்பை மெச்சிக் கொண்டான், இருந்தாலும் வீம்புக்கு..

நீ ஃப்ளைட்ல போய்ருக்கியா இல்லையா என மீண்டும் கேட்டான்.

ஹலோ, அதான் சொன்னேனே, நிறைய நேரம் போய்ருக்கேன்.

அவன் தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

இந்த போட்டோ நல்லா இல்லை, நீங்க வந்து என்று ஆரம்பித்தாள் ஆனால் அவனை கூப்பிடாமல் மீண்டும் சென்று செல்ஃபி ஒன்றை கிளிக் செய்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: வித்யா வித்தைக்காரி 【07】 - by JeeviBarath - 06-03-2024, 07:29 AM



Users browsing this thread: 6 Guest(s)